.

Showing posts with label இடஒதுக்கீடு. Show all posts
Showing posts with label இடஒதுக்கீடு. Show all posts

Sunday, September 2, 2007

ஊனமுற்றோர் இட ஒதுக்கீட்டில் சாதி உள் ஒதுக்கீட்டுக்கு நீதிமன்றம் மறுப்பு

மத்திய பிரதேசத்தில் பள்ளிக்கூட ஆசிரியர் பணியில் மூவர் சேர்த்துக் கொள்ளப்பட்டதை அந்த மாநில அரசு விலக்கம் செய்திருந்தது. உடல் ஊனமுற்றோருக்கான சிறப்பு ஒதுக்கீட்டில் பழங்குடி மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென உள் ஒதுக்கீடு செய்து இவர்கள் நியமிக்கப்பட்டது செல்லாது என்றும் அரசு அறிவித்தது. இதை எதிர்த்து 3 ஆசிரியர்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை உச்சநீதிமன்ற அமர்வொன்றின் நீதிபதிகள் எஸ்.பி. சின்கா, எச்.எஸ்.பெடி ஆகியோர் விசாரித்து தீர்ப்பு கூறினார்கள்.

அவர்கள் தங்கள் தீர்ப்பில்

"உடல் ஊனமுற்றோருக்கு என்று ஒதுக்கப்பட்ட இடங்களில் சாதி அடிப்படையில் தனியாக உள் ஒதுக்கீடு அளிக்க முடியாது. பெண்களுக்கான கோட்டாவிலும் தனியாக சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்க முடியாது. 50 சதவீதத்துக்கு மேல் இருக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. உடல் ஊனமுற்றோருக்கான இட ஒதுக்கீட்டில் எந்த பாதிப்பும் இப்போது ஏற்படவில்லை
என்று கூறியுள்ளனர்.

மாலைமலர்

Friday, August 31, 2007

ஜெய்ப்பூரில் பிராமணர் பந்த்

தங்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோரி பிராமணர்கள் சில நாள்களுக்கு முன்னால் ஜெய்ப்பூரில் ஊர்வலம் சென்றனர். அப்போது தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்றதாக பிராமணர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். அதில் பலர் காயம் அடைந்தனர்.

அதைக் கண்டிக்கவும், தங்களுக்குள்ள ஆதரவை அரசுக்குக் காட்டவும் பிராமணர்கள் புதன்கிழமை முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தனர். அவர்களுக்கு ஸ்ரீராஜ்புத் கர்ணி சேனா என்ற அமைப்பு ஆதரவு தெரிவித்திருந்தது.

ஜெய்ப்பூரில் பல தொழில், வர்த்தக நிறுவனங்களும் இந்த அழைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும்வகையில் தங்கள் நிறுவனங்களை மூடின. ஏராளமான தனியார் பள்ளிக்கூடங்கள் விடுமுறை அறிவித்திருந்தன.

ஜெய்ப்பூர் பழைய நகரப்பகுதியில் கடைகளை மூடுமாறு பந்த் ஆதரவாளர்கள் கடைக்காரர்களை கேட்டுக்கொண்டபடியே வீதிவீதியாகச் சென்றனர்.

நகரில் பலத்த போலீஸ் காவல் போடப்பட்டிருந்தது. ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் உடனடி நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வீதிகளில் ரோந்து சுற்றிக்கொண்டிருந்தனர்.

வரலாற்றில் இருந்திராத வகையில் தங்கள் சங்கம் பந்த் நடத்தியிருப்பதாக சர்வ பிராமண சபா தலைவர் சுரேஷ் மிஸ்ரா பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

முழு அடைப்புக்கு மக்கள் தாங்களாகவே முன்வந்து ஆதரவு அளித்தனர் என்று ஸ்ரீராஜ்புத் கர்ணி சேனாவின் மாநில அமைப்பாளர் லோகேந்திர கால்வி குறிப்பிட்டார்.

