.

Monday, March 12, 2007

கடத்தல் எஸ்.எம்.எஸ்: பெண் கைது

M. அஹுஜா எனும் பெண் போலியாய் விமானக் கடத்தல் குறித்து அனுப்பிய எஸ்.எம்.எஸ் கல்கத்தா விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது(நேற்று) இதையடுத்து இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Girl in jail custody for SMS
The SMS by Ahuja (25) caused a hijack scare on the Indigo flight (6E-274) that compelled the Airports Authority of India to bring back the plane from Varanasi sky to Kolkata's N S C Bose international airport last night.

ஜிம்பாவேவின் பிரதான எதிர்க்கட்சியின் தலைவர் கைது

ஜிம்பாவேவின் பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக மாறுதலுக்கான அமைப்பு என்ற கட்சியின் தலைவரும், ஐந்து மூத்த உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி கூறியுள்ளது. தலைநகர் ஹராரேயில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டம் ஒன்றில் பங்கேற்க்க அவர்கள் முயற்சித்ததாக கட்சி கூறுகின்றது..

இந்த பேரணியில் பங்கேற்ற சுமார் ஐம்பதாயிரம் பேர் மீது காவல்துறையினர் கண்ணீர்புகை குண்டுகளை வீசியதோடு, தண்ணீரையும் பீய்ச்சியடித்துள்ளனர். அரசியல் கூட்டங்களை நடத்துவதற்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள தடையை இந்த கூட்டம் மீறியதாக அரசாங்கம் கூறுகின்றது.

இதற்கிடையே செய்தித்தாள் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் 2008 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தான் போட்டியிட விரும்புவதை அதிபர் ராபர்ட் முகாபே வெளிப்படுத்தியுள்ளார்.

BBCTamil.com | BBC NEWS | Africa | Zimbabwe opposition leader held

மட்டக்களப்பில் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 1,20,000

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசாங்கப் படையினருக்கும் இடையிலான எறிகணை மோதல்களால் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை, கடந்த மூன்று நாட்களில் மட்டும் நாற்பதாயிரத்தைத் தாண்டிவிட்டதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அதிகாரியான டேவிட் விக்னாத்தி கூறியுள்ளார்.

இதன் மூலம் அந்த மாவட்டத்தில் கடந்த கால மோதல்களால் இடம்பெயர்ந்து தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து இருபதினாயிரத்தைத் தாண்டிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை அங்கு இடம்பெயரும் மக்களின் என்ணிக்கை திடீரென அதிகரித்து வருவதால், அவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் பெரும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக அரசாங்க அதிகாரிகள் கூறுகிறார்கள்.

BBCTamil.com

ஐஐடி-மும்பையில் இரவில் இணைய இணைப்பு வெட்டு!

ஐஐடி மும்பையில் இரவு 11 முதல் 12.30 வரை மாணவர் விடுதியில் இணைய இணைப்பு இயங்காது. மாணவர்கள் இணையத்தள செயல்பாடுகளில் அதிக நேரம் செலவிட்டு உறக்கம் குறைவது, வகுப்பறைகளுக்கு வராமல் இருப்பது, பிற மாணவர்களுடன் கலந்து பழகாமல் இருப்பது போன்ற போக்குகள் அதிகரிப்பது கவலையளித்ததால் இந்த நடவடிக்கையை ஐஐடி மும்பை மேற்கொண்டிருக்கிறது.

தங்கள் வாழ்க்கை முறையை நிர்வாகம் நிர்ணயிப்பதில் மாணவர்களுக்கு மகிழ்ச்சி இல்லை. ஆனால், இது போன்ற விதிகள் பிற ஐஐடிக்களிலும் வரலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திக்கு - http://sify.com/news/fullstory.php?id=14407783

துபாயில் விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது


இன்று காலை துபாயிலிருந்து டாக்கா கிளம்பிய பங்களாதேஷைச் சேர்ந்த பிமான் விமானம் திடீரென ஓடுபாதையை விட்டு விலகிச் சென்று நின்றதில் 14 பேர் காயமடைந்தனர். 236 பேர் இருந்த விமானத்தில் மற்ற எவருக்கும் எந்தக் காயமும் இல்லை.

ஓடுதளத்தில் இருந்து விமானம் மேலெழும்பும் முன்பாக விமானத்தின் இயந்திரங்களில் தீப்பற்றிக் கொள்ள நேர்ந்ததால் விமானி விமானத்தை ஓடுதளத்தை விட்டு விலகச் செய்ததாக முதல் தகவலறிக்கை சொல்கிறது. விமானத்தின் முன் சக்கரம் கழன்று விட்டதால் மூக்கால் நின்ற விமானத்திலிருந்து பயணிகள் அனைவரும் மிகுந்த பாதுக்காப்புடன் வெளியேற்றப்பட்டனர்.

