.

Thursday, August 16, 2007

சிங்கப்பூரில் 'புதிய நிலா' 10ம் ஆண்டு விழா

சிங்கப்பூர்: சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் புதிய நிலா மாத இதழின் 10வது ஆண்டு விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா வருகிற 19ம் தேதி நடைபெறவுள்ளது.

மஸ்கட் தெருவில் (அரபு தெரு அருகில்) உள்ள சுல்தான் பள்ளிவாசல் இணை மண்டபத்தில் மாலை 5 மணிக்கு விழா நடைபெறுகிறது.

தமிழறிஞர் டாக்டர் சுப.திண்ணப்பன் தலைமை தாங்குகிறார். சிங்கப்பூர் நாணய மாற்று வணிகர் சங்க பொதுச் செயலாளர் எம்.ஒய். முகம்மது ரபீக், மா.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். தமிழ்வேள் நற்பணி மன்ற பொதுச்செயலாளர் எம். இல்யாஸ் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

புதிய நிலா பத்தாம் ஆண்டு நிறைவு தொகுப்பு நூலை திராவிடர் கழக தலைவர் டாக்டர் கி.வீரமணி வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்துகிறார்.

தொலைக்காட்சிப் படைப்பாளர் அ. முகம்மது அலி , சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக ஆங்கில இலக்கிய பேராசிரியர் டாக்டர் சித்ரா சங்கரன், பன்னூலாசிரியர் டாக்டர் சையத் ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த்துகின்றனர்.

கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ விழா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குகிறார்.

புதிய நிலா இதழின் சிறப்பாசிரியர் மு.ஜகாங்கீர் ஏற்புரை மற்றும் நன்றியுரையினை நிகழ்த்துகிறார்.

இந்த விழா தொடர்பாக முதல்வர் கருணாநிதி வாழ்த்துரை வழங்கியுள்ளார். இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள செய்தியில், இதழ் பணி என்பது மிகுந்த பொறுப்பு வாய்ந்தது. உண்மைச் செய்திகளை சமுதாய நன்மைக்காக நெஞ்சுரத்துடனும், நடுவு நிலையுடனும் வெளியிடுவது நாட்டில் நேர்மையும் நியாயமும் நிலைக்கச் செய்யும் திருப்பணியாகும். அற வழியில் மக்களை ஆற்றுப்படுத்திடும் அறப்பணியாகும்.

இப்பணியில் பத்தாண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்திருப்பது இதழ் நடத்துவோருக்கு பெருமை சேர்ப்பதாகும் என குறிப்பிட்டுள்ளார்.

புதிய நிலா இதழின் முகவரி : புதிய நிலா
390 விக்டோரியா தெரு
#01 - 11 கோல்டன் லேண்ட்மார்க் எஸ் சி
சிங்கப்பூர் 188061
தொடர்புக்கு : 9007 2961

மானாவாரி நிலம் மேம்படுத்த திட்டம்

ஈரோடு, ஆக. 16-
ஈரோடு மாவட்டத்தில் மானாவாரி நிலங்களை மேம்படுத்த நவப்ரா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் வெள்ளக்கோவில் வட்டாரத்தில் 2002 முதல் 2007ம் ஆண்டு வரை பச்சாம்பாளையம் கிராமம் தேர்ந்தெடுக்கப்பட்டு திருத்தியமைக்கப்பட்ட நவப்ரா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி பச்சாம்பாளையம் கிராமத்தில் 5 ஹெக்டேர் நிலப்பரப்பு கொண்ட 7 நீர்வடிப்பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு நீர்வடிப்பகுதிகளிலும் பயனாளி குழுக்கள் மற்றும் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் ஒவ்வொரு நீர்வடிப்பகுதிகளுக்கும் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திட்டத்துக்கு மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியாக ரூ.84 லட்சம் பெறப்பட்டு இதுவரை ரூ.52 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.

திருத்தியமைக்கப்பட்ட நவப்ரா திட்டத்தில் மழை நீரை வீணாக்காமல் தேக்கி வைத்து அதன் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை அதிகப்படுத்தி மானாவாரியாக உள்ள நிலங்களை விளை நிலங்களாக மாற்றுவதாகும். பண்ணை குட்டைகள் மற்றும் கசிவுநீர் குட்டைகள் இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளதால் திறந்தவெளி கிணறுகள் மற்றும் குழாய் கிணறுகளின் நீர்மட்டம் அதிகரிக்கப்படுகிறது.

