நிர்வாகக் குழு உறுப்பினர்கள் 146 பேர் கலந்து கொண்டனர்.கூட்டம் துவங்கியதும், தயாநிதி மாறனின் செயல்பாடு குறித்து விவரிக்கப்பட்டு, அது சம்பந்தமாக உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை கூறலாம் என்று வாய்ப்பளிக்கப்பட்டது. தொடர்ந்து, அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், கோ.சி.மணி, வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி, கோவை ராமநாதன், முகமது சகி உட்பட ஒன்பது பேர் பேசினர். இவர்கள் அனைவருமே தயாநிதியின் செயல்பாடு குறித்து அதிருப்தி தெரிவித்தனர்.
குறிப்பாக, கட்சியின் ஆதரவு பெற்றதாக கருதப்பட்ட தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை நிறுவனத்தின் செய்திகள் பற்றி விமர்சித்தனர். டில்லியில் தயாநிதியின் செயல்பாடு அவரது சொந்த செல்வாக்கை வளர்த்துக் கொள்ளும் விதத்தில் இருந்ததாகவும், கட்சிக்கு அவராலும் அவரது குடும்ப நிறுவனத்தாலும் பயன் ஏதும் இல்லை என்றும் கூறினர்.
கருத்துக் கணிப்பு மற்றும் மதுரை சம்பவத்தில் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக நம்ப வைக்கும் முயற்சியிலும் இவர்கள் ஈடுபட்டதாக குற்றம்சாட்டினர். தனது செல்வாக்கை பயன்படுத்தி மீடியாக்களை ஒன்று திரட்டி ஆட்சிக்கு எதிராக செய்திகள் வெளிவருவதற்கு இவர்கள் காரணமாக இருந்ததாகவும் குற்றம்சாட்டினர். இதுதவிர, பல்வேறு தரப்பினர் தி.மு.க.,வுக்கு எதிராக திரும்புவதற்கு இவர்கள் காரணமாக இருந்ததாகவும் தெரிவித்தனர்.
தயாநிதிக்கு ஆதரவாக ஒருவர் கூட பேசவில்லை. கூட்டத்தில் பேசிய அனைவருமே, முதல்வரின் குடும்பம் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் தயாநிதி விவகாரத்தில் முதல்வர் கருணாநிதி என்ன முடிவு எடுத்தாலும் அதை முழுமனதுடன் ஆதரிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
அனைவரும் பேசி முடித்த பின், தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார். தயாநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதற்கான காரணங்களை அப்போது அவர் விளக்கினார். இதன்பின் தயாநிதியிடம் இருந்து மத்திய அமைச்சர் பதவியை பறிப்பது மற்றும் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவது ஆகியவை பற்றி முடிவு எடுக்கும் அதிகாரத்தை கருணாநிதிக்கும், அன்பழகனுக்கும் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- தினமலர்
Monday, May 14, 2007
தயாநிதியை நீக்கியது ஏன்?
Posted by சிவபாலன் at 2:48 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
11 comments:
இந்த கருத்துக் கணிப்பை வெளியிட வேண்டாமென முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டும் வெளியிட்டது அவருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் இந்த கருத்துக் கணிப்பில் இடம்பெற்றுள்ள வரிசை சரியானதல்ல என்று அறிக்கை வெளியிட்டார். அதன் பின்னரும் அடுத்து வெளியான கருத்துக் கணிப்பு தி.மு.க.,வில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. முதல்வரின் வாரிசாக இருக்க அழகிரிக்கு இரண்டு சதவீத ஆதரவே இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. முதலில் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தவும், அடுத்து கட்சிக்குள்ளேயே குழப்பத்தை ஏற்படுத்தவும் இந்த கணிப்பு வெளியிடப்பட்டதாக தி.மு.க.,வினர் கருதினர். இந்த சம்பவங்கள் முதல்வருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. சட்டசபையில் இதுபற்றி பேசிய முதல்வர், கருத்துக் கணிப்பு வெளியிட்டதை கடுமையாக கண்டித்தார். கூட்டணி கட்சித் தலைவர்களின் வற்புறுத்தல் காரணமாக சட்டசபை பொன்விழா நிகழ்ச்சியை நடத்த முதல்வர் சம்மதித்த சமயத்தில், பிரதமரையும், சோனியாவையும் தமிழகம் வர விடாமல் செய்வதற்கு தயாநிதி தரப்பு முயற்சிகள் மேற்கொண்டதாக தகவல் கிடைத்ததும் முதல்வர் அதிர்ச்சியடைந்துவிட்டர். இதுதவிர மதுரை தாக்குதல் சம்பவத்தில் தி.மு.க.,வுக்கும் அழகிரிக்கும் எதிராக டில்லியில் வெளிவரும் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின. இந்த பத்திரிகைகள் கடுமையாக விமர்சனம் செய்வதற்கு பின்னணியில் தயாநிதி இருந்ததாக முதல்வருக்கு தெரியவந்துள்ளது. இவை அனைத்தும் தான் தயாநிதி மீது நடவடிக்கை எடுக்க காரணமாகிவிட்டது.
