சென்னை, ஆக.17-
இன்டர்நெட் மையங்களில் மீண்டும் கிடுக்கிப்பிடி நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரனுக்கு பரிந்துரை அனுப்பியுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
* இன்டர்நெட் மையம் நடத்த உள்ளூர் போலீசார் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாத மையத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* மையத்தில் வாடிக்கையாளர்கள் அமரும் இடத்தில் உயரமான தடுப்புகள் வைக்கக் கூடாது.
* வெப் கேமரா மூலம் வாடிக்கையாளரை புகைப்படம் எடுக்க வேண்டும்.
* வாடிக்கையாளரின் அடையாள அட்டையை சரிபார்க்க வேண்டும்.
* மாணவர்களை பள்ளி நேரத்தில் இன்டர்நெட் மையத்தில் அனுமதிக்கக் கூடாது.
* வாடிக்கையாளரின் இருப்பிடம் அல்லது அலுவலகம் பற்றிய தகவலை தனி பதிவேட்டில் பதிய வேண்டும்.
* சிறியவர்களை இன்டர்நெட் மையத்தில் அனுமதிக்கக் கூடாது.
மேற்கூறிய பரிந்துரைகள் உள்பட 26 கட்டுப்பாடுகளை சைபர் கிரைம் போலீசார் கூறியுள்ளனர். இந்தக் கட்டுப்பாடுகளை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் கமிஷனரை சைபர் கிரைம் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். ஓரிரு நாளில் இன்டர்நெட் மையங்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும் செய்திக்கு "தமிழ் முரசு" செல்லவும்.
Friday, August 17, 2007
சென்னை சைபர் கிரைம் போலீஸ் - நடவடிக்கை
Labels:
தமிழ்நாடு
Posted by சிவபாலன் at 7:32 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
1 comment:
//ஓரிரு நாளில் இன்டர்நெட் மையங்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது//
ஆனால் எத்தனை நாட்களுக்கு இவை அமலில் இருக்கும்? என்பது மில்லியன் டாலர் கேள்வி!
Post a Comment