ஹஜ் யாத்திரை பயணத்துக்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தெரிவித்துள்ளது.
2007-ம் ஆண்டில் ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கான அச்சடிக்கப்பட்ட அறிவுரைகளுடன் ஹஜ் விண்ணப்பப் படிவங்கள் ரூ. 100 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பணக் கொடுப்பாணை, கேட்புக் காசோலை ஆகியவற்றை அளித்து விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இத்தொகை விண்ணப்பங்களை அன்னியச் செலாவணித் தொகையுடன் சமர்ப்பிக்கும்போது சரி செய்யப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணபங்களை தமிழ்நாடு மாநில ஹஜ் குழு என்ற பெயரில் அன்னியச் செலாவணி முன் பணம் ரூ. 10,700-உடன் இம்மாதம் 30-ம் தேதிக்குள் இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். இணையதள முகவரி: www.hajjtn.org
தினமணி
Friday, June 15, 2007
இணையதளம் மூலம் ஹஜ் யாத்திரை விண்ணப்பம்
Posted by
Boston Bala
at
11:47 PM
0
comments
சொமாலிய நாட்டு திரையரங்கில் குண்டுவெடிப்பு
சொமாலியாவின் Baidoa நகரத் திரையரங்கில் குண்டுவீசப்பட்டது. இதில் ஐவர் மரணமடைந்துள்ளார்கள். ஒன்பது பேருக்கு பலத்த காயம். . திரையிட்ட படத்தில் நிர்வாணக்காட்சிகள் நிறைந்திருந்தது.
தலைநகரம் மொகாதிஷுவில் வெடித்த மற்றொரு குண்டில் ஒருவர் இறந்தார். எத்தியோப்பிய இராணுவத்தின் ஆக்கிரமிப்பை எதிர்த்து இந்த குண்டுகள் வீசப்பட்டிருக்கலாம்
இந்திய மற்றும் மேற்கத்திய சினிமாக்கள் துன்மார்க்கத்தை பிரச்சாரப்படுத்துவதாக ஏற்கனவே இஸ்லாமியர்களிடம் இருந்து வந்த இடையூறுகளினால் திரையிடல்கள் தடைப்பட்டிருக்கிறது.
BBC NEWS | Africa | Grenade attack on Somalia cinema
Posted by
Boston Bala
at
11:46 PM
0
comments
எனது மனைவி ஏற்கனவே திருமணமானவர்:நடிகர் பிரசாந்த்
சென்னை :""எனது மனைவி ஏற்கனவே திருமணமானவள். திருமணமான பெண்ணை ஏமாற்றி என் தலையில் கட்டி விட்டனர்,' என நடிகர் பிரசாந்த் தனது மனைவி கிரகலட்சுமி மீது திடுக்கிடும் புகார் தெரிவித்துள்ளார். நடிகர் பிரசாந்த் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: எனது மனைவி கிரகலட்சுமிக்கு ஏற்கனவே 1998ம் ஆண்டு சென்னை அண்ணா சாலை, பூபேகம் சாலையை சேர்ந்த நாராயணன் வேணு பிரசாத் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இந்த முதல் திருமணத்தை மறைத்து அவர் என்னை திருமணம் செய்துள்ளார்.என்னிடமிருந்து பணம் பறிப்பதற்காகவே திட்டமிட்டு திருமணம் செய்துள்ளார். கடந்த 12ம் தேதி எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியவர் கிரகலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் ஆகியுள்ளது என தெரிவித்தார். இதை கேட்டவுடன் எனக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டது. இதுகுறித்து விசாரித்தபோது இந்த தகவல் உண்மை என தெரியவந்தது. கிரகலட்சுமி என்னிடம் 50 கோடி ரூபாய் கேட்டு மிரட்டுகிறார். இந்த விஷயம் தொடர்பாக தி.நகர் போலீஸ் துணை கமிஷனர் பாஸ்கரனிடம் புகார் தெரிவித்துள்ளேன். இது குறித்து போலீசார் தான் விசாரணை நடத்த வேண்டும்.குழந்தை குறித்து கோர்ட் தான் முடிவெடுக்க வேண்டும். குடும்பநல கோர்ட்டில் 18ம் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது கிரகலட்சுமிக்கு ஏற்கனவே திருமணமான விஷயத்தை நீதிபதியிடம் தெரிவிப்பேன். முடிவினை கோர்ட் தான் எடுக்க வேண்டும்.இவ்வாறு நடிகர் பிரசாத் கூறினார்.மேலும் கிரகலட்சுமிக்கும், நாராயணன் வேணு பிரசாத்திற்கும் 1998ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி திருமணம் நடந்தது குறித்து பதிவுத்துறை ஆவணத்தையும் வெளியிட்டார்.
- தினமலர்
Posted by
சிவபாலன்
at
11:42 PM
4
comments
மதுரை மேற்கு தொகுதி தேர்தல் முடிந்ததும் அனைவருக்கும் டெலிவிஷன் அமைச்சர் தங்கம் தென்னரசு பிரசாரம்
மதுரை மேற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.கே.ராஜேந்திரனை ஆதரித்து இன்று 28-வது வார்டு பகுதியான எஸ்.எஸ்.காலனியில் பிரசாரம் செய் தார். முன்னதாக அவர் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-
கடந்த ஓராண்டு கால தி.மு.க. ஆட்சியிலும், அன்னை சோனியாகாந்தி வழி காட்டுதலின் படி நடை பெறும் மத்திய அரசும், தமிழக மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தென் மாவட்டம் கேட்பாற்ற கிடந்த காலம் மாறி தற்போது நிறைய திட்டங்கள் தென் மாவட்டத்தில் நடந்து வருகிறது. குறிப்பாக மதுரையில் தொழில் நகரமாக மாற்ற திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க குடிநீர் திட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தொடர மேற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். மேற்கு தொகுதி இடைத்தேர்தல் முடிந்ததும் அனைவருக்கும் இலவச டெலிவிஷன் வழங்கப்படும்.
