.

Tuesday, March 20, 2007

இலங்கையில் சிறுபான்மையினருக்கு எதிரான் வன்முறைகள் மிக அதிக அள்வில் அதிரித்துள்ளது

சோமாலியா, ஈராக் மற்றும் சூடான் ஆகிய நாடுகள், உலகில் சிறுபான்மையினர் வசிக்க மிகவும் ஆபத்தான நாடுகள் என்று லண்டனில் இருந்து செயல்படும் மனித உரிமை அமைப்பு ஒன்று கூறியுள்ளது. இனக்குழுக்களுக்கு இடையேயான பெரும் அளவிலான வன்முறைகள் சோமாலியாவில் மீண்டும் நடைபெற வாயப்புள்ளதாக சிறுபான்மையினர் உரிமைகளுககான சர்வதேச குழு என்ற அந்த அமைப்பு கூறியுள்ளது. சூடானின் டார்பூர் பகுதியில் நடக்கும் வன்முறைகளை நிறுத்தப்படாததற்கு, சர்வதேச சமூகம் மற்றும் சூடான் அரசை, இந்த நிறுவனம் கண்டித்துள்ளது.

அதே நேரம், இலங்கையில்தான் சிறுபான்மையினர்களுக்கு எதிரான வன்முறைகள் மிக அதிகஅளவில் அதிகரித்துள்ளதாக அந்த தன்னார்வ நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இலங்கையில் அரசுக்கும் - விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடக்கும் சண்டையில் தமிழர்களும் முஸ்லீம்களும் குறிவைக்கப்படுகிறார்கள் என்று சிறுபான்மையினர் உரிமைகளுக்கான சர்வதேசக் குழு தெரிவித்துள்ளது.

BBC NEWS | Special Reports | Somalia tops minority threat list: "Somalia has overtaken Iraq as the world's most dangerous country for minority groups, a study has found. Sudan, Afghanistan and Burma followed in the global survey by the Minority Rights Group International (MRG)."

ஏமாற்றும் ஏர் டெக்கான் ( Air Deccan)

ஏர் டெக்கான் நிறுவனம் பயனிகளை எவ்வாறு ஏமாற்றுகிறது என்பது பற்றி CNN-IBN ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.

அதாவது, பயனிகளை தாமதமாக வந்ததாக கூறி விமானத்தில் பயனம் செய்ய அனுமதிக்காமல் ஏமாற்றுவதாக இந்த செய்தியில் குறிபிடப்பட்டுள்ளது.

முழு செய்திக்கு இங்கே செல்லுங்க..

அதன் வீடியோ இங்கே

சென்னையில் ரூ.200 கோடியில் ஐஐஐடி

தமிழகத்தில் ரூ.200 கோடி செலவில், இந்திய தகவல் தொழில்நுட்ப மையத்தை (ஐஐஐடி) நிறுவ மத்திய மனிதவள மேம்பாட்டு துறை முடிவு செய்துள்ளது. இந்த மையத்தில் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி குறித்த கல்வி கற்பிக்கப்படும். இந்த மையத்திற்காக, சென்னை அருகே 100 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.


புதிய மையத்தை நிறுவுவதற்காக வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் மேலக்கொட்டூர் கிராமத்தில் 100 ஏக்கர் நிலத்தை ஐஐடி தேர்வு செய்துள்ளது. தமிழ்நாடு சங்கங்களின் சட்டம் 1957ன் கீழ், இந்திய வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்ப மையம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலக்கொட்டூரில் தேர்வு செய்யப்பட்டுள்ள 100 ஏக்கர் நிலத்தை ஐஐஐடி பெயருக்கு மாற்றித் தருமாறு, தமிழக அரசுக்கு சென்னை ஐஐடி கடிதம் எழுதியுள்ளது.

புதிதாக நிறுவப்படும், ஐஐஐடி மையத்தில் இளநிலை பட்ட வகுப்பில் 600 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். பாடத்திட்டத்தை வடிவமைக்க, சிறப்புக் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் தலைவராக கான்பூர் ஐஐடி இயக்குனர் சஞ்சய் ஜி.தாண்டே இருப்பார் என்றும், சென்னையில் அமைவதைப் போல், ஜபல்பூரிலும் ஐஐஐடியை நிறுவ, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை திட்டமிட்டுள்ளது என்றும் ஐஐடி வட்டாரங்கள் தெரிவித்தன.

