மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிறபடுத்தப்பட்டோருக்கு
27 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் இன்று மறுத்து விட்டது.இந்திய மேலாண்மைக் கழகம்-ஐஐஎம், இந்திய தொழில்நுட்பக் கழகம் - ஐஐடி உள்ளிட்ட மத்திய உயர் கல்விநிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு
27 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரும் அச்சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார்.