.

Wednesday, April 4, 2007

ச: கக்கன் மகன் நிலைமை பரிதாபம்


மாதவரம், ஏப். 4-

கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில், முன்னாள் அமைச்சர் கக்கனின் கடைசி மகன் நடராச மூர்த்தி, கடந்த 18 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறார்.
காமராஜர் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் கக்கன். கறைபடியாத கரத்துக்கு சொந்தக்காரர் என்று அனைவராலும் போற்றப் பட்டவர். கக்கனுக்கு 5 மகன்கள். கடைசி மகன் நடராச மூர்த்தி (51). கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரியில் படித்து வந்த நடராச மூர்த்திக்கு, திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. அதனால், படிப்பை தொடர முடியவில்லை.
இந்நிலையில், மனநலம் பாதிக்கப்பட்ட நடராச மூர்த்தி, 1987ல் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, 18 ஆண்டுகளாக எந்த ஆதரவும் இன்றி, சிகிச்சை பெற்று வருகிறார்.

மணலி புதுநகரில் வசிக்கும், கக்கனின் உதவியாளரான கனகவிஜயன் (56) அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று பார்த்து வருகிறார். கனகவிஜயன் கூறியதாவது:
நான், தற்போது ஓட்டலில் சர்வராக இருக்கிறேன். கக்கனின் மகன், கடந்த 18 ஆண்டுகளாக மன நல மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது பலருக்கும் தெரியாது. காங்கிரசாரும் அவரை கண்டுகொள்ளவில்லை. அவருக்கு தமிழக அரசு உதவ வேண்டும்.

அதேபோல், கக்கனின் மற்றொரு மகன் பி.கே.பாக்கியநாதனும், குடியிருக்க வீடு கூட இல்லாமல் கஷ்டப்படுகிறார். அவரது மகன் கண்ணன் வேலையின்றி கஷ்டப்படுகிறார். அவர்களுக்கும் அரசு உதவ வேண்டும்.
இவ்வாறு கனக விஜயன் கூறினார்.

- மாலை முரசு

5 comments:

We The People said...

கக்கன் அவர்களின் நேர்மைக்கு கிடைத்த மிகப் பெரிய பரிசு :((((

வேற என்ன சொல்ல! பொழைக்க தெரியாத மனுஷனுக்கு பொறந்த பாவங்கள் என்று இன்றைய ஓட்டுப்பொறுக்கிகள் ஏசட்டும்!!

Anonymous said...

இன்றை அரசியல்வாதிகளின் கமென்ட்: பிழைக்க தெரியாத ஆளு இந்த கக்கன்.



அரசு இவருக்கு உரியதை செய்ய வேண்டும்

வெற்றி said...

வருத்தமான செய்தி. பிழைக்கத் தெரியாத மனிதர் கக்கன் என்பதைவிட வேறென்ன் சொல்ல முடியும்?

கூட இருந்து குழி பறித்து, கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டு, அரசியலில் எப்படிச் சாமர்த்தியமாக பல தலைமுறைக்கும் பணம் சம்பாதிப்பது என்பதை கலைஞரிடம் இருந்து இவர் கற்றிருக்க வேண்டும்.

அரசியலில் நேர்மையாக நடப்பவர்களுக்கு இது ஒரு படிப்பினையாக இருக்கட்டும்.

அரவிந்தன் நீலகண்டன் said...

மனநல மருத்துவமனையில் இருக்க வேண்டியவர் அவர் அல்ல. இப்படிப்பட்ட நேர்மையாளர்களை விட்டுவிட்டு அடுக்குமொழி ஆபாச கதை கும்பல்களை தேர்ந்தெடுத்து தன் குலத்தை வாழவைக்கும் கோடீஸ்வர சீமான்களை கோட்டையில் அமர்த்தினோமே நாம் தான் மனநலமருத்துவமனையில் வாழவேண்டியவர்கள். ஹும்...நல்லகாலம் கருமவீரர் காமராசர் பிரம்மசாரி. சாமானியன் என்று சொல்லியே ஆசியாவின் கோடீஸ்வரர்களில் ஒருவராகும் வித்தை, தலித் வாழ்வுரிமை என்று கதைவிட்டு சென்னை முதல் நெல்லைவரை வகைவகையாக பேஷன் மாடல் தோற்றுப்போகிற மாதிரி விதம் விதமான போஸ்களில் எல்லாவித -வினைல் முதல் ப்ளாஸ்டிக் என்ன பல்வண்ண லித்தோ என்ன என்று போஸ்டர்களிலும் கட் அவுட்களிலும் பிரகாசிக்கும் சாமர்த்தியம் எல்லாம் கைவரப்பெறாதவர் கக்கன்ஜி.

Thamizhan said...

கக்கன் நேர்மையானவர் அவரது மக்ன மன நல ம்ருத்துவமனை நோயாளி,முடிந்தால் உதவி செய்யுங்கள்,இது செய்தி.
இதிலே குள்ள நரிக்கூட்டம் ஏன் வெயில் காய்கிறது?
காங்கிரசால் கொள்ளை அடித்ததே இந்தக்கூட்டம் தானே.TVS,TTK முதல் காமராசருக்குப் பெட்டி தூக்கிய பட்டுக்கோட்டை வெங்கடராமர் வரை எத்தனை பூணூல் கும்பல் பயனடைந்தது.
அதையெல்லாம் விட பெரிய ஜோக் ராசகோபாலாச்சாரியார் தான் கவர்னர்ஜென்ராலாக ஆற்றிய தொண்டிற்கு சென்னை ராஜ் பவனை அவருக்குத் தரவேண்டும் என்று கேட்டாராம்.
இதுகள் மற்றவர்களைக் குறை சொல்ல வந்து விட்டதுகள்.

-o❢o-

b r e a k i n g   n e w s...