.

Monday, March 19, 2007

பவர்ப்ளே

SK ஐயா பவர்ப்ளே பற்றி கேட்ட கேள்விக்கான பதில்..

முன்னெல்லாம் முதல் 15 ஓவர்களுக்கு ரெண்டு ஃபீல்டர்கள் தான் 30-யார்ட் வட்டத்துக்கு வெளியே நிக்கமுடியும். மீதி ஒன்பது பேரும் முதல் 15 ஓவர்களுக்கு 30-யார்ட் வட்டத்துக்குள்ள தான் நிக்கனும்.

2005ல ஐசிசி அதுல ஒரு மாற்றத்தை கொண்டு வந்தாங்க. அதன்படி இந்த Fielding Restrictions 20 ஓவர்களுக்கு இருக்கும். ஆனா தொடர்ந்து இருகனும்கர கட்டாயம் இல்லை. அதாவது முதல் பத்து ஓவர்களுக்கு கட்டாயமா ஒன்பது பேர் 30-யார்ட் சர்கிளுக்கு உள்ளே தான் நிக்கனும். இது PowerPlay1.

அதுக்கப்புறம் மீதி பத்து ஓவர்கள் Powerplay2, Powerplay3னு 5 ஓவர்கள் கொண்ட இரண்டு பகுதியா பிரிக்கப்படும். இந்த ரெண்டு பவர்ப்ளேயயையும் பவுலிங் அணியின் கேப்டன் எப்போ வேணாலும் உபயோகப்படுத்திக்கலாம்.

உதாரணமா ஒரு அணி முதல் 10 ஓவர்ல 90 ரன் அடிச்சு தூள் கிளப்பிகிட்டு இருக்காங்கனு வச்சுக்கோங்க. 11வது ஓவர்ல இருந்து 5 பேரை வெளியே நிக்க வச்சு ரன்ரேட்டை குறைக்க முயற்சி பண்ணலாம். எதாவது விக்கெட் விழுந்த உடனேயோ இல்ல சாதகமான நேரத்துலயோ பவுலிங் அணியின் கேப்டன் மீதி 2 பவர்ப்ளேயயையும் உபயோகிக்கலாம். ஆனா அது தொடர்ந்து 5 ஓவர்களுக்கு இருக்கனும். 16வது ஓவர்லயிருந்து 20வது ஓவர் வரைக்கும்கற மாதிரி. அதே மாதிரி மூனாவது பவர்ப்ளேயயையும் தேவைப்படும்பொழுது உபயோகிக்கலாம். ஆனா கண்டிப்பா 20 ஓவருக்கு 9 பேர் உள்ளெ நின்னு ஃபீல்டிங் பண்ணனும்.

இதனால் ரெண்டு அணிகளும் பயனடைய முடியும்.

கல்கத்தாவில் போலிஸ் தடியடி:பலர் காயம்

நந்திகிராம் துப்பக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்ட ஊர்வலத்தில் போலிஸ் தடியடி நடத்தியதில் பலர் காயமடைந்தனர்.

Many hurt in India protests over killings, land row
"We want Chief Minister Buddhadeb Bhattacharjee to resign immediately for slaughtering innocent villagers," said Siddiqullah Choudhury, head of Jamiat-e-Ulema Hind, one of the biggest groups for India's Muslims, which organised the protest.

Many of the farmers in Nandigram are Muslims. Human rights groups say the toll from Wednesday's clash could be higher as several people are still missing.

The deaths of the villagers has sparked a national outcry about India's plans to set up low-tax SEZs on fertile farming land, and led to severe criticism of West Bengal's communist government, which is keen to industrialise the state.

On Monday, tens of thousands of Muslim protesters, many wearing white skull caps and white tunics, crammed into Kolkata's streets, causing massive traffic jams.

பாக்கிஸ்தானில் ஏழு நீதிபதிகள் பதவி விலகினர்

உச்சநீதிமன்ற தலமை நீதிபதியை பதவி விலக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாக்கிஸ்தானில் 7 நீதிபதிகள் பதவி விலகினர்.

Pakistani judges resign; call for more protests

சேவாகின் சிறப்பான ஆட்டம்

இந்தியா பெர்முடா அணிகளுக்கு இடையே அதி முக்கியத்துவம் வாய்ந்த போட்டி டிரினாடாடில் இன்று (March 19 2007)நடக்கிறது. இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிக்கக் கூடிய போட்டிகளில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.

போட்டி துவங்கும் முன் பாகிஸ்தான் அணி பயிற்சியாளர் பாப் உல்மர் மறைவுக்கு இரு அணி வீரர்களும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

பெர்முடா டாஸ் வென்று முதலில் பீல்டிங் செய்ய முடிவெடுத்தது. துவக்க ஆட்டக்காரர்களாக உத்தப்பாவும், கங்குலியும் களமிறங்கினர். உத்தப்பா இரணடாவது ஓவரின் முதல் பந்தை ஜோன்ஸ் வீச பந்து ஆஃபில் வந்தது. அதை உத்தப்பா ஸ்லிப்பில் அடிக்க, அங்கு நின்றிருந்த லெவர்லாக் அருமையாக கேட்ச் பிடித்து அவுட் ஆக்கினார்.

