.

Tuesday, August 28, 2007

"சொந்த நாட்டில் வேலை செய்யுங்கள்"- நடிகர் டாக்டர் விஜய் அறிவுரை.

நடிகர் விஜய், டைரக்டர் ஷங்கர் ஆகியோருக்கு எம்.ஜி.ஆர். பல்கலை கழகம் சார்பில் டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டன. இதற்கான விழா மதுரவாயலில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். பல் கலைக்கழக வளாகத்தில் நேற்று மாலையில் நடந்தது.

பட்டம் பெற்ற நடிகர் விஜய் நன்றி தெரிவித்து பேசிய தாவது:-

இந்த நேரத்தில் மாண வர்களுக்கு ஒரு சின்ன விஷயம் சொல்கிறேன். உபதேசம் செய்யப் போகிறேன் என்று பயந்து விட வேண்டாம். உலக அரங்கில் இந்தியா 2020-ல் முதல் இடத்தில் இருக்கும் என்று வல்லுனர்கள் சொல்கிறார்கள். டாக்டர்கள், என்ஜினீயர்களாகிய நீங்கள் நினைத்தால் 2010-ம் ஆண் டிலேயே இந்தியா அந்த நிலையை அடைந்து விடும். அந்த சாதனையை உங்களால் மட்டுமே நிகழ்த்த முடியும்.

மாணவர்கள் படித்து முடித்ததும் வெளிநாடு செல் கிறார்கள். வெளி நாட்டுக்கு போவதை ஒரு பேஷ னாகவே கருதுகிறார்கள். அறிவை கொடுப்பது நம்நாடு அறுவடை செய்வது அன்னிய நாடா. இங்கு படித்து பட்டம் பெறும் ஒவ்வொரு தமிழ் மாணவ னும் தமிழ்நாட்டில்தான் வேலை செய்ய வேண்டும்.இந்தியர்களுக்கு வெளி நாடுகளில் உள்ள மரியாதை உங்களுக்கு தெரியும். நம் அறிவை பயன்படுத்திக் கொண்டு விரட்டி விடுவார்கள். அந்த அறிவை நம் நாட்டுக்கு கொடுக்க வேண்டும். உங்கள் சக்தியும் வியர்வையும் நம்நாட்டில் தமிழ் மண்ணுக்கு பயன்பட வேண்டும்.


மேலும் செய்திக்கு மாலை மலர்

39 comments:

சிவபாலன் said...

அறிவுரை சொன்ன டாக்டர் விஜய் வாழ்க!! :)

Anandha Loganathan said...

மெய்யாலுமே ஸ்மைலி தானா ?



சிவபாலன்,

விஜ்ய் கருத்தை விவாதகளத்தில் ஆரம்பியுங்கள். அங்கு சந்த்ப்போம்.

ஆனந்த்.

பாலராஜன்கீதா said...

டாக்டர் விஜய் அவர்களுக்குக் கொடுக்கப்படும் சம்பளத்தில் பாதி அளவு கொடுத்தால் போதும் நம் நாட்டில் உள்ள எவரும் வேலை செய்ய வெளிநாட்டிற்குச் செல்லவே மாட்டார்கள்.
:-)

சிவபாலன் said...

விவாதக் களத்தில் போட்டுவிடலாமா?! நல்ல யோசனைதான்..!

இருங்க வரேன்.

ILA (a) இளா said...

ஆமாங்க சிவா, விவாத களத்துல வையுங்க.

Anonymous said...

ண்ணா..., நாட்ல கொசுத்தொல்லை தாங்க முடியலீங்ண்ணா...

Boston Bala said...

கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்ய ஆள் குறைஞ்சுடுமோ என்னும் கவலை.

வவ்வால் said...

சிவபாலன்,

கோடம்பாக்கம் கோவிந்து சொல்கிறார், விஜய் அண்ணா முதலில் மாற்று மொழி படங்களின் கதையை வாங்கி நடிக்காமல் தமிழ் இயக்குனர்களின் கதையில் நடிங்கண்ணா என்று! :-))

டாக்டர் ஆனதும் தான அறிவுரைலாம் சொல்ல ஆரம்ப்பிச்சுறாங்களே!

Anonymous said...

வெளிநாட்டில் சூட்டிங் வையுங்கள்

சிவபாலன் said...

