உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் 28ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் இலங்கை அணியுடன் ஆஸ்திரேலியா மோதுகிறது.
முன்னதாக இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை அந்த அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்றைய போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. ஆனால் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை சமாளிக்க இயலாமல் துவக்க ஆட்டக்காரர்கள் மளமளவென அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். எனினும் பின்னர் வந்த கிப்ஸ், கெம்பம் ஆகியோர் நிதானமாக ஆடியதால் அந்த அணி 149 ரன்கள் எடுத்தது.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய துவக்கத்தில் கில்கிறிஸ்ட் மற்றும் பாண்டிங் விக்கெட்களை இழந்த போதிலும் இலக்கை எளிதாக எட்டி வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. 31.3 ஓவர்களில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்களை இழந்து 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது..
MSN
No comments:
Post a Comment