இத்தகவலை காங்கயம் வேளாண்மை உதவி இயக்குநர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

நன்றி "தமிழ் முரசு".

பீகாரில் தன்னார்வ தொண்டர்களின் சேவை!


பீகாரில் தொடர்ந்து பெய்த கன மழையால் வெள்ளம் ஏற்பட்டு ஏராளமான கிராமங்கள் மூழ்கியுள்ளன. வீடுகளை இழந்த மக்கள், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பேகுசராய் பகுதியில் அரசு முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு வழங்குவதற்காக நூற்றுக்கணக்கில் பூரி சுட்டு அவற்றை பாக்கெட் போடுகின்றனர் தன்னார்வ தொண்டர்கள்.

நன்றி "தமிழ் முரசு".

'தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு திட்டமில்லை'-மத்திய அரசு

தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீடு அமல்படுத்தும் வகையில் சட்டம் கொண்டு வரும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. லோக்சபாவில் கேள்வி நேரத்தின் போது, மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் இது தொடர்பாக கூறியதாவது: எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள், தனியார் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு அமல் செய்ய வேண்டும் என்று பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் மூலம் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீடு அமல்படுத்தும் வகையில் சட்டம் கொண்டு வர மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை. இவ்வாறு அமைச்சர் சுப்புலட்சுமி கூறினார்.

நன்றி: தினமலர்

குண்டு பல்புக்கு கல்தா! - அரியானா மக்கள் அசத்தல் - மாதம் ரூ.9 கோடி மிச்சம்

சண்டிகர், ஆக. 16-

நாட்டில் குண்டு பல்பு ஒழிக்கப்பட்ட முதல் மாவட்டம் அரியானாவில் உருவாகியுள்ளது. இதன்மூலம் அரியானா மின்துறைக்கு மாதம் ரூ.9 கோடி மிச்சமாகியிருக்கிறது.
குண்டு பல்பு எரியவிடுவதால், அதிக அளவு மின்சாரம் செலவாகிறது. அதிக வெப்பத்தையும் இது வெளியிடுவதால், சுற்றுப்புறம் வெப்பமாகிறது. நேரடியாகவும் மறைமுகமாகவும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என்று கூறி, உலக அளவில் குண்டு பல்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. குறைந்த மின்சக்தியிலேயே அதிக வெளிச்சம் தரும் ப்ளூரசன்ட் விளக்குகளுக்கு மக்கள் மாற வேண்டும் என்றும் பிரசாரம் நடந்து வருகிறது.

மேலும் செய்திக்கு "தமிழ் முரசு" செல்லவும்.

அமெரிக்கா இஸ்ரேேலுக்கு $30பில்லியன் இராணுவ உதவி

அமெரிக்கா இஸ் ரேலுக்கு $30 பில்லியன் அளவுக்கு இராணுவ உதவி வழங்கும் ஒப்பந்தத்தை இன்று செய்தது. சவுதி அரேபியாவுக்கு இதுபோன்ற உதவி வழங்கும் முடிவுடன் இந்த முடிவும் சேர்ந்து வருகிறது. முன்னதாக இஸ்ராயேல், சவுதிக்கு அமெரிக்கா உதவுவதில் தங்களுக்கு எதிர்ப்பு இல்லை எனத் தெரிவித்திருந்தது.

"There is no question that, from an American point of view, the Middle East is a more dangerous region now than it was 10 or 20 years ago and that Israel is facing a growing threat," Mr Burns said. "We look at this region and we see that a secure and strong Israel is in the interest of the United States."

US Offers Israel $30B Aid Package Washington Post
Israel, US sign 30-billion-dollar defence aid package Monsters and Critics.com

ஆந்திர அரசின் முடிவு;சுப்ரீம் கோர்ட் தடை

சுதந்திரப்ப் போராட்டத் துவக்கத்தின் 150வது நினைவுநாளை முன்னிட்டு ஆந்திர அரசு 1500 கைதிகளை அவர்களின் தண்டனைக்காலம் முடியும் முன்பே விடுதலை செய்யப் போவாதாக அறிவித்திருந்தது. இதற்கு எதிராக தொட்டரப்பட்ட பொது நல வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற பெஞ்ச் இந்த முடிவு மோசமான முன்னுதாரணம் என்று கூறி இதற்கு தடை விதித்தது.