இளா

தமிழ்மண விவாதக் களத்தில் இடுக்கை போட்டாச்சு..

நன்றி!

சிவபாலன் said...

// விஜய் அண்ணா முதலில் மாற்று மொழி படங்களின் கதையை வாங்கி நடிக்காமல் தமிழ் இயக்குனர்களின் கதையில் நடிங்கண்ணா என்று! //

வவ்வால்,

Nice Stroke!

Anonymous said...

வெளினாட்டில் தமிழன் இருப்பதால்தான் விஜய் கோடியில் சம்பாதிக்க முடிகிறது. முதலில் வெளினாட்டில் பிலிம் காட்டுவதை நிறுத்த டாக்டர் வியஜ் நிறுத்துவாரா?

அனைத்து வளங்களும் உள்ள இந்தியாவிற்கு வெளியே படம் எடுப்பதை நிறுத்துவாரா?

போக்கிரி டாக்டர் பிலிம் காட்டுவதை நிறுத்துவது நல்லது!!!!!!

புள்ளிராஜா

நாகை சிவா said...

புத்தி சொல்லுறாம்!

அட போப்பா....

(கவுண்டர் மாதிரி படிங்கண்ணா)

வவ்வால் said...

சிவபாலன் ,

ரொம்ப வேகம் தான். நீங்கள் விவதாக்களத்தில் போட்டுள்ளீர்களா, நான் இப்போது தான் இது பற்றி பதிவொன்று போட்டேன். உங்கள் பதிவினை ஒட்டிதான் அதுவும் போடப்பட்டுள்ளது.நன்றி!

சிவபாலன் said...

// புத்தி சொல்லுறாம்! //

Ha Ha Ha..

Best One!

அரை பிளேடு said...

இந்த சமுதாயத்திற்காக சிந்தித்து பிரெயின் ட்ரெயின் பற்றியெல்லாம் கருத்து தெரிவிக்கும் சமூக சிந்தனையாளர் இளைய தளபதி டாக்டர் விஜய் வாழ்க !

சின்னப் பையன் said...

அறிவுரை சொல்வதோடு போய்விட்டால் பரவாயில்லை... டாக்டர் ஆகிவிட்டோம் என்று ஆபரேசன் செய்ய கிளம்பிடப் போகிறார்...

மாசிலா said...

விஜய் சொன்னதை நான் ஆமோதிக்கிறேன்.

அவர் சொன்னது மிகச்சரியானதே. பணத்திற்கு மட்டும் படித்தவர்கள் வெளிநாடுகளுக்கு போகக்கூடாது.

மேலும், தாய் நாட்டில் நல்ல குடும்ப சூழலில், பண்பாட்டு, பாரம்பரிய, கலாச்சார, மொழி, சொந்தம், பந்தம், நட்பு போன்ற ஊட்டச்சத்துகளுடன் வளர்ந்து நன்றாக வேர்பிடித்த பசுமையான கன்றுகளை திடீரென்று பணத்துக்காக இவ்வேர்களில் இருந்து பிய்த்து அறுக்கப்பட்டு அந்நிய நாடுகளில் அந்நியன் என்கிற முத்திரையுடன் சிறுமை படுத்தப்பட்டு கூனிகுறுகி இயந்திர வாழ்க்கை வாழ்க்கை வாழ்வதால் இந்தியர்கள் மட்டும் அல்லாத அனைத்து அந்நிய புது குடியேறிகளும் மிகுந்த மன உலைச்சள்களுக்கு ஆளாகி தங்களது அடையாளத்தை இழந்து அவதிப்படுகின்றனர்.

என் விசயத்தில் இது உண்மையே.

அறிவாளிகள் அரசாங்க பொறுப்பாளர்கள் சீரிய முறையில் சிந்தித்து இதற்கு ஒரு நல்ல முடிவுகளை காணவேண்டும்.

நானே இதைப்பற்றி ஒர் கட்டுரை எழுத எண்ணமிட்டு வருகிறேன். இது சம்பந்தமாக தோழியர் தமிழச்சியுடனும் கலந்துரையாடியும் உள்ளேன்.

நல்ல செய்தி பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

விவாத களத்தில் சந்திப்போம்.

தீரன் said...

