.

Friday, August 17, 2007

மீண்டும் துவங்கியது ஹெல்மெட் வேட்டை

ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போலீசார் மீண்டும் கெடுபிடி செய்யத் தொடங்கியதால், ஒரே நாளில் கிட்டத்தட்ட ஒன்பதாயிரம் பேர் பிடிபட்டனர். சென்னை ஐகோர்ட்டில்,`இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க உத்தரவிட வேண்டும்' என பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அரசிடம் ஐகோர்ட் விளக்கம் கேட்டதால், ஹெல்மெட் கட்டாய சட்டத்தை அரசு கொண்டு வந்தது. அதனால் வாகன ஓட்டிகளில் பெரும்பாலோனோர், ஹெல்மெட் வாங்கி பயன்படுத்த துவங்கினர்.இந்நிலையில் பொதுமக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியதால் முதல்வர் கருணாநிதி, `ஹெல்மெட் கட்டாய சட்டத்தை அமல்படுத்தும் நோக்கில், போலீசார் பொதுமக்களை துன்புறுத்தக் கூடாது' என அறிவித்தார். எனினும் சமீபத்தில் ஐகோர்ட்டில்,`ஹெல்மெட் அணிவதை ஏன் கட்டாயமாக்கவில்லை' என கேள்வி எழுப்பப்பட்டதால் போலீசார் சுறுசுறுப்பாக்கி அபராதம் விதிக்கத் தொடங்கினர். இன்று ஒரே நாளில் மட்டும் எட்டு ஆயிரத்து 910 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதால், வாகன ஓட்டிகள் புலம்பல் அதிகரித்து வருகிறது.

நன்றி: தினமலர்

'தஸ்லிமாவைக் கொல்பவருக்குப் பரிசு' - கொல்கொத்தா இமாம்

அதிர்சியூட்டும் விதமாக பேரணி ஒன்றில் பேசிய கொல்கொத்தா இமாம் ஒருவர் இன்னும் ஒருமாத காலத்துக்குள் பெண் எழுத்தாலர் தஸ்லீ நஸ் ரீனை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் இல்லையேல் அவரைக் கொல்பவருக்கு 'அளவற்ற' (Unlimited) வெகுமானம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

Imam puts unlimited reward on Taslima's head - Rediff

சென்னை சைபர் கிரைம் போலீஸ் - நடவடிக்கை

சென்னை, ஆக.17-
இன்டர்நெட் மையங்களில் மீண்டும் கிடுக்கிப்பிடி நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரனுக்கு பரிந்துரை அனுப்பியுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

* இன்டர்நெட் மையம் நடத்த உள்ளூர் போலீசார் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாத மையத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* மையத்தில் வாடிக்கையாளர்கள் அமரும் இடத்தில் உயரமான தடுப்புகள் வைக்கக் கூடாது.
* வெப் கேமரா மூலம் வாடிக்கையாளரை புகைப்படம் எடுக்க வேண்டும்.
* வாடிக்கையாளரின் அடையாள அட்டையை சரிபார்க்க வேண்டும்.
* மாணவர்களை பள்ளி நேரத்தில் இன்டர்நெட் மையத்தில் அனுமதிக்கக் கூடாது.
* வாடிக்கையாளரின் இருப்பிடம் அல்லது அலுவலகம் பற்றிய தகவலை தனி பதிவேட்டில் பதிய வேண்டும்.
* சிறியவர்களை இன்டர்நெட் மையத்தில் அனுமதிக்கக் கூடாது.
மேற்கூறிய பரிந்துரைகள் உள்பட 26 கட்டுப்பாடுகளை சைபர் கிரைம் போலீசார் கூறியுள்ளனர். இந்தக் கட்டுப்பாடுகளை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் கமிஷனரை சைபர் கிரைம் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். ஓரிரு நாளில் இன்டர்நெட் மையங்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திக்கு "தமிழ் முரசு" செல்லவும்.

பிராதமரைத் 'துரோகி' என அழைத்தார் ஃபெர்னாண்டஸ்

அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் உண்மைகளை மறைத்ததற்கு பிரதமர் மன்மோகன் சிங்கை 'துரோகி' என முன்னாள் மத்திய அமைச்சர் ஃபெர்னாண்டஸ் அழைத்தார். இதற்கு காங்கிரஸ் எம்.பிக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு எழுந்ததால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

தொடர் பொய்களால் நாட்டை ஏமாற்றி(துரோகம் செய்து) வருகிறார் என ஃபெர்னாண்டஸ் குறிப்பிட்டார். பின்னர் தன் செயலுக்கு மன்னிப்புக் கோர மறுத்துப் பேசுகையில் 'அமெரிக்க அதிபர் இதைச் செய்திருந்தால் பதவி விலக்கப்பட்டிருப்பார். சீனாவில் யாரேனும் இதைச் செய்திருந்தால் இந்நேரம் சுடப்பட்டிருப்பார்கள் என்றார்.'

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் தொடர்ந்து குழப்பங்கள்் நிலவி வருவது மத்திய அரசுக்கு நெருக்கடியைத் தந்துள்ளது.

