.

Tuesday, April 24, 2007

பிரான்ஸ் புறப்பட்டார் கலாம்.

ஜனாதிபதி அப்துல்கலாம் ஐந்து நாள் பயணமாக ஸ்டாரஸ்பர்க்(பிரான்ஸ்), கிரீஸ் ஆகிய நாடுகளுக்கு இன்று புறப்பட்டார். பிரான்ஸ் செல்லும் கலாம், நாளை ஐரோப்பிய பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறார். நாடுகளின் ஒற்றுமை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தவுள்ளார். இதற்கு முன்பாக ஸ்டாரஸ்பர்க் நகரில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வுமைய பல்கலைக்கழகத்தில் உரையாற்றுகிறார். இதனைத் தொடர்ந்து கிரீஸ் நாட்டுக்கு பயணம் மேற்கொள்கிறார்.ஜனாதிபதியின் கிரீஸ் பயணத்தின்போது, மூன்று முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பயணம் மூலமாக இருதரப்பு நல்லுறவுகள் மேலும் வலுப்படும் என நம்பப்படுகிறது.21 ஆண்டுகளுக்குப் பிறகு கிரீஸ் நாட்டுக்கு கலாம் விஜயம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி : YAHOO TAMIL

இலங்கையில் விடுதலைப் புலிகள் மீண்டும் விமான தாக்குதல்.

இலங்கையில் இரண்டாவது முறையாக விடுதலைப் புலிகள் விமானபடைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக புலிகள் செய்தித் தொடர்பாளர் ராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.செய்தி நிறுவனம் ஒன்றிற்கு தொலைபேசி வழியாக இளந்திரையன் அளித்துள்ள பேட்டியில் கூறும்போது, இன்று அதிகாலை இலங்கையின் யாழ்பாணம் பகுதியில் உள்ள பாலே விமான தளம் மீது இரண்டு இலகு ரக விமானங்கள் கொண்டு தாக்குதல் நடத்திவிட்டு வன்னிப் பகுதிக்கு திரும்பி விட்டோம். இது புலிகளின் இரண்டாவது வான் தாக்குதல், என்று கூறினார்.

உ.பி தேர்தல்:பகுஜன் சமாஜ் முன்னிலை?

உத்தரபிரதேசம் நான்காம் கட்ட தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி முன்னிலை பெறும் என தேர்தலுக்குப் பின் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.உத்தரபிரதேச சட்டசபைக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. இதில் முதல் நான்கு கட்ட தேர்தல்கள் முடிந்துவிட்டன. நான்காம் கட்ட தேர்தலில் 46 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ள நிலையில், தனியார் செய்தி நிறுவனம் தேர்தலுக்குப்பின் நடத்திய கருத்துக் கணிப்பில் பகுஜன்சமாஜ் கட்சிக்கே ஆதரவு அதிகம் இருப்பதாக தெரிகிறது.மொத்தமுள்ள 57 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி 13 முதல் 17 சீட்டுகளை மட்டுமே பிடிக்கும். சமாஜ்வாடி கட்சி 25 முதல் 29 தொகுதிகளை கைப்பற்றும் எனத் தெரிய வந்துள்ளது.

-o❢o-

b r e a k i n g   n e w s...