பருவமழையின் தீவிரத்தால் தில்லி தடுமாறுகிறது. கடந்த இரு நாட்களாக பெய்த 166.6மிமீ மழையால் சாலைகளில் வெள்ளப் பெருக்கெடுத்து பயணிகள் போக்குவரத்து பாதிக்கப் பட்டுள்ளது. கிழக்கு தில்லியில் 30க்கும் மேலான இரயில்கள் மழைநீரால் தடைபட்டு நிற்கின்றன. ஹௌரா,புவனேஸ்வர்,ராஞ்சிக்கான இராஜதானி விரைவுவண்டிகளும் இதில் அடக்கம்.
NDTV.com: Delhi reels under heavy waterlogging
Thursday, August 2, 2007
தலைநகர் தில்லியில் பலத்தமழை: சாலைகளில் வெள்ளப் பெருக்கு
Posted by மணியன் at 8:02 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
1 comment:
தேசிய தகவல் மையத்தில் வெள்ள நீர்: மத்திய அரசு இணைய தளங்கள் பாதிப்பு
புதுதில்லி, ஆக. 3: மத்திய அரசின் இணைய தளங்களை நிர்வகிக்கும் நிறுவனமாக தேசிய தகவல் மையம் (நிக்) செயல்பட்டு வருகிறது.
தில்லியில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தில்லியில் உள்ள தேசிய தகவல் மையத்தில் புதன்கிழமை இரவு வெள்ள நீர் புகுந்தது.
மையத்தில் உள்ள கம்ப்யூட்டர், சர்வர்கள், இணைய தள கேபிள்கள், ஜெனரேட்டர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் புகுந்ததால் இவற்றின் பணிகள் பாதிக்கப்பட்டன.
குடியரசுத் தலைவர் பிரதமர் அலுவலகங்கள், நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம், பி.ஐ.பி. அலுவலகம், பாஸ்போர்ட் அலுவலகங்களில் இணைய தளச் சேவைகள் கிடைக்காததால் அலுவலகப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
Post a Comment