சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு உறுதியாக நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் மு.கருணாநிதி இன்று அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். " திமுக அரசு இம்முயற்சியை கைவிட்டுவிட்டதாகக் கூறப்படும் அரசியல் பிரசாரங்களுக்கு யாரும் ஆளாகி விட வேண்டாம்" என்றார் அவர்.
மேலும்,ஆந்திர அரசு முஸ்லீம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறது. இதுதொடர்பாக அவரச சட்டம் கொண்டு வரவும் அது ஆலோசித்து வருகிறது. தமிழக அரசும் இதுதொடர்பாக சட்டப்பூர்வ ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளது.
இந்த பிரச்சினை தொடர்பாக தி.க.தலைவர் கி.வீரமணி சிறப்பான, சரியான கருத்து ஒன்றைக் கூறியுள்ளார். முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அவசரப்பட்டு எந்த சட்டத் திருத்தத்தையும் கொண்டு வந்து, அந்த சட்டத் திருத்தத்திற்கு கோர்ட்டுகள் மூலம் தடையுத்தரவு பெறப்பட்டு விடும் சூழ்நிலையை அரசு ஏற்படுத்தி விடக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.
எனவே இதை மனதில் கொண்டு, இதுதொடர்பான சட்டப் பிரச்சினைகளை ஆராய குழு ஒன்றை நான் அமைத்துள்ளேன். இதனால்தான் தனி இடஒதுக்கீடு தொடர்பான சட்டத்தைக் கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மற்றபடி இந்த விவகாரத்தை திமுக அரசு கைவிட்டு விட்டதாக யாரும் நினைத்து விடக் கூடாது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.
தட்ஸ்தமிழ்
Thursday, July 5, 2007
சிறுபான்மையோர் இட ஒதுக்கீடு உறுதி - கருணாநிதி.
Labels:
அரசியல்,
இடஒதுக்கீடு,
தமிழ்நாடு
Posted by வாசகன் at 9:57 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment