.

Monday, May 14, 2007

ச:மாறன் ராஜினாமா பிரதமர் ஏற்பு

மாறனின் பதவி விலகல் விண்ணப்பத்தை பிரதமர் மன்மோகன்சிங் ஏற்றுக்கொண்டார். குடியரசு தலைவர் அப்துல்கலாமின் ஒப்புதலுக்கு விண்ணப்பம் அனுப்பப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகத் தொடர்பாளர் தெரிவித்தார்.

PM accepts Maran's resignation

ச:'மாறன் ஆட்சி அதிவேக வளர்ச்சிக்காலம்'

தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பத் துறையினர் தயாநிதி மாறனின் பதவி விலகலால் அதிர்ச்சியுற்றுள்ளதாகத் தெரிகிறது. மாறனால் ஏற்படுத்தப்பட்ட கொள்கைகளும் திட்டங்களும் தொடருமா எனும் கேள்வி எழுந்துள்ளது.

இந்திய செல்லுலார் ஆப்பரேட்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் டி.வி இராமச்சந்திரன்,"(மாறன் ஆட்சியின்) சாதனைக்களை எல்லோரும் கண்கூடாகக் காண இயல்கிறது. கடந்த மூன்று வருடங்களும் தொலைத்தொடர்புத் துறை அதீத வளர்ச்சியை அடைந்துள்ளது...அவர் இந்திய தொலைத்தொடர்புத் துறையை மிக வேகமாக வளரச் செய்துள்ளார்." என்றார்.

மாறனின் நீக்கம் தொலைத் தொடர்புத் துறையை பாதிக்காது என நம்புவதாகவும் தெரிவித்தார்.

10பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு தொலைத்தொடர்பு, தகவல் தொழிநுட்பத் துறையில் முதலீடுகள் மாறன் ஆட்சியில் வந்துள்ளன.

இவ்விரு துறைகளும் மாறனின் கீழ் பல மைல்கல்களைத் தாண்டியுள்ளன.

நாஸ்காம்(NASSCOM) செய்தி அறிக்கை ஒன்றும் மாறைனை வெகுவாகப் பாராட்டியுள்ளது.

Industry hails Maran's tenure as high growth trajectory The Hindu
"Dayanidhi Maran has been a great champion and friend of the Indian IT sector. NASSCOM on behalf of the Indian IT industry, would like to put on record its appreciation of the very positive and important role played by Maran in sustaining the growth of this industry over the last 3 years", IT association NASSCOM said in a statement.

ச: சிவாஜி: மே 31 வெளியீடு

வெகுநாட்களாக எதிர்பார்த்திருந்த ரஜினியின் 'சிவாஜி' திரைப்படம் மே31 அன்று வெளியிடப்படும் என்று ஏவிஎம் நிறுவனம் அறிவித்துள்ளது.

Sivaji in theatres on May 31

ச:கலாமுக்கு லண்டன் அபூர்வ பதக்கம்

அப்துல்கலாமுக்கு ராயல் சொசைட்டி ஆப் லண்டன் "கிங் சார்லஸ் -II" பதக்கத்தை வழங்கி கௌரவிக்கவுள்ளது. 1997ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்த பதக்கம் உலகளவில், அறிவியல் (ஆராய்ச்சி) வளர்ச்சியை ஊக்குவித்த நாட்டுத் தலைவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள அபூர்வ பதக்கமாகும்.

இந்த பதக்கத்தைப் பெறும் இரண்டாவது நபர் அப்துல் கலாம். முதன் முதலில் 1998ல் இந்தப் பதக்கம் ஜப்பானிய பேரரசர் அகிஹிட்டோவுக்கு வழங்கப்பட்டது.

President Kalam chosen for King Charles Medal The Hindu

King Charles II Medal

ச: மூணாறில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிப்பு

கேரள முதல்வரால் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பணிக்குழு மூணாறில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்க பெரிய அளவில் இறங்கியுள்ளது. கேரள முதல்வர் அச்சுதானந்தனின் சென்ற மாத வருகையின் போது இந்த ஆக்கிரமிப்புக்களை கண்டு எடுக்கப்பட்ட இந்த முடிவு மூன்று மாதங்களில் நிறைவேற்றபட உள்ளது.