தினமணி

Spotlight | Jaipur strike nearly total, business affected | Indiainteracts.com
The Hindu News :: Brahmins' body calls for Jaipur bandh today
Brahmins call bandh for reservation

Monday, August 27, 2007

பிற்படுத்தப்பட்டோர் நலத்திட்டங்களில் குறைகள்: CAG

அட்டவணை சாதியினர் மற்றும் பழங்குடியினர் முன்னேற்றத்திற்கான வளர்ச்சி திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை நடுவண் அரசின் சமூகநீதி அமைச்சு மற்றும் பழங்குடியினர் அமைச்சுக்கள் சரிவர பயன்படுத்தவில்லை என தலைமை கணக்கு ஆய்வாளரின் அறிக்கை கூறுகிறது. மற்ற மாணவர்களுக்கும் இந்த மாணவர்களுக்கும் இடையே உள்ள இடைவெளி வளர்ந்து வருவதாக அந்த அறிக்கை சுட்டுகிறது. கல்வி வளர்ச்சியின் இரு எடுத்துக்காட்டுகளாக மொத்த பதிகை விகிதம்(Gross Enrolment Ratio) மற்றும் மொத்த வெளியேறும் விகிதம் (Gross Dropout Ratio) ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் நிலை கீழ்நோக்கி செல்வதை காட்டுகிரது. வெளியேறும் விகிதம் பொது மாணவர்களுக்கு 6.7%ஆகவும் இவர்களுக்கு 15.1% ஆகவும் 2001இல் இருந்தது 2003-04 ஆண்டில் 10.4% ஆகவும் 16.6% ஆகவும் மோசமாவதை சுட்டியுள்ளது. ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக செலவழிக்காதது, தாமதமாக அல்லது குறைவாக பட்டுவாடா செய்தது, வேறு திட்டங்களுக்கு மாற்றியது போன்ற குறைகள் மற்றும் இத்திட்டத்தை பொதுமக்கள் அறியுமாறு விளம்பரம் செய்யாதது இந்த இடைவெளி வளர்வதற்கு காரணங்களாக அவ்வறிக்கை கூறுகிறது.

DNA - India - CAG finds fault in SC, ST education schemes - Daily News & Analysis

Wednesday, August 22, 2007

பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் என்ன தவறு? - உச்ச நீதிமன்றம் கேள்வி.

பிற்படுத்தபட்டோர்க்கு 27 சதவீத இடஒதுக்கீடு அளிப்பதில் என்ன தவறு உள்ளது என சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோர்க்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்றைய விசாரணையின் போது இடஒதுக்கீட்டை அமல் படுத்துவதில் என்ன தவறு என நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் நாட்டில் உள்ள 20 முதல் 30 சதவீதமே உள்ள பிரிவினர் மட்டும் சலுகைகளை பெற வேண்டும் என்பது விதியா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமலர்

Thursday, August 16, 2007

'தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு திட்டமில்லை'-மத்திய அரசு

தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீடு அமல்படுத்தும் வகையில் சட்டம் கொண்டு வரும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. லோக்சபாவில் கேள்வி நேரத்தின் போது, மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் இது தொடர்பாக கூறியதாவது: எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள், தனியார் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு அமல் செய்ய வேண்டும் என்று பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் மூலம் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீடு அமல்படுத்தும் வகையில் சட்டம் கொண்டு வர மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை. இவ்வாறு அமைச்சர் சுப்புலட்சுமி கூறினார்.

நன்றி: தினமலர்

Saturday, August 11, 2007

உபியில் தனியார்துறையில்் இட ஒதுக்கீடு : மாயாவதி அறிவிப்பு

தனது பகுஜன் கட்சியை சர்வஜன் கட்சியாக மாற்றி வெற்றிகண்ட உபி முதல்வர் மாயாவதி இட ஒதுக்கீட்டிலும் புதிய யுக்தியை கையாண்டுள்ளார். மன்மோகன்சிங் தனியார்துறைக்கு வேண்டுகோள் விட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் மாயாவதி தனியார் நிறுவனக்களில் 30% இட ஒதுக்கீட்டை அமலாக்க திட்டமிட்டுள்ளார். பிரதம செயலர் சைலேஷ் கிருஸ்ஹ்ணாவின் கூற்றுப்படி 10% அட்டவணைவகுப்பினருக்கும் 10% இதர பிற்பட்ட வகுப்பினருக்கும் 10% முன்னேறிய வகுப்பினரின் பொருளாதார நலிவடைந்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு கட்டாயமாகப்படும். இதற்கு மாறாக இந்த நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகளும் அரசு மானியமும் வழங்கப்படும்.


