சென்னை விமான நிலையத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள காமராஜர் உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் தங்கள் உடைமைகளை எடுக்கும் பகுதி உள்ளது. இதன் அருகே தனியார் விமான நிறுவனத்தின் பாதுகாப்பு அறை இருக்கிறது.
இந்த அறையில் நேற்று காலை மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதனால் `ஒயர்'கள் தீப்பிடித்து எரிந்தன. அந்த அறை புகை மண்டலமாக காட்சி அளித்தது.
பயணிகள் ஓட்டம்
அங்கு தங்கள் உடைமைகளை எடுக்க வந்த பயணிகள் தீயைக் கண்டதும் ஏதோ விபரீதம் ஏற்பட்டதாக நினைத்து அலறியடித்து ஓடினார்கள். இந்த தீ விபத்து பற்றி விமானநிலைய அதிகாரிகளிடம் ஊழியர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தரப்பட்டது.
அவர்கள் அங்கு விரைந்து வந்து, தீப்பிடித்த இடத்தில் `ஸ்பிரே' உதவியுடன் மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தால் சென்னை விமான நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.
தினத்தந்தி
No comments:
Post a Comment