.

Thursday, August 2, 2007

தேமுதிக ஊழல் மதவாதம் அல்லாத பிற கட்சிகளுடன் கூட்டணி!

நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக ஊழல் மதவாதம் அல்லாத பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது குறித்து பரிசீலிப்போம் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

தனது தொகுதியான விருத்தாச்சலத்திற்கு விஜயகாந்த் சென்றார். அங்கு தனது எம்.எல்.ஏ அலுவலகத்தில் பொதுமக்களை சந்தித்து புகார் மனுக்களைப் பெற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் விஜயகாந்த் பேசுகையில், இப்போதைக்கு யாருடனும் கூட்டணி வைக்கும் எண்ணம் இல்லை. எதிர்காலத்தில், லோக்சபா தேர்தலில் ஜாதி, மதம், ஊழலில் சம்பந்தப்படாத கட்சிகளுடன் கூட்டணி வைப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.
தமிழகத்தில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்கும் எண்ணம் தேமுதிகவுக்குக் கிடையாது. கூட்டணி இல்லாமல் கட்சி வளர்க்க முடியாதா, என்ன. காந்தி தனி ஆளாக இருந்து சுதந்திரம் வாங்கித் தரவில்லையா?. புத்தர் தனி ஆளாக இருந்து மதம் வளர்க்கவில்லையா?
எங்களின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. மக்கள் எங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். மதுரை இடைத் தேர்தலில் எங்களுக்கு நல்ல வாக்கு கிடைத்துள்ளது. இது மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.
எனது தொகுதி பிரச்சினைகள் தொடர்பாக முதல்வர் கருணாநிதியை சந்திப்பேன். எப்போது வேண்டுமானாலும் இந்த சந்திப்பு இருக்கலாம் என்றார் விஜயகாந்த்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...