Wednesday, August 15, 2007

சற்றுமுன் 1000 போட்டி முடிவுகள்்

சுதந்திர தின சிறப்புக் கொண்டாட்டமாக சற்றுமுன் போட்டி முடிவுகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி.

போட்டி முடிந்து பல நாட்கள் கழிந்துவிட்டன. சற்றுமுன் 2500 பதிவுகளைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. தாமதமானாலும்.. இதோ போட்டி முடிவுகள் வந்துவிட்டன.

எதிர்பார்த்த அளவுக்கு பங்களிப்பு இல்லை என்றே நினைத்தோம். செய்திவிமர்சனம் என்பது பதிவர்களுக்கு எளிதாய் வரவேண்டிய ஒன்று. ஒரு மாத காலத்தில் ஏதேனும் ஒரு செய்தி நம்மை பாதிக்கும். அதுகுறித்து குறைந்தது இரண்டு கருத்துக்களாவது நமக்குத் தோன்றும். அதை உங்கள் பாணியிலே எழுத வேண்டியதுதான் மிச்சம். உலக அரங்கில் வலைப்பதிவர்களில் பெரிதாக கவனிக்கப்படும் விதயங்களி ஒன்று செய்தி விமர்சனம்.

அதிக பங்கெடுப்பு இல்லை என்பதால் பரிசு அறிவிப்பில் சில (நல்ல) மாற்றங்களைக் கொண்டு வந்து எல்லோருக்கும் சிறப்பான பரிசுகளை வழங்க முடிவு செய்துள்ளோம்.


முதல் பரிசு சேவியர் - தலைமுறையை முடமாக்கும் குளிர்பானங்கள்
ரூ. 2500 மதிப்புள்ள புத்தகங்கள்



இரண்டாம் பரிசு வெயிலான் கனியா கனி்களும், கண்ணாடி கனவுகளும்…..
ரூ. 1750 மதிப்புள்ள புத்தகங்கள்



மூன்றாம் பரிசு 1 சி.வி.ஆர் வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 4
ரூ. 1000 மதிப்புள்ள புத்தகங்கள்




மூன்றாம் பரிசு 2 உண்மைத் தமிழன் அடுத்த ஜனாதிபதி யார்? கட்சிகள் போடும் ஜிங்சாங்.. ஜிங்சாங்..
ரூ. 1000 மதிப்புள்ள புத்தகங்கள



ஒவ்வொரு வகைப்பாட்டின் கீழும் இரண்டு படைப்புக்களுக்கு ரூ500 வீதம் பரிசுக்கள் அறிவித்திருந்தோம். போட்டி வலுவாயில்லாததாலும் இந்த முயற்சியில் தனித்தன்மையோடு வந்து பங்களித்தவர்கள் எல்லோருமே வெற்றியாளர்கள் என்கிற உண்மையை விளக்கவும் பங்களித்த எல்லோருக்குமே ரூ. 400 மதிப்புள்ள புத்தகங்கள் பரிசு.

போட்டியில் பங்கெடுத்து பரிசுபெறுபவர்கள்.
பெனாத்தல் சுரேஷ்(விக்கி பசங்க சார்பில்)
நாகை சிவா
லோகேஷ்
கதிரவன்
வெட்டிப்பயல்
ஷைலஜா
சந்தோஷ்
சத்தியா
வவ்வால்
தென்றல்
இலவசக் கொத்தனார்
மகேஷ்
உலகம் சுற்றும் வாலிபி
ஜீ
அருண பாரதி
இளா

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். போட்டி சிறக்க முயற்சிகள் மேற்கொண்ட சற்றுமுன் குழு நண்பர்களுக்கு நன்றி. எங்களோடு பரிசுகளை வழங்க முன்வந்த மாற்று குழுவுக்கு நன்றி. புத்தகங்களை வழங்க முன்வந்திருக்கும் கிழக்கு பதிப்பகத்திற்கும் நன்றி.

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

25 comments:

  1. பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. வாவ்... அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete
  4. பங்கெடுத்துக்கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.

    போட்டியை நடத்திய சற்றுமுன்னுக்கு நன்றி.

    ReplyDelete
  5. போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும் வெற்றி பெற்றவர்களுக்கும் போட்டியை நடத்தியவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. வெற்றிபெற்றவர்கள், போட்டியில் பங்குபெற்றவர்கள் அனைவருக்கும்
    இனிய பாராட்டுகளும் நல்வாழ்த்து(க்)களும்.

