.

Tuesday, August 28, 2007

நாரீகாவை நாடுகடத்த நீதிபதி ஒப்புதல்

பனாமாவின் முன்னாள் தலைவர் மானுவல் நாரீகா (Manuel Noriega)வை ஃபிரான்சுக்கு நாடுகடத்த அமெரிக்க நீதிமன்றம் சம்மதித்திருக்கிறது. அடுத்த மாதத்துடன் தன்னுடைய ஃப்ளோரிடா சிறைவாசத்தை 73 வயதாகும் நாரீகா நிறைவு செய்கிறார்.

பணமாற்றுதலில் (money-laundering) மோசடி செய்ததற்காக பத்தாண்டு வரை ஃபிரான்சில் தண்டனை கிடைக்கலாம். போதைப்பொருள் கடத்தியதற்காக 1992 முதல் அமெரிக்காவின் மியாமி சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

BBC NEWS | Americas | Judge agrees Noriega extradition
America's tyrant | Special reports | Guardian Unlimited: "Manuel Noriega ruled Panama as a favourite of Washington until his dictatorial excesses and green light for cocaine trafficking became too much"

கள்ள வாக்குப் போட்டவருக்கு கடும் சிறைவாசம், சனநாயக உரிமைகள் பறிப்பு

இலங்கையில் 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடந்தது. அத் தேர்தலில் கள்ள வாக்குப் போட்டிருந்தார் என P.A. அஜித் குமார எனபவர் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது.



அவ் வழக்கை விசாரித்த கொழும்பு உயர் நீதிமன்றம் அஜித் குமார குற்றவாளியெனத் தீர்ப்பளித்தது. அவருக்கு ஒரு வருட கடும் காவல் சிறைத் தண்டனையும்[rigorous imprisonment], ஏழு வருடங்களுக்கு அவரின் சனநாயக உரிமைகளைப் [civic rights] பறிப்பதென்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.



சனநாயக உரிமைகள் [civic rights ] பறிக்கப்பட்ட திரு. அஜித் குமார அவர்கள் இனி ஏழு வருடங்களுக்கு தேர்தல்களில் வாக்களிக்கவோ அல்லது தேர்தல்களில் போட்டியிடவோ முடியாது.




தகவல் [Source] : lankadissent.com

"சொந்த நாட்டில் வேலை செய்யுங்கள்"- நடிகர் டாக்டர் விஜய் அறிவுரை.

நடிகர் விஜய், டைரக்டர் ஷங்கர் ஆகியோருக்கு எம்.ஜி.ஆர். பல்கலை கழகம் சார்பில் டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டன. இதற்கான விழா மதுரவாயலில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். பல் கலைக்கழக வளாகத்தில் நேற்று மாலையில் நடந்தது.

பட்டம் பெற்ற நடிகர் விஜய் நன்றி தெரிவித்து பேசிய தாவது:-

இந்த நேரத்தில் மாண வர்களுக்கு ஒரு சின்ன விஷயம் சொல்கிறேன். உபதேசம் செய்யப் போகிறேன் என்று பயந்து விட வேண்டாம். உலக அரங்கில் இந்தியா 2020-ல் முதல் இடத்தில் இருக்கும் என்று வல்லுனர்கள் சொல்கிறார்கள். டாக்டர்கள், என்ஜினீயர்களாகிய நீங்கள் நினைத்தால் 2010-ம் ஆண் டிலேயே இந்தியா அந்த நிலையை அடைந்து விடும். அந்த சாதனையை உங்களால் மட்டுமே நிகழ்த்த முடியும்.

மாணவர்கள் படித்து முடித்ததும் வெளிநாடு செல் கிறார்கள். வெளி நாட்டுக்கு போவதை ஒரு பேஷ னாகவே கருதுகிறார்கள். அறிவை கொடுப்பது நம்நாடு அறுவடை செய்வது அன்னிய நாடா. இங்கு படித்து பட்டம் பெறும் ஒவ்வொரு தமிழ் மாணவ னும் தமிழ்நாட்டில்தான் வேலை செய்ய வேண்டும்.இந்தியர்களுக்கு வெளி நாடுகளில் உள்ள மரியாதை உங்களுக்கு தெரியும். நம் அறிவை பயன்படுத்திக் கொண்டு விரட்டி விடுவார்கள். அந்த அறிவை நம் நாட்டுக்கு கொடுக்க வேண்டும். உங்கள் சக்தியும் வியர்வையும் நம்நாட்டில் தமிழ் மண்ணுக்கு பயன்பட வேண்டும்.


