.

Sunday, May 13, 2007

தயாநிதி பதவி விலகினார்



- தினமலர்

தனது பதவி விலகல் கடிதத்தை பிரதமருக்கு அனுப்பி வைத்தார்.

Union IT and Communication Minister Dayanidhi Maran sent in his resignation to Prime Minister Manmohan Singh on Sunday night hours after a high-level committee of the party decided to withdraw him from the Union Cabinet.

- CNN IBN

17 comments:

gulf-tamilan said...

good for dmk.bad for sun tv.!!!

சிவபாலன் said...

கலைஞர் தயாநிதிக்கு கருனை காட்டி இருக்க வேண்டும். குறைந்தது முரசொலி மாறனினின் கட்சிப் பணிக்காகவாவது.

gulf-tamilan said...

good for dmk.bad for sun tv.!!!

சிவபாலன் said...

Dayanidhi Maran resigns from Union Cabinet

Communication Minister Dayanidhi Maran has resigned from the Union Cabinet in the wake of a showcause notice issued against him by the DMK.

- NDTV

வெற்றி said...

/* கலைஞர் தயாநிதிக்கு கருனை காட்டி இருக்க வேண்டும். குறைந்தது முரசொலி மாறனினின் கட்சிப் பணிக்காகவாவது. */

சிவபாலன், அண்ணன் வைகோ அவர்கள் மாறனை விட பல மடங்கு தி.மு.கவிற்காக உழைத்தவர். உங்களுக்கே நன்றாகத் தெரியும். தி.மு.கவின் சில வெற்றிகளுக்கு அண்ணன் வைகோ அவர்கள் காரணம் என்பதை கலைஞர் அவர்களே மறுக்கமாட்டார்கள் என நம்புகிறேன்.
மாறனுக்கு கருணை காட்டினால், அவர் பேரனுக்கு ஒரு நீதி அண்ணன் வைகோ அவர்களுக்கு ஒரு நீதி என பாரபட்சம் காட்டினார் கலைஞர் எனும் அவப்பெயருக்கு ஆளாக நேரிடும்.
ஆகவே கலைஞர் செய்தது சரியே.

ஒருவர் கட்சியின் விதிமுறைகளை மீறும் போது அது யாராக இருப்பினும் தண்டனையை அனுபவித்தே ஆக வேணும்.

இனி கலைஞர் அவர்கள் அவரது மகன் அழகிரி விடயத்தில் எப்படி நடந்து கொள்கிறார் என்பதை பலரும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக மதுரையில் தினகரன் ஊழியர்கள் கொல்லப்பட்டதற்கு காரணமாக இருந்தவர்கள் யாராக இருப்பினும், அழகிரியாக இருப்பினும் சட்டத்தின் முன் நிறுத்தி தகுந்த தண்டனை அளிக்கப்பட வேணும். அம்பை நோகாமல் எய்தவர்களும் தண்டிக்கப்பட வேண்டும். தினகரன் ஊழியர்கள் கொலையில் அழகிரியே மூலகர்த்தா என பலரும் நம்புகிறார்கள்.

தமிழக அரசின் தலையீடு இல்லாமல் நீதியான விசாரனைகள் மேற்கொண்டு மூலகர்த்தாக்களுக்கும் தண்டனை வழங்கப்பட வேணும். இந்த விசாரனையில் கலைஞர் நடுநிலையுடன், அழகிரியின் தந்தை என்று இல்லாமல், தமிழகத்தின் முதல்வர், தி.மு.கவின் தலைவர் எனும் நிலையில் இருந்து செயற்பட வேணும். பார்ப்போம் என்ன நடக்கப் போகிறது என்று.

VSK said...

பாவங்கள் செய்யத் தொடங்கும் போது, மேலும் மேலும் கூடிக் கொண்டேதான் போகும்.

அப்பட்டமாகத் தெரிந்த அழகிரி பற்றி ஒரு தீர்மானமும் கிடையாது.

சன் டி.வி. உரிமையாளரின் தம்பி என்ற ஒரே காரணத்திற்காக தயா பலி ஆக்கப்பட்டார்.
இந்தியா ஒரு முக்கியமான துறையின் திறமையான அமைச்சரை இழந்திருக்கிறது.

