வாஜ்பாய் சுகவீனம் - மருத்துவமனையில் அனுமதி
ஆகஸ்ட் 21, 2007
டெல்லி: முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு இன்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் டெல்லி அகில இந்திய விஞ்ஞான மருத்துவக் கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உடல் நிலை ஸ்திரமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவமனை செய்தித் தெடார்பாளர் சக்தி குப்தா கூறுகையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு நடுக்கமும், மயக்கமும் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
அவரை மருத்துவமனையில் அனுமதித்து தீவிர பரிசோதனை நடத்தப்பட்டது. அவரை டாக்டர்கள் தீவிரமாக கவனித்து வருகின்றனர். அவரது உடல் நிலை தற்போது ஸ்திரமாக உள்ளது. தொடர்ந்து அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் என்றார்.
www.thatstamil.com
No comments:
Post a Comment