Saturday, June 16, 2007

அமைச்சராகிறார் கனிமொழி: முதல்வர் கருணாநிதி சூசகம்?

மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள தனது மகள் கனிமொழி, மத்திய அமைச்சர் ஆக்கப்படுவார் என்பதை முதல்வர் கருணாநிதி சூசகமாகத் தெரிவித்தார். மூன்று நாள் தில்லிப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை புறப்படும் முன் செய்தியாளர்களிடம் பேசினார் கருணாநிதி.

"குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வை வெற்றிகரமாக முடித்துச் சென்னை திரும்பும் நீங்கள், கனிமொழியை அமைச்சராக்க எப்போது வருவீர்கள்?' என்று கேட்டதற்கு, "செய்யலாம், செய்யலாம்'' என்று பதிலளித்தார் அவர்.

அதாவது, கனிமொழி அமைச்சராக்கப்படுவார் என்பதை சூசகமாகத் தெரிவித்த கருணாநிதி, அவர் எப்போது அமைச்சராக்கப்படுவார் என்பது குறித்து எந்த குறிப்பும் காட்டவில்லை. கடந்த மாத இறுதியில் தில்லி வந்த முதல்வர், சென்னை திரும்பும் முன் செய்தியாளர்களுடன் பேசும்போது, கனிமொழிக்கு அமைச்சர் பதவி தரப்படுமா என்பதைத் தெளிவாகச் சொல்லவில்லை.

தினமணி

2 comments:

  1. ஆவாரா? மாட்டாரா என்று தினகரன்+சன் டிவி கருத்துக் கணிப்பு நடத்துமா?

    ஆகலாமா? கூடாதா என்று ராஜ் டிவி கணிப்பு நடத்தினால் என்னவாகும் ;))

    ReplyDelete