NDTV.com

ச: கர்நாடகா: பெண்களுக்கு இரவுப்பணி: உத்தரவு இரத்து

கர்நாடக அரசு பெண்களை இரவுநேரங்களில் எட்டு மணிக்குப் பிறகு கடைகளில் பணிக்கு அமர்த்துவதை தடை செய்து பிறப்பித்த உத்தரவை பலத்த எதிர்ப்புக்களிடையே மீட்டுக் கொண்டுள்ளது.

Karnataka revokes ban on night shift for women

சற்றுமுன்: மே 16 முதல் பி.இ, 28 முதல் எம்பிபிஎஸ் விண்ணப்பங்கள் வினியோகம்

சென்னை என்ஜினீயரிங், பி.டெக் உள்ளிட்ட தொழில் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வரும் 16 முதல் வினியோகிக்கப்படவுள்ளன.

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாயின. இதையடுத்து என்ஜினியரிங், பி.டெக் உள்ளிட்ட தொழில் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படவுள்ளன.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செயலாளர், தமிழ்நாடு என்ஜினீயரிங் அட்மிஷன் 2007, சென்னை 25 என்ற முகவரிக்கு ஜூன் 5ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதலாம் ஆண்டு படிப்பில் சேர சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்தில் வருகிற 28ம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.

நன்றி:- தட்ஸ் தமிழ்

சற்றுமுன்: தினகரனின் 'தமிழ் முரசு' மீது உரிமை மீறல் நடவடிக்கை

சன் டிவி-தினகரன் குழுமத்தின் மாலை தினசரியான தமிழ் முரசு மீது சட்டசபையில் உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் கருணாநிதி-மாறன் குடும்ப மோதல் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.

சன் டிவி-தினகரன் குழுமம் நடத்தி வரும் மாலை நாளிதழ் தமிழ் முரசு. மதுரையில் தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என சில தினங்களுக்கு முன் சட்டசபையில் கருணாநிதி அறிவித்தார்.

அந்தச் செய்தியை தமிழ் முரசு திரித்து வெளியிட்டதாக இன்று சட்டசபையில் உரிமை மீறல் தீர்மானம் ெகாண்டு வந்தார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஞானசேகரன். அவர் பேசுகையில்,

முதல்வர் சொன்னதை தமிழ் முரசு பத்திரிக்கை திரித்து வெளியிட்டது. அதில் அழகிரியையும் தொடர்புபடுத்தி செய்தி வெளியிட்டது. இதனால் அதன் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதையடுத்துப் பேசிய சபாநாயகர் ஆவுடையப்பன், ஞானசேகரன் ெசால்லும் குற்றச்சாட்டுக்கு அடிப்படை முகாந்திரம் உள்ளது. எனவே அதை உரிமைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப உத்தரவிடுகிறேன் என்றார்.

நன்றி:- தட்ஸ் தமிழ்

ச:கராச்சியில் கண்டதும் சுட உத்தரவு

கராச்சியில் நடந்த கலவரங்களை அடுத்து அங்கே போராட்டக்காரர்களைக் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களாக பாக்கிஸ்தான் கராச்சியில் பதவி விலக்கப்பட்ட உச்ச நீதிம்மன்ற நீதிபதியின் ஆதரவாளர்களுக்கும் அதிபர் முஷ்ரஃபின் ஆதரவாளர்களுக்குமிடையே நடந்த மோதலில் 40பேர் பலியாகியுள்ளனர். இதைத்தொடர்ந்து அங்கு உபைரானுவப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.

எதிர்கட்சிகள் சார்பில் பாக்கிஸ்த்தான் முழுவதும் கடையடைப்பும் நடந்துவருகிறது.

Pakistani Soldiers Ordered to Shoot Karachi Rioters on SightBloomberg

சற்றுமுன்: தினகரன் மீதான தாக்குதல்: விசாரிக்க ஐஜி சஞ்சீவ் குமார் தலைமையில் குழு

மதுரை: மதுரையில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விசாரிக்க தென் மண்டல ஐஜி தலைமையில் குழு அமைக்கப்படும் என டிஜிபி முகர்ஜி கூறியுள்ளார்.

