.

Tuesday, May 29, 2007

பிரென்ச் ஓப்பனில் மற்றுமொரு அதிர்ச்சித்தோல்வி

பிரென்ச் ஓப்பன் டென்னிஸ் முதல் சுற்று ஆட்டங்களில் அதிர்ச்சி தோல்விகள் தொடர்கின்றன.

உலகின் 5வது நிலை ஆட்டக்காரர் சிலி நாட்டின்
ஃபெர்னாந்தோ கன்ஸாலஸ் இனறு முத்ல் சுற்று போட்டியில்
58வது நிலை ஆட்டக்காரர் ராடக் ஸ்டெப்னிக்கிடம் 2-6,2-6,4-6
என்ற நேர் செட்களில் தோற்றுப்போனார்.

ஃபெர்னாந்தோ கன்ஸாலஸ் இந்த ஆண்டு ஆஸ்த்திரேலியா
டென்னிஸ் ஓப்பன் போட்டியில் இறுதிப்போட்டி வரை
முன்னேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்டி ரோடிக் பரிதாப தோல்வி

பிரான்சின் பாரிஸ் நகரில் பிரென்ச் ஓப்பன் ( களிமண்தரை) டென்னிஸ் போட்டிகள் நேற்று முதல் தொடங்கியது.

முதல் நாள் ஆட்டங்கள் மழையின் காரணமாக தடைப்பட்டது.இரண்டாவது நாளாகிய இன்று முதல்சுற்று ஆட்டங்கள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன.


முதல் நிலை ஆட்டக்காரர் ரோஜர் ஃபெடரர் சுலபமாக 6-4,6-2,6-4 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவின் மைக்கேல் ரஸ்ஸலை வென்று இரண்டாம் சுற்று ஆட்டத்துக்கு தகுதி பெற்றார்.

மூன்றாம் நிலை ஆட்டக்காரர், அமெரிக்காவின் ஆண்டி ரோடிக்
6-3,4-6,3-6,4-6 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் இளம் ஆட்டக்காரர் இகோர் ஆண்ட்ரீவிடம் தோற்றுப்போனார்.

ஆட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன

தேசிய வளர்ச்சி கூட்டத்தில் கருணாநிதி!

தேசிய வளர்ச்சி கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.கருணாநிதி, நதிகளை தேசியமயமாக்கவும், தமிழகத்திற்கு அதிக நிதி கேட்டும் உரை நிகழ்த்தியுள்ளார்.

தமிழக அரசு செயற்படுத்தியுள்ள விவசாயிகளின் கூட்டுறவுக் கடன் சுமார் 700கோடி தள்ளுபடி திட்டத்தில் மத்திய அரசின் பங்கினையும் வலியுறுத்தியுள்ளார்.

வேளாண்மைப் பணிகளுக்கு அளிக்கப்படவேண்டிய முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாலைமலர்

இந்தியாவில் முதலீட்டு வாய்ப்புகளை கணினி மூலம் அறிந்து கொள்ளும் வசதி

வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரத் துறை மற்றும் இந்திய தொழில், வர்த்தகக் கூட்டமைப்பின் கூட்டு முயற்சியால் இச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் வயலார் ரவி:

'ஓவர்சீஸ் பெசிலிடேஷன் சென்டர்' - Overseas Indian Facilitation Centre (OIFC) என்று பெயரிடப்பட்டுள்ள இச் சேவை மையங்கள், இந்தியாவில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்த தகவல்களை வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு தெரிவிக்கும். இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது. மேலும் குறைந்த கட்டணத்தில் நிதித்துறை ஆலோசனைகளையும் வழங்கும். மேலும், இம்மையத்திற்கு நேரில் வந்து ஆலோசனைகள் பெற முடியாதவர்கள் www.ofic.in என்ற இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.

தினமணி

பஹ்ரைன்: பொதுமன்னிப்பு-அனுமதியின்றி தங்கியிருப்பவர்களுக்கு!

