.

Sunday, May 13, 2007

ச: ஜனாதிபதி பதவிக்கு ஷிண்டே: காங்-கம்யூ. கட்சிகள் முடிவு

புதுடெல்லி, மே.13-

உத்தரபிரதேசம் சட்டமன்ற தேர்தலில் மாயாவதி கட்சி அதிக இடங்களை பிடித்து இருப்பதால் ஜனாதிபதி தேர்தலில் பாரதீய ஜனதா சமாஜ்வாடி கட்சி ஓட்டுகள் வெகுவாக குறைந்து உள்ளன. இதனால் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ஜனாதிபதி தேர்தலில் எளிதாக வெற்றி பெறும் நிலை ஏற்பட்டு உள்ளது.

காங்கிரஸ் கூட்டணி சார்பில் யாரை நிறுத்தலாம் என்பது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் கூட்டணி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதை தொடர்ந்து சோனியா காந்தி கூëட்டணி தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

நேற்று சோனியா கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களை தனது வீட்டுக்கு அழைத்து பேசினார். இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் பரதன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தலைவர் சீத்தாராம் யெச் சூரி, பார்வர்டு பிளாக் கட்சி பொதுச்செயலாளர் விஸ் வாஸ் ஆகியோர் சோனியாவை சந்தித்து பேசினார்கள்.

அப்போது சிலருடைய பெயரை முன்வைத்து ஆலோசிக்கப்பட்டது. மத்திய மந்திரிகள் பிரணாப் முகர்ஜி, சுஷில்குமார் ஷிண்டே, ஏ.கே.அந்தோணி மற்றும் சரண்சிங், சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, காந்தியவாதி நிர்மலா தேஷ் பாண்டே ஆகியோரில் ஒருவரை நிறுத்தலாம் என்று அப்போது ஆலோசித்தனர்.

இதில் சுஷில் குமார் ஹிண்டேவுக்கு கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவு அளிக்க முன்வந்ததாக தெரிகிறது. மராட்டிய முன்னாள் முதல் மந்திரியாக இருந்துள்ளார். கவர்னர் பதவியிலும் இருந்துள்ளார். எனவே பதவிக்கு பொருத்தமாக இருப்பார் என்று பேசப்பட்டது. மேலும் இவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர். இதனால் மாயாவதி உள்பட எதிர் அணியில் உள்ள கட்சிகளும் அவருக்கு ஆதரவு அளிக்க முன்வரும் என்று கருதுகிறார்கள். எனவே சுஷில் குமார் ஷிண்டேயை நிறுத்துவது என்ற முடிவுக்கு வந்தனர்.

மற்ற கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு இறுதி முடிவு அறிவிக்கின்றனர்.

~மாலைமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...