மதுரையில் புதிய காவல்நிலைய கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர்,

மதுரையில் நடந்த வன்முறை சம்பவம் மற்றும் தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவுள்ளது. இதில் காவல் துறையின் பாதுகாப்பு நடவடிக்கையில் ஏதேனும் குறைபாடுகள் இருக்கிறதா என விசாரிக்க தென் மண்டல ஐஜி சஞ்சீவ் குமார் தலைமையில் ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு தாக்கல் செய்யும் அறிக்கையை அரசுவிற்கு அனுப்பி வைக்கப்படும். இந்த குழுவிற்கு எந்த கால அவகாசமும் விதிக்கப்படவில்லை.

இந்திய அளவில் கணக்கிடும் போது தமிழகத்தில் காவல் நிலையங்கள் போதுமானதாக உள்ளன. மக்கள் தொகைக்கு தகுந்தவாறு காவல் நிலையங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

காவல்துறை வாகனங்களுக்கான எரிபொருள் அளவை உயர்த்தி கொடுக்குமாறு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார் முகர்ஜி.

நன்றி:- தட்ஸ் தமிழ்

சற்றுமுன்: வேகமாக உயர்ந்து படு வேகமாக சரிந்த தயாநிதி

சென்னை: மின்னல் வேகத்தில் அரசியலுக்குக் கொண்டு வரப்பட்டு, அதி வேகமாக உச்சத்திற்குச் சென்ற தயாநிதி மாறனின் அரசியல் வாழ்க்கை, மூன்றே ஆண்டுகளில் தரைமட்டமாகியுள்ளது.

கருணாநிதியின் நிழலாக, அவரது மனக் குரலாக விளங்கிய மறைந்த முரசொலி மாறனின் இளைய மகன்தான் தயாநிதி மாறன். மாறன் மறைவுக்குப் பின்னர் டெல்லியில் திமுகவின் குரலாக இருக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்தது.

அந்த சமயத்தில் திடீரென உதயமானவர் தயாநிதி மாறன். தந்தையின் இடத்தில் தயாநிதியை உட்கார வைத்து அவருக்கு முக்கியத்துவம் கொடுத்தார் கருணாநிதி.

மத்திய சென்னை எம்.பி. தொகுதியில் நிறுத்தி வெற்றி பெற வைத்து, மாறன் குடும்பம் விரும்பிய முக்கியத் துறையை அவருக்கு வாங்கிக் கொடுத்து அழகு பார்த்தார் கருணாநிதி.

ஆனால் கருணாநிதியின் இந்த முடிவுக்கு கட்சிக்குள் அப்போதே கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் தனது பாணியில் இதை அமைதிப்படுத்தி, அடக்கினார் கருணாநிதி.

2004ம் ஆண்டு மத்திய அமைச்சரானார் தயாநிதி மாறன். அதற்கு முன்பு தயாநிதி மாறன் அதிகம் அறியப்படாதவர். சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்தின் இயக்குநராக மட்டுமே இருந்து வந்தார் தயாநிதி மாறன்.

ஆனால் மத்திய அமைச்சரான பின்னர் தனது செயல்பாடுகளால் டெல்லியில் பலரின் நட்பைப் பிடித்தார். குறிப்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடமும், பிரதமரிடமும் நெருங்கிய நட்பை ஏற்படுத்திக் கொண்டார்.

மிகக் குறுகிய காலத்தில் இந்தியா முழுவதும் தெரிந்த முகமாகி விட்டார் தயாநிதி மாறன். அதே சமயம் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கினார். சன் டிவியை வளர்ப்பதில் மட்டும்தான் அவர் அக்கறை காட்டுகிறார். மற்ற தமிழ் சானல்களை அழிக்கும் வேலையில் அவர் ஈடுபடுகிறார் என்று முன்பு பெரும் சர்ச்சை எழுந்தது.