கள்ளத்தனமாக குடியேறியிருப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேற, வரும் ஆகஸ்ட் மாதம் முதல் ஆறு மாதங்களுக்கு அவகாசமும் பொது மன்னிப்பும் அளிக்கப்படும் என்று பஹ்ரைன் தொழிலாளர் நல அமைச்சர் மாஜித் முஹ்சின் அல்அலவி தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் இந்தியர்கள் பலரும் பலனடைவார்கள்.

ஏற்கனவே 2002லும் பஹ்ரைன் இவ்வாறான ஒரு பொதுமன்னிப்பு காலத்தை அறிவித்திருந்தது நினைவு கூரத்தக்கது. இச்செய்தி பஹ்ரைன் ட்ரிப்யூன் நாளேட்டில் வந்துள்ள்ளது.

"ஆயுத உதவி ப்ளீஸ்!" - இந்தியாவிடம் கேட்கிறது இலங்கை!

இலங்கையின் ராணுவத்துறை செயலர் இந்தியாவுக்கு அதிகாரபூர்வமற்ற வருகை மேற்கொண்டு, உச்சத்தில் நடந்து வரும் உள்நாட்டு போரை சமாளிக்க இந்தியாவிடம் ஆயுத உதவி கோருவதாக பி.டி.ஐ நிறுவன செய்திக்குறிப்பொன்று தெரிவிக்கிறது.

இந்தியா உதவாத பட்சத்தில் வேறு நாடுகளின் உதவி கோரப்படுமாம்.

திமுகவில் சேரும் ராஜ் டிவி சகோதரர்கள்

ராஜ் டிவி நிர்வாக இயக்குநர் ராஜேந்திரன் திமுகவில் சேரத் திட்டமிட்டுள்ளார். முன்பு ராஜ் டிவிக்கு தயாநிதியால் நெருக்கடி வந்தபோது பாஜகவில் சேர்ந்தார் ராஜேந்திரன். ஆனால் அதனால் எந்தப் பலனும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் திமுக தரப்பிலிருந்து தங்கள் மீது ஆதரவுப் பார்வை படத் தொடங்கியுள்ளதால் திமுகவில் சேர முடிவு செய்துள்ளார் ராஜேந்திரன். ஜூன் 1ம் தேதி அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் ராஜேந்திரனும், அவரது சகோதரர்கள் ராஜரத்தினம், ரவீந்திரன், ரகுநாதன் ஆகியோரும் திமுகவில் இணையவுள்ளனர்.

இது சந்தர்ப்பவாத செயலாக கூறப்படுகிறதே என்று ராஜேந்திரனிடம் கேட்டபோது,

நிச்சயம் இல்லை. நான் திமுக காரனாகத்தான் பிறந்தேன், திமுகக்காரனாகத்தான் இறப்பேன்.

எனது தந்தை மாணிக்கம் பிள்ளை திமுககாரர். எனது மாமனாரும் திமுககாரர். முன்னாள் அமைச்சர் மாதவன் எனது உறவினர். எனது குடும்பமே திமுக குடும்பம்தான். எனவே நானும், எனது சகோதரர்களும் திமுகவில் சேருவது சந்தர்ப்பவாத செயல் அல்ல என்றார் ராஜேந்திரன்.

சோனியாவுடன் தயாளு அம்மாள் சந்திப்பு

புதுடெல்லி, மே 29-
டெல்லியில் இன்று ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியை, தமிழக முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது மத்திய கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர். பாலு உடனிருந்தார்.


நன்றி: "மாலை முரசு"

ச: ஹிமாச்சல்: முதல்வர் மீது ஊழல்புகார் கூறியதால் காங். எம். எல்.ஏ சஸ்பெண்ட்

ஹிமாச்சல் பிரதேச முதல்மந்திரி வீரபத்ரசிங் மீது நேற்று தர்மசாலாவில் ஊழல் புகார் கூறியதை அடுத்து காங். மேலிடம் விஜய் சிங் மான்கோடியா என்ற ஆளும் கட்சி எம் எல் ஏவை இன்று தற்காலிக பணிநீக்கம் செய்தது. விஜய் சிங் முன்னதாக முதல்வர் மற்றும் அவரது எம்பி மனைவி பிரதிபாசிங் அவர்களின் உரையாடலுடன் கூடிய டேப்பை வெளியிட்டு இருவரும் ஊழலில் ஈடுபட்டிருப்பதாகக் கூறினார். மேலும் பிரதமரும் காங்கிரஸ் தலைவரும் முதல்வரின் சொத்துக்களை ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி மூலம் ஆராய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