முடிவான முடிவு வர கதை இப்படித்தான் செல்ல வேண்டும்!

Anonymous said...

ஒரு திறமையான இளம் அமைச்சரை நாடு இழந்துவிட்டது.

அதேசமயம் ஒரு ரௌடி அரசியல்வாதியை சப்போர்ட் செய்திருக்கும் திமுகவை வன்மையாகக் கண்டிக்கவேண்டும்.

Anonymous said...

//சன் டி.வி. உரிமையாளரின் தம்பி என்ற ஒரே காரணத்திற்காக தயா பலி ஆக்கப்பட்டார்.//
டாட்டா வச்சாருல்ல ஆப்பு!

நியோ / neo said...

>> தி.மு.கவின் சில வெற்றிகளுக்கு அண்ணன் வைகோ அவர்கள் காரணம் என்பதை கலைஞர் அவர்களே மறுக்கமாட்டார்கள் என நம்புகிறேன். >>

வெற்றி போன்ற ஈழத்தமிழர்கள் இது போல உளறாமல் இருப்பது நலம் பயக்கும்.

முடியுமானால், விடுதலைப் புலிகளை ஆதரித்தமைக்காக பல தமிழறிஞர்கலை சிறையிலடைத்த பாப்பாத்தி செயலலிதாவின் செருப்படி சென்று வீழ்ந்தது ஏன் - என்று கோபாலசாமியிடம் விளக்கம் கேட்கலாம் - அல்லது சும்மா இருக்கலாம்.

திமுக விவகாரத்தில் தேவையில்லாமல் திரிக்கப்பட்ட செய்திகளைத் தெரிவிக்க வேண்டாம் - என்று பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

கலைஞர் 1982-இல் பிரபாகரனையும், உமா மகேஸ்வரனையும் - இலங்கை அரசிடம் இந்தியா ஒப்படைக்காமல் செய்து - அவர்கள் உயிரைக் காத்தருளியவர் என்ற விடயத்தையும் இப்போது நினைவுபடுத்துகிறேன்.

திமுக, கலைஞர் விடயத்தில் எக்குத்தப்பாக பேசினால் - அதனால் உண்டாகும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Anonymous said...

//அண்ணன் வைகோ அவர்கள் மாறனை விட பல மடங்கு தி.மு.கவிற்காக உழைத்தவர்.//

வெற்றி கண்டசுவாமி "கருவின் குற்றம்' கவிதை தெரியுமா?

VSK said...

மதுரை நிகழ்வுக்கு சட்டப்படி எடுக்க வேண்டிய நடவடிக்கை எடுக்கப்படும்-- கருணாநிதி

சற்றுமுன் செய்தி:
"தயாநிதி மாறன் பதவி நீக்கம் கோரி மத்திய அரசுக்கு தி.மு.க. சிபாரிசு!"

"தயாநிதி பதவி விலகினார்!"

மதுரை நிகழ்வுக்கு சட்டப்படி செய்ய வேண்டிய நடவடிக்கையை கருணாநிதி எடுத்து விட்டார்!

வாழக ஜனநாயகம்!

:))))))))))0

Anonymous said...

நியோ.
சரியான பதில்.
பிரபாகரனின் உயிரே கலைஞர் போட்ட பிச்சை என்பது ஈழச் சகோதரர்களுக்கு ஞாபகம் இருக்க வேண்டும்.

Anonymous said...

கொடுத்தவணே எடுத்துக்கொன்டாண்டி................!!!!!!!!!

முதல்வர் கருணாநிதி‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ ‍
மே 10, 2007

நடைபெற்ற அந்த வன்முறை சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதுடன் இவற்றுக்கு யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் மீது கண்டிப்பாக சட்டப்படியான நடவடிக்கை இந்த அரசினால் எடுக்கப்படும் என்ற உறுதியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்....