IBNLive.com > UP govt orders 30 per cent quota in private sector jobs : Uttar Pradesh, reservations, mayawati, private sector

Wednesday, August 8, 2007

உச்சநீதிமன்ற தீர்ப்பு: அரசிற்கு தோல்வி அல்ல : அர்ஜுன் சிங்

நடுவண் அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சர் அர்ஜுன்சிங் உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடையை நீக்க மறுத்தது அரசிற்கான தோல்வியல்ல என்று கூறினார். தமது அமைச்சு உடனடியாக நிதிசாரா கல்வியகங்களிலும் இடஒதுக்கீட்டை கடைபிடிக்கும் சட்டவரைவினை தயாரித்துள்ளது எனக் கூறினார். அரசு இடஒதுக்கீட்டின் மூலம் சமூகநீதியை நிலைநிறுத்துவதில் உறுதியாக உள்ளது என்றும் அவர் கூறினார். உச்சநீதிமன்றம் இடைக்கால தடையை நீக்காவிடினும் தனது இறுதி தீர்ப்பை விரைவில் வழங்கும் என எதிர்பார்ப்பதாக மற்றொரு கேள்விக்கு பதிலிறுத்தார்.
மேலும்...IBNLive.com > Arjun says SC order not a setback, new Bill ready :

இட ஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் இடைக்காலத்தடையை நீக்க மறுப்பு

உயர்கல்வி நிலையங்களில் இதர பிந்தங்கிய வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு அமலாக்குவதற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கக் கோரி நடுவண் அரசு கொடுத்த மனுவை உச்சநீதிமன்றத்தின் ஐவர் அடங்கிய பெஞ்ச் இன்று நிராகரித்தது. இதுபற்றிய சட்டத்தினை எதிர்த்து இடப்பட்டுள்ள வழக்குகளை தீர்மானிக்காமல் சட்டத்தை அமலாக்க இயலாது என நீதிமன்றம் கூறியது. கடைசி நிமிட சலுகையாக அரசு OBC இடஒதுக்கீட்டில் கிரீமி மட்டத்தை விலக்கி வைக்கவும் முன்வந்தது.
முழு விவரங்களுக்கு...IBNLive.com > SC turns down govt plea, OBC quota stays frozen :

Saturday, July 28, 2007

'பா.ம.க. ஒரு புலி' - முதலமைச்சர் கருணாநிதி பேட்டி

புதுடில்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் அளித்த பதில்கள்:

செய்தியாளர்: மக்கள் பிரச் சினைகளை நாங்கள் எடுத்துச் சொல்வோம். யாரும் வாய்ப் பூட்டு போட முடியாது என்று பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறி இருப்பதைப் பற்றி?

கலைஞர்: மக்கள் பிரச்சி னைகளை எடுத்து வைக்க வேண்டாமென்று நாங்கள் சொல்லவில்லை. அண்ணா ஒரு முறை சட்டப் பேரவையிலே சொன்னார். 1967 ஆம் ஆண்டு அண்ணா அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார் பிலே தேர்தலிலே நின்றார் என்றாலும் கூட, சுதந்திரக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழரசுக் கழகம், சோஷலிஸ்ட் கட்சி போன்ற கட்சிகளை எல்லாம் கூட்ட ணியாகச் சேர்த்துக் கொண்டு, அந்தத் தேர்தலில் அண்ணா ஈடு பட்டார்.

அதிலே நாங்கள் மகத்தான் வெற்றியும் பெற் றோம். கூட்டணியில் உள்ள சிலர் ஓராண்டிற்குப் பிறகு அல்லது சில மாதங்களுக்குப் பிறகு அண்ணா தலைமையில் உள்ள கழக அரசை விமர்சிக் கும்போது சற்றுக் கடுமையாக விமர்சித்தார்கள். அண்ணா விமர்சனங்களுக்கு விரோதி அல்ல. அவரும் தலை சிறந்த ஜனநாயகவாதிதான். அவரிடம் பயின்றவன்தான் நானும்.