ராஜ் டிவியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தயாநிதி மாறன் கடுமையாக முயல்வதாகவும் கூறப்பட்டது. இதை நிரூபிக்கும் வகையில் ராஜ் டிவிக்கு வழங்கப்பட்ட நேரடி ஒளிபரப்புக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டது. அந்த நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தி பல கோடி மதிப்புள்ள கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல ஜெயா டிவிக்கும் பல நெருக்கடிகளைக் கொடுத்தார் தயாநிதி மாறன் என்று கூறப்பட்டது. அந்த நிறுவனத்தின் சார்பில் புதிதாக ஒரு செய்தி சானலுக்கான உரிமத்தை வழங்கவும் தயாநிதியின் துறை தாமதம் செய்தது. பின்னர் நீதிமன்றத் தலையீட்டைத் தொடர்ந்து உரிமம் வழங்கப்பட்டது.

சமீபத்தில் விஜய் டிவியுடனும் மோதினார் தயாநிதி மாறன். அந்த டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் பங்கு பெற்ற யூனிட்டை அப்படியே சன் டிவிக்கு ஹைஜாக் செய்ததில் தயாநிதி மாறன் முக்கியப் பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. மேலும், விஜய் டிவிக்கு பல ரூபங்களில் நெருக்கடியும் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

இந்த சர்ச்சைகளுக்கெல்லாம் முத்தாய்ப்பாக, உச்சமாக இந்தியாவின் மிகப் பெரும் தொழிலதிபரான ரத்தன் டாடாவை தயாநிதி மாறன் மிரட்டினார் என்ற சர்ச்சைதான். நான் மிரட்ட வில்லை என்று தயாநிதி மாறன் அதற்கு விளக்கம் கூறினார். ஆனால் அதுகுறித்து பிரதமரும், காங்கிரஸ் தலைவரும் மறுப்பு தெரிவிக்கவில்லை, விளக்கவும் இல்லை.

இந்த நிலையில்தான் தேவையில்லாத ஒரு கருத்துக் கணிப்பை தினகரன் வெளியிடப் போக தயாநிதியின் தலை உருண்டுள்ளது.

அடுத்து தயாநிதி மாறன் என்ன செய்யப் போகிறார் என்பதை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. மேலும், திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.பி. பதவியையும் அவர் ராஜினாமா செய்வாரா என்பது தெரியவில்லை. அதுகுறித்து திமுக தரப்பிலும் எந்த சத்தமும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

3 ஆண்டுகளில் பதவியிழக்கும் தயாநிதி மாறன்

பதவிக்கு வந்த 3 ஆண்டுகளில் தயாநிதி மாறன் தன் அமைச்சர் பதவியை இழக்கிறார்.

சன் டிவி குழுமத்தின் கேபிள் நெட்வொர்க்கான சுமங்கலி கேபிள் விஷன் நிறுவன இயக்குனராக இருந்த தயாநிதி மாறன், கடந்த 2004ல் முரசொலி மாறன் மறைவிற்கு பின்னர் நடந்த பொதுத் தேர்தலில் முதன்முதலாக மத்திய சென்னை மக்களவை தொகுதியில் திமுக சார்பில் வெற்றி பெற்றார்.

இதையடுத்து அவருக்கு மத்தியில் அமைந்த கூட்டணியில் முக்கியமான துறையான தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலை தொடர்புத் துறை கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி ஆகியோரிடம் மிகுந்த செல்வாக்கு பெற்றார். டெல்லி அரசியலில் தமது செல்வாக்கை நிலை நிறுத்தினார்.

தொலைத் தொடர்புத்துறை அைமச்சராக மிகச் சிறப்பாக பணியாற்றி அந்தத் துறையைச் சேர்ந்தவர்களின் மதிப்பையும் பெற்றார். தொலைபேசி கட்டணங்களை குறைத்துக் கொண்டே வந்தார். அவருடைய மிகப் பெரிய சாதனையாக கருதப்படுவது இந்தியா முழுவதும் 1 ரூபாயில் பேசும் ஒன் இந்தியா திட்டம்.