முழு விவரம்..The Hindu News Update Service

ச: இராஜஸ்தான் துப்பாக்கிசூட்டில் ஏழுபேர் மரணம்

இராஜஸ்தானைச் சேர்ந்த குர்ஜார் இன மக்களை பழங்குடியினர் என்றில்லாமல் இதர பிற்பட்ட இனத்தவராக அடையாளப் படுத்தியதற்கு எதிர்த்து தௌசா என்றவிடத்தில் ஜெய்பூர்- ஆக்ரா நெடுஞ்சாலை போக்குவரத்தை மறித்துப் போராடியவர்களைக் கலைக்க காவல்துறை நடத்திய துப்பாக்கிசூட்டிலும் அடிதடியிலும் ஏழுபேர்வரை மரனமடைந்துள்ளனர்;் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். வன்முறை கரௌளி,புந்தி ஆகிய இடங்களுக்கும் பரவுவதை யடுத்து இராணுவம் கூப்பிடப் பட்டிருப்பதாகத் தெரிகிறது.

இந்தக் கலவரம் பற்றி மேலும் அறிய DNA - India - Daily News & Analysis

சேதுசமுத்திர திட்டம் :ராம.கோபாலன் வழக்கு விசாரணை.

ராமரே அழித்து விட்டார்! ஐகோர்ட்டில் மத்திய அரசு பதில் மனு.


ராமர் சேது பாலமே இல்லையென்று கூறிவந்த மத்திய அரசு, தற்போது அந்த பாலத்தை ராமரே அழித்து விட்டதாக சென்னை உயர்நீதி மன்றத்தில் கூறியிருக்கிறது. இது தமிழக அரசின் கெஜட்டில் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
சேது சமுத்திர திட்டத்தை நிறை வேற்றும் போது ராமர் பாலத்தை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி அமைப்பாளர் ராம கோபாலனும், ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமியும் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவர்களுடைய மனுக்கள் இம்மாதம் 15ம் தேதி விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு 29ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிபதிகள் ஜோதிமணி, சுதாகர் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு இன்று முதலாவதாக சுப்பிரமணியசாமியின் வழக்கு விசாரணைக்கு வந்தபோது அவரே நேரில் ஆஜரானார். மத்திய அரசின் சார்பில் உதவி சொலிசிட்டர் ஜெனரல் வில்சன் ஆஜரானார்.
மத்திய அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யாததால் வழக்கு விசாரணையை ஜூன் 14ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். அதன் பின்னர் ராமகோபாலன் வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை செயலர், இந்திய தொல்லியல் துறை டைரக்டர் ஜெனரல், சேதுசமுத்திர திட்டத் தலைவர் உள்ளிட்ட 5 பேர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப் பட்டது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: பொது மக்களின் கருத்துக்களை கேட்டறிந்தே மத்திய அரசு சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றத் தொடங்கி உள்ளது. மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் தடையில்லா சான்று வழங்கி இதற்கு அனுமதி வழங்கியுள்ளது.சேது சமுத்திர திட்டம்
உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. ஆயினும் உச்சநீதிமன்றம் தடை எதையும் வழங்கவில்லை. ராமர் பாலம் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப் படவில்லை; கற்பனையானது. ஆதம்பாலத்தை ஆழப்படுத்த 230 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆதம்பாலம் என்பது மணல் திட்டுக்களே. அது ராமர் பாலம் அல்ல.
இலங்கையில் இருந்து ராமர் திரும்பிய பிறகு தன் வில்லை ஏவி அவர் அமைத்த பாலத்தை அவரே அழித்து விட்டதாக தமிழ்நாடு கெஜட்டில் கூறப்பட்டுள்ளது. இல்லாத பாலத்தை இருப்பதாக கூறுகிறார்கள். எனவே இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு தனது பதில் மனுவில் கூறியுள்ளது.