    ரொம்ப மகிழ்ச்சியா இருக்குப்பா. இன்னிக்கு சுதந்திரதினம் வேற.
    ரெட்டிப்புக் கொண்டாட்டம்தான்.

    ReplyDelete
  7. இந்தப் போட்டியில் பங்குகொண்ட அனைத்து போட்டியாளர்களுக்கும், பரிசு பெற்றவர்களுக்கும் பாராட்டுகள் :-)

    ReplyDelete
  8. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete
  9. இனிமே தான் புத்தகம் வாங்கற மாதிரி இருந்தா, ஒரு லிஸ்ட் கொடுத்து பிடிச்ச புத்தகத்தை பரிசலிக்கலாமே :-)

    ReplyDelete
  10. //இனிமே தான் புத்தகம் வாங்கற மாதிரி இருந்தா, ஒரு லிஸ்ட் கொடுத்து பிடிச்ச புத்தகத்தை பரிசலிக்கலாமே :-)//

    நிச்சயமா. அப்டித்தான் செய்யவிருக்கிறோம்.
    :))

    ReplyDelete
  11. போட்டியை நடத்திய சற்றுமுன்னுக்கு நன்றி!

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  12. என்னுடைய பெயரையும் இங்கு காண்பதில் மிக்க மகிழ்ச்சி. என்னுடைய முதல் படைப்பிலேயே பரிசுப்பெற்றிருக்கின்றேன் என்று என்னும்பொழுது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் வெற்றிப்பெற்றுள்ளவர்களுக்கும், போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், சற்றுமுன் அண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

    அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் !

    ஜெய் ஹிந்த்.

    ReplyDelete
  13. அப்ப எனக்கு பரிசு ஒண்ணும் இல்லியா?
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :(

    just kidding,

    வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  14. ஆக்கப்பூர்வமான கட்டுரைகள்.
    நல்ல முயற்சிகள்.
    அனைவருக்கும் 'வாசகனா'கவும் வாழ்த்துகள்.

    இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகளும்.

    ReplyDelete
  15. சுதந்திர தினத்தன்று இப்படி ஒரு இன்ப அதிர்ச்சியை எதிர்பார்க்கவில்லை.

    போட்டியை நடத்திய "சற்று முன்" னுக்கு நன்றிகள் பல...

    போட்டியில் வெற்றிபெற்ற அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. பங்கு பெற்றோருக்கும் பரிசு கிடைத்தவர்களுக்கும் வாழ்த்துக்கள் !

    அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  17. பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்! போட்டியில் கலந்துகொண்ட என் பெயரையும் இங்கு அளித்தமைக்கு மிக்க நன்றீ
    ஷைலஜா

    ReplyDelete
  18. சற்றுமுன் 1000 போட்டியைப் பற்றி முன்னரே எனக்கு தெரிந்திருந்தால் அனைத்துப் பரிசுகளும் எனக்கே கிடைத்திருக்கும் என்று அடக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
    முத்துசிவக்குமரன், விழுப்புரம்

    ReplyDelete
  19. Congratulations Xavier..another feather in your cap....thodarattum ungal vettri vaagaigal...and advance congratulations for ur future victories..:)

    ReplyDelete
  20. பரிசளிக்க முன் வந்த 'தல' சிறில் அவர்களுக்கும், அவர்தம் 'சற்றுமுன்' குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.. நன்றிகள்.. நன்றிகள்..

    ReplyDelete
  21. இரண்டாம் பரிசுக்குரியதாக என் படைப்பை தேர்ந்தெடுத்த சற்றுமுன் குழுவினருக்கு என் மனமார்ந்த நன்றி!!!

    மென்மேலும் தொடரும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!!!

    வெற்றி பெற்றமைக்காக வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி!!!!!

    ReplyDelete
  22. சற்றுமுன் குழுவினருக்கு நன்றிகள்,

    தேர்வு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.எனது பெயரையும் ஆறுதல் வெற்றியாளர் ஆக அறிவித்தமைக்கு நன்றிகள். தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிவிட்டேன்

    ReplyDelete
  23. சற்றுமுன் குழுவினருக்கு நன்றிகள்,

    தேர்வு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.எனது பெயரையும் ஆறுதல் வெற்றியாளர் ஆக அறிவித்தமைக்கு நன்றிகள். தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிவிட்டேன்

    ReplyDelete