தி.மு.க.,வின் நிர்வாகக் குழுக் கூட்டம் சென்னை அறிவாலயத்தில் உள்ள கருணாநிதி அரங்கத்தில் நேற்று நடந்தது. பரபரப்பாக கூடிய அக்கூட்டத்தில் பேசிய அனைவருமே தயாநிதிக்கு எதிராக பேசினர். மத்திய அமைச்சர் பதவியிலிருந்து அவரை விடுவிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை எழுப்பிய போது ஆதரவு அளித்துள்ளனர். அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பேசுகையில், ""தயாநிதி மீது தடாலடியாக நடவடிக்கை எடுக்க வேண்டாம். எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற ரீதியில் செயல்படக் கூடாது. அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவோம்,'' என்றார். வீரபாண்டி ஆறுமுகத்தின் கருத்தை அமைச்சர் கோ.சி.மணியும் வலியுறுத்தி பேசினார். மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் பேசுகையில், ""தயாநிதி மாறன் எனக்கு நெருக்கமான நண்பர். இருந்தாலும் கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது தலைமையின் கடமை,'' என்றார்
நடவடிக்கை எடுத்தால் விபரீதம் ஏற்படும் : பொன்முடிக்கு வந்த எச்சரிக்கை :
""தயாநிதி மிரட்டலுக்கு தி.மு.க., அஞ்சாது. அவரை கட்சியிலிருந்து நீக்குவோம்,'' என்று அமைச்சர் பொன்முடி ஆவேசமாக பேசினார்.
அமைச்சர் பொன்முடி பேசியதாவது: என் வீட்டிற்கு இன்று (நேற்று) மதியம் செல்வம் வந்தார். அவர் என்னிடம் "தயாநிதி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். அவர் மீது நடவடிக்கை எடுத்தால் விபரீதம் உண்டாகும். உங்கள் நண்பர் ஸ்டாலினுக்காக கட்சியை விட்டு விடாதீர்கள். தயாநிதி சாதாரணமான ஆள் இல்லை. எல்லா மட்டத்திலும் அவருக்கு செல்வாக்கு உள்ளது. தி.மு.க., ஆட்சி அமைக்க அவர் காரணமாக இருந்தார். அதை யாரும் மறந்து விடக் கூடாது. அவர் மீது தவறான முடிவு எடுத்தால் தவறான விளைவுகளை சந்திக்க நேரிடும். தயாநிதி என்ன தவறு செய்தார். கட்சிக் கட்டுப்பாட்டை அவர் எங்கே மீறினார். கருத்துக் கணிப்பு பிடிக்கவில்லை என்றால் அமைதியாக இருக்கலாம். ஏன் கலவரத்தை நடத்த வேண்டும். தி.மு.க.,வில் அழகிரி என்ன பொறுப்பில் இருக்கிறார். கட்சியில் அவர் வட்ட செயலரா? அல்லது மாவட்டச் செயலரா? அவருக்கு எந்த பொறுப்பும் இல்லாத போது அவருக்கு ஏன் கோபம் வருகிறது. ஆத்திரம் வருகிறது' என்று கேட்டார். இதுமாதிரியான எந்த மிரட்டலுக்கும் நாங்கள் அஞ்சமாட்டோம். இதற்கெல்லாம் தி.மு.க., பயப்படாது. தயாநிதியை கட்சியிலிருந்து நீக்குவோம்,'' இவ்வாறு பொன்முடி பேசினார்.
நன்றி: தினமலர்
//நிர்வாகக் குழு உறுப்பினர்கள் 146 பேர் //
இதில் எத்தனை பேரின் கருத்தை கேட்டுவிட்டு தயாநிதியை மத்திய அமைச்சராக்கினார் கருனாநிதி ?
அருமையான குடும்ப அரசியல் காமெடி நடக்கிறது தமிழ் நாட்டில். இதை கமெண்டரியுடன் பதிவு செய்து, ரசிக்க வேண்டிய நிலை தமிழனுக்கு.
அந்தம்மா ஆட்சியில் பேருந்தை கொளுத்தினால் இந்த முதியவரின் ஆட்சியில் பத்திரிக்கை ஆபீஸை முதல்வரின் மகன் கொளுத்துகிறான்.
