.

Sunday, May 6, 2007

ஆண்டுக்கு 16 லட்சம் குழந்தைகள் இறக்கின்றன: மத்திய அரசு தகவல்

புதுதில்லி, மே 5: நோய் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாட்டில் ஆண்டுக்கு 16 லட்சம் குழந்தைகள் உயிரிழக்கின்றன; இதில் 11 லட்சம் குழந்தைகள் பிறந்த முதல் மாதத்திலேயே இறந்து விடுகின்றன என சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை இணை அமைச்சர் பனபாக லட்சுமி கூறியுள்ளார்:

குறைப் பிரசவம், மிகக் குறைந்த எடையுடன் பிறத்தல், வயிற்றுப் போக்கு, மலேரியா, சின்னம்மை, மூச்சுத் திணறல் மற்றும் சுவாசக் கோளாறுகளே பிறந்த ஓராண்டுக்குள் குழந்தைகளின் இறப்புக்கு அதிக அளவில் காரணமாகின்றன.

குழந்தைகள் இறப்பு உலகளவில் இந்தியாவில்தான் அதிகம் என யுனிசெப் (ஐ.நா. குழந்தைகள் நிதியம்) அமைப்பு தெரிவிக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 16 லட்சம் குழந்தைகள் இறக்கின்றன. இதில் 11 லட்சம் குழந்தைகள் பிறந்த முதல் மாதத்திலேயே இறந்து விடுகின்றன.

Dinamani

-o❢o-

b r e a k i n g   n e w s...