ஜெய்ப்பூர், ஆக.6: ராஜஸ்தானைச் சேர்ந்த 90 வயது குடுகுடு தாத்தா ஒருவர், மருமகளையே 4வது மனைவியாக திருமணம் செய்து கொண்டு ஒன்பதாவதாக ஒரு பெண் குழந்தை பெற்று உள்ளார்.
ராஜஸ்தானின் சித்தார்கார் மாவட்டத்தில் உள்ள பாஞ்ச் இம்லி கிராமத்தைச் சேர்ந்தவர் நானு ராம்ஜோகி (90). இவருக்கு 3 மனைவிகள் மூலம் 8 குழந்தைகள் மற்றும் 12 பேரக்குழந்தைகள் உள்ளன. இவரது மனைவிகள் அனைவரும் இறந்துவிட்டனர். மூத்த மகன் சிவ்லாலின் மனைவி சாகுரி (30) தான் வீட்டு வேலைகளை கவனித்து வந்தார்.இந்நிலையில், சில ஆண்டுக்கு முன்பு சிவ்லால் இறந்தார். மருமகளை அப்படியே விட்டுவிட மணமில்லாத நானு ராம்ஜோகி, அவரை தனது மனைவி ஆக்கிக் கொண்டார். இவர்களுக்கு சில நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது.இந்த வயதில் தான் தந்தையானது குறித்து நானு ராம்ஜோகி பெருமிதம் கொள்கிறார். அவரது கடா மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டு தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக கூறி மகிழ்ந்து வருகிறார்.
பஞ்சாபைச் சேர்ந்த விமாரம் ஜாத் என்பவர் தனது 88வது வயதில் தந்தையானது தான் அதிசயமான விஷயமாக பேசப்பட்டு வந்தது. இவர்கள் இருவருமே தங்களுடைய ஆண்மையின் காரணமாக கூறியது, ஒட்டகப்பாலை தினமும் குடிப்பதால் முதுமையை விரட்டி இளமையுடன் திகழ முடிகிறது என்று கூறியுள்ளனர்.
- நன்றி: தினகரன்
இதுக்குத்தான் அப்பொவே கைப்பு சொன்னாரு, ஒட்டகப்பால்ல டீ போடு ஒட்டகப்பால்ல டீ போடு ன்னு.
ReplyDeleteஇவர் 90 கோடியா?? சேர்த்து வைத்துள்ளார்.எனக்கு அந்தக் குந்ழந்தையை நினைக்க தான் கவலையாக உள்ளது.
ReplyDelete