மேலும் செய்திக்கு மாலை மலர்

கபில்தேவை நீக்கியது சரி - ஸ்ரீகாந்த்

கும்பகோணம், ஆக. 25-

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுவாரியத்துக்கு எதிராக தொடங்கப்பட்ட போட்டி அமைப்பு இந்திய கிரிக்கெட் லீக்(ஐ.சி.எல்.) ஆகும். இதன் செயல் தலைவராக கபில்தேவ் நியமிக்கப்பட்டார்.

ஐ.சி.எல். அமைப்புடன் தொடர்பு வைத்ததற்காக பெங்களூரில் இயங்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் (என்.சி.ஏ.) தலைவர் பதவியில் இருந்து கபில்தேவை பி.சி.சி.ஐ. நீக்கியது. கபில்தேவ் நீக்கத்துக்கு முன்னாள் வீரர்கள் பிரசன்னா, சபாகரீம் கண்டனம் தெரிவித் திருந்தனர்.

கபில்தேவ் மீதான நடவடிக்கை சரியானதுதான் என்று தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய அணி கேப்டன் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். கும்பகோணத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் இது தொடர்பாக நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்திய கிரிக்கெட்லீக் அமைப்பு முற்றிலும் விளம்பரத்திற்காகவும், வியாபார நோக்கத்திற்காகவும் உருவாக்கப்பட்டு உள்ளது.

இதனை எதிர்த்து இந்திய கிரிக்கெட் வாரியம் கபில்தேவ் மீது நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது சரியானதுதான் இதில் எவ்வித தவறும் இல்லை.

மேலும் செய்திக்கு மாலை மலர்

துருக்கியின் அதிபர் தேர்தலில் அப்துல்லா குல் வெற்றி

துருக்கியின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் அப்துல்லா குல், அந்நாட்டின் அதிபர் தேர்தலில் வெற்றியடைந்தார்.

தேர்தலின் முதலிரண்டு சுற்றுகளில், எவருமே மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் வாங்க முடியாததால், பெரும்பான்மை மட்டுமே தேவைப்பட்ட இறுதிச் சுற்று தேர்தல் அவசியமாகியது. 550 உறுப்பினர்களிடையே 339 பேரிடம் ஆதரவு பெற்று வாகை சூடினார்.

மே மாதம் அதிபர் தேர்தலில் குல் போட்டியிட்டபோது, இராணுவத்தின் அழுத்தம் காரணமாக அவரது வேட்பு மனு தடுக்கப்பட்டது. முன்னாள் இஸ்லாமியவாதியான குல், துருக்கியின் மதசார்பற்ற அரசியல் சட்டட்திற்கு ஆபத்தாக இருப்பார் என்னும் அச்சம் பரவலாகக் காணப்படுகிறது.

Gul elected as Turkish president | Special reports | Guardian Unlimited
Bloomberg.com: Gul Is Elected Turkey's President, Risking Army Wrath

வீரபாண்டி ஆறுமுகத்தை நீக்க ஜெ. கோரிக்கை.

ஒரு மாநில அமைச்சர் இதுபோல் மத்திய அரசை எதிர்த்து ரயில் மறியல் போராட்டம் நடத்துவது எங்கும் கண்டிராத ஒன்று. இதற்கிடையே சேலம் ரயில்வே கோட்டம் கண்டிப்பாக அமையும் என்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் உறுதி அளித்ததால் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக கருணாநிதி அறிவித்துள்ளார். தங்களுக்கு வேண்டிய இலாகாக்கள் தரப்படவில்லை என்றால் மத்திய அரசில் பங்கேற்க மாட்டோம் என்று மத்திய அரசை மிரட்டிய கருணாநிதி, சேலம் ரயில்வே கோட்டம் பிரச்சினையில் மட்டும் ரயில் மறியல் போராட்டம் என்ற பெயரில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது ஏன்? போராட்டம் நடத்தாமலேயே லாலு பிரசாத்திடம் பேசி இப்போது பெற்ற அதே உறுதிமொழியை பெற்றிருக்கலாமே?

பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், வன்முறையில் ஈடுபடுதல் போன்ற சட்டத்துக்கும் ஜனநாயகத்துக்கும் எதிரான நடவடிக்கைகளை கைவிட்டு விட்டு சேலம் ரயில்வே கோட்டம் விரைவில் அமைய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதற்கு அதிமுக முழு ஒத்துழைப்பு வழங்கும்.

ஒரு பொறுப்புள்ள அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு, அரசியல் சட்டத்தின்முன் செய்த பதவி பிரமாணத்துக்கு விரோதமாக, சட்டத்துக்கு புறம்பாக வன்முறை செயலில் ஈடுபட்டதை அதிமுக கண்டிக்கிறது. மேலும் அமைச்சரவையில் இருக்க வீரபாண்டி ஆறுமுகம் தகுதியற்றவர். அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்

(தினமணியிலிருந்து)

குஜராத்: கட்சி தாவும் சட்டமன்ற உறுப்பினர்கள்

இந்தாண்டு இறுதியில் குஜராத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து காங்கிரசுக்கு தாவும் எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.பாரதிய ஜனதா கட்சியிலிருந்து முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல், முன்னாள் மத்திய அமைச்சர் காசிராம் ராணா, மூத்த தலைவர் சுரேஷ் மேதா ஆகியோர், மோடியின் செயல்பாடு பிடிக்காமல் கட்சியிலிருந்து வெளியேறி இருப்பது காங்கிரசுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில தலைவர்கள், தற்போது வெளிப்படையாகவே பாரதிய ஜனதாவைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களை காங்கிரஸ் கட்சிக்குள் இழுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். நரேந்திர மோடியின் ஆட்சியை அகற்ற எங்கள் கட்சியில் சேர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தெடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.பாரதிய ஜனதாவிலிருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ.,வான திரு கஜிராவையும், அவரது சகோதரர் வசந்த் கஜிராவையும், அவர்களது வீட்டிற்கே சென்று சந்தித்து பேசினார் காங்., தலைவர் சங்கர்சிங் வக்கேலா.இவர்கள் தவிர, பா.ஜ.,விலிருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ., சித்தார் பரமரும், காங்.,குக்கு ஆதரவாக மேடைகளில் முழங்கி வருகிறார்.

காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாரதிய ஜனதாவும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்களை தன்வசம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்களான மனிஷ் கில்லட்டுவாலா, அக்சாரியா ஆகியோர் பாரதிய ஜனதாவில் சேர்ந்துள்ளனர். இவர்களில், அக்சாரியா காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்.கட்சித் தாவும் எம்.எல்.ஏ.,க்கள், இரு கட்சிகளிலும் அதிகரித்து வருவதால், குஜராத் அரசியலில் விரைவில் பெரும் மாற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன.

நன்றி: தினமலர்

அதிமுக பொருளாளர் டிடிவி தினகரன் நீக்கம்

அதிமுக வின் உட்கட்சி மாற்றங்களில்.....

பொருளாளர் பதவியிலிருந்து டி.டி.வி.தினகரன் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக எம்.தம்பித்துரை நியமிக்கப்பட்டுள்ளார்.கட்சியின் மீனவர் பிரிவு செயலாளர் டி.ஜெயகுமார், அகில இந்திய எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளராகவும் சிறுபான்மை பிரிவு செயலாளர் பி.எச்.பாண்டியன், அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சிறுபான்மை பிரிவு செயலாளராக ஜஸ்டின் செல்வராஜ், மீனவர் பிரிவு செயலாளராக கே.கே.கலைமணி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காஸ்ட்ரோ குறித்து அமெரிக்காவில் 'வதந்தி'!

கியூப அதிபர் பிடல் காஸ்ட்ரோ இறந்து விட்டதாக அமெரிக்காவில் மீண்டும் வதந்தி பரவியுள்ளது.