அந்த நேரத்திலே அண்ணா - என்னுடைய அரசின் குற்றம் குறைகளை எடுத்துச் சொல்லும்போது சில கட்சிகள் பூனை தன் குட்டியை வாயிலே கவ்வி எடுத்துச் செல்வதைப் போல மென்மையாக எடுத்துச் சொல்கின்றன. சில கட்சிகள் பூனை எலியைப் பிடித்து வாயிலே கவ்விக்கொண்டு செல் வதைப் போல் குற்றம் குறை களைக் கண்டிக்கின்றன என்று அண்ணா சொன்னார். அதற் காக பூனை, குட்டியைக் கவ்வித் தூக்கிக் கொண்டு சொல்லக் கூடாது என்று கூறவில்லை.

செய்தியாளர்: நீங்கள் கூறிய தில் பா.ம.க. பூனையா? எலியா?

கலைஞர்: என் கருத்துப்படி பா.ம.க. ஒரு புலி. நீங்கள் தூண்டிவிடலாம் என்று நினைத் தால், புலி என்ன செய்யும் என்று உங்களுக்கே தெரியும்.

செய்தியாளர்: குடியரசுத் தலைவர் பதவிப் பிரமாணத் தின் போது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் துணை வியாருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டபோது கனிமொழிதான் உடனடியாக ஓடிவந்து அவரை அழைத்துச் சென்று பணிவிடை செய்தார். அதை எல்லோரும் பாராட்டி னார்கள். உங்கள் கவனத்திற் கும் கொண்டு வரலாம் என நினைத்தோம்.

கலைஞர்: நானும் கேள்விப் பட்டேன்.

முழுவதும் படிக்க...

Thursday, July 26, 2007

பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு: ஆகஸ்ட் 7ல் விசாரணை.

மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப் பட்டது. இந்த இட ஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

அதே நேரத்தில் இந்த வழக்கை 5 பேர் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்தது.

இந்த விசாரணையை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 7-ந்தேதி தொடங்குவது என்று சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்தது.

இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடையை நீக்கும்படி மத்திய அரசு மனு செய்துள்ளது. அந்த மனு மீதான விசாரணை வருகிற 31-ந்தேதி நடக்கிறது.

மாலைமலர்

"பெண்கள் இடஒதுக்கீட்டுக்கு போராடுவேன்" - கனிமொழி

எம்.பி.யாக பதவி ஏற்ற பின் கனிமொழி நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

நான் எம்.பி.யாக பொறுப்பு ஏற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போது எனக்கு நிறைய பொறுப்புகள் உள்ளது. அவற்றை நிறைவேற்ற வேண்டுமே என்ற பயமும் உள்ளது.

அடித்தட்டு மற்றும் விளிம்பு நிலையில் உள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்து வதே எனது லட்சியம்.

தி.மு.க.வில் மூத்த தலைவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுடன் இணைந்து பணியாற்றுவேன்.

பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்துக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். பெண் உரிமைக்காகவும், பெண்கள் முன்னேற்றத்துக்காகவும் பாடு படுவேன்.

இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார்.

நன்றி: மாலைமலர்

மேலும் ஒரு சர்ச்சையில் எய்ம்ஸ்

கடந்த ஓராண்டாகவே சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் அகில இந்திய மருத்துவ மற்றும் அறிவியல் ஆய்வுக் கழகம் (எய்ம்ஸ்) மேலும் ஓர் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் பாரபட்சமாக நடத்தப்படுகின்றனர் என்று சுக்தேவ் தரோட் கமிட்டி அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதையடுத்து, கடந்த 8 நாள்களாக எஸ்.சி., எஸ்.டி., பிரிவைச் சேர்ந்த டாக்டர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முற்போக்கு டாக்டர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அமைப்பு என்ற போர்வையின் கீழ் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து விளக்கமளிக்குமாறு எய்ம்ஸ் இயக்குனர் பி. வேணுகோபாலுக்கு, தேசிய எஸ்.சி., எஸ்.டி. கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்நிலையில், சுக்தேவ் தரோட் கமிட்டி அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எய்ம்ஸ் பேராசிரியர்கள், உள்ளுறை டாக்டர்கள் மற்றும் மாணவர்கள் சங்கத்தினர் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர். இப்பிரச்னை குறித்து எய்ம்ஸ் இயக்குனர் வேணுகோபாலுடன், தேசிய எஸ்.சி., எஸ்.டி., கமிஷன் தலைவர் பூடா சிங் இம்மாதம் 1-ம் தேதிக்குப் பிறகு 2 முறை ஆலோசனை நடத்தியுள்ளார்.