பிறகு கங்குலியுடன் ஜோடி சேர்ந்த சேவாக் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று சிறப்பாக விளையாடி சதத்தை நிறைவு செய்தார். கடந்த சில போட்டிகளில் சோபிக்காத சேவாக், மூத்த வீரர்கள் மற்றும், ரசிகர்களின் பல்வேறு விமர்சனங்களை எதிர் கொண்டார். அந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பெர்முடாவுக்கு எதிராக சேவாக் இன்று செயல்பட்டார்.

சேவாக் 114 ஓட்டங்களை எடுத்து அவுட் ஆனார்.


கங்குலி சிறப்பாக விளையாடி தன் பங்கிற்கு 89 ஓட்டங்களை எடுத்தார்.

இந்தியா X பெர்முடா: டாஸ் வென்றது

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பெர்முடா டாஸ் வென்று முதலில் பீல்டிங் செய்ய முடிவு

டிரினிடாட்: இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பெர்முடா டாஸ் வென்று முதலில் பீல்டிங் செய்ய முடிவெடுத்துள்ளது. ஆகவே இந்திய அணி முதலில் பேட்டிங் துவங்குகிறது.

'காந்தி குடும்பம் பாபர் மசூதி இடிப்பை தடுத்திருக்கும்'

உத்திரப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் இராகுல் காந்தி பேசுகையில், பாபர் மசூதி நரசிம்ம ராவின் தவறு என்றும். காந்தி குடும்பம் அரசியலில் அப்போது இருந்திருந்தால் இது நிகழ்ந்திருக்காது என்றும் கூறினார்.

மேலும் அவர் தந்தை இராஜிவ் காந்தி தன் தாயாரிடம் நான் பாபர் மசூதிக்கு முன் நிற்கவும் தயார், என்னைக் கொன்றபின்னரே மசூதியை இடிக்க விடுவேன், எனக் கூறியதாகவும் பேசினார்.

Gandhi family would have prevented Babri demolition: Rahul

இன்சமாம் பதவி விலகல்

பாக்கிஸ்தான் அணியின் கேப்டன் பதவியிலிருந்து இன்சமாம் விலகினார். மேலும் ஒருநாள் கிரிக்கட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார்.

Inzamam quits as Pakistan captain - CNN
Woolmer death overshadows Inzamam's retirement

நந்திகிராமத்தில் 2 பெண்களை பாதுகாப்பு படையினர் கற்பழித்ததாக புகார்

நந்திகிராமத்தில் கடந்த வாரம் நடைபெற்ற வன்முறையின்போது, பாதுகாப்புப் படையினர் 2 பெண்களை கற்பழித்ததாக போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. மார்ச் 14-ம் தேதி சோனாசுரா கிராமத்தில் துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர், இரண்டு போலீசார் தங்களை கற்பழித்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இருவரும் 25 மற்றும் 27 வயது நிரம்பிய, திருமணமான பெண்கள்.

இந்த 2 பெண்களையும் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் உடலில் காயங்கள் உள்ளதாகக் கூறியுள்ளனர்.

தினமணி

இப்போது சூரிய கிரகண நேரம்

இன்று சூரிய கிரகணம்

சென்னை : வானில் நிகழும் அற்புத நிகழ்வுகளில் ஒன்றான சூரிய கிரகணம் இன்று காலை நிகழ்கிறது.
சூரிய கிரகணம் இன்று காலை 6:08 மணிமுதல் காலை 9:58 மணிவரை நிகழ்கிறது. இந்தியாவில் டில்லி, பெங்களூரு, கோல்கட்டா, மும்பை, சென்னை ஆகிய இடங்களில் இருந்து சூரிய கிரகணத்தை பார்க்க முடியும். சென்னையில் காலை 6:45 மணிமுதல் காலை 7:23 மணி வரை பார்க்கலாம். சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்ப்பது நல்லதல்ல. பிரத்யேக கண்ணாடிகள் மூலம் பார்க்க வேண்டும் என்று டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்க வளாகத்தில் சூரிய கிரகணத்தை பார்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 4ம் தேதி சந்திர கிரகணம் நடந்து முடிந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக சூரிய கிரகணமும் நிகழ்வது ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. சூரிய கிரகணத்தையொட்டி, இன்று பல்வேறு கோவில்களில் கிரகணம் முடியும் வரை நடை சாத்தப்படுகிறது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் காலை 6 மணி முதல் 8 மணிவரை நடை சாத்தப்படுகிறது. இதே போல் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு சொந்தமான கோவில்களிலும், தமிழக கோவில்களிலும் சூரிய கிரகணம் நடக்கும்போது நடை சாத்தப்பட்டு பின்னர் பரிகார பூஜைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

source=தினமலர்

குறிப்பு: இந்திய நேரப்படி இப்போது சூரிய கிரகண நேரம்...!

பாப் உல்மர் - பாகிஸ்தான் பயற்சியாளர் திடீர் மரணம்.


அவரது அறையில் இறந்து கிடந்ததாக தெரிகிறது.

நேற்றைய ஆட்டத்தில் பாக் உலக கோப்பையில் இருந்து கிட்டதட்ட வெளியேற்றப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.


Cricinfo.com

-o❢o-

b r e a k i n g   n e w s...