ஆனால் இது வெறும் வதந்திதான், காஸ்ட்ரோ நல்ல உடல் நலகத்துடன் உள்ளார் என்று கியூப அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கீழே, கரீபியன் கடலில், கரிவேப்பிலை அளவுக்கு உள்ள குட்டித் தீவுதான் கியூபா. அமெரிக்காவின் நீண்ட கால எரிச்சல். கியூபாவின் தலைவராக, அதிபராக பல ஆண்டுகளாக இருந்து வருகிறார் காஸ்ட்ரோ. புரட்சி வீரனானா காஸ்ட்ரோவை பதவியிலிருந்து நீக்க துடித்துக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. அவரை அகற்றவும், கொலை செய்யவும் கூட பலமுறை முயற்சிள் நடந்தன. ஆனால் அத்தனையையும் மீறி மக்கள் ஆதரவுடன் கியூபாவை வழி நடத்திக் கொண்டிருக்கிறார் காஸ்ட்ரோ. பிடல் காஸ்ட்ரோ தன்னுடைய உடல் நலக்குறைவு காரணமாக ஆட்சி அதிகார பொறுப்பை தன்னுடைய தம்பி ரால் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்துவிட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

கடந்த ஆண்டு ஜூன் 5ம் தேதி டிவியில் பேட்டி கொடுத்தார். அதன்பின்பு கடந்த ஆண்டு ஜூலை 31ம் தேதியன்று அவருக்கு மீண்டும் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதன் பிறகு பிடல் காஸ்ட்ரோவின் புகைப்படம் டிவியிலோ அல்லது பத்திரிக்கையிலோ வரவில்லை. இந்நிலையில் பிடல் காஸ்ட்ரோ இறந்து விட்டார் என்று கியூபா நாட்டினர் அதிகம் வசித்து வரும் அமெரிக்காவின் மியாமி நகரில் செய்தி பரவியது. இதனால் கியூபாவிலும் கூட கவலை பரவியது. ஆனால் இது வெறும் வதந்திதான் என்று கியூப அமைச்சர் ஒருவர் மறுத்துள்ளார். காஸ்ட்ரோ நல்ல உடல்நலத்துடன் ஆரோக்கியமாக இருக்கிறார். உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு வழக்கம் போல் ஆலோசனைகளை வழங்கி வருகிறார், அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி சிலரால் கிளப்பப்பட்ட வதந்தி. காஸ்ட்ரோ இறந்து விட்டார் என்று கூறுபவர்கள் நிச்சயம் நல்ல மன நிலையுடன் கூடியவர்களா இருக்க முடியாது. இவ்ரகள் இறந்து விட்டார் என்று சொல்லச் சொல்ல அவர் இன்னும் பல காலம் உயிரோடு இருந்து எங்களை வழி நடத்திச் செல்வார் என்றார்.

யுபிஏ-இடது கூட்டுக்குழு அமைக்கப்பட்டது

அணுசக்தி உடன்படிக்கையின் கூறாக அமெரிக்க ஹைட் சட்டத்தின் தாக்கம் இந்திய வெளியுறவு கொள்கைகளை பாதிப்பதைப் பற்றி ஆராய யுபிஏ- இடதுசாரிகட்சிகளின் கூட்டுக்குழு அமைக்கப்படவிருக்கிறது. இன்று இந்திய கம்யூனிஸ்ட்களிடமும் பின்னர் மார்க்சிய கம்யூனிஸ்ட்களிடமும் காங்கிரஸ் நடத்திய மராத்தன் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டுக்குழுவின் அதிகாரம், எல்லைகள், அமைப்பு போன்றவை அடுத்த இருநாட்களில் முடிவாகும். இக்குழுவின் ஆய்வறிக்கை வரும்வரை காங்கிரஸ் 123 உடன்பாட்டை மேற்கொண்டு எடுத்துச் செல்லாமல் இருக்க சம்மதித்துள்ளது என சீதாராம் யெச்சூரி கூறினார்.

Left-UPA peace panel this week- Hindustan Times

மனித உரிமைகள்: எங்கே செல்கிறோம்?