எய்ம்ஸ்-ஸின் 'ஃபுளோட்டிங் ரிசர்வேஷன்' கொள்கை சட்டவிரோதமானது என்று பூடா சிங் கூறியுள்ளதாக எய்ம்ஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் மீது பாரபட்சம் காட்டுவதாக எழுந்துள்ள புகாரை மறுத்துள்ளார் எய்ம்ஸ் செய்தித் தொடர்பாளர் சக்தி குமார் குப்தா. 1993-ல் அப்போதைய பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் அரசு கொண்டு வந்த இட ஒதுக்கீட்டுக் கொள்கையை எய்ம்ஸ் முழுமையாகக் கடைப்பிடித்து வருவதாகவும் அவர் கூறினார்.

தினமணி

Govt asks AIIMS to give it information regarding reserved posts - India - The Times of India
The Hindu News :: Govt. to amend law governing AIIMS, PGIMER
News From Sahara Samay:: HC notice to Ramadoss, Thorat

Tuesday, July 24, 2007

ஆந்திரா: முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு - சட்டசபை ஒப்புதல்.

கல்வி மற்றும் அரசுப் பணிகளில் முஸ்லிம்களுக்கு நான்கு சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதா ஆந்திர சட்டசபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

சமூக மற்றும் பொருளாதார ரீதியாக, மிகவும் பின்தங்கியுள்ள முஸ்லிம் சமுதாயத்தினருக்கு கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசுப் பணிகளில் ஐந்து சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் அவசர சட்டத்தை நிறைவேற்ற ஆந்திர அரசு கடந்த 2004ம் ஆண்டு முடிவு செய்தது. ஆனால், அரசுத் துறைகளில் 50 சதவீதத்திற்கு மேல் இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதால், இந்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.

முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை நான்கு சதவீதமாக குறைத்து ஆந்திர அமைச்சரவை சமீபத்தில் குறைத்தது. இதையடுத்து, இந்த மசோதா நேற்றிரவு சட்டபையில் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ. எம்.எல்.ஏ.,க்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.


நன்றி: தினமலர்

Monday, July 16, 2007

இடஒதுக்கீடு: இடைக்காலத் தடையை நீக்க நடுவண் அரசு உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை

உயர்கல்வி நிறுவனக்களில் 27% இடஒதுக்கீடு வழங்குவதை நிறுத்திவைத்த இடைக்கால தடையை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் நடுவண் அரசு மனு கொடுத்துள்ளது. தலைமை நீதிபதி கேஜி பாலகிருஷ்ணன் அடங்கிய பெஞ்ச் இதனை விசாரித்து நாளை விவாதங்களை கேட்க முடிவெடுத்துள்ளது.

Centre approaches SC for vacating quota stay -Education-Services-News By Industry-News-The Economic Times

Friday, July 6, 2007

இந்துக்களிடம் ஆந்திர அரசு பாரபட்சம்: பாஜக

ஆந்திரத்தில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசு இந்துக்களிடம் பாரபட்சமாக நடந்து கொள்கிறது என்று பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ், நிருபர்களிடம் கூறியதாவது:

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் இந்து மதத்தைச் சேர்ந்த மேலும் 36 ஜாதிகளைச் சேர்க்கலாம் என்று பிற்படுத்தப்பட்டோருக்கான ஆந்திர மாநில கமிஷன் பரிந்துரை செய்திருந்தது. ஆனால் அதனை ஆந்திர அரசு புறக்கணித்து விட்டது. இது ஆந்திர அரசு இந்துக்களுக்கு எதிராக இழைந்துள்ள மிகப்பெரிய அநீதியாகும்.

சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய நிலையில் உள்ள முஸ்லிம்களுக்கு மாநில அரசின் கல்வி, வேலைவாய்ப்பில் 4% இட ஒதுக்கீடு அளிக்க அவசரச் சட்டம் இயற்றுவது என ஆந்திர அரசு தீர்மானித்துள்ளது.