ஆனால் தினகரன் வெளியிட்ட கருத்து கணிப்பு, அழகிரி கும்பல் தாக்குதல், அழகிரியை ரவுடி என சன் டிவி விமர்சித்தது, முதல்வர் கருணாநிதியை புறக்கணித்தது என திடீரென நிகழ்ந்த அரசியல் சூறாவளிகளால் கட்சியிலும் குடும்பத்திலும் குழப்பம் ஏற்பட்டு பதவியை இழந்து நிற்கிறார் தயாநிதி.

இதனால் யாருக்கு லாபமோ நஷ்டமோ தொலைத் தொடர்புத்துறையும் சாப்ட்வேர் துறையும் ஒரு இளம், எனர்ஜடிக் அமைச்சரை இழந்துவிட்டது.

நன்றி: தட்ஸ் தமிழ்

சற்றுமுன்:- பிளஸ்-2: சென்னை டிஏவி பள்ளி மாணவி ரம்யா

சென்னை: பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாயின. இதில் சென்னை மாணவி ரம்யா முதலிடத்தை பிடித்துள்ளார்.

இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குனர் வசந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

கோபாலபுரத்திலுள்ள டிஏவி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி ரம்யா 1182 மதிப்பெண் பெற்று மாநிலத்திலேயே முதலிடத்தை பிடித்துள்ளார்.

அதே பள்ளியைச் சேர்ந்த ரூபிகா 1180 மதிப்பெண்கள் பெற்று 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.

திருப்பூரை சேர்ந்த ஜெயமுருகன், நாமக்கல்லை சேர்ந்த நிவேநிதா, இளவரசன் மற்றும் கீர்த்தனா ஆகியோர் 1179 மதிப்பெண்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.

மதிப்பெண் சான்றிழ்கள் வரும் 25க்குள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.

நன்றி:- தட்ஸ் தமிழ்

சற்றுமுன்:சதி செய்து பதவியை பறித்துவிட்டனர்-தயாநிதி பேட்டி

சதி செய்து பதவியை பறித்துவிட்டனர்-தயாநிதி பேட்டி

சென்னை: கட்சியில் உள்ள சிலர் சதி செய்து தன்னை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிவிட்டதாக மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த தயாநிதி மாறன் கூறியுள்ளார்.

ஊட்டிலிருந்து இன்று சென்னை வந்த மாறன் கோபாலபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் நிருபர்களை சந்தித்தார். அவர் கூறுகையில்,

மதுரை தினகரன் மீதான தாக்குதலால் நான் ராஜினாமா முடிவை எடுக்கவில்லை. சன் டிவிக்கும் தினகரனுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், அந்த சம்பவத்தை வைத்து என் பெயரைக் கெடுக்க சிலர் முயன்றுள்ளனர். இந்த சம்பவத்தை காரணமாக வைத்து என்னை பதவி நீக்கம் செய்ய வைத்துள்ளனர்.

அமைச்சராக பணியாற்ற வாய்ப்பளித்த சோனியா காந்தி அவர்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு பதவி முக்கியமல்ல. அமைச்சராக இருப்பதும் இல்லாததும் என்னை எந்த விதத்திலும் பாதிக்காது.

எனது கட்சியான திமுகவுக்கோ தலைவர் கலைஞருக்கோ எந்த விதத்திலும் எதிராக செயல்பட மாட்டேன். ஆனால், நான் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது தான் மிகுந்த வருத்தத்தை தருகிறது.

கட்சியை விட்டு நீக்கப்பட்டாலும் நான் திமுககாரன் தான். கட்சிக்காக தொடர்ந்து உழைப்பேன். நான் பிறந்தது திமுககாரனாத்தான். கட்சியை விட்டு நீக்கினாலும் திமுக தொண்டனாகவே சாவேன்.

விரைவில் கலைஞரை சந்திப்பேன். என் நிலையை விளக்குவேன். ஆனால், இந்த விவகாரங்கள் குறித்து பேசப் போவதில்லை.

ஆனால், கலைஞரை சந்திக்க இதுவரை எனக்கு வாய்ப்பு தரப்படவில்லை. அது ஏன் என்று தான் புரியவில்லை.

எங்கள் குடும்பத்துக்கும் கலைஞர் குடும்பத்துக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. எனக்கு ஸ்டாலின், அழகிரியோடு நல்ல நட்புறவு தான் உள்ளது.

