நடிகை குஷ்பு கலைஞர் டெலிவிஷனுக்காக "நம்ம குடும்பம்'' என்ற டி.வி. தொட ரில் நடித்து வந்தார். "வேகம்'' என்ற படத்திலும் நடித்தார். "ஜாக்பாட்'' என்ற டி.வி. நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.இந்நிலையில் குஷ்புவுக்கு நேற்று திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு மயங்கி னார். உடனடியாக அவரை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
குஷ்புவின் கணவர் சுந்தர் .சி காரைக்குடியில் "பொறுக்கி'' படப்பிடிப்பில் இருந்தார். தகவல் அறிந்ததும் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு அவசரமாக இன்று காலை விமானம் மூலம் சென்னை வந்தார். நேராக ஆஸ்பத்திரிக்கு சென்று குஷ்புவை பார்த்தார்.
ஒரு வாரம் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவார் என்று தெரிகிறது. இதனால் அவர் சம்பந்தப்பட்ட டி.வி. தொடர் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட் டுள்ளன.
மாலைமலர்
குப்புவுக்கு உடம்பு சரியில்லையா...அவ்..அவ்..அவ்...வ்வ்வ்
ReplyDelete