மிரட்டல்: FBI பிடியில் இந்தியர்

அமெரிக்க உயர் அதிகாரி ஒருவரை அவருடைய பாலியல் சுரண்டலை காரணமாக வைத்து மிரட்டிய இந்தியர் ஒருவரை அமெரிக்க FBI கைது செய்துள்ளது. அவர் பெயர் ராஜதத்தா பட்கர் ஆகும். IITயில் பயின்றவர்.

முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவுக்கு சில காலம் ஜப்பானீய மொழி பெயர்ப்பாளராக பணி புரிந்துள்ளார். அவரால் மிரட்டப்பட்டவர் ஹவாய் மாகாண ஆளுநரின் செயலராம்.

மேலும் படிக்க:

புதிய ஜனாதிபதி யார்?

ஆலோசனைகள் தீவிரம்
ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதம் உள்ள நிலையில், அடுத்த ஜனாதிபதி யார் என்பதை முடிவு செய்ய பல்வேறு கட்சிகளும் தீவிரமாக முயற்சி மேற் கொண்டுள்ளன.
காங்கிரஸ் சார்பில் பல பெயர்கள் அடிபட்டாலும் மத்திய அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவுக்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. பிஜேபி தற்போதைய துணை ஜனாதிபதி பைரோன்சிங் ஷெகாவத்தை நிறுத்த ஆலோசித்து வருகிறது. மேலும்...

ராம்-இலட்சுமண் இரட்டையர்கள் பிரிப்பு!

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களான ராம்-இலட்சுமண் என்கிற 10 மாத குழந்தைகள் இன்று மருத்துவ வரலாற்றின் அரிய அறுவைசிகிச்சை மூலம் பிரிக்கப்படுகின்றனர்.

ராய்ப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் துணை கண்காணிப்பாளரும், மருத்துவருமான எம்.பி.பூஜாரி இத்தகவலை இன்று வெளியிட்டுள்ளார்.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி!

தமிழகத்தில் கத்திரிவெயில் இன்றுடன் முடிகிறது.

தமிழத்தை கடந்த ஒரு மாதமாக தாக்கி எடுத்து வந்த அக்னி நட்சத்திரம் (கத்திரி வெயில்) இன்றுடன் முடிகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் அடித்து வந்த வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது. ஆங்காங்கே நல்ல மழையும் பெய்து வருகிறது. அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த 4ம் தேதி தொடங்கியது. இதையடுத்து தமிழகம் முழுவதும் வெயில் வெளுத்துக் கட்டியது. குறிப்பாக சென்னை, அரக்கோணம், வேலூர் ஆகிய நகரங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு வெயில் பலமாக இருந்தது. இந்த ஊர்களில் அதிகபட்சமாக 110 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் அடித்தது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக வெயில் படிப்படியாக குறையத் தொடங்கியது. இன்றுடன் கத்திரி வெயில் முடிவடைகிறது. இதையடுத்து வெயில் இனி அதிகம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கோடை மழையும் ஆங்காங்கே பரவலாக பெய்து வருவதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