மத ரீதியில் அல்லாமல் சமூக, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிப்பதால் இதை உயர் நீதிமன்றமோ, வேறு நீதிமன்றங்களோ நிராகரிக்கும் வாய்ப்பும் இருக்காது என ஆந்திர அரசு கருதுகிறது. வாக்கு வங்கி அரசியலுக்காக ஆந்திர அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

முஸ்லிம்களுக்கு ஏற்கெனவே 5 சதவீத இடங்களை ஒதுக்கி ஆந்திர அரசு அவசரச் சட்டம் இயற்றியது. ஆனால் அதனை ஆந்திர உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இந்திய அரசியல் சட்டப்படி, மத அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்க வழிவகை இல்லாததை அப்போது உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருந்தது. இதனை கருத்தில் கொண்டு ஆந்திர அரசு தற்போது தந்திரமாகச் செயல்பட்டுள்ளது.

முஸ்லிம் சமூகத்துக்குள்ளேயே பிரிவினையை ஏற்படுத்த முயலும் ஆந்திர அரசின் போக்கை முஸ்லிம்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்றார்.

இதனிடையே, ஆந்திரத்தில் முஸ்லிம்களில் 15 பிரிவினர் சமூக, பொருளாதார, கல்வி ரீதியில் மிகவும் பின்தங்கியிருப்பதாகவும் அவர்கள் இடஒதுக்கீடு பெற தகுதியானவர்கள் என்றும் ஆந்திர அரசு கண்டறிந்துள்ளது என்று ஒரு தகவல் தெரிவிக்கிறது.

முந்தைய சற்றுமுன்...: ஆந்திராவில் பின் தங்கிய முஸ்லிம்களுக்கு 4% இட ஒதுக்கீடு

தினமணி

Thursday, July 5, 2007

சிறுபான்மையோர் இட ஒதுக்கீடு உறுதி - கருணாநிதி.

சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு உறுதியாக நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் மு.கருணாநிதி இன்று அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். " திமுக அரசு இம்முயற்சியை கைவிட்டுவிட்டதாகக் கூறப்படும் அரசியல் பிரசாரங்களுக்கு யாரும் ஆளாகி விட வேண்டாம்" என்றார் அவர்.

மேலும்,ஆந்திர அரசு முஸ்லீம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறது. இதுதொடர்பாக அவரச சட்டம் கொண்டு வரவும் அது ஆலோசித்து வருகிறது. தமிழக அரசும் இதுதொடர்பாக சட்டப்பூர்வ ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளது.

இந்த பிரச்சினை தொடர்பாக தி.க.தலைவர் கி.வீரமணி சிறப்பான, சரியான கருத்து ஒன்றைக் கூறியுள்ளார். முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அவசரப்பட்டு எந்த சட்டத் திருத்தத்தையும் கொண்டு வந்து, அந்த சட்டத் திருத்தத்திற்கு கோர்ட்டுகள் மூலம் தடையுத்தரவு பெறப்பட்டு விடும் சூழ்நிலையை அரசு ஏற்படுத்தி விடக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.

எனவே இதை மனதில் கொண்டு, இதுதொடர்பான சட்டப் பிரச்சினைகளை ஆராய குழு ஒன்றை நான் அமைத்துள்ளேன். இதனால்தான் தனி இடஒதுக்கீடு தொடர்பான சட்டத்தைக் கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மற்றபடி இந்த விவகாரத்தை திமுக அரசு கைவிட்டு விட்டதாக யாரும் நினைத்து விடக் கூடாது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

தட்ஸ்தமிழ்

இடஒதுக்கீடு: முஸ்லிம்கள் போராட்டம்

கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல் அதிகாரம் போன்றவற்றில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் தமிழகம் முழுவதும் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக மகளிர், சிறுவர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

'இட ஒதுக்கீடு கோரி 10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறோம். தமிழகத்தில் முஸ்லிம்கள் 13 சதவீதத்தினரும், அகில இந்திய அளவில் 20 சதவீதத்தினரும் உள்ளனர். எனவே, கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் ஆகியவற்றில் விகிதாசாரத்துக்கு ஏற்ப இட ஒதுக்கீடு அளிக்கவேண்டும்.

