ஹஜ் யாத்திரை பயணத்துக்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தெரிவித்துள்ளது.
2007-ம் ஆண்டில் ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கான அச்சடிக்கப்பட்ட அறிவுரைகளுடன் ஹஜ் விண்ணப்பப் படிவங்கள் ரூ. 100 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பணக் கொடுப்பாணை, கேட்புக் காசோலை ஆகியவற்றை அளித்து விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இத்தொகை விண்ணப்பங்களை அன்னியச் செலாவணித் தொகையுடன் சமர்ப்பிக்கும்போது சரி செய்யப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணபங்களை தமிழ்நாடு மாநில ஹஜ் குழு என்ற பெயரில் அன்னியச் செலாவணி முன் பணம் ரூ. 10,700-உடன் இம்மாதம் 30-ம் தேதிக்குள் இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். இணையதள முகவரி: www.hajjtn.org
தினமணி
Friday, June 15, 2007
சொமாலிய நாட்டு திரையரங்கில் குண்டுவெடிப்பு
சொமாலியாவின் Baidoa நகரத் திரையரங்கில் குண்டுவீசப்பட்டது. இதில் ஐவர் மரணமடைந்துள்ளார்கள். ஒன்பது பேருக்கு பலத்த காயம். . திரையிட்ட படத்தில் நிர்வாணக்காட்சிகள் நிறைந்திருந்தது.
தலைநகரம் மொகாதிஷுவில் வெடித்த மற்றொரு குண்டில் ஒருவர் இறந்தார். எத்தியோப்பிய இராணுவத்தின் ஆக்கிரமிப்பை எதிர்த்து இந்த குண்டுகள் வீசப்பட்டிருக்கலாம்
இந்திய மற்றும் மேற்கத்திய சினிமாக்கள் துன்மார்க்கத்தை பிரச்சாரப்படுத்துவதாக ஏற்கனவே இஸ்லாமியர்களிடம் இருந்து வந்த இடையூறுகளினால் திரையிடல்கள் தடைப்பட்டிருக்கிறது.
BBC NEWS | Africa | Grenade attack on Somalia cinema
தலைநகரம் மொகாதிஷுவில் வெடித்த மற்றொரு குண்டில் ஒருவர் இறந்தார். எத்தியோப்பிய இராணுவத்தின் ஆக்கிரமிப்பை எதிர்த்து இந்த குண்டுகள் வீசப்பட்டிருக்கலாம்
இந்திய மற்றும் மேற்கத்திய சினிமாக்கள் துன்மார்க்கத்தை பிரச்சாரப்படுத்துவதாக ஏற்கனவே இஸ்லாமியர்களிடம் இருந்து வந்த இடையூறுகளினால் திரையிடல்கள் தடைப்பட்டிருக்கிறது.
BBC NEWS | Africa | Grenade attack on Somalia cinema
எனது மனைவி ஏற்கனவே திருமணமானவர்:நடிகர் பிரசாந்த்
சென்னை :""எனது மனைவி ஏற்கனவே திருமணமானவள். திருமணமான பெண்ணை ஏமாற்றி என் தலையில் கட்டி விட்டனர்,' என நடிகர் பிரசாந்த் தனது மனைவி கிரகலட்சுமி மீது திடுக்கிடும் புகார் தெரிவித்துள்ளார். நடிகர் பிரசாந்த் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: எனது மனைவி கிரகலட்சுமிக்கு ஏற்கனவே 1998ம் ஆண்டு சென்னை அண்ணா சாலை, பூபேகம் சாலையை சேர்ந்த நாராயணன் வேணு பிரசாத் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இந்த முதல் திருமணத்தை மறைத்து அவர் என்னை திருமணம் செய்துள்ளார்.என்னிடமிருந்து பணம் பறிப்பதற்காகவே திட்டமிட்டு திருமணம் செய்துள்ளார். கடந்த 12ம் தேதி எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியவர் கிரகலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் ஆகியுள்ளது என தெரிவித்தார். இதை கேட்டவுடன் எனக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டது. இதுகுறித்து விசாரித்தபோது இந்த தகவல் உண்மை என தெரியவந்தது. கிரகலட்சுமி என்னிடம் 50 கோடி ரூபாய் கேட்டு மிரட்டுகிறார். இந்த விஷயம் தொடர்பாக தி.நகர் போலீஸ் துணை கமிஷனர் பாஸ்கரனிடம் புகார் தெரிவித்துள்ளேன். இது குறித்து போலீசார் தான் விசாரணை நடத்த வேண்டும்.குழந்தை குறித்து கோர்ட் தான் முடிவெடுக்க வேண்டும். குடும்பநல கோர்ட்டில் 18ம் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது கிரகலட்சுமிக்கு ஏற்கனவே திருமணமான விஷயத்தை நீதிபதியிடம் தெரிவிப்பேன். முடிவினை கோர்ட் தான் எடுக்க வேண்டும்.இவ்வாறு நடிகர் பிரசாத் கூறினார்.மேலும் கிரகலட்சுமிக்கும், நாராயணன் வேணு பிரசாத்திற்கும் 1998ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி திருமணம் நடந்தது குறித்து பதிவுத்துறை ஆவணத்தையும் வெளியிட்டார்.