கட்சியிடம் இருந்து என்னை ஏன் நீக்கக் கூடாது என்று கேட்டு எனக்கு இதுவரை நோட்டீஸ் ஏதும் வரவில்லை. ஆனால், நான் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக திமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மறு கணமே எனது ராஜினாமா கடிதத்தை பிரதமருக்கு அனுப்பி விட்டேன்.

கட்சி எடுத்த முடிவு அது. அதற்கு கட்டுப்பட்டுவிட்டேன்.

அமைச்சர் பதவியில் இருந்து விலகினாலும் எம்பியாக தொடரவே விரும்புகிறேன். சென்னை மத்தியத் தொகுதி மக்களுக்காக தொடர்ந்து உழைக்க தயாராக இருக்கிறேன். அந்தப் பதவியில் இருந்து விலகச் சொன்னாலும் நான் தயார் என்றார் தயாநிதி.

மதுரை சம்பவம் நடந்தவுடன் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலை சந்தித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினீர்களாமே என்று கேட்டபோது, இது பொய்யான தகவல். அப்போது நான் மக்களவையில் இருந்தேன் என்றார் தயாநிதி.

முன்னதாக நேற்றிரவு ஊட்டியிலிருந்து அவர் வெளியிட்ட அறிக்கையில், நான் திமுகவுக்கும், தலைவர் கலைஞருக்கும் என் மனதறிய துரோகம் நினைத்ததில்லை. இனியும் நினைக்க மாட்டேன்.

என் தாத்தாவும், என் தந்தையும் என்னை அப்படி வளர்க்கவில்லை. என்னைப் பதவி நீக்குவதும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதும் தலைவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சி தருவதாக இருந்தால், அதை ஏற்கவும் தயாராக இருக்கிறேன். ஏனென்றால் நான் அவரின் வளர்ப்பு. அவரால் ஆளாக்கப்பட்டவன்.

இந்த நேரத்தில் வேறு எதையும் தெரிவிக்க விரும்பவில்லை. மூன்றாண்டு காலம் இந்திய மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் நேர்மையாகவும், என்னால் முடிந்தளவுக்கு சிறப்பாகவும், பணியாற்றி பலரது பாராட்டைப் பெற வாய்ப்பளித்த தலைவருக்கும், கட்சிக்கும், எனது இதயங்கனிந்த நன்றிகள் என்று கூறியுள்ளார் தயாநிதி மாறன்..

நன்றி- தட்ஸ் தமிழ்

தயாநிதி சொ.செ.சூ - எகனாமிக்ஸ் டைம்ஸ்

நடுவண் அரசின் சிறந்த அமைச்சர்களில் ஒருவராகத் திகழ்ந்த தயாநிதிமாறன் எப்போதுமே சிறந்தபேரத்தைப் பெறுவதில் வல்லவராக இருந்தார். மிகப்பெரிய தகவல்நுட்ப மற்றும் தொலைதொடர்பு
நிறுவனங்களிடமிருந்து அதிக அன்னிய முதலீட்டை பெறுவதிலும் அவற்றின் தயாரிப்புச்சாலைகளை சென்னைக்கு ஈர்ப்பதிலும் வெற்றி கண்டார். மூன்று வருடங்களுக்கு ஒன்பதுநாட்கள் குறைந்த அவரது பதவி காலத்தில் அமெரிக்க டாலர் 12 பில்லியனுக்கும் மேலான அன்னிய முதலீட்டை கொண்டுவந்தார். அவரது விலகல் IT மற்றும் தொலைதொடர்பு வளர்ச்சிக்கு நிச்சயம் ஒரு பேரிடியே.