மத்தியிலுள்ள காங்கிரஸ் கூட்டணி அரசும், தமிழகத்தில் உள்ள திமுக அரசும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. பொருந்தாத காரணங்களைக் கூறி காலம் கடத்துவதை கைவிட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையேல், தனி இட ஒதுக்கீடு பெறும் வரை தீவிர போராட்டம் நடைபெறும்' என்று மாநிலச் செயலர் சுலைமான் தெரிவித்தார்.

நெல்லையில்...: திருநெல்வேலியில் நடந்த போராட்டத்தில் சுமார் 400 குழந்தைகள் உள்பட 3,400 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

போராட்டத்தையொட்டி, மேலப்பாளையத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

சேலம்: சேலத்தில் நடைபெற்ற போராட்டத்தில் 213 பெண்கள் உள்படட 787 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம், ஈரோடு, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான முஸ்லிம்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

திருச்சி: திருச்சியில் நடந்த போராட்டத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 6,124 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

தினமணி

Zee News - Over 1500 court arrest in TN

Wednesday, July 4, 2007

ஆந்திராவில் பின் தங்கிய முஸ்லிம்களுக்கு 4% இட ஒதுக்கீடு

இஸ்லாமிய மதத்தலைவர்களின் 'பட்வா'வை பொருட்படுத்தாமல் ஆந்திர அரசு பின் தங்கிய வகுப்பினராக அறியப்பட்ட 25 முஸ்லிம் பிரிவினருக்கு அரசு வேலைகளிலும் கல்வி நிறுவனங்களிலும் 4% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அவசரசட்டம் கொண்டுவர இன்று முடிவு செய்துள்ளது.

Four percent quota for 'backward Muslims' in Andhra - Yahoo! India News

இடஒதுக்கீட்டை வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டம்.

இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு கோரி தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பின் சார்பில் சென்னை திருச்சி திருநெல்வேலி மற்றும் மாநிலத்தின் பல பகுதிகளில் இன்று சிறை நிரப்பும் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் திரளாக கலந்துக்கொண்டு இடஒதுகீடு வலியுறுத்தி கோஷமிட்டனர் இதனால் போராட்டம் நடைப்பெரும் பகுதிகளில் ஏராளமான போலிசார் பாதுக்காப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அலைப்பேசி வாயிலாக... ராஜீக்

Thursday, June 28, 2007

எம்.பி.பி.எஸ். 'கட்-ஆஃப் மார்க்' விவரம்

தமிழக மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பில் (2007-08) மாணவர்கள் சேருவதற்கு


  1. பொதுப் பிரிவு மாணவர்களுக்கான "கட்-ஆஃப் மார்க்' 197-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  2. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - 194.50;

  3. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - 191.75;

  4. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் - 187.25;

  5. பழங்குடி வகுப்பினர் - 179.

கூட்டு மதிப்பெண்ணில் ஒவ்வொரு 0.25 மதிப்பெண்ணுக்கும் இடையே ரேங்க் பட்டியலில் மாணவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.

மருத்துவப் படிப்பில் சேர

  • 200-க்கு 200 கூட்டு மதிப்பெண்ணை மாவட்டங்களைச் சேர்ந்த 7 மாணவர்கள் வாங்கியுள்ளனர்;

  • இதற்கு அடுத்தபடியாக 199.75 கட்-ஆஃப் மார்க்கை 12 மாணவர்கள் வாங்கியுள்ளனர்;

  • 199.50 கட்-ஆஃப் மார்க்கை மொத்தம் 17 மாணவர்கள் வாங்கியுள்ளனர்;

  • 199.25 கட்-ஆஃப் மார்க்கை மொத்தம் 13 மாணவர்கள் வாங்கியுள்ளனர்;

  • 199 கட்-ஆஃப் மார்க்கை மொத்தம் 25 மாணவர்கள் வாங்கியுள்ளனர்.

  • ஆக, கட்-ஆஃப் மார்க் 200-க்கும் 199-க்கும் இடையில் ஒரு மார்க் வித்தியாசத்தில் 74 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

கட்-ஆஃப் மார்க் 199-க்கும் 198-க்கும் இடையே மட்டும் 114 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ரேங்க் பட்டியலை www.tnhealth.org என்ற இணையதளத்திலும் பார்க்கலாம்.

-o❢o-

b r e a k i n g   n e w s...