- தினமலர்
- தினமலர்
மதுரை மேற்கு தொகுதி தேர்தல் முடிந்ததும் அனைவருக்கும் டெலிவிஷன் அமைச்சர் தங்கம் தென்னரசு பிரசாரம்
மதுரை மேற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.கே.ராஜேந்திரனை ஆதரித்து இன்று 28-வது வார்டு பகுதியான எஸ்.எஸ்.காலனியில் பிரசாரம் செய் தார். முன்னதாக அவர் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-
கடந்த ஓராண்டு கால தி.மு.க. ஆட்சியிலும், அன்னை சோனியாகாந்தி வழி காட்டுதலின் படி நடை பெறும் மத்திய அரசும், தமிழக மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தென் மாவட்டம் கேட்பாற்ற கிடந்த காலம் மாறி தற்போது நிறைய திட்டங்கள் தென் மாவட்டத்தில் நடந்து வருகிறது. குறிப்பாக மதுரையில் தொழில் நகரமாக மாற்ற திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க குடிநீர் திட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தொடர மேற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். மேற்கு தொகுதி இடைத்தேர்தல் முடிந்ததும் அனைவருக்கும் இலவச டெலிவிஷன் வழங்கப்படும்.
மாலைமலர்
கடந்த ஓராண்டு கால தி.மு.க. ஆட்சியிலும், அன்னை சோனியாகாந்தி வழி காட்டுதலின் படி நடை பெறும் மத்திய அரசும், தமிழக மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தென் மாவட்டம் கேட்பாற்ற கிடந்த காலம் மாறி தற்போது நிறைய திட்டங்கள் தென் மாவட்டத்தில் நடந்து வருகிறது. குறிப்பாக மதுரையில் தொழில் நகரமாக மாற்ற திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க குடிநீர் திட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தொடர மேற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். மேற்கு தொகுதி இடைத்தேர்தல் முடிந்ததும் அனைவருக்கும் இலவச டெலிவிஷன் வழங்கப்படும்.
மாலைமலர்
ச: ஜெயலலிதா சிவாஜி படம் பார்த்தார்
இன்று காலை ஏவிஎம் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு திரையிடலுக்கு செல்வி ஜெயலலிதா திடீர் விருந்தினராக வந்து அனைவரையும் வியப்பிலாழ்த்தினார். இருவருக்குமிடையே இருந்த பிணக்கையும் மீறி இவ்வாறு அவர் வந்ததும் ஜெயாடிவியில் நாள் முழுவதும் சிவாஜி படத்தை சிறப்பித்து வந்த செய்திகளும் அவரை மூன்றாம் அணிக்கு இழுக்க நடக்கும் உத்திகள் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வியாழனன்று ஹைதராபாத்தில் நடந்த முன்னோட்ட திரையிடலுக்கு இரஜனியுடன் சந்திரபாபு நாயுடு பார்த்ததும் குறிப்பிடத் தக்கது.
Jayalalitha watches 'Sivaji', signals a thaw
Jayalalitha watches 'Sivaji', signals a thaw
"சிவாஜி" ரிலீஸ் உற்சாகத்தில் ரசிகர்கள்..
