.

Thursday, July 5, 2007

இடஒதுக்கீடு: முஸ்லிம்கள் போராட்டம்

கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல் அதிகாரம் போன்றவற்றில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் தமிழகம் முழுவதும் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக மகளிர், சிறுவர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

'இட ஒதுக்கீடு கோரி 10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறோம். தமிழகத்தில் முஸ்லிம்கள் 13 சதவீதத்தினரும், அகில இந்திய அளவில் 20 சதவீதத்தினரும் உள்ளனர். எனவே, கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் ஆகியவற்றில் விகிதாசாரத்துக்கு ஏற்ப இட ஒதுக்கீடு அளிக்கவேண்டும்.

மத்தியிலுள்ள காங்கிரஸ் கூட்டணி அரசும், தமிழகத்தில் உள்ள திமுக அரசும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. பொருந்தாத காரணங்களைக் கூறி காலம் கடத்துவதை கைவிட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையேல், தனி இட ஒதுக்கீடு பெறும் வரை தீவிர போராட்டம் நடைபெறும்' என்று மாநிலச் செயலர் சுலைமான் தெரிவித்தார்.

நெல்லையில்...: திருநெல்வேலியில் நடந்த போராட்டத்தில் சுமார் 400 குழந்தைகள் உள்பட 3,400 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

போராட்டத்தையொட்டி, மேலப்பாளையத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

சேலம்: சேலத்தில் நடைபெற்ற போராட்டத்தில் 213 பெண்கள் உள்படட 787 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம், ஈரோடு, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான முஸ்லிம்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

திருச்சி: திருச்சியில் நடந்த போராட்டத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 6,124 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

தினமணி

Zee News - Over 1500 court arrest in TN

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...