.

Thursday, April 12, 2007

சற்றுமுன்: இனி தந்தியடிக்க முடியாது

தகவல் தொடர்பில் தொலைபேசிகள் வருவதற்கு முன்பு அவசரத்துக்கு உதவியது தந்தி. தபால் தந்தித் துறையின் கீழ் இருந்த தந்தி பிஎஸ்என்எல் நிறுவனம் உருவாக்கப் பட்ட போது அந்நிறுவனத்தின் பொறுப்பில் வந்தது. தகவல் தொடர்புகள் தொலைபேசி, செல்பேசி, மின்னஞ்சல் என பரந்து விட்ட நிலையில் தந்தி அனுப்புவோர் மிகவும் குறைந்து விட்டனர். எனவே பிஎஸ்என்எல் நிறுவனம் சிறுகச் சிறுக தந்தி அலுவலகங்களை குறைத்து தற்போது முற்றிலும் தந்தி சேவை நிறுத்தப் படுவதாக அறிவித்து விட்டது.

தூத்துக்குடி நிறுவனத்தின் சாதனை

கடல் வணிகத்திற்கு ஏதுவாக கப்பல்களிலிருந்து பொருட்களை இறக்கி ஏற்றும் தேவைகளை நிறைவேற்றும் PSTS குழுமம் இன்று ரூ850 மிலியன் விற்பனையைக் கொண்டு தூத்துக்குடி, சென்னை, விசாகப்பட்டிணம் துறைமுகங்களில் கொடியோச்சி வருகிறது. அந்த நிறுவனத்தை பற்றிய ஒரு செய்தி

சீக்கியர்கள் தொகுப்பாளர் மந்திராபேடி மீது கோபம்


உலகக் கோப்பை தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் மந்திரா பேடி ஒரு சீக்கியர். இவரது அண்மைய நிகழ்ச்சியொன்றில் சீக்கியர்களின் புனிதச் சின்னமான 'ஏகம் கர்' (ஒருவனே தேவன்) சொல்லை தனது திறந்த முதுகுப் புறத்தில் பச்சை குத்தியிருப்பதைப் பார்த்து கொதித்தெழுந்து விட்டார்கள். சீக்கியர்களின் புனித நூலான கிரந்தசாகிப்பில் முதல் வாக்கியங்கள் அவையாகும். லூதியானா, அமிர்தசரஸ் நகரங்களில் அவரது கொடும்பாவி எரிக்கப்பட்டிருக்கிறது.

இதன் முன்னரும் தனது நாய்களுக்கு, அவற்றை தன் குடும்பத்தினாராக வரித்துக் கொண்டு, சீக்கியப் பெயர்களை சூட்டி சச்சரவில் மாட்டியுள்ளார்.

மேலும்..Mandira Bedi in midst of Sikh religious storm

ச: At least 23 die in 2 terrorist bombings in Algeria

அல்ஜியர்ஸில் நடந்த தாக்குதலில் 23 பேர் பலி

அல்ஜீரியத்தலைநகர், அல்ஜியர்ஸில் நடந்த குண்டுத்தாக்குதல்களில், குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 160 பேர் காயமடைந்துள்ளனர். இவைகள் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் என்று போலிசார் கூறுகிறார்கள்.

அல்ஜியர்ஸ் நகரின் மையப்பகுதிக்கு அருகே உள்ள பிரதமரின் அலுவலகங்களை நோக்கி வந்த கார் ஒன்று வெடித்து சிதறியதை தாங்கள் கண்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறினார்கள். மற்றுமொரு குண்டு வெடிப்பு கிழக்கே புறநகர் பகுதியில் அமைந்துள்ள போலிஸ் நிலையம் ஒன்றில் நடந்தது.

BBC

வங்க தேசத்தின் முன்னாள் பிரதமர் மீது கொலைக் குற்றச்சாட்டு

வங்காள தேசத்தின் முன்னாள் பிரதமரான ஷேக் ஹசீனா மீது அந்நாட்டு போலீசார் கொலைக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தலைநகர் டாக்காவில் நடைபெற்ற அரசியல் வன்முறையில் நான்கு பேர் கொல்லப்பட்டது தொடர்பில் அவர் மீது இந்தக் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.

அவரைத் தவிர அவரது கட்சியான அவாமி லீகைச் சேர்ந்த 46 பேர் மீதும் குற்றப் பத்திரிகை பதிவு செய்யப்பட்டுள்ளன. இதே சம்பவம் தொடர்பாக இஸ்லாமியக் குழுவான ஜமாத் ஏ இஸ்லாமி அமப்பின் தலைவரும் மேலும் அந்தக் குழுவின் நான்கு பேர் மீதும் வன்முறையைத் தூண்டியதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளனர்.

தற்போது அமெரிக்காவில் இருக்கும் ஷேக் ஹசீனா பிபிசியின் வங்க மொழி சேவைக்கு அளித்துள்ள பிரத்தியேக பேட்டியில் தம் மீதான குற்றச்சாட்டினை மறுத்துள்ளார். தான் யாரையும் கொலை செய்யவில்லை என்பது வங்கதேச மக்களுக்கு நன்றாகத் தெரியும் எனவும், இவ்விதமான நடவடிக்கைகள் தம்மீது பொய் குற்றச்சாட்டுகளை வைக்க எடுக்கும் முயற்சி எனவும் கூறியுள்ளார்.

சமபவம் நடந்த நாளில் ஜமாத் கட்சியினரும், வங்கதேச தேசியக் கட்சியினரும் தமது கட்சியினர் நடத்திய ஊர்வலத்தின் மீது பலத்த தாக்குதல்களை நடத்தினர் எனவும், இதை போலீசார் கண்டும் காணாமல் இருந்தார்கள் எனவும் ஷேக் ஹசீனா கருத்துக் கூறியுள்ளார். எனவே இந்த வன்முறைகளுக்கு வங்கதேச தேசியக் கட்சியும், ஜமாத் கட்சியுமே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் வலியுறித்தியுள்ளார்.

இது போன்ற குற்றச்சாட்டுகளை வைப்பதன் மூலம் தாம் தமது நாட்டிற்கு திரும்புவதை தடுக்க வங்கதேசஅதிகாரிகள் எண்ணுவார்களேயானால் அவர்கள் முட்டாள்களின் சொர்க்கத்தில் இருப்பதாகத்தான் பொருள் எனவும் ஷேக் ஹசீனா கூறியுள்ளார்.

BBC

-o❢o-

b r e a k i n g   n e w s...