சென்னை அருகே வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் அமைய இருக்கும் இந்த புதிய ஐஐஐடிக்கு, தகவல் தொழில்நுட்பச் சாலையுடன் இணைப்பு ஏற்படுத்தப்படும். மேலும், இந்த மையம் அமையும் பகுதியில் புதிய நகர் ஒன்றை உருவாக்க தமிழக அரசு திட்மிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சென்னையில் இருந்து மேலக்கொட்டூர் வழியாக மாமல்லபுரம் வரை, மின்சார ரயில்களை இயக்கவும் மத்திய அரசு திட்டம் தீட்டியுள்ளது.

தினகரன்

மர்மம் நிறைந்த பெர்முடா முக்கோணம்
தினகரன்

60 ஆண்டுகளாக மின்சாரம் காணாத தமிழக கிராமம்

தலைவர் அப்துல் கலாமின் சொந்த கிராமம் அருகே உள்ள குட்டிக் கிராமம் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக மின்சாரம் இன்றி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் அருகே உள்ளது முந்தல் முனை கிராமம். குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் சொந்த கிராமத்துக்கு அருகே இது உள்ளது.

இங்கு 80 குடும்பங்கள் வசிக்கின்றன. கடந்த 60 ஆண்டுகளாக இங்கு மின்சார வசதி கிடையாது. மேலும், சாலை, மின்சாரம், குடிநீர் போன்ற எந்த அடிப்படை வசதிகளும் கிடையாது. அதற்காக மனித உரிமை ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கோட்டாட்சியர் உள்பட வருவாய் அதிகாரிகள் முந்தல் முனை கிராமத்துக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது, அந்த மக்கள் வசிக்கும் பகுதி ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடமாக இருந்தது. இந்த இடத்தில் மக்கள் ஆக்கிரமித்து தாங்களாகவே வீடு கட்டிக்கொண்டனர். இதனால், இங்கு அடிப்படை வசதிகள் செய்து தரமுடியவில்லை.

இதுகுறித்து பாம்பன் ஊராட்சி தலைவர் ஹனிபா கூறுகையில், முந்தல் முனையில் வசிப்பவர்கள் இடத்திற்கான பிமெமோ ரசீது, வீட்டுவரி ரசீது போன்ற எதுவும் இல்லாமல் குடும்ப அட்டை மட்டும் வைத்துள்ளார்கள். இவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்வதில் பிரச்னை இருக்கிறது. இடப்பிரச்னை தொடர்பாக தேவஸ்தானத்திடம் கோட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் பேச உள்ளனர் என்றார்.


தினகரன்

சிறப்பு பொருளாதார மண்டலங்கள் சென்னை மண்டலம் சாதனை

சிறப்பு பொருளாதார மண்டல சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு உருவாக்கப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலங்களிலேயே சென்னை பிளக்ஸ்ட்ரானிக்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளது என மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் மொத்தம் 63 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளன. இவை கடந்த ஆண்டு பிப்ரவரி வரை ரூ.21 ஆயிரத்து 631 கோடிக்கு பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளன. இன்றுவரை இம்மண்டலங்களில் பல்வேறு நிறுவனங்கள் ரூ.13,435 கோடி முதலீடு செய்துள்ளன.2005-06ம் ஆண்டில் இம்மண்டலங்கள் ரூ.22 ஆயிரத்து 309 கோடியை ஏற்றுமதி வருமானமாக ஈட்டின.

சென்னை பிளக்ஸ்ட்ரானிக்ஸ் ஹார்டுவேர் மண்டலம் ரூ.6 ஆயிரத்து 901 கோடிக்கு ஹார்டுவேர் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ய உள்ளது. சிறப்பு பொருளாதார சட்ட அமலாக்கத்திற்குப் பிறகு உருவான இம்மண்டலம், நாட்டில் உள்ள 63 சிறப்பு பொருளாதார மண்டலங்களிலேயே ஏற்றுமதியில் முதலிடத்தைப் பிடிக்கும் என்று வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

- தினகரன்

இந்தியாவில் எந்த நேரத்திலும் பறவைக்காய்ச்சல் தாக்கலாம்

இந்தியாவில் பறவைக் காய்ச்சல் நோய் எந்த நேரத்திலும் பரவலாம் என மத்திய வேளாண் துறை இணை அமைச்சர் காந்திலால் புரியா, நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் மியான்மரில் கடந்த வாரம் பறவைக்காய்ச்சல் நோய் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பொதுவாக பறவைக்காய்ச்சல் நோய் ஒரு நாட்டிலிருந்து வேறு நாட்டுக்கு இடம் பெயரும் பறவைக் கூட்டங்களால் பரவுகிறது. தற்போது அண்டை நாடுகளில் பரவியிருப்பதால் இந்தியாவிலும் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அமைச்சர் கூறினார். இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க கால்நடை பராமரிப்பு ஆணையத்துக்கு உத்தரவிட்டதாக அமைச்சர் அறிவித்தார்.

