.

Thursday, August 2, 2007

வடதுருவத்தில் ரஷியா தனது கொடியை நாட்டியுள்ளது

வடதுருவத்தில் வடபுள்ளிக்கு கீழே உள்ள ஆர்க்டிக் பெருங்கடலின் அடிப்பகுதியில் ரஷ்யக் கொடியை நடுவதற்காக சென்ற இரண்டு ரஷ்ய நீர் முழ்கிக் கப்பல்களில் ஒரு கப்பல் தற்போது கடலின் மேல் மட்டுத்துக்கு வந்து விட்டதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆய்வாளர்களை ஏற்றிக் கொண்டு கடலுக்குக் கீழே 4 ஆயிரம் மீட்டருக்கும் கீழ் சென்ற இந்த இரண்டு நீர் முழ்கிக் கப்பல்களும், ஆபத்து மிக்க தம்முடைய பயணத்தை முடித்த பிறகு - வடதுருவத்தில் இருக்கும் பனிப் பாறைகளுக்கு இடையேயுள்ள சிறிய இடைவெளி வழியாக
கடலின் மேலேயுள்ள ஆய்வுக் கப்பலை வந்தடைந்துள்ளன.

எண்ணெய் வளம் அதிகம் இருப்பதாக நம்பப்படும் இந்தப் பகுதி மீது ரஷ்யா கோரி வரும் உரிமையை வலுப்படுத்துவதற்காக இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வேறு சில நாடுகளும் இப் பகுதிக்கு உரிமை கோரியுள்ளன.

முந்தைய செய்தி: கனடா உரிமை பாராட்டும் கடற்பகுதி

BBC Tamil

BBC NEWS | Europe | Russia plants flag under N Pole
Russian polar expedition moves to bolster Moscow's claim to the North - International Herald Tribune: "About 100 scientists aboard the Akademik Fyodorov are looking for evidence that the Lomonosov Ridge - a 1,995-kilometer, or 1,240-mile, underwater mountain range that crosses the polar region - is a geologic extension of Russia, and therefore can be claimed by it under the UN Convention on the Law of the Sea.

Denmark hopes to prove that the Lomonosov Ridge is an extension of the Danish territory of Greenland. Canada, meanwhile, plans to spend $7 billion, or €5.11 billion, to build and operate up to eight Arctic patrol ships in a bid to assert its sovereignty."

மணிப்பூரில் பத்திரிகைகளை பிரசுரிக்க மறுப்பு

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், கிளர்ச்சிக்காரர்களின் அச்சுறுத்தலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக அந்த மாநில பத்திரிகையாளர்கள் தமது பத்திரிகைகளை பிரசுரிக்க மறுத்துள்ளனர்.

உள்ளூர் ஆங்கிலப் பத்திரிகையயான சங்காய் எக்ஸ்பிரஸ் (Sangai Express) நாளேட்டின் ஆசிரியருக்கு தபாலில் கைக்குண்டு ஒன்று கிடைக்கப்பெற்றதை அடுத்து இந்த எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

கங்லேய்பெக் மக்கள் புரட்சிகர இராணுவம் (Peoples Revolutionary Army of Kangleipak (Prepak)) என்னும் பிரிவினைவாதக் கிளர்ச்சிக்குழுவின் ஒரு பிரிவினரே இந்தக் கைக்குண்டை தனக்கு அனுப்பியதாக அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் தெரிவித்துள்ளார். அந்தக் குண்டு வெடிக்கவில்லை. போட்டிக்குழு ஒன்றின் அறிக்கை ஒன்றைப் பிரசுரித்தால் நடவடிக்கை எடுப்போம் என்று அந்தக் குழு தன்னை மிரட்டியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

BBC Tamil

BBC NEWS | South Asia | Papers shut in Indian north-east
NDTV.com: Imphal: Militant attack on media house
The Telegraph - Calcutta: Grenade gift sparks media shutdown

தலைநகர் தில்லியில் பலத்தமழை: சாலைகளில் வெள்ளப் பெருக்கு

பருவமழையின் தீவிரத்தால் தில்லி தடுமாறுகிறது. கடந்த இரு நாட்களாக பெய்த 166.6மிமீ மழையால் சாலைகளில் வெள்ளப் பெருக்கெடுத்து பயணிகள் போக்குவரத்து பாதிக்கப் பட்டுள்ளது. கிழக்கு தில்லியில் 30க்கும் மேலான இரயில்கள் மழைநீரால் தடைபட்டு நிற்கின்றன. ஹௌரா,புவனேஸ்வர்,ராஞ்சிக்கான இராஜதானி விரைவுவண்டிகளும் இதில் அடக்கம்.
NDTV.com: Delhi reels under heavy waterlogging

நடிகர் சஞ்சய் தத் புனெ சிறைக்கு மாற்றம்

தான் மும்பை சிறையிலேயே வைக்கப் படவேண்டும் என்ற தன் கோரிக்கையை சஞ்சய் தத் விலக்கிக் கொண்டதை யடுத்து அவர் புனெயின் எரவாடா சிறைக்கு மாற்றப் படுவார்.