மாலைமலர்
Posted by
Boston Bala
at
11:06 PM
0
comments
ச: ஜெயலலிதா சிவாஜி படம் பார்த்தார்
இன்று காலை ஏவிஎம் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு திரையிடலுக்கு செல்வி ஜெயலலிதா திடீர் விருந்தினராக வந்து அனைவரையும் வியப்பிலாழ்த்தினார். இருவருக்குமிடையே இருந்த பிணக்கையும் மீறி இவ்வாறு அவர் வந்ததும் ஜெயாடிவியில் நாள் முழுவதும் சிவாஜி படத்தை சிறப்பித்து வந்த செய்திகளும் அவரை மூன்றாம் அணிக்கு இழுக்க நடக்கும் உத்திகள் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வியாழனன்று ஹைதராபாத்தில் நடந்த முன்னோட்ட திரையிடலுக்கு இரஜனியுடன் சந்திரபாபு நாயுடு பார்த்ததும் குறிப்பிடத் தக்கது.
Jayalalitha watches 'Sivaji', signals a thaw
Posted by
மணியன்
at
8:38 PM
0
comments
"சிவாஜி" ரிலீஸ் உற்சாகத்தில் ரசிகர்கள்..
Posted by
Adirai Media
at
3:34 PM
4
comments
பயங்கர தீ விபத்து.

Posted by
Adirai Media
at
12:45 PM
2
comments
ச: ஸ்பைஸ்ஜெட் பங்குகளை ஜெட் வாங்குகிறதா ?
இந்தியாவின் விலைகுறைந்த சேவை வழங்கும் விமான சேவை நிறுவனங்களில் ஏர் டெக்கானை அடுத்துப் பெரிய ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை வளைத்துப் போடும் விதமாக அந்நிறுவனத்தில் துபாய் நிறுவனங்களின் பங்கை ஜெட் வாங்குவதாக எழுந்த வதந்தியை ஒட்டி நேற்று ஸ்பைஸ்ஜெட்டின் பங்குவிலைகள் உயர்ந்தன. இந்த செய்தி உண்மை இல்லை என்று ஸ்பைஸ்ஜெட் தலைவர் சித்தாந்த சர்மா ் ப்ளூம்பெர்க் நிதி செய்திநிறுவனத்திற்கு தொலைபேசியில் அளித்த பேட்டியில் கூறினார்.
Posted by
மணியன்
at
12:25 PM
0
comments
ச: முன்னாள் ஐ.நா பிரதம செயலர் கர்ட் வால்தீம் மரணம்
முன்னாள் ஐநா பிரதம செயலராகவும் ஆஸ்திரியாவின் தலைவராகவும் இருந்த கர்ட் வால்தீம் நேற்று தனது வியன்னா வீட்டில் 88 வயதில் மரணமடைந்தார். அவருக்கு நாசிதுருப்புகளுடன் தொடர்பு இருந்ததாக அவர் ஆஸ்திரிய தலைவர்பதவிக் காலத்தில் சர்ச்சை எழுந்தது.
முழு விவரங்களுக்கு.. Kurt Waldheim, Former U.N. Chief, Is Dead at 88 - New York Times
Posted by
மணியன்
at
12:06 PM
0
comments
ச: உலகிலேயே் மிக விலைகுறைந்த கார் இந்தியாவில் தயாராகிறது !
உலகின் மிகக் குறைந்த விலையுள்ள கார் டாடா மோடார்ஸினால் அடுத்த ஜனவரியில் வெளிக் கொணரப்படும் என்று குறைந்த விலை கார்கள் சந்தையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புது தில்லியில் ஜனவரியில் நடக்கவுள்ள ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப் படுத்த இருப்பதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரவி காந்த் கூறினார்.
India readies world's cheapest car - MSN Money
Posted by
மணியன்
at
11:49 AM
0
comments
மூன்றாவது அணிக்கு வாருங்கள்.

சந்திரபாபு நாயுடு என் சிறந்த நண்பர்களில் ஒருவர். அவரால் நான் நடித்த சந்திரமுகி படம் பார்க்க முடியாமல் போய் விட்டது. எனவே இந்த தடவை "சிவாஜி''யை பார்க்க அழைத்தேன் அரசியல் பற்றி நான் இப்போது பேசவரவில்லை. `சிவாஜி' படத்தை காட்டவே வந்துள்ளேன். எனக்கு ஆதரவளித்ததற்காக சந்திர பாபுநாயுடுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு நடிகர் ரஜினி காந்த் கூறினார்.
Posted by
Adirai Media
at
11:31 AM
1 comments
ஃபிஜி கொடுத்த கல்தா
ஃபிஜி கொடுத்த கல்தா
நியூஸி ஹை கமிஷனரை நாட்டை விட்டு வெளியே போன்னு சொல்லிருச்சு ஃபிஜி
அரசு.
நியூஸிக்கு பயங்கரக்கோபம். 'இரு உங்களை'ன்னு கருவுது.
மேற்கொண்டு விவரங்கள் இங்கேயும்
இங்கேயும்
நியுஸியில் இருந்து துளசி கோபால்
Posted by
துளசி கோபால்
at
3:19 AM
0
comments
ரஜினி பரபரப்பு பேட்டி- வீடியோ
அமிதாப்்தாப் சக்கரவர்த்தி. நான் வெறும் அரசன். அவர் முன் நான் சாதரணமானவன் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
Posted by
சிவபாலன்
at
1:31 AM
8
comments
b r e a k i n g n e w s...