யாரெல்லாம் அறிவுரை சொல்லறதுனு ஒரு வெவஸ்தயே இல்லாம போயிருச்சு... மொதல்ல அந்த டுபாக்கூர் தெலுங்கு படத்துல இருந்த காப்பி அடிக்கரத நிறுத்துடா வென்னப் பயலெ....தமிழ் பாட்டா கொல பண்ணாம நல்ல பாட்டுக்கு ஒழுங்கா ஆட்டம் ஆடு.... உனக்கெல்லாம் டாக்டர் பட்டம் கொடுத்தவன செருப்பால அடிக்கனும்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

முதல் இந்த அறிவுக் கொழுந்து, உழைப்புக் கேற்ற ஊதியம் தரட்டும்.
தமிழனுக்கு செந்தில் கூடப் புத்தி சொல்லும்...
பட்டம் ஆராவது தந்தானா/ சுவரிலை மாட்டு, அடுத்த பட டைட்டிலில் போடு.. அறிவுரை...தேவையில்லை

Anonymous said...

//படித்தவர்கள் வெளிநாடுகளுக்கு போகக்கூடாது. //



மாசிலாண்ணா சூப்பர்ணா!

இதை பாரிஸ்லா உக்காந்துகிட்டு எழுதுறீங்களா?

நீங்க டாக்டர் விஜய்வே மிஞ்சிடீங்கண்ணா!

G.Ragavan said...

மாண்புமிகு டாக்டர் விஜய் அவர்கள் ஒழுங்காக தமிழில் ஒரு படம் எடுக்கட்டும். அப்புறம் எதுவும் பேசட்டும். டாக்டர் பட்டம் குடுத்துட்டாங்கன்னு அவரோட படத்த ஆப்பரேஷன் தேட்டர்ல போடச்சொல்வாரு போல இருக்கே. தெலுங்கு ரீமேக் இல்லாம பழைய படம் ரீமேக்கு இல்லாம.....உருப்படியா ஒரு படமாவது நடிக்கட்டும்...அப்புறமா இவரை நடிகர்னாவது நம்ம மதிக்கலாமான்னு யோசிக்கலாம்.

கோவை ராஜா said...

ரொம்ப நன்றிங்க டாக்டர், பட்டணத்துக்காவது வரலாங்கலா, இல்ல சொந்த ஊர்லயே இருந்து அத காப்பாத்தறதா?

துளசி கோபால் said...

பாவம். இவரை ஏங்க இந்தக் காச்சு காய்ச்சறிங்க எல்லாரும்!

இவரு என்ன கோலிவுட்டில்தானே நடிக்கறார். காசு வருதுன்னு ஹாலிவுட் போயிட்டாரா?

அது இருக்கட்டும். நர்ஸ் பட்டம் யார்யாருக்குக்
கொடுக்கப்போறாங்கன்னு சொல்லுங்கண்ண்ண்ண்ண்ண்ண்ணா:-)))))))

கோவை ராஜா said...

டாக்டர் ஐயா, பட்டணத்துக்காவது பொழப்ப தேடி போலாமா?

ம் ம் இதுக்கு காரணமான விக்ரமன், பாசிலை சொல்லனும்?

கோவை ராஜா said...

நர்ஸம்மா நம்ப அசின், திரிசா ஆனா என் ஓட்டு நமிதா, மாளவிகாவுக்கு!!!!!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//அது இருக்கட்டும். நர்ஸ் பட்டம் யார்யாருக்குக்
கொடுக்கப்போறாங்கன்னு சொல்லுங்கண்ண்ண்ண்ண்ண்ண்ணா:-//)))))))
அக்கா!
இதுதான் உள்குத்து...

ஜோ/Joe said...

//இவரு என்ன கோலிவுட்டில்தானே நடிக்கறார். காசு வருதுன்னு ஹாலிவுட் போயிட்டாரா? //

துளசியக்கா,
இது என்ன காமெடி! ஏதோ ஹாலிவுட்-ல இவர நடிக்க கூப்பிட்டது மாதிரியும் ,இவரு தன்மானத்தோட மறுத்துட்ட மாதிரியும் சொல்லுறீங்க.

