இலகு ரக விமானத்தின் மூலம் 80 நாள்களில் உலகைச் சுற்றிவந்து இந்திய விமானப் படை விமானிகள் சாதனை படைத்துள்ளனர்.
ராகுல் மோங்கா, அனில் குமார் ஆகிய இருவரும் இந்திய விமானப் படையில் பணிபுரியும் விமானிகள். உலகை மிக விரைவாக வலம்வரும் சாதனை முயற்சியை, இவர்கள் வெற்றிகரமாக நிறைவுசெய்ய பாகிஸ்தான் விமானப் படையும் தாராள மனதுடன் உதவி செய்துள்ளது.
உலகை வலம்வரும் திட்டத்தில் ஏற்பட்ட திடீர் மாறுதலால் ராகுல், அனில் குமார் இருவரும் கராச்சி நகரில் சனிக்கிழமை இரவு தரையிறங்க வேண்டியதாயிற்று. இதற்கு பாகிஸ்தான் விமானப் படையினர் ஒப்புதல் அளித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கிளம்பி குஜராத்தின் பூஜ் நகருக்கு வந்துசேர்ந்தனர்.
நேற்று தமிழ்ச்செய்தியில் காண்பித்தார்கள்.
ReplyDeleteஇருவர் மட்டுமே உட்காரக்கூடிய மாதிரி சிறிய விமானம்.