Dutt to be shifted to Pune's Yerawada jail

தேமுதிக ஊழல் மதவாதம் அல்லாத பிற கட்சிகளுடன் கூட்டணி!

நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக ஊழல் மதவாதம் அல்லாத பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது குறித்து பரிசீலிப்போம் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

தனது தொகுதியான விருத்தாச்சலத்திற்கு விஜயகாந்த் சென்றார். அங்கு தனது எம்.எல்.ஏ அலுவலகத்தில் பொதுமக்களை சந்தித்து புகார் மனுக்களைப் பெற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் விஜயகாந்த் பேசுகையில், இப்போதைக்கு யாருடனும் கூட்டணி வைக்கும் எண்ணம் இல்லை. எதிர்காலத்தில், லோக்சபா தேர்தலில் ஜாதி, மதம், ஊழலில் சம்பந்தப்படாத கட்சிகளுடன் கூட்டணி வைப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.
தமிழகத்தில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்கும் எண்ணம் தேமுதிகவுக்குக் கிடையாது. கூட்டணி இல்லாமல் கட்சி வளர்க்க முடியாதா, என்ன. காந்தி தனி ஆளாக இருந்து சுதந்திரம் வாங்கித் தரவில்லையா?. புத்தர் தனி ஆளாக இருந்து மதம் வளர்க்கவில்லையா?
எங்களின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. மக்கள் எங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். மதுரை இடைத் தேர்தலில் எங்களுக்கு நல்ல வாக்கு கிடைத்துள்ளது. இது மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.
எனது தொகுதி பிரச்சினைகள் தொடர்பாக முதல்வர் கருணாநிதியை சந்திப்பேன். எப்போது வேண்டுமானாலும் இந்த சந்திப்பு இருக்கலாம் என்றார் விஜயகாந்த்.

மிஸ்ஸிசிப்பி பாலம் இடிந்து 7 பேர் மரணம்


படம் நன்றி: யாஹூ ( Pic: Yahoo)
மிஸ்ஸிசிப்பி நதி மீது 40 வருடங்களாக இயங்கிவந்த நெடுஞ்சாலை பாலமொன்று இடிந்ததில் 7 பேர் வரை மரணமடைந்திருக்கலாம் எனவும் 60 பேர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப் பட்டிருப்பதாகவும் ரி டிஃப் தளத்து செய்தி கூறுகிறது. எட்டு வழிப்பாதைகளைத் தாங்கிய இந்த பாலம் 500 அடி நீளமானது. 65 அடி உயரத்தில் அமைந்திருந்த இந்தப் பாலத்தில் மராமத்து வேலைகள் நடந்து வந்தன. அதிக பளு தாங்காமல் இடிந்து விழுந்ததாக தெரிகிறது.

நண்பர், சக பதிவர் ஆசிப் மீரான் மனைவி மறைவு

சற்றுமுன் குழுவின் உறுப்பினரும் வலையுலகில் பிரபல பதிவருமான ஆசிப் மீரான் அவர்களின் மனைவி சென்னையில் காலமானார். ஆசிப் மீரானுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சற்றுமுன் குழு, வாசகர்கள் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஆசிப் மீரானை தொடர்புகொள்ள..

109, Roal Victorian Apartments,
G1, 4th West Street,
Verapandian Nagar,
Choolaimedu,
Chennai 94

தொ.பே: 98406 00846

பிறந்த குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிய பெண் கைது

மும்பை புறநகர் பகுதியில் பிறந்த குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசியப் பெண் கைது செய்யப்பட்டார். மனிஷா சரோஜா (25) என்பவர் பிறந்து ஒரு நாளே ஆன தனது குழந்தையை பொது குப்பைத் தொட்டியில் வீசியுள்ளார். அந்தக் குழந்தையின் உடலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

பொருளாதார மற்றும் சமூக பிரச்னைகளை காரணங்களுக்காக குழந்தையை புறக்கணித்ததாகவும் தனக்கு அந்த குழந்தை வேண்டாம் என்றும் சரோஜா கூறியுள்ளார் என காவல்துறை துணை ஆணையர் சிவாஜி போத்கே கூறியுள்ளார்.

தினமணி

Mother of 'stabbed' baby traced - Mumbai - Cities - The Times of India
Mother of abandoned child arrested :: Indian Express

-o❢o-

b r e a k i n g   n e w s...