சூப்பர் ஸ்டார் ரஜினியின் "சிவாஜி' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருப்பதை அடுத்து, திரையரங்குகள் மட்டுமல்லாமல் பல்வேறு நகரங்களும் திருவிழாக் கோலம் பூண்டிருந்தன. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரையரங்குகள் முன்பு கூடியிருந்து ரஜினியின் பிரம்மாண்டமான கட் அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம், பீர் அபிஷேகம் செய்து பூசணிக்காய் உடைத்து கொண்டாடினார்கள்.ரஜினிகாந்த் நடித்து, இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ஏவிஎம் பிரம்மாண்டமாக தயாரித்த "சிவாஜி' திரைப்படம் இன்று கோலாகலமாக வெளியாகியது. சென்னையில் மட்டும் 18 திரையரங்குகளில் ரஜினி திரைப்படம் வெளியிடப்பட்டது. இதுவரை எந்த படமும் இவ்வளவு தியேட்டர்களில் வெளியிடப்பட்டதாக சரித்திரமே இல்லை. இந்த சரித்திர சாதனையாக சென்னையில் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் ஏராளமான தியேட்டர்களில் ரஜினி திரைப்படம் வெளியானது.வடபழனி கமலா திரையரங்கில் ரஜினியின் பிரம்மாண்டமான கட் அவுட்டுக்கு 25 லிட்டர் பாலை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. ஆயிரம் வாலா பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. ரசிகர்கள் பொதுமக்களுக்கும், படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கும் லட்டு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டரில் ரஜினியின் கட் அவுட்டுக்கு பீர் அபிஷேகம் நடைபெற்றது. ரஜினியின் ரசிகர்கள் மட்டுமல்லாமல், ரசிகைகளும் ஏராளமாக திரண்டு வந்து சினிமா பார்த்தனர். ரசிகைகள் பால் குடம் போல குடங்களில் பாலை எடுத்து வந்து அவற்றை அபிஷேகம் செய்த காட்சி அனைவரையும் புல்லரிக்க வைத்தது.மேலும் சத்யம், ஆல்பட், அபிராமி உள்ளிட்ட பல்வேறு திரையரங்கு வளாகங்களிலும் ரசிகர்கள் வெள்ளம் அலைமோதியது. தமிழ்ப்படமே வெளியிடப்படாத மெலடி திரையரங்கிலும் ரஜினியின் "சிவாஜி' திரையிடப்பட்டுள்ளது. "சிவாஜி' படம் வெளியாகி உள்ள தியேட்டர்களை பார்க்கும் பொதுமக்களும் பெரும் பிரம்மிப்புக்கு ஆளாகியுள்ளனர். ரஜினியின் பல்வேறு கெட்டப்புகளில் ரசிகர்கள் வந்திருந்தது பலரையும் கவர்ந்தது. டிக்கெட் கிடைக்காதவர்களும் தியேட்டர்களுக்கு வந்து ரசிகர்களின் கொண்டாட்டத்தில் பங்கேற்றது அவர்கள் ரஜினி மீது வைத்துள்ள அபிமானத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
பயங்கர தீ விபத்து.
சினிமா படப்பிடிப்பிலிருந்த நடிகர் ஜீவா தப்பினார்.
சென்னை அடுத்த புழல் கதிர்வேடு பகுதியில் தனியார் பெயின்ட் தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையை ஒட்டியுள்ள மர டிப்போவில் நடிகர் ஜீவா நடிக்கும் "தெனாவட்டு' படத்தின் படப்பிடிப்பு நடந்தது. நேற்று சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டது. நேற்று பிற்பகல் 4மணி அளவில் பெயின்ட் தயாரிப்பு தொழிற்சாலைக்குள் திடீரென பயங்கர வெடி சத்தம் கேட்டது. கெமிக்கல் சேமித்து வைக்கும் 4 டேங்க்குகள் வெடித்து சிதறியதால் அங்கிருந்த பெயின்ட் பேரல்கள் தீப்பற்றி எரிந்தன. சுற்று வட்டார பகுதியில் உள்ளவர்கள் வெடிகுண்டு வெடித்ததாக கருதி பீதியுடன் ஓடினர். படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்ததால், சண்டை காட்சி தானோ என முதலில் பலர் நினைத்தனர். பின்னர் தான் தொழிற்சாலையில் தீப்பிடித்து இருப்பது தெரியவந்து, பலரும் ஓடினர். படக்குழுவினரும் தப்பித்தோம் பிழைத்தோம் என ஓட்டம் பிடித்தனர். மேலும்....ச: ஸ்பைஸ்ஜெட் பங்குகளை ஜெட் வாங்குகிறதா ?