இவன் கட்டவுடுக்கு பால் ஊத்துறதுக்கு எத்தனை வேலை வெட்டியில்லாம எத்தனை பேர் இருக்காங்க .இந்த லட்சணத்துல தமிழ்நாட்டுல படிச்சவனுக்கெல்லாம் தமிழ்நாட்டுலயே வேலை கொடுப்பாராமா?

துளசி கோபால் said...

ஜோ,

ஏன்ப்பா........ பாலூத்தறது ஒரு வேலை இல்லையா? அச்சச்சோ.........

ஹாலிவுட்லே இவரைக் கூப்புடலையா?
என்னப்பா இது அநியாயம்? மெய்யாலுமா சொல்றீங்க?

இன்னொரு அச்சச்சோ..........

கோவை ராஜா said...

I don't understand, Why my comments are not getting published, Is there any reason?

கோவை ராஜா said...

I don't understand, Why my comments are not getting published, Is there any reason?

Unknown said...

நம்ம நாட்ல, அறிவுரை ஒன்னுதான் இலவசமா கெடைக்குது.

இவுரு போயி இவுரு கட் அவுட்டுக்கு பாலும் பீரும் ஊத்துரானே, வெளங்காம வீணாப்போன தமிழன், அவனுக்கு முதல்ல அறிவுர சொல்லட்டும்.

Unknown said...

பிரபலங்கள் தமக்கு தெரியாத/புரியாத விஷயத்தில் அட்வைஸ் செய்வதை நிறுத்திகொள்ள வேண்டும்.அதுதான் அவர்களுக்கு நல்லது.

விஜயின் இந்த கருத்தை தூக்கி உடைப்பில் போட்டு விட்டு அவரவர் வேலையை அவரவர் பார்ப்பதே நல்லது:)

வாசகன் said...

Doctor என்பதை 'Talk'டருன்னு புரிஞ்சிருப்பாராயிருக்கும்...

Anonymous said...

//உலக அரங்கில் இந்தியா 2020-ல் முதல் இடத்தில் இருக்கும் என்று வல்லுனர்கள் சொல்கிறார்கள். டாக்டர்கள், என்ஜினீயர்களாகிய நீங்கள் நினைத்தால் 2010-ம் ஆண் டிலேயே இந்தியா அந்த நிலையை அடைந்து விடும். //

இவரும் மற்ற நடிகர்களும் பாமரனை முட்டாளா மாத்திட்டு வருவதை நிருத்தினால் 2010 என்ன 2009லயே இந்தியா வல்லரசாயிரும்.

இவருக்கே சொந்த மூளை இல்லாமதான் தெலுங்குல இருந்து சுட்டுட்டு இருக்கார். யார் இதெல்லாம் இவர கேட்டா?

யார் யாருக்குதான் முனைவர் பட்டம்னும் விவஸ்த்தையே இல்லாம போச்சு.

Anonymous said...

இவர் சொந்த நாட்டுக்கு வருமான வரி ஒழுங்கா கட்றாரா!

http://www.kollywoodtalk.com/another-it-raid-on-vijays-office/?jal_no_js=true&poll_id=5

Anonymous said...

நம்ம. அம்மா ஜெ. ஜெ 100 நாட்கள் ஆட்சி செய்த காரணத்திற்காக டாக்டர் பட்டம் வழங்கிக் கௌரவித்தது நம்ம ஊரு பல்கலைக்கழகம்.
ந‌ம்ம‌ திரிஷா, அசின், லூஸ் மோக‌ன், க‌வுண்ட‌ன், சென்தில் என‌ எதிர்கால‌ டாக்ட‌ர்க‌ளுக்கும் வாழ்த்துக்க‌ள்

புள்ளிராஜா

Anonymous said...

Don't advice others before we have to check how we are.

Anandha Loganathan said...

அவர் என்ன சாதிச்சார்ன்னு அவருக்கு டாக்டர் பட்டம் தந்து இருக்காங்க? யாரவது தெரிஞ்சா சொல்லுஙகள்?.

பட்டம் கொடுத்தால் வாங்கிகிட்டு போய்கிட்டே இருக்கணும். அறிவுரை சொல்றதுக்கு அவர் ஒன்னும் கலைஞ்ர் மாதிரியோ இல்லை கலைஞானி மாதிரி எதுவும் சாதிக்கல்லை.

-o❢o-

b r e a k i n g   n e w s...