சென்னையில் 2 லட்சம் மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, அங்கீகாரம் பெற்றதனியார் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தமிழகஅரசு சார்பில் ஆண்டு தோறும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் 1 முதல் பிளஸ்2 வரை படிக்கும் மாணவ- மாணவிகள் பள்ளிகூடங்களுக்கு அரசு பஸ்சில் இலவசமாக பயணம்மேற்கொள்ளலாம்.இந்த ஆண்டு முதல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கும் இலவச பஸ்பாஸ் வழங்கப் படும் என்று அரசு அறிவித்து உள்ளது.
கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகூடங்கள் 1ந்தேதி தொடங்குகிறது. பள்ளி தொடங்கும் முதல் நாளே இலவச பஸ்பாஸ்களை வழங்க சென்னைபெருநகர போக்கு வரத்து கழகம் தயாராக உள்ளது. போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆர்.பாலசுப்பிரமணியம் கூறுகையில்,சென்னையில் படிக்கும் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு 1-ந்தேதி முதல் இலவச பஸ் பாஸ் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுஉள்ளன.
பள்ளிகளுக்கு நேரில் சென்று வழங்கப்படுகிறது. பஸ் பாஸ் பெற விரும்புவோர் முறையாக பள்ளி தலைமை ஆசிரியரிடம் விண்ணப் பித்தால் புகைப்படம் எடுத்து உடனடியாக வழங்கப்படும்.
மாணவர்களின் விண்ணப் பங்களை ஒட்டு மொத்தமாக சேகரித்து பள்ளி நிர்வாகம் கொடுத்தால் அங்கு போக்குவரத்து கழக ஊழியர்கள் அனுப்பபட்டு பஸ்பாஸ் வழங்கப்படும். கடந்த ஆண்டு 2லட்சத்து 38 ஆயிரம் பேருக்கு பஸ்பாஸ் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு அதை விட கூடுதலாகவழங்க வேண்டியிருக்கும்.
சுமார் 2 லட்சம் மாணவ- மாணவிகளுக்கு மேல் வழங்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

இடிக்கப்பட்ட 'ராப்ரி ரயில் நிலையம்'

பீகார் மாநிலத்தில் முன்னாள் முதல்வரும், ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவின் மனைவியுமான ராப்ரி தேவியின் பெயரால் அமைக்கப்பட்டிருந்த 'ரயில் நிலையத்தை' இடிக்க ரயில்வே உத்தரவிட்டது. இதையடுத்து அது இடித்துத் தள்ளப்பட்டது.

இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் பீகாருக்கும் பல வித்தியாசங்கள் உண்டு. மற்ற மாநிலங்களில் காண முடியாததை பீகாரில் அதிகம் காணலாம். அதற்கு ஒரு உதாரணம், பீகாருக்குள் ஓடிக் கொண்டிருக்கும் ரயில்கள் ரயில்வேயின் கட்டுப்பாட்டிலேயே கிடையாது. இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான் பெரும்பாலும் ரயில்வே அமைச்சர்களாக வருகிறார்கள் என்பதால், யார் அமைச்சராக இருக்கிறாரோ அவர்கள் பெயரைச் சொல்லி அவர்கள் ரயில் என்றுதான் பீகாரிகள் செல்லமாக கூறுவார்கள்.

முன்பு ராம் விலாஸ் பாஸ்வான் ரயில்வே அமைச்சராக இருந்தார். பிறகு நிதீஷ் குமார் இருந்தார். தற்போது லாலு பிரசாத் யாதவ் இருக்கிறார். இந்த மூவரில் லாலு வந்த பிறகுதான் பீகாரிகளுக்கு ரயில்வே மீது அதிக 'பாசம்' வந்து விட்டது. 'லாலு கா ரயில்' என்று கூறியபடி அவர்கள் செய்யும் அலும்புகளுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது.

பீகாரில், சஸ்ராம் - பிகார்கஞ்ச் ஆகிய இரு ஊர்களுக்கு இடையிலான 45 கிலோமீட்டர் தொலைவில், வழக்கமாக உள்ள ரயில் நிலையங்கள் தவிர சில அதிகாரப்பூர்வமற்ற 'ரயில் நிலையங்களும்' உள்ளன. உள்ளூர் பிரபலங்களின் பெயரால் உள்ளூர் மக்களே அமைத்த 'ரயில் நிலையங்கள் தான் இவை. இவர்களே ஒரு பிளாட்பாரத்தை எழுப்பி, அதன் மேல் அந்த ஊர் பிரபலத் தலைவர்களின் பெயர்களால் ஒரு போர்டும் வைத்துள்ளனர். இந்தப் பகுதி வழியாக செல்லும் உள்ளூர் ரயில்கள் கண்டிப்பாக இந்த அதிகாரப்பூர்வமற்ற ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும். இல்லாவிட்டால் அவ்வளவுதான் அந்த ரயிலின் டிரைவருக்கு சரமாரியாக சாத்துப்படி கொடுக்கப்படுமாம். இவர்களுக்குப் பயந்து உள்ளூர் ரயில்கள் இந்த அதிகாரப்பூர்வமற்ற ரயில் நிலையங்களில் நின்று செல்லுமாம்.