மேலும் எகனாமிக்ஸ் டைம்ஸ் கூறுவது....Maran rocked his own boat-Politics/Nation-News-The Economic Times

மனதறிய துரோகம் நினைத்ததில்லை - தயாநிதி

தயாநிதி மாறன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
நான், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கோ, தலைவர் கலைஞர் அவர்களுக்கோ என் மனதறிய எந்த துரோகமும் நினைத்தது இல்லை. இனி உயிர் உள்ளவரை நினைக்கவும் மாட்டேன். என் தாத்தாவும் தந்தையும் என்னை அப்படி வளர்க்கவும் இல்லை. இந்த நிலையில், என்னை பதவி விலக்குவதும் அடிப்படை உறுப்பினர் பதவியை பறிப்பதும் தலைவருக்கும் அவரது குடும்பத்திற்கும் மகிழ்ச்சி தருவதாக இருந்தால், அதை ஏற்கவும் தயாராக இருக்கின்றேன். ஏனென்றால், நான் தலைவர் கலைஞரின் வளர்ப்பு. அவரால் ஆளாக்கப்பட்டவன். இந்த நேரத்தில் இதைத் தவிர வேறு எந்த கருத்தும் கூற விரும்பவில்லை.
3 ஆண்டு காலம் இந்திய நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நேர்மையாகவும் என்னால் முடிந்த அளவு சிறப்பாகவும் பணியாற்றி, பலரின் பாராட்டைப் பெற வாய்ப்பளித்த தலைவருக்கும் கழகத்துக்கும் கழகத் தோழர்களுக்கும் எனது இதயங்கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு தயாநிதி மாறன் கூறியுள்ளார்.

தயாநிதியை நீக்கியது ஏன்?

நிர்வாகக் குழு உறுப்பினர்கள் 146 பேர் கலந்து கொண்டனர்.கூட்டம் துவங்கியதும், தயாநிதி மாறனின் செயல்பாடு குறித்து விவரிக்கப்பட்டு, அது சம்பந்தமாக உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை கூறலாம் என்று வாய்ப்பளிக்கப்பட்டது. தொடர்ந்து, அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், கோ.சி.மணி, வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி, கோவை ராமநாதன், முகமது சகி உட்பட ஒன்பது பேர் பேசினர். இவர்கள் அனைவருமே தயாநிதியின் செயல்பாடு குறித்து அதிருப்தி தெரிவித்தனர்.

குறிப்பாக, கட்சியின் ஆதரவு பெற்றதாக கருதப்பட்ட தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை நிறுவனத்தின் செய்திகள் பற்றி விமர்சித்தனர். டில்லியில் தயாநிதியின் செயல்பாடு அவரது சொந்த செல்வாக்கை வளர்த்துக் கொள்ளும் விதத்தில் இருந்ததாகவும், கட்சிக்கு அவராலும் அவரது குடும்ப நிறுவனத்தாலும் பயன் ஏதும் இல்லை என்றும் கூறினர்.

கருத்துக் கணிப்பு மற்றும் மதுரை சம்பவத்தில் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக நம்ப வைக்கும் முயற்சியிலும் இவர்கள் ஈடுபட்டதாக குற்றம்சாட்டினர். தனது செல்வாக்கை பயன்படுத்தி மீடியாக்களை ஒன்று திரட்டி ஆட்சிக்கு எதிராக செய்திகள் வெளிவருவதற்கு இவர்கள் காரணமாக இருந்ததாகவும் குற்றம்சாட்டினர். இதுதவிர, பல்வேறு தரப்பினர் தி.மு.க.,வுக்கு எதிராக திரும்புவதற்கு இவர்கள் காரணமாக இருந்ததாகவும் தெரிவித்தனர்.

தயாநிதிக்கு ஆதரவாக ஒருவர் கூட பேசவில்லை. கூட்டத்தில் பேசிய அனைவருமே, முதல்வரின் குடும்பம் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் தயாநிதி விவகாரத்தில் முதல்வர் கருணாநிதி என்ன முடிவு எடுத்தாலும் அதை முழுமனதுடன் ஆதரிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

அனைவரும் பேசி முடித்த பின், தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார். தயாநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதற்கான காரணங்களை அப்போது அவர் விளக்கினார். இதன்பின் தயாநிதியிடம் இருந்து மத்திய அமைச்சர் பதவியை பறிப்பது மற்றும் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவது ஆகியவை பற்றி முடிவு எடுக்கும் அதிகாரத்தை கருணாநிதிக்கும், அன்பழகனுக்கும் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

- தினமலர்

-o❢o-

b r e a k i n g   n e w s...