நதிநீர் இணைப்பு பற்றி பிரதமரிடம் பேசவிருப்பதாக டெல்லியில் முதல்வர் கருணாநிதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். புதிய குடியரசு தலைவர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக டெல்லி சென்ற தமிழகமுதல்வர் கருணாநிதிக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, பழனிமாணிக்கம், ரகுபதி, வேங்கடபதி, ராதிகாசெல்வி ஆகியோர் வரவேற்றனர். டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் கருணாநிதி, நதிநீர் இணைப்பு பிரச்சினை பற்றி பிரதமருடன் பேசுவீர்களா என்ற கேள்விக்கு, ஏற்கனவே கடிதங்கள் எழுதியிருப்பதாகவும், இதுகுறித்து கடந்தமுறை வந்தபோதும் பேசியிருப்பதாகவும், அவற்றின் தொடர்ச்சியாக மீண்டும் பேசு உள்ளதாகவும் தெரிவித்தார். சுயநிதி மருத்துவ கல்லூரி மாணவர்களின் நலன் காக்க தேவைபட்டால் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும் என்றும் முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
No comments:
Post a Comment