- மாலை முரசு

இந்திய அணி தோற்றால் ரூ.6ஆயிரம் கோடி நஷ்டம்

இந்திய அணி சூப்பர் 8க்கு கூட நுழையாமல் வெளியேறினால் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தக நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்று கணிக்கப் பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பை அரை இறுதிவரை அநாசயமாக சென்று பிறகு இறுதி போட்டியை எளிதில் எட்டிவிடும், இந்தியாவில் உலககோப்பை ஜுரம் ஏப்ரல் 28ல் இறுதி போட்டி நடக்கும் நாள் வரை நீடிக்கும் என்று வர்த்தக நிறுவனங்கள் கணக்குப்போட்டன. எனவே உலககோப்பை பரபரப்பை வைத்து சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் வரை பிஸ்னஸ் செய்து விட அவைகள் திட்டமிட்டிருந்தன. அதற்கு ஏற்ப ஒவ்வொரு நிறுவனமும் பெரிய தொகையை முதலீடு செய்திருந்தன.

உலககோப்பையை வைத்து தங்கள் வர்த்தகத்தை பல மடங்கு பெருக்கிக் கொள்ளலாம் என்று கணக்குப் போட்ட நிறுவனங் கள் இப்போது முதலுக்கே மோசம் வந்து விடுமோ என்று கலங்கி நிற்கின்றன.

- மாலை மலர்

'தமிழகத்தில் இருந்து ரூ.300 கோடி கைத்தறி துணி ஏற்றுமதி'

தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு இந்த ஆண்டில் கைத்தறி துணி ஏற்றுமதி ரூ.300 கோடியை எட்டும் என்று மாநில நிதியமைச்சர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு இந்த ஆண்டில் கைத்தறி துணி ஏற்றுமதி ரூ.300 கோடியை எட்டும் என்றும், ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருவாயின் வாயிலாக நெசவாளர்கள் துயர் துடைக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

கையால் நெசவு செய்யப்பட்டது என்ற முத்திரையுடன் அமெரிக்கா போன்ற நாடுகளில் விற்கப்படும் தமிழகத்தின் கைத்தறி துணிகளுக்கு அதிக வரவேற்பு உள்ளதாகத் தெரிவித்த அவர், ஒருங்கிணைந்த ஏற்றுமதி முறையில் கைத்தறி துணிகளின் வணிகத்தை மேம்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.


Yahoo - Tamil

5 வது நாளாக முடங்கியது பாராளுமன்றம்

நந்திகிராம பிரச்சனை தொடர்பாக எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்றம் தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்றும் முடங்கியது.

Yahoo - Tamil

முன்னாள் ஈராக் துணை அதிபர் இன்று தூக்கிலிடப்பட்டார்

ஈராக்கின் முன்னாள் துணை அதிபர் தாஹா யாசின் ரமதான் இன்று தூக்கிலிடப்பட்டார்

தனது பதவி காலத்தின்போது 1982-ல் நூற்றுகணக்கான ஷியா பிரிவு முஸ்லீம்களை துஜைல் பகுதியில் கொன்ற வழக்கில் ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு அண்மையில் தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது.

இந்த வழக்கில் தொடர்புடைய சதாமின் நெருங்கிய நண்பரும், முன்னாள் துணை அதிபருமான தாஹா யாசின் ரமதானுக்கும் கடந்த மாதம் 12-ம் தேதி தூக்குத்தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது.


மேலும் விவரங்களுக்கு

பார்க்லே வங்கி ஏபிஎன் ஆம்ரோவுடன் இணையுமா?