இந்த விபத்தைத்தொடர்ந்து துபாய் விமானநிலையம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. மிக பரபரப்பான காலை நேரத்தில் இந்த விபத்து நிகழ்ந்ததால் நிறைய விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு, துபாய் வரும் விமானங்கள் பிற இடங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.

மிகச் சமீபத்தில் கிடைத்த தகவலின்படி , துபாய் விமானநிலையம் மீண்டும் திறக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் பயணம் செய்பவர்கள் தங்கள் விமான நிறுவனத்தோடு தொடர்பு கொண்டு விமான நேரத்தை உறுதிசெய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்

இந்திய வம்சாவளி அமெரிக்கருக்கு விஞ்ஞானப் பரிசு !

இந்த ஆண்டுக்கான கோசரெல்லி பரிசு (Cozzarelli Paper of the year 2007) இந்திய அமெரிக்கரான வி இராமநாதனுக்கு தன்சக நிபுணர்களான வின்சென் ட், அஃப்ஹாம்மர் உடன் பகிர்ந்து கொடுக்கப் பட்டுள்ளது. தன் ஆய்வில் எவ்வாறு காற்றின் மாசு கட்டுப்பாடு ஏழை நாடுகளில் விவசாயத்திற்கு நன்மை கொண்டு வரும் என காண்பித்துள்ளார்.

The Hindu News Update Service

உயர்நீதிமன்றத்தில் தமிழ்: மைய அரசு மீள்பார்வை

மைய அரசின் சட்ட அமைச்சர் ஹெ ஆர் பரத்வாஜ் தமிழ்மொழியில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காட அரசு கொள்கையை மீள்பார்வையிடும் எனக் கூறியுள்ளார். முதல்வர் கருணாநிதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது பற்றிய மேலுமறிய ..


இது 400வது பதிவு.

ஐஐடி மாணவர்களுக்கு டாடாவில் வேலை இல்லை?

ஐஐடி சென்னையின் முன்னாள் மாணவர்கள் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டாடா ஸ்டீல் நிறுவனத் தலைவர் பி.முத்துராமன் ஐஐடி மாணவர்களின் தரம் பற்றிய தன் கவலையை வெளியிட்டார். மற்றக் கல்லூரி மாணவர்கள் தங்கள் நிறுவனப் பயிற்சிக்கு தகுந்தவர்களாக இருப்பதால் தாங்கள் அவர்களுக்கே முன்னுரிமை கொடுப்பதாகவும் கூறினார். ஐஐடி மாணவர்களை தான் நேர்முகம் கண்டபோது தனது பாடபுத்தகத்தின் ஆசிரியர் பெயர் கூட தெரியாதவர்களாக இருந்தது தனக்கு ஆச்சரியத்தைத் தந்ததாகவும் கூறினார்.


Will IITs remain islands of excellence?

பிரான்ஸ் அதிபர் சிராக் விடைபெறுகிறார்

கடந்த 12 ஆண்டுகளாக அதிபராக பதவிவகித்த பிரான்ஸின் சிராக் நேற்று நிகழ்த்திய தொலைக்காட்சி உரையில் தன் இனிய நாட்டுமக்களிடமிருந்து விடைபெறுவதாக அறிவித்தார். அந்த உரையில் வளர்ந்து வரும் இனவெறி, சுற்றுசூழல் பாதிப்பு மற்றும் உலகமயமாக்கல் குறித்து கவலை தெரிவித்தார்.

மேலும்...TimesOnline

தில்லியில் மழை

இந்தியத் தலைநகரில் இன்று காலை 8.30 வரை 11 மி.மி மழை பெய்தது.இன்றும் மழைச் சாரல் இருக்குமென வானிலை அறிக்கை.

Zee News -

உலகக்கோப்பை கோலாகலமான தொடக்கவிழா


9வது உலகக்கோப்பை போட்டிகளுக்கான தொடக்கவிழா இன்று ஜமைக்காவில் கோலாகலமாக தொடங்கியது. 16 நாடுகள் பங்பெறும் இந்த உலகக்கோப்பையில் மொத்தம் 51 போட்டிகள் நடைபெறும்.

மொத்தம் 2000 இசை மற்றும் நடனக் கலைஞர்கள் இந்த தொடக்கவிழாவில் பங்கேற்றனர். மேற்கிந்தியத்தீவுகளின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோபர்ஸ் உலகக்கோப்பை போட்டிகள் தொடங்கியதாக அறிவித்து தொடங்கி வைத்தார்.

முதல் போட்டி 13ம் தேதி மேற்கிந்தியத்திவுகளுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற உள்ளது.


http://blogs.cricinfo.com/wc_monitor/archives/2007/03/the_opening_ceremony.php

http://www.rediff.com/wc2007/2007/mar/12open.htm

உலக கோப்பை கிரிக்கெட் வண்ணமயமான துவக்கவிழா!

