.

Wednesday, February 21, 2007

ஐசிசி கிரிகெட் உலக கோப்பை மைதானங்கள் & அட்டவணை

ஐசிசி கிரிகெட் உலக கோப்பை இந்த முறை மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ளதை அனைவரும் அறிந்ததே! அந்த மைதானங்களின் புகைப்படங்களும் போட்டி அட்டவணையும் உங்கள் பார்வைக்கு.










இந்த - வலைதளத்தில் மேலும் பல தகவல்கள் உள்ளது.


நம்ம அணியும் தயார் தாங்க.. இதோ சந்தோசமாக போட்டோவிற்கு முகம் காட்டும் நமது அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள்.




சிறு தகவல்: நமது அணியின் வீரர் தோணி ஐசிசி தர வரிசையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

உ.பி தேர்தல்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஏழுகட்ட வாக்குப்பதிவுகளோடு உ.பியின் சட்டசபை தெர்தல் நடக்க இருக்கின்றது. 403 சட்டசபை தொகுதிகளுக்கும் 3 லோக் சபை தொகுதிகளுக்கும் ஆன தேர்தல்கள் ஏப்ரல் 7 துவங்கி மே 8 வரைக்கும் நடைபெறும். மே 11 வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

3.60 லட்சம் மின்னணு வாக்கு சேகரிப்பு எந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

மொத்தம் 1,10,000 வாக்குச் சாவடிகள் இரூப்பதை கருத்தில்கொண்டே 7 கட்ட வாக்குப்பதிவுகளை அறிவித்திருப்பதாக தலமைத் தேர்தல் ஆணையர் N. கோபாலசாமி கூறியுள்ளார்.

NDTV

நன்றி: பாஸ்டன் பாலா.

யோகி இராம்தேவிற்கு நில ஒதுக்கீடு சரியா?

மத்தியபிரதேச மாநில அரசு பிரச்சினக்குறிய யோகி இராம்தேவிற்கு இலவசமாக யோக ஆசிரமம் அமைக்க 100 ஏக்கர் நிலம் வழங்குவது் பற்றி மாநில உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் மாநிலத்தின் மூலிகை வளத்தைப் பயன்படுத்தி ஆயுர்வேத மருந்துகளை தயாரிப்பதை ஊக்குவிக்குமுகமாக ஆறு மாதம் முன்பு நிகழ்ந்த ஒரு யோகா பயிற்சிக் கூடத்திலஇராம்தேவை பதஞ்சலி யோகா சன்ஸ்தான் அமைக்க அழைத்ததின் பின்னணியில் இந்த நில ஒதுக்கீடு நடந்துள்ளது. ஜபல்பூரின் புறத்தே நர்மதா நதிக்கரையில் இரண்டு கி.மீ தூரம் கையகப் படுத்தவுள்ள நிலையில் உள்ளூர் மக்கள் சார்பில் படேல் என்பவர் பொதுநல வழக்கு தொடுத்துள்ளார்.

யோகி இராம்தேவிற்கும் பிருந்தா காரட்டிற்கும் இடையே நிகழ்ந்த விவாதங்கள் நினைவிற்கு வருகின்றன. ..

பிரிட்டன் படைகள் ஈராக்கிலிருந்து வெளியேற்றம்?

ஈராக்கிலிருக்கும் ப்ரிட்டன் படைகளிலிருக்கும் 7000 வீரர்களிலிருந்து 1500பேரை உடனடியாகவும், 3000 பேரை டிசம்பருக்குள்ளாகவும் தாய்நாட்டுக்கு திரும்பச்சொல்லும் முக்கிய அறிவிப்பை டோனி ப்ளேர் இன்று வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more...

If confirmed, the announcement of British troop withdrawals would come just weeks ahead of the fourth anniversary of the start of the 2003 Iraq War on March 19.

And it comes shortly after US President George Bush launched a "surge" of 21,500 additional American troops in a bid to pacify the north of Iraq and capital Baghdad, which has been plagued by sectarian fighting and terrorism.

அமெரிக்கன் ஐடலில் இந்தியர்

அமெரிக்காவில் 'அமெரிக்கன் ஐடல்' எனும் பாடல் போட்டி ஃபாக்ஸ் தொலைக்காட்சியால் நடத்தப்படுகிறது. இதில் முதன் முறையாக இறுதிச் சுற்றுக்களில் பங்கெடுக்க இந்தியர் , சஞ்சையா மலக்கர், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

'அமெரிக்கன் ஐடல்' நிகழ்ச்சியில் தொலைபேசி மூலம் பொதுமக்களும் வாக்களித்து போட்டியாளரின் வெற்றி வாய்ப்ப்பை அதிகரிக்கச் செய்யலாம்.

சஞ்சையா பற்றிய விபரங்கள்

இன்று மாலை அமெரிக்க நேரம் 8/7C ஒலிபரப்பப்பட இருக்கிறது.

கில்கிறிஸ்டின் அறிக்கைக்கு கண்டனம்

சமீபத்தில் முடிவுற்ற சாப்பல்-ஹேட்லி கோப்பையை காலவிரயம் என்று விமர்சித்த ஆஸ்திரேலிய விக்கெட்-கீப்பர் கில்கிறிஸ்டுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டின் தலைவர் பதில்

கீரிப்பட்டி, பாப்பாபட்டி ஊராட்சித் தலைவர்கள் ராஜிநாமா?

மதுரை மாவட்ட ஆட்சியர் த. உதயச்சந்திரன் ஈரோடு மாவட்ட ஆட்சியராகப் பணி மாறுதல் செய்யப்பட்டதை அடுத்து, பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் ஊராட்சிகளின் தலைவர்கள், துணைத் தலைவர்கள் தமிழக அரசின் நடவடிக்கையைக் கண்டித்து பதவி விலகவுள்ளதாக, உசிலம்பட்டியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

Dinamani

கொச்சி அருகே படகு விபத்து

கொச்சி அருகே படகு மூழ்கியதில் மாணவர்கள் உட்பட 23 பேர் பலி. 3 ஆசிரியர்கள் உட்பட 20பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன.

தினமலர்
Rediff

சற்றுமுன்னுக்கு செய்தி தந்த பதிவர் SK அவர்களுக்கு நன்றி.

சம்ஜவுதா: மேலதிகச் செய்திகள்

சந்தேகத்துக்குரியவர்களின் வரைபடங்களை போலீஸ் வெளியிட்டுள்ளது. "பெட்டிகள் பூட்டிவைக்கப்பட்டிருந்ததால்தான் உயிரிழப்பு ஏற்பட்டது". பாக்கிஸ்தான் மந்திரி.
மேலும் ...

சம்ஜவுதா: on google news 2000+ articles

Reuters: Video

-o❢o-

b r e a k i n g   n e w s...