இத்தனை நடந்த பிறகும் கொலை செய்ய தூண்டி அதை running commentaryஆக கேட்ட அழகிரியின் தலைமயிரை கூட அரசு இயந்திரம் தொட முடியவில்லை....அதற்க்கு வாங்கபடுகிற வக்காளத்தும்...கொடுக்கபடுகிற பட்டங்களும் நாற்றத்தை அதிகபடுத்துகிறது.
Dravidian rascal என்று சொன்னதற்க்கு பதில் dravidian murderers என்று சொல்லிவைத்திருக்கலாம். பொருத்தமாக தான் இருக்கிறது.
//தயாநிதி என்ன தவறு செய்தார். கட்சிக் கட்டுப்பாட்டை அவர் எங்கே மீறினார். கருத்துக் கணிப்பு பிடிக்கவில்லை என்றால் அமைதியாக இருக்கலாம். ஏன் கலவரத்தை நடத்த வேண்டும். தி.மு.க.,வில் அழகிரி என்ன பொறுப்பில் இருக்கிறார். கட்சியில் அவர் வட்ட செயலரா? அல்லது மாவட்டச் செயலரா? அவருக்கு எந்த பொறுப்பும் இல்லாத போது அவருக்கு ஏன் கோபம் வருகிறது. ஆத்திரம் வருகிறது' //
இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல எந்தக் கொம்பனாலும் முடியாது.
பழி வேண்டுமானால் வாங்கலாம்.
வாங்கி விட்டார்கள்!
"கெட்ட நேரத்தில் வரும் கெட்ட புத்தி" எனும் வாசகம் உண்மையாகிறது.
மேலும், இந்தக் கலவரத்தில் அழகிரிக்கு பங்கு இருக்கிறது என்பதும் மறைமுகமாக நிரூபணம் ஆகியிருக்கிறது.
சன் நியூஸ் பார்க்க வேண்டும் இன்று!!
மதுரை என்னும் ஒரு குறுகிய வட்டத்துக்குள் அழகிரிக்கு செல்வாக்கு [தி.மு.க.வில் மட்டும்] இருக்கிறது என்பது உண்மையே!
அது 2% தான் மொத்த அளவில்ல் பார்க்கையில் என்பதும் நம்பத்தகுந்ததே!
அழகிரிக்கு கோபம் வந்ததில் ஆச்சரியம் இல்லை.
கெட் கோயிங் அட்டாக் பாண்டியன்!!
சிவபாலன் அய்யா,
தயாநிதி அய்யாவும்,கடந்த 5000 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டு,பிற்படுத்தப்பட்டவர் தானே,அதாவது நேற்றுவரை;இன்று அவரை நீக்குவது எப்படி சமூகநீதியாகும்?கன்ஃப்யுஷன்.
பாலா
சிவபாலன் ஐயா, பொன்முடி தனது பேச்சின்போது "செல்வம்" என்று குறிப்பிட்டது "முரசொலி" செல்வத்தையா? விளக்க முடியுமா?
//இதில் எத்தனை பேரின் கருத்தை கேட்டுவிட்டு தயாநிதியை மத்திய அமைச்சராக்கினார் கருனாநிதி ?//
இந்தியாவில் திமுகவைப் போல போலி ஜனநாயகம் வேறு எந்த கட்சியிலும் இல்லை. அது ஒரு குடும்பச் சொத்து. இவ்வளவு பேர் பேசினார்களே, ஒருவராவது அழகிரியைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லியிருக்க வேண்டுமே? மாறனாவது பரவாயில்லை. எனக்குத் தெரிந்தவரை grassroot support இல்லாதவர். மு.க. வேறு யாரை தலை தூக்க விட்டார்? தவறாமல் நடக்கும் திமுக உள் தேர்தலில் கடைசியாக யார் கருணாநிதிக்கு எதிராக போட்டியிட்டார்கள்??
VSK--
நீர் சரியான முந்திரிக்கொட்டை. கட்சிக்கு எதிராக தயானிதி செயற்பட்டார் என்ற நம்பகமான செய்தி கிடைத்த பின்னர்தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. தெரியாத விசயத்தில் அவசரப்பட்டு கருத்து சொல்வது உமக்கு பொழைப்பா போச்சு.
புள்ளிராஜா
//
இதில் எத்தனை பேரின் கருத்தை கேட்டுவிட்டு தயாநிதியை மத்திய அமைச்சராக்கினார் கருனாநிதி ?
//
அதெல்லாம் நீ பேசக்கூடாது ஏன் பேசற ஏன் பேசுற
Post a Comment