ஜமைக்கா:ஜமைக்காவில் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் துவக்க விழா கோலாகலமாக நடந்தது.ஒன்பதாவது உலக கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீசில் நடக்க உள்ளது. இதில் இந்தியா உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்கின்றன. வரும் ஏப். 28ம் தேதி பைனல் நடக்கிறது. இப்போட்டிக்கான துவக்க விழா இன்று அதிகாலை ஜமைக்காவில் உள்ள டிரிலாவ்னி அரங்கில் வண்ணமயமாக நடந்தது. போட்டிகளை ஜாம்பவான் கேரி சோபர்ஸ் துவக்கி வைத்தார். வெஸ்ட் இண்டீஸ் சக்தி என்ற பெயரில் சுமார் 3 மணி நேரம் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இதில் 2 ஆயிரம் கலைஞர்கள் கலந்து கொண்டு ஆடிப் பாடி வெஸ்ட் இண்டீஸ் கலாசாரத்தை பிரதிபலித்தனர். வீரர்களின் அணிவகுப்பு நடந்தது. ரூப்பி, ஷாகி, பயான் லியான்ஸ் ஆகியோர் இணைந்து அன்புக்கும் ஒற்றுமைக்கும் கிரிக்கெட் என்ற தொடரின் அதிகாரப்பூர்வ பாடலை பாடினர். அரங்கில் 16 அணி வீரர்களும் அணிவகுத்து வந்த போது கரகோஷம் விண்ணை பிழந்தது.இந்திய வீரர்களை கேப்டன் ராகுல் டிராவிட் தலைமைதாங்கி அழைத்து வந்தார் .

source தினமலர்

இன்சாட்4 பி வெற்றிகரமாக செலுத்தப்பட்டது

இன்சாட்4 பி செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது

பெங்களூரூ: இன்சாட்4 பி செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக இன்று அதிகாலை ( 12 ம் தேதி 3 .35 மணிக்கு ) விண்ணில் செலுத்தப்பட்டது. வீடுகளுக்கான நேரடி ஒளிபரப்பு உட்பட தொலை தொடர்பு சேவைகளுக்கு பயன்படும் இன்சாட் வகை செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இன்சாட்4 ஏ என்ற செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய நிலையில், இன்சாட்4 பி என்ற புதிய செயற்கைக்கோளை நேற்று ( 11 ம் தேதி) விண்ணில் செலுத்த, இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ திட்டமிட்டது. தென் அமெரிக்காவில் உள்ள பிரெஞ்சு கயானா விண்வெளி தளத்தில் இருந்து செயற்கைக்கோளை ஏற்றிச் செல்லும் ஏரியன்5 ராக்கெட் தயாராக இருந்தது. ஆனால், புறப்படுவதற்கு ஏழு நிமிடங்களுக்கு முன் கட்டுப்பாட்டு தளத்தில் சிறிய கோளாறு ஏற்பட்டதால், ஏரியன்5 ராக்கெட்டின் பயணம் ஒரு நாள் தள்ளி வைக்கப்பட்டது. எனவே, இன்சாட்4 பி செயற்கைக்கோள் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3. 35 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டது. வெற்றிகரமாக செலுத்தப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இன்சாட்4 பி செயற்கைக் கோளுடன் பிரிட்டனின் உளவு செயற்கைக்கோள் ஒன்றும் ஏரியன்5 ராக்கெட் மூலம் செலுத்தப்படுகிறது.

source தினமலர்

நீதிமன்றத்தில் தமிழ் இல்லை: முதல்வர் அதிருப்தி

தமிழக நீதிமன்றங்களில் தமிழில் வழக்குகளை நடத்தக் கேட்ட கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது, 'ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் தந்துள்ளது' என பிரதமருக்கு முதல்வர் மு. கருணாநிதி கடிதம் அனுப்பியுள்ளார்.

முன்னதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தோடு கலந்தாராய்ந்து இந்த முடிவுக்கு வந்ததாக அறிவித்திருந்தது.

Karunanidhi stands firm on Tamil in High Court
In identical letters, a copy of which was released to the press, Mr. Karunanidhi said: "All concerned are surprised and shocked over the contents of this letter [disagreeing with the State's proposal], when the relevant provisions of the Constitution and the Law made by Parliament remain unchanged."

ரயில் இருக்கையிலும் டிவி

விமானத்தில் இருக்கையில் ஒய்யாரமாக சாய்ந்து கெண்டு, முன் இருக்கையின் பின்புறம் வைக்கப்பட்டுள்ள டிவி திரையில் நிகழ்ச்சிகளை ரசிக்க முடியும். அதே போல, ரயிலிலும் அந்த வசதியை மத்திய ரயில்வே அமைச்சர் லாலு கொண்டு வந்து விட்டார்.

முதல்கட்டமாக மும்பையில் இருந்து ஆமதாபாத் செல்லும் சதாப்தி ரயிலில் இந்த வசதி ஏற்படுத்தப்படுகிறது. ஒவ்வொருவரின் இருக்கைக்கு முன்பு உள்ள சீட்டின் பின்புறம், இந்த டிவி திரை அமைக்கப்படும்.

- தினமலர்

-o❢o-

b r e a k i n g   n e w s...