இதற்கிடையே இந்தியா ஹைட் சட்டத்திற்குட்பட்டதல்ல என மன்மோகன் சிங் அரசு வலியுறித்திவருகிறது. (India not bound by Hyde Act, says Govt. Hindu)


Fernandes calls PM a traitor, refuses to apologise CNN-IBN
Uproar over Fernandes' remarks NDTV.com
Fernandes condemned for remarks against PM Zee News

யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழர்கள் வெளியேற்றம்

கொழும்பு, ஆக. 17-

இலங்கையில் விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறி தமிழர் பகுதிகளில் பொதுமக்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. யாழ்ப்பாணத்தை தங்கள் பிடியில் வைத்திருக் கும் ராணுவம் அங்கு அவசிய பொருட்கள் செல்வதை தடுத்து நிறுத்தி வருகிறது.

இதனால் போதிய உணவு மற்றும் அவசிய பொருள்கள் இன்றி தமிழர்கள் பட்டினி கிடக்கிறார்கள். பள்ளிக்கூடங்கள் மீது குண்டு வீசுவது, மாணவர்களை கடத்துவது போன்ற அட்டூழியங்களில் ராணுவம் ஈடுபட்டு வருகிறது.

மேலும் செய்திக்கு "மாலை மலர்".

பெரு நிலநடுக்கம் - 450 பேர் இறப்பு

பெரு நாட்டில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 450பேர் இறந்திருக்கலாம் என ஐ.நா அறிவித்துள்ளது. மேலும் 1500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளன. வீடுகளை இழந்து மக்கள் போர்வைகளால் போர்த்திக்கொண்டு ஆவிகளைப் போல நடமாடிக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

உலகின் பல இடங்களிலிருந்தும் உதவி குவிந்தவண்ணம் இருக்கிறது.

இதற்கிடையே பெரு நில நடுக்கத்தில் உருவான சிறிய சுனாமி அலை இன்று ஜப்பானை சென்றடைந்தது.

Help rolls in as death toll rises to 450 in Peru quake - The Hindu
Small tsunami waves reach Japan following quake in Peru - The Hindu

'@' எனப் பெயரிடப் பட்டவர்

சீனாவில் இணையத்தின் ஆதிக்கம் அதிகமாயிருக்கிறது. பலரும் மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றி சீனப் பெயர்களுக்குப் பதில் ஹாலிவுட் சினிமாவில் வரும் பெயர்களையும் இணையத்தில் உலவும் பெயர்களையும் சூட்டிக்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

இதில் உச்ச கட்டமாய் ஒருவருக்கு @ எனப் பெயரிடப் பட்டுள்ளது. @ என்பதற்கு சீன மொழியில் இவரை அன்பு செய்யுங்கள் (Love him) எனும் மறைமுக அர்த்தம் உள்ளதாம்.

Strange names like '@' enter Chinese language -DNA India

தனியார் கேபிள் டிவி உரிமையாளர்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

தமிழக அரசு நடத்த இருக்கும் கேபிள் டிவி நிறுவனத்தால் தனியார் கேபிள் டிவி உரிமையாளர்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். தனியார் ஒருவரை போல அரசும் ஒரு கேபிள் டிவி நடத்த இருக்கிறது. இது கேபிள் டிவி இணைப்பை பெற்று கேபிள் ஆப்ரேட்டர்களுக்கு வழங்கும் பணியை மட்டுமே செய்யும். தமிழக அரசு கேபிள் டிவி கார்பரேஷன் என்பது தொலைக்காட்சியை நடத்தும் நிறுவனம் அல்ல தனியார் வீடுகளுக்கு நேரடியாக இணைப்பு வழங்கும் நிறுவனம் அல்ல.

கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் விருப்பப்பட்டால் மட்டுமே புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். யாருடைய தூண்டுதலாலோ பீதி அடைய தேவையில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

அணுசக்தி உடன்பாடு - மேலும் பின்னடைவு

இந்தியா அமெரிக்காவிற்கிடையேயான அணுசக்தி உடன்பாட்டுக்கு இடதுசாரி கட்சிகளின் ஒப்புதலை வாங்குவதற்கு மன்மோகன்சிங் அரசு முயன்று வருகிறது. இந்த ஒப்பந்தம் அமலானால் இந்தியாவால் அணுகுண்டு தயாரிக்கும் சோதனைகள் செய்ய இயலாமல் போகும் எனும் கருத்தை இடதுசாரிகளும் முக்கிய எதிர் கட்சிகளும் வலியுறுத்திவந்தன. இதை மன்மோகன்சிங்கின் அரசு மறுத்து அணுகுண்டு தயாரிப்பது இந்தியாவின் தார்மீக உரிமை என அறிவித்தது.

இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் இந்தியா அணுகுண்டு வெடிக்கும் சோதனைகளைச் செய்தால் அமெரிக்கா ஒப்பந்தத்தை விலக்கிக்கொள்ளும் என தெரிவித்தது.

இதனால் அணுகுண்டு ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பா.ஜ.க இன்று அவையில் பிரதமர் மன்மோகன்சிங் தவறான தகவல்களைத் தந்து உரிமை மீறல் செய்துவிட்டதாக புகாரை முன்வைத்துள்ளது (Breach of Privilege Motion).

BJP seeks privilege motion against PM
Hindustan Times - 49 minutes ago
BJP to move privilege motion against PM Times of India

-o❢o-

b r e a k i n g   n e w s...