SC slams Andhra govt's move to release 1500 convicts Times of India

SC restrains AP Govt's decision to release murder convicts Hindu

ஹிமாச்சலில் வெள்ளம்: ஆறு சடலங்கள் மீட்பு, 52 பேர் காணவில்லை

இமாச்சல பிரதேசத்தில் நேற்று பெய்த பெருமழையில் சிம்லா மாவட்டத்தில் ஒரு கிராமமே திடீர் வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போனது.அந்த இடிபாடுகளை இராணுவத்தினர் மற்றும் துணைராணுவத்தினர் உதவியுடன் அகற்றி பிழைத்தவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த முயற்சியில் இதுவரை ஆறுபேரின் உடல்களே கிடைத்திருக்கின்றன. இன்னும் 52 பேர் சிம்லாவிலிருந்து 175 கி.மீ தூரத்திலுள்ள கான்வி என்ற அந்தக் கிராமத்திலிருந்து காணவில்லை. மழையினால் ஏற்பட்ட மலைச்சரிவு பெரும் பாறைகளை உருட்டி விட்டு வழியில் இருந்த அனைத்து வீடுகளையும் தவிடுபொடியாக்கியது. இறந்த அறுவரில் ஐவர் பெண்டிர். காணாமல் போனவரிலும் பெரும்பான்மையினர் பெண்களே. அவர்கள் வீட்டில் வேலை செய்துகொண்டிருந்தபோது இந்த திடீர்மழையும் மலைச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

HP cloudburst: 6 bodies found, 52 still missing-India-The Times of India

பெருவில் பூகம்பம்: 72 மரணம், 680 காயம்

தென்னமெரிக்க நாடான பெருவில் ரிக்டர் அளவுகோளில் 7.9 வலிமையுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டு 72 பேர் மரணமடைந்துள்ளனர்; 680 பேர் காயமடைந்துள்ளனர். தலைநகர் லிமாவில் உயர்ந்த கட்டிடங்கள் தொடர்ந்த இரு நில அதிர்வுஅலைகளால் ஆடின. அலுவலகத்திலிருந்து பணியாளர்கள் வெளியே ஓடினர்.கடலோர மாநிலமான இகாவில் கிருத்துவ தேவாலயமொன்று சரிந்ததாகவும் வானொலி நிலையங்கள் கூறுகின்றன.

இந்நிலநடுக்கத்தையொட்டி பெரு,சிலி,ஈகுவேடர்,கொலம்பியா நாடுகளின் கடற்கரைப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

Powerful quake hits Peru, 72 killed, 680 hurt

தென்காசி கொலைச் சம்பவம் மத மோதல் அல்ல!

தென்காசியில் நடந்த கொலைகள் மத ரீதியிலான மோதலால் ஏற்பட்டவை அல்ல என தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக மாநிலச் செயலர் ஜே.எஸ்.ரிஃபாயீ தெரிவித்தார்.

திருநெல்வேலியில் புதன்கிழமை அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தென்காசியில் நடந்த கொலைகள் மத ரீதியிலான சம்பவம் அல்ல. நீண்ட நாள்களாகப் பகையோடு இருந்துவரும் இரு கோஷ்டிகளுக்கு இடையிலான மோதல்தான்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் நடந்த இந்து முன்னணி நிர்வாகி குமார்பாண்டியன் கொலைச் சம்பவம், அதைத் தொடர்ந்து தமுமுக நிர்வாகி ஷேட்கான் தாக்கப்பட்டது ஆகிய சம்பவங்களில் தொடர்புடையவர்கள் பிணையத்தில் இருந்தபோது அவர்கள் இரு தரப்பையும் ஒரே இடமான தென்காசி மகளிர் காவல் நிலையத்தில் கையொப்பமிடச் செய்து நீதித்துறை உத்தரவிட்டது வருத்தம் அளிக்கிறது.

காவல்துறையும், உளவுத் துறையும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தால் இந்த மோதலை தடுத்திருக்க முடியும். உளவுத்துறை முற்றிலும் செயலிழந்து விட்டதையே இந்த சம்பவம் காட்டுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட காவல்துறை டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த சம்பவத்தை இரு மதங்களுக்கு இடையிலான மோதலாக சித்தரித்து ஆதாயம் தேட நினைப்பவர்களை தமுமுக கடுமையாக கண்டிக்கிறது.
இந்த மோதலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது ஆறுதல் அளிக்கிறது. இதுமட்டுமின்றி அவர்களின் குடும்பங்களில் ஒருவருக்கு அரசு வேலையும் அளிக்க வேண்டும்.
கைது நடவடிக்கை என்ற பெயரில் அப்பாவிகள் மீது பொய்வழக்கு போடக் கூடாது என்றார் ரிஃபாயீ.

-o❢o-

b r e a k i n g   n e w s...