Friday, August 31, 2007

குடியரசுத் தலைவரின் அதிகாரபூர்வ படம் வெளியீடு

அரசு அலுவலகங்களிலும் தூதரகக் கட்டிடங்களிலும் இடம் பெற குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டில் அவர்களின் அதிகாரபூர்வ நிழற்படம் இரு வார காலமாக தீர்மானமாகாமல் கடைசியாக வெளியிடப்பட்டுள்ளது. வெள்ளை புடைவையில் நீல பார்டரோடு தங்க கோடிட்ட படத்தை குடியரசுத்தலைவரின் நிழற்பட பிரிவு குடியரசுத்தலைவரின் செயலகத்திலிருந்து அனுமதி பெற்று வெளியிட்டது. இந்தப் படத்தில் புடைவையின் பல்லு பகுதி அவரது தலையை மறைக்குமாறு உள்ளது. முன்னர் வெளியான படத்தை குடியரசுத்தலைவரின் செயலகம் ஆட்சேபித்ததால் திரும்பப் பெறப்பட்டது.

The Hindu News Update Service

2 comments:

  1. பொர்ட்ரெய்ட் போட்டிக்கு கடைசி நாளை தவற விட்டுட்டாங்களே ;)

    ReplyDelete
  2. குடியரசுத் தலைவர் பற்றி செய்தி என்பதால் எதுவும் விமர்ச்க்க முடியவில்லை.. இருப்பினும் இந்த முஸ்லிம் பர்தா அது இது எல்லாம் நியாபகத்திற்கு வந்து தொலைக்கிறது..

    ReplyDelete