பிஹாரின் பகால்பூர் மாவட்டத்தில் நாத்நகரில் கோவில் அருகே சாமி கும்பிட வந்த சாந்திதேவி என்பவரிடமிருந்து தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு ஓட முயன்ற முகமது ஔரங்கசீப் என்ற திருடனை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்ததும் இல்லாமல் காவல் துணை ஆய்வாளரே தனது மோட்டார்சைக்கிளில் கட்டி தரையில் இழுத்துச் சென்ற நிகழ்ச்சி நடந்தேறியிருக்கிறது. இந்த சம்பவத்தை தொலைக்காட்சி ஊடகங்கள் வெளிக்கொணர்ந்தபோது பகால்பூரின் டிஐஜி சர்மா காவலர்கள் பொதுமக்களிடமிருந்து திருடனைக் காப்பாற்றியிருப்பதை ஊடகங்கள் எதிர்மறையாகவே காட்டுகின்றன என்றார். மோட்டார் சைக்கிளில் தப்பியோடாமல் இருப்பதற்காக கட்டப்பட்டிருந்த ஔரங்கசீப் சாலை மேடுபள்ளத்தினால் தடுமாறி கீழே விழுந்து சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறான் என்றார்.

DNA - India - Man brutally thrashed by crowd for petty theft - Daily News & Analysis

ஹைதராபாத் குண்டுவெடிப்பு: உளவுத்துறை எச்சரிக்கை செய்திருந்தது

இந்திய உளவுத்துறை ஐந்து மாதங்கள் முன்னரே எட்டு கிலோ இராணுவதர வெடிமருந்துகள் ஹைதராபாத்தில் நடத்தத் திட்டமிட்ட சம்பவங்களுக்காக ஹர்கத் உல் ஜிஹாதி யெ இஸ்லாமி தீவிரவாதகுழுவிற்கு கடத்தப்பட்டதை அறிந்திருந்தது. மார்ச் 2007இல் இந்தோ-பங்களா எல்லையில் கைது செய்யப்பட்ட ஹர்கத் குழுவினரிடமிருந்து இதை அறிந்தபோதே எச்சரிக்கை மணி அடிக்க தொடங்கியது. ஔரங்காபாத் நகர கணிப்பொறியாளர் ஷேக் நைமிடமிருந்து ஹைதராபாத்தில் திட்டமிட்டிருந்த செயல்களைப் பற்றி அறிந்தனர். அவர்மூலம் தெரிந்த ஒரு வங்கி ஊழியரை காவலர்கள் வளைத்துப் பிடிக்கும்போது அவரிடமிருந்து வெடிபொருட்கள் கைமாறிவிட்டன. சங்கேதங்கள் மூலமே அறிந்த அவர்களைப் பற்றி காவலர்களால் மேலே தொடரமுடியவில்லை.
The Hindu : Front Page : Intelligence had warned of strikes

ராகிங் கொடுமை... (பெண்களும் சளைத்தவர்கள் இல்லை )

ராகிங்: மாணவியை நிர்வாணமாக்கிய மாணவிகள்

ஆகஸ்ட் 28, 2007

டேராடூன்: முதலாமாண்டு மாணவியை நிர்வாணப்படுத்தி ராக்கிங் செய்து கொடுமைபடுத்தியுள்ளனர் சீனியர் மாணவிகள்.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் தேசிய மாணவர் படை பயிற்சி (என்.சி.சி) முகாம் சமீபத்தில் நடைபெற்றது. 12 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற இந்த முகாமில், டேராடூனில் உள்ள கல்லூரியில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் பங்கேற்றார்.

தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த அந்த மாணவி ரிக்ஷா தொழிலாளியின் மகள். இந்த மாணவியை பயிற்சி முகாமில் கலந்து கொண்ட சீனியர் மாணவிகள் சிலர் சேர்ந்து ராக்கிங் செய்துள்ளனர். அவர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், மாணவிகள் ஒன்று சேர்ந்து அவரை கடுமையாக திட்டியதோடு வலுக்கட்டாயமாக நிர்வாண நிலையில் நிற்க வைத்துள்ளனர்.

இதனால் அந்த மாணவி மன நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பின்பு இந்த சம்பவத்தை பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

எனது மகள் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதற்காக தான் இதுவரை புகார் கொடுக்கவில்லை என்று அந்த மாணவியின் தாயார் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து என்.சி.சி முகாம் நிர்வாகிகள் கூறுகையில்,

என்.சி.சி பயிற்சியின் போது அந்த மாணவி உடல்நலம் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தார். அதனால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

ராக்கிங் நடந்திருக்கலாம். அதனை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் பாதிக்கப்பட்ட மாணவி இதுவரை எங்களுக்கு எந்த புகாரும் கொடுக்கவில்லை. புகார் கொடுத்தால் முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

