Thursday, July 26, 2007

ஏறிவிட்டீர் எம் இதயங்களில்! கலாமுக்கு புகழாரம் - கலைஞர் கவிதை

சென்னை, ஜூலை 26: முதல்வர் கருணாநிதி நேற்று எழுதியுள்ள கவிதை வருமாறு:


அண்ணலே அய்ந்தாண்டுக்கு முன்னர், நீவீர்
அன்னைத் திருநாட்டின் குடியரசுத் தலைவராகப்
பொறுப்பேற்கப் போகும் செய்தி கேட்டு: பூரிப்பு தாங்காமல்
“பொன் மனம் கொண்ட மண்ணின் புதல்வருக்கு
பொருத்தமான மகுடம்தான் இதுÕÕ என்று
புகழ் மலர்கள் தொடுத்துக் கவிதை மாலையன்று
கட்டி யுமது தோளுக்கு அணிவித்தபோது-இராமேசுவரம்
கடல் அலைகள் களிப்பு மிகுதியால் கையலித்து
ககனத்து முகடு வரை துள்ளிக் குதிக்கின்றன என நான் எழுதினேன்!
கன்யாகுமரி முதல் இமயம் வரை என்றல்ல:
காசினியில் அனைத்து நாடும் புகழ்ந்தேத்த-இந்த
அன்னை நாடும் பிரியா விடை தந்து பிரியமுடன் வாழ்த்த
நினைவுகள் ஆயிரத்தை எம் நெஞ்சில் நட்டு-
இன்று இறங்கிவிட்டீர் பதவியை விட்டு!
இல்லை: ஏறிவிட்டீர், எம் இதயங்களில்!
இனிது வாழ்க: என்றும் வாழ்க! வாழ்க!!

நன்றி:

"தினகரன்"

2 comments:

  1. poiyane karunanithiye un ethayam sithara pohirathu miha viraivil.

    ReplyDelete
  2. இப்படி நாக்கைப் புரட்ட உலகில் இவர் ஒருவரால் தான் முடியும்.
    இந்த வயதில் இருக்கக் கூடாத இயல்பு.
    இதை எழுதி தன்னையே கேவலப்படுத்தியுள்ளார்.
    ஐயா கலாமுக்குக் குறையொன்றுமில்லை.

    ReplyDelete