பிரிட்டனின் மூன்றாவது பெரிய வங்கியான பார்க்லே வங்கி தன் போட்டியாளரான ஏபிஎன் ஆம்ரோ வங்கியுடன் இணைவதற்கானப் பேச்சுக்களை துவங்கியிருப்பதாக நேற்றிரவு வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து மற்ற வங்கிகளும் பார்க்லேயை 'எடுத்துக் கொள்ள' ஆர்வம் காட்டலாம் என இந்த கார்டியன் செய்தி துண்டு கூறுகிறது

கவாஸ்கர் ஹூக்ஸ் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோரினார்

ஆஸ்திரேலியாவின் மைதானநடத்தையை குறைகண்ட சூட்டில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மறைந்த டேவிட் ஹூக்ஸை குறிப்பிட்டது தேவையற்றதும் பொருத்தமற்றதுமாகும் என கவாஸ்கர் அவரது குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோரினார்.

இது பற்றி..The Hindu News Update Service

பாக். கிரிக்கெட் தேர்வுக்குழுவினர் பதவி விலகினர்

நடக்கும் உலகக்கோப்பை பந்தயத்தில் முதல் சுற்றிலேயே வெளியேறியதை அடுத்து பாகிஸ்தானின் மூவரடங்கிய தேர்வுக் குழு பதவி விலகுவதாக குழுத் தலைவர் வாசிம் பாரி இன்று கூறினார்.

இதுபற்றி மேலுமறிய:| Reuters

துபாயில் தீவிபத்து


துபாய் ஷேக் ஸயத் சாலை வானுயர் கட்டிடங்கள் நிறைந்த பகுதி. அங்கு வளர்ந்துவரும் கட்டிடம் ஒன்றில் இன்று அதிகாலை பெரும் தீவிபத்து ஏற்பட்டது. 29 தளம் கொண்ட இந்தக் கட்டிடத்தில் எவ்வாறு தீவிபத்து நிகழ்ந்ததென்று உடனடியான தகவல்கள் ஏதும் இல்லையென்றபோதும், ஆரம்ப அறிக்கைகளில் இந்த விபத்தில் எவ்ருக்கும் உயிர்ச்சேதம் இல்லையென்பது ஆறுதல் தரும் செய்தி. தீவிபத்து காலை அமீரக நேரம் 9 மணியளவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டபோதும், பரபரப்பான காலை நேரத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக துபாய் நகரின் போக்குவரத்து பெருமளவில் பாதிப்புக்குள்ளானது.

38 மயானங்களில் பணி புரியும் 195 வெட்டியான்கள் பணி நிரந்தரம்

சென்னை மாநகராட்சியின் 38 மயானங்களில் பணி புரியும் 195 வெட்டியான்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சியின் 2007-08 நிதி நிலை அறிக்கையில் மயான வெட்டியாங்களை சமூகரீதியாக மேம்படுத்துவதற்கான புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன்படி இவர்கள் இனி மயான உதவியாளர்கள் என அழைக்கப்படுவார்கள் என்றும் , இவர்களுக்கு புதிய சீருடை, காலணிகள் மற்றும் கையுறைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரவானிகளுக்கு நல வாரியம் அமைக்க கோரிக்கை

அரவானிகளுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் என்று அரசுக்கு தயாககேந்திரா மற்றும் அரவானிகள் முன்னேற்ற மறுவாழ்வு அறக்கட்டளை கோரியுள்ளது.

வரும் 31-ம் தேதி சென்னை அரவானிகள் முன்னேற்ற மறுவாழ்வு அறக்கட்டளை துவக்க விழா சென்னையில் ஹோட்டல் காஞ்சி மீனாட்சி ஹாலில் நடைபெறுகிறது.

மேலும்

கோவில் தேர் சக்கரத்தில் இருவர் பலி

திருவானைகாவல் தேரோட்டத்தில் தேர் நசுக்கி இருவர் பலி

திருச்சி : திருச்சியில் பிரசித்தி பெற்ற திருவானைகாவல் சம்புகேஸ்வரர் ஆலய பங்குனி தேரரோட்டம் இன்று நடந்தது.இதில் சுவாமி தேரில் வீதிஉலா வந்துகொண்டிருந்தார். அப்போது காலை 6.25 மணியளவில் வடக்கு தெரு திருப்புமுனை அருகே தேர் வந்தபோது தேர் சக்கரத்தில் சிக்கி திருச்சியை சேர்ந்த இந்திராணி ( 50) பலியானார். அவரை காப்பற்ற சென்ற விஜி (50) என்பவரும் சக்கரத்தில் நசுங்கி மரணமடைந்தனர். இதனையடுத்து தேர் நிறுத்தப்பட்டு சிