12B,உள்ளம் கேட்குமே மற்றும் உன்னாலே உன்னாலே ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ள காமராமேனும் இயக்குனருமான ஜீவா மாஸ்கோவில் 'தாம் தூம்' படப்பிடிப்பின்போது மாரடைப்பினால் மரணமடைந்தார். 43 வயதான ஜீவா ஜெயம் இரவி, கங்கானா ரௌத் இவர்களுடன் உருசிய தலைநகரில் படப்பிடிப்பு வேலைகளை கவனித்துவந்தவரின் இறுதி காலை 3 மணிக்கு ஏற்பட்டது. அவரது உடல் நாளை சென்னைக்கு வந்தடையும் என எதிர்பார்க்கப் படுகிறது. அவருக்கு உடையலங்கார பணியிலீடுபட்டுள்ள மனைவியும் மூன்று மக்களும் உள்ளனர்.
The Hindu News Update Service
திறமையான இயக்குனர்.
ReplyDeleteகுடும்பத்துக்கு அனுதாபங்கள்.
அதிர்ச்சியான செய்தி. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
ReplyDeleteமிகச்சிறந்த படங்களை தமிழ் சினிமாவிற்க்கு அளித்தவர். இளைஞர்களின் மனதை அறிந்து படங்களை இயக்கிவர். செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து வாடும் அவர் குடும்பத்திற்க்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
ReplyDelete43 வயசுலே மாரடைப்பா?
ReplyDeleteஅடக்கடவுளே!!!!!!!!!!
அன்னாரின் குடும்பத்தினருக்கு மனமார்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றோம்.