பாகிஸ்தான் கிரிக்கெட் பயிற்சியாளர் பாப் உல்மரின் மரணம் சந்தேகத்திற்குறியது என ஜமைகா காவல்துறை அறிவித்துள்ளது. காவல்துறை அறிக்கையில் உல்மரின் குடும்பத்தினருக்கு இந்த செய்தி அறிவிக்கப் பட்டிருப்பதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் குழு, உலகக் கோப்பை மற்றும் ஐசிசி குழுமங்கள் முழுமையான ஒத்துழைப்புக் கொடுப்பதாகவும் கூறுகிறது. காவல் அதிகாரி ஷீல்ட் தற்சமயம் இதனை ஒரு கொலை என்று சொல்லவில்லை எனவும் தெளிவுபடுத்தினார்.
பெரிதும் அதிர்ச்சியடைந்துள்ள பாக் கிரிக்கெட் குழு முதலில் இன்றைய கடைசி ஆட்டத்தில் பங்கேற்க தயக்கம் என்ற செய்தி வந்த போதிலும் கடைசியாக வந்த செய்தியின் படி காப்டன் இன்சமாம் இன்று வென்று அவ்வெற்றியை உல்மருக்கு காணிக்கையாக்குவோம் என சூளுரைத்துள்ளார்.
தொடர்புடைய இணைப்புக்கள்:
The Hindu News Update Service
Hinesberg Journal
Manchester.com - News - Inzy targets win for Woolmer
No comments:
Post a Comment