இந்தியாவின் விலைகுறைந்த சேவை வழங்கும் விமான சேவை நிறுவனங்களில் ஏர் டெக்கானை அடுத்துப் பெரிய ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை வளைத்துப் போடும் விதமாக அந்நிறுவனத்தில் துபாய் நிறுவனங்களின் பங்கை ஜெட் வாங்குவதாக எழுந்த வதந்தியை ஒட்டி நேற்று ஸ்பைஸ்ஜெட்டின் பங்குவிலைகள் உயர்ந்தன. இந்த செய்தி உண்மை இல்லை என்று ஸ்பைஸ்ஜெட் தலைவர் சித்தாந்த சர்மா ் ப்ளூம்பெர்க் நிதி செய்திநிறுவனத்திற்கு தொலைபேசியில் அளித்த பேட்டியில் கூறினார்.
ச: முன்னாள் ஐ.நா பிரதம செயலர் கர்ட் வால்தீம் மரணம்
முன்னாள் ஐநா பிரதம செயலராகவும் ஆஸ்திரியாவின் தலைவராகவும் இருந்த கர்ட் வால்தீம் நேற்று தனது வியன்னா வீட்டில் 88 வயதில் மரணமடைந்தார். அவருக்கு நாசிதுருப்புகளுடன் தொடர்பு இருந்ததாக அவர் ஆஸ்திரிய தலைவர்பதவிக் காலத்தில் சர்ச்சை எழுந்தது.
முழு விவரங்களுக்கு.. Kurt Waldheim, Former U.N. Chief, Is Dead at 88 - New York Times
முழு விவரங்களுக்கு.. Kurt Waldheim, Former U.N. Chief, Is Dead at 88 - New York Times
ச: உலகிலேயே் மிக விலைகுறைந்த கார் இந்தியாவில் தயாராகிறது !
உலகின் மிகக் குறைந்த விலையுள்ள கார் டாடா மோடார்ஸினால் அடுத்த ஜனவரியில் வெளிக் கொணரப்படும் என்று குறைந்த விலை கார்கள் சந்தையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புது தில்லியில் ஜனவரியில் நடக்கவுள்ள ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப் படுத்த இருப்பதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரவி காந்த் கூறினார்.
India readies world's cheapest car - MSN Money
India readies world's cheapest car - MSN Money
மூன்றாவது அணிக்கு வாருங்கள்.
ரஜினிக்கு சந்திரபாபு நாயுடு அழைப்பு.
நேற்று "சிவாஜி'' படத்தின் விசேஷ காட்சி ஐதராபாத்தில் உள்ள பிரசாத் பிரிவிï தியேட்டரில் நடந்தது. ஆந்திர மாநில முன்னாள் முதல்- மந்திரியும், தெலுங்குதேசம் கட்சித்தலைவருமான சந்திரபாபு நாயுடு நடிகர் ரஜினியுடன் படம் பார்த்தார்.சிவாஜி படம் மிகவும் நன்றாக எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் கதை வலுவான ஒரு சமூக நல கருத்தை வலியுறுத்துவதாக உள்ளது. கறுப்பு பணத்தால் உண்டாகும் தீமை நன்றாக படமாக்கப்பட்டுள்ளது. ரஜினியின் வித்தியாசமான ஸ்டைல்கள் ரசிகர்களை கவரும். இது வரலாற்றில் இடம் பெறும்.ரஜினி என் நீண்டநாள் நண்பர். அவரது ஒவ்வெரு படமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும். ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் கூட அவர் படத்துக்கு வரவேற்பு உள்ளது.ரஜினி அரசியலில் ஈடுபட வேண்டும் என்று நான் ஏற்கனவே பல தடவை அழைத்து இருக்கிறேன். இப்போதும் 3-வது அணிக்கு வரவேண்டும் என்று அழைக்கிறேன். அப்படி அவர் வந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.ஆனால் இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்க வேண்டியது ரஜினிதான்.இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார். இதையடுத்து கூறியதாவதுசந்திரபாபு நாயுடு என் சிறந்த நண்பர்களில் ஒருவர். அவரால் நான் நடித்த சந்திரமுகி படம் பார்க்க முடியாமல் போய் விட்டது. எனவே இந்த தடவை "சிவாஜி''யை பார்க்க அழைத்தேன் அரசியல் பற்றி நான் இப்போது பேசவரவில்லை. `சிவாஜி' படத்தை காட்டவே வந்துள்ளேன். எனக்கு ஆதரவளித்ததற்காக சந்திர பாபுநாயுடுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு நடிகர் ரஜினி காந்த் கூறினார்.
ஃபிஜி கொடுத்த கல்தா
ரஜினி பரபரப்பு பேட்டி- வீடியோ
அமிதாப்்தாப் சக்கரவர்த்தி. நான் வெறும் அரசன். அவர் முன் நான் சாதரணமானவன் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