தட்ஸ்தமிழ்

தெல்லிப்பளைத் துர்க்கையம்மன் ஆலயத் தேர்த் திருவிழா

யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா நேற்று [ஞாயிற்றுக் கிழமை] மிகவும் விமர்சையாகவும் அமைதியாகவும் நடந்து முடிந்துள்ளது. காலை7.00 மணிக்கு இடம் பெற்ற வசந்த மண்டபப் பூசையைத் தொடர்ந்து காலை 8.45 மணிக்கு தேரில் பவனி வருவதற்காக அடியவர்களின் அரோகரா கோசத்துடன் அன்னை வெளியில் வந்தார்.





பகல் 9.15 மணிக்கு தேர் இருப்பிடத்தில் இருந்து வீதி ஊர்வலமாக ஆரம்பித்து பகல் 10.00 மணிக்கு இருப்பிடத்தை வந்தடைந்தது. யாழ் குடா நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக் கணக்கான அடியவாகள் காலை முதல் ஆலயத்தில் கூடத் தொடங்கினார்கள்.





தூக்குக் காவடிகள், பறவைக்காவடிகள், காவடிகள் எனப் பலவும் யாழ் குடாநாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஆலயத்திற்கு எடுத்து வரப்பட்டது.





இடம் பெயர்ந்து பல்வேறு நெருக்கடிக்குள் வாழ்ந்து கொண்டு இருக்கும் மக்கள் தமது இருப்பிடங்களுக்கு மீண்டும் செல்ல வேண்டும் எனக் கூறி அழுது புலம்பிய காட்சிகள் அனைவரின் மனத்தையும் தொடுவதாகக் காணப்பட்டது.





Source [தகவல் ஆதாரம்]: www.pathivu.com

விடுதலைப் புலிகள் - இலங்கை இராணுவம் மோதல்


இலங்கையின் வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள வவுனியா - மன்னார் மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளில் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தினருக்குமிடையே கடும் சண்டை மூண்டது.

திங்கட் கிழமை பிற்பகல் 4 மணியளவில் மன்னார் - வவுனியா மாவட்ட எல்லைப் பகுதிகளை அண்டிய விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை நோக்கி இலங்கை இராணுவத்தினர் முன்நகர்வு தாக்குதலை மேற்கொண்ட போது விடுதலைப் புலிகள் எதிர்த்தாக்குதலை நடாத்தினர்.

இரு மணி நேரமாக இரு தரப்புக்குமிடையில் கடும் சண்டை மூண்டது. இச் சமரில் 3 இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் ஐவர் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

இச் சமரில் விடுதலைப் புலிகளுக்கு எதுவித இழப்பும் ஏற்படவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

source[தகவல் ஆதாரம்] : http://www.tamilnet.com/

அமீரகத்தின் அப்துல் கலாமாக துணை அதிபர் ஷேக் முஹம்மது


அமீரகத்தின் அப்துல் கலாமாக துணை அதிபர் ஷேக் முஹம்மது

இந்தியத் திருநாட்டின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமைப் போல் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபர் ( Vice President ), பிரதமர் மற்றும் துபாய் மன்னர் ஆகியவற்றை ஒருசேர வகிக்கும் ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் பள்ளிக் குழந்தைகளைச் சந்தித்து அவர்களை உற்சாகப்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார்.

புதிய கல்வி ஆண்டின் முதல் நாளான நேற்று ( 26 ஆகஸ்ட் 2007 ) ஷேக் முஹம்மது துபாயில் உள்ள சில பள்ளிகளுக்கும், அஜ்மானில் உள்ள சில பள்ளிகளுக்கும் சென்று மாணவர்களைச் சந்தித்து உற்சாக மூட்டினார்.

மேலும் அவர் மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் உடனடியாக வழங்கிட கல்வி அமைச்சர் டாக்டர் ஹனீப் ஹஸனிற்கு உத்தரவிட்டார். சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வு மற்றும் உடல்நலக்கல்வி ஆகியவை குறித்த விளக்கங்கள் மாணவர்களுக்கு கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.

www.gulfnews.com
http://www.gulfnews.com/nation/Education/10149348.html

-o❢o-

b r e a k i n g   n e w s...