சென்னை :""எனது மனைவி ஏற்கனவே திருமணமானவள். திருமணமான பெண்ணை ஏமாற்றி என் தலையில் கட்டி விட்டனர்,' என நடிகர் பிரசாந்த் தனது மனைவி கிரகலட்சுமி மீது திடுக்கிடும் புகார் தெரிவித்துள்ளார். நடிகர் பிரசாந்த் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: எனது மனைவி கிரகலட்சுமிக்கு ஏற்கனவே 1998ம் ஆண்டு சென்னை அண்ணா சாலை, பூபேகம் சாலையை சேர்ந்த நாராயணன் வேணு பிரசாத் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இந்த முதல் திருமணத்தை மறைத்து அவர் என்னை திருமணம் செய்துள்ளார்.என்னிடமிருந்து பணம் பறிப்பதற்காகவே திட்டமிட்டு திருமணம் செய்துள்ளார். கடந்த 12ம் தேதி எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியவர் கிரகலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் ஆகியுள்ளது என தெரிவித்தார். இதை கேட்டவுடன் எனக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டது. இதுகுறித்து விசாரித்தபோது இந்த தகவல் உண்மை என தெரியவந்தது. கிரகலட்சுமி என்னிடம் 50 கோடி ரூபாய் கேட்டு மிரட்டுகிறார். இந்த விஷயம் தொடர்பாக தி.நகர் போலீஸ் துணை கமிஷனர் பாஸ்கரனிடம் புகார் தெரிவித்துள்ளேன். இது குறித்து போலீசார் தான் விசாரணை நடத்த வேண்டும்.குழந்தை குறித்து கோர்ட் தான் முடிவெடுக்க வேண்டும். குடும்பநல கோர்ட்டில் 18ம் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது கிரகலட்சுமிக்கு ஏற்கனவே திருமணமான விஷயத்தை நீதிபதியிடம் தெரிவிப்பேன். முடிவினை கோர்ட் தான் எடுக்க வேண்டும்.இவ்வாறு நடிகர் பிரசாத் கூறினார்.மேலும் கிரகலட்சுமிக்கும், நாராயணன் வேணு பிரசாத்திற்கும் 1998ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி திருமணம் நடந்தது குறித்து பதிவுத்துறை ஆவணத்தையும் வெளியிட்டார்.
- தினமலர்
இவ்வளவு நாட்களுக்கு பிறகு இப்படி ஒரு திருப்பம்
ReplyDeleteபிரசாந்த் மனைவி ஏற்கனவே திருமணமானவர்.
ReplyDeleteஸ்ரீகாந்த்துக்கும் வந்தனா உறவினர்கள் முன்னிலையில் திருமணம் முடிந்து விட்டதாக .......
whats happening to Kollywood ?
:(
ReplyDeletearasiyal/samoogam?
சர்வேசன்
ReplyDeleteசினிமா என வகைப்படுத்தமுடியாது என்பதால் சமூகம் என வகைப்படுத்தினேன்.
நன்றி.