அப்படிப்பட்ட ஒரு ரயில் நிலையத்திற்கு ராப்ரி தேவியின் பெயர் வைத்திருந்தனர் அந்தப் பகுதி மக்கள். இதுபோல கிட்டத்தட்ட 8 ரயில் நிலையங்கள் இந்த மார்க்கத்தில் உள்ளன. இவை அனைத்தையும் இடித்துத் தள்ளுமாறு ரயில்வே துறை சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் இந்த ரயில் நிலையங்களை இடித்துத் தள்ளினர். ராப்ரி நிலையமும் கூடவே இடித்துத் தள்ளப்பட்டது.

தட்ஸ்தமிழ்

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு,

சென்னை மாணவிகள் சாதனை.

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வில் சென்னை மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் சென்னை மண்டலத்தில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கோவா, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, அந்தமான்-நிகோபர் தீவுகள், டாமன்-டையூ, லட்சத்தீவுகள் ஆகியவை உள்ளன. சென்னை மண்டலத்தில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியானது. இதில் சென்னை மாணவ, மாணவிகள் இரண்டாவது, மூன்றாவது இடங்கள் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.சென்னை கோபாலபுரம் டிஏவி பெண்கள் முதுநிலை மேனிலைப்பள்ளி மாணவி ச.திவ்யா 500க்கு 493 மதிப்பெண்கள் பெற்று மண்டலத்தில் இரண்டாமிடம் பெற்றுள்ளார். இதே பள்ளியில் படிக்கும் ச.ராஜேஸ்வரி 489 மதிப்பெண்கள் பெற்று நான்காவது இடம் பிடித்தார்.சென்னை முகப்பேர் டிஏவி பெண்கள் முதுநிலை மேனிலைப்பள்ளி மாணவி பா.சவுமியா 491 மதிப்பெண்கள் பெற்று மண்டலத்தில் மூன்றாம் இடம் பெற்றார். இதேபோல், சென்னை கோபாலபுரம் டிஏவி ஆண்கள் முதுநிலை மேனிலைப்பள்ளி மாணவர் நவனீத் நாயர் 491 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடம் பிடித்துள்ளார்.

தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை சற்றுமுன் மனதார பாராட்டுகிறது. சிறந்த துறைகளை தேர்ந்தெடுத்து வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அதேசமயம், தேர்ச்சிபெறாமல் போன மற்ற மாணவ/மாணவிகள் தொடர்ந்து தங்கள் கல்வி கற்கவும் பெற்றோர்கள் தொடர்ந்து அவர்களுக்கு ஊக்கத்தை கொடுத்து கல்வி புகட்ட சற்றுமுன் கேட்டுக்கொள்கிறது.

மணிரத்னம் தம்பி உடல் தகனம் நடைப்பெற்றது.

சினிமா டைரக்டர் மணிரத்னத்தின் தம்பி சீனிவாசன், குலுமனாலியில் மலை ஏறும் பயிற்சியில் ஈடுபட்டபோது தவறி விழுந்து மரணம் அடைந்தார். அவருடைய உடல் குலுமனாலியில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டுவரப்பட்டது. டெல்லியில் இருந்து இன்னொரு விமானம் மூலம் நேற்று இரவு சென்னைக்கு கொண்டுவரப்பட்டது.
`கேன்ஸ்' படவிழாவில் கலந்துகொண்டுவிட்டு, ஸ்பெயின் நாட்டுக்கு சென்றிருந்த டைரக்டர் மணிரத்னம் நேற்று நள்ளிரவு விமானம் மூலம் சென்னை திரும்பினார். தம்பியின் உடலைப்பார்த்து அவர் கண்கலங்கினார்.
மரணம் அடைந்த சீனிவாசன், மணிரத்னத்துடன் இணைந்து `உயிர்,' `அலைபாயுதே,' `இருவர்,' `ஆயுத எழுத்து,' `குரு' உள்பட பல படங்களை தயாரித்தார். அவருடைய உடல் தகனம் இன்று (செவ்வாய்க்கிழமை) பகல் 11-30 மணிக்கு, சென்னை பெசன்ட்நகர் மின்சார மயானத்தில் நடைப்பெற்றது.

