குருவாயூர் கோவிலில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அமைச்சர் வயலார் இரவியின் மகன் ரவி கிருஷ்ணா குழந்தைக்குப் பெயரிட வந்தபோது 'சுத்தப் 'படுத்திய நிகழ்விற்காக அதன் தேவஸ்வம் போர்ட் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டது.
அவரின் மதம் பற்றி சரியாகத் தெரியாததாலேயே இத்தவறு நிகழ்ந்ததாக கோவில் அதிகாரிகள் கூறினர். மேலும் 'ஆசார்ய சதஸ்' ஒன்று நடத்தி கோவில் வழக்கங்களில் மாறுதல்கள் பற்றியும் விவாதிக்க இருப்பதாகவும் 'தேவ பிரச்னம்' நடத்தி குருவாயூரப்பன் நடந்த நிகழ்ச்சிகளால் பாதிக்கப் பட்டிருக்கிறானா என்றும் போர்ட் தலைவர் தோட்டத்தில் ரவீந்திரன் கூறினார்.
Guruvayoor board apologises to Vayalar Ravi's son - Yahoo! India News
No comments:
Post a Comment