நடைபெற்ற செயலுக்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். தாக்குதல் சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன



சென்னை, மே 14:


சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தி.மு.க. நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதற்காக தயாநிதி மாறனை மத்திய அமைச்சர்

பதவியிலிருந்து நீக்கும் முடிவு இரவு 8 மணிக்கு எடுக்கப்பட்டது.
மத்திய அமைச்சர் பதவியை தயாநிதி மாறன் ஞாயிற்றுக்கிழமை இரவு ராஜிநாமா செய்தார். உதகமண்டலத்தில் குடும்பத்தினருடன் ஓய்வு எடுக்கும் அவர் ராஜிநாமா

கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பினார்.

இதையடுத்து இரவு 10.30 மணி அளவில் ராஜிநாமா முடிவை அறிவித்தார் தயாநிதி மாறன்.

கட்சியிலிருந்தும் நீக்க நோட்டீஸ்: கட்சிக் கட்டுப்பாட்டைச் சீர்குலைக்கும் வகையில் தயாநிதி மாறன் செயல்படுவதால் அதுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்கும் நோட்டீஸ் அனுப்புவதென்றும்,

மாயாவி said...

திமுக ஒரு இளம் அமைச்சரை மட்டும் இழக்கவில்லை அடுத்த தேர்தலில் தனது ஆட்சியை இழக்க இப்பொழுதே
தயாராகிறது.

முதலமைச்சர் கருணாநிதி,
தினகரன்/சன் டிவி தாக்குதலுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கிறார் என்று பார்ப்போம்.

(திமுக அமைச்சர்களிளேயே சிலருக்கு அழகிரியின் இந்த செயல் பிடிக்கவில்லை, ஆனால் வெளியே சொல்லமுடியாமல் இருக்கிறார்கள் என்று ஒரு உள்வீட்டு தகவல்)

Anonymous said...

//கலைஞர் நடுநிலையுடன், அழகிரியின் தந்தை என்று இல்லாமல்//

கனவு காணுங்கள் என்று ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் சொன்னது இதுவல்ல!

Anonymous said...

//தி.மு.கவின் சில வெற்றிகளுக்கு அண்ணன் வைகோ அவர்கள் காரணம் என்பதை கலைஞர் அவர்களே மறுக்கமாட்டார்கள் என நம்புகிறேன்//

ஏற்கக் கூடிய கருத்து

//கலைஞர் 1982-இல் பிரபாகரனையும், உமா மகேஸ்வரனையும் - இலங்கை அரசிடம் இந்தியா ஒப்படைக்காமல் செய்து - அவர்கள் உயிரைக் காத்தருளியவர் என்ற விடயத்தையும் இப்போது நினைவுபடுத்துகிறேன்.//

அவ்வாறு ஒப்படைக்க நினைத்திருந்தால் அதற்கான பலனை அவர் அடைந்திருப்பார்

//திமுக, கலைஞர் விடயத்தில் எக்குத்தப்பாக பேசினால் - அதனால் உண்டாகும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். //

உண்மையை சொன்னால் உறைக்கத்தான் செய்யும்...சும்மா மிரட்டுறத விட்டுட்டு ஒழுங்கான கருத்த எழுதும்

Anonymous said...

மூன்று அப்பாவி மகன்கள் உயிர்கள் போனால் பரவாயில்லை, தன் ஒரு மகனைக் காக்க வேண்டும் என்று நினைத்தது சரியா?

கன்றைக் கொன்றான் என்பதற்காக தன் மகனைத் தேர்க்காலில் கொன்ற மனுநீதிச் சோழன் தமிழன் என்றால், தற்போது ஆட்சியில் இருக்கும் இவர்களும் தமிழர்களா?

பேரு தான் பெத்த பேரு ‍ ‍தமிழினத் தலைவர்.

'தன் வினை தன்னைச்சுடும்' என்பது இவர்களுக்கு தான் சாலப்பொருந்தும்!


//உண்மையை சொன்னால் உறைக்கத்தான் செய்யும்...சும்மா மிரட்டுறத விட்டுட்டு ஒழுங்கான கருத்த எழுதும் //

அசத்தல் பதிலுங்க!!

அன்புடன்,
நா.அனந்த குமார்

-o❢o-

b r e a k i n g   n e w s...