இன்போசிஸ் மதிப்பு ரூ.31,600 கோடி 38% அதிகரிப்பு

பெங்களூர், மே 29: முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான இன்போசிசின் மொத்த மதிப்பு கடந்த மார்ச் வரை ரூ.31,617 கோடியாக அதிகரித்துள்ளது. இது 2005-06 நிதி ஆண்டைவிட 38 சதவீதம் அதிகம்.

இன்போசிஸ் நிறுவனத்தில் 73 ஆயிரம் ஊழியர்கள் உள்ளனர். இது 2005-06 நிதி ஆண்டைவிட 37 சதவீதம் அதிகம். அதாவது, 2006-07ம் நிதி ஆண்டில் மட்டும் 20 ஆயிரம் பேர் வேலையில் சேர்ந்தனர்.

ஊழியர்களால் சராசரியாக இன்போசிஸ் நிறுவனத்துக்கு 6.7 சதவீத வர்த்தகம் நடந்தது. இது முந்தைய ஆண்டில் 5.3 சதவீதமாக இருந்தது.

ஊழியர்களிடம் இருந்து சிறந்த பணித் திறமை வெளியாக சிறப்புப் பயிற்சிகள், பொழுதுபோக்கு வசதிகள், சலுகைகள், அதிக விடுமுறை ஆகிய நடைமுறைகளை கடந்த நிதி ஆண்டில் இன்போசிஸ் தாராளமாக வழங்கியதும் வர்த்தக உயர்வுக்கு காரணமாக கூறப்பட்டது.
கடந்த நிதி ஆண்டில் ஊழியர்களுக்கு சம்பளமாக ரூ.7 ஆயிரம் கோடியை இன்போசிஸ் வழங்கியது. மொத்த வர்த்தகத்தில் ஊழியர்களுக்கு செலவிடும் தொகை சராசரி 12.4 சதவீதமாக அதிகரித்தது. இது முன்பு 10.3 சதவீதம்.



நன்றி: "தினகரன்"

9ம் நூற்றாண்டு நடுகல் கண்டுபிடிப்பு



மே 29: திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ளது வைரிச்செட்டிப்பாளையம். இங்குள்ள வேடன்கலிங்கு அருகே, வேடன் சிற்பம் உள்ளதாக கீழக்கல்பூண்டி கல்வெட்டு ஆய்வாளர் பாண்டுரங்கனுக்கு தகவல் கிடைத்தது. அவர் தலைமையில் பழம்பொருள் சேகரிப்பாளர் பெரியசாமி, கல்வெட்டு ஆய்வாளர் எழிலரசு, தொல்பொருள்துறை ஸ்தபதி ராமன் ஆகியோர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். இரண்டரை அடி அகலம், மூன்றரை அடி உயரம் கொண்ட வீரனின் புடைப்பு சிற்பம் இருந்தது. இது 9ம் நூற்றாண்டை சேர்ந்த சோழர்கால நடுகல் என தெரியவந்துள்ளது. தன்னிடமுள்ள பசுக்கூட்டங்களை கவர்ந்து சென்றவர்களை மீட்கும்போது நடந்த சண்டையில் இறந்த வீரன் நினைவாக நடுகல் எழுப்பப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.




நன்றி: "தினகரன்"

யாழ்ப்பாணத்தை மீட்க புலிகள் திட்டம்

கொழும்பு, மே 28:

யாழ்ப்பாணத்தை முழுவதுமாக தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவர ராணுவத்திற்கு எதிராக மிகப்பெரிய தாக்குதல் நடத்த விடுதலைப் புலிகள் திட்டமிட்டிருக்கும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.


முழு செய்திக்கு "மாலைச் சுடர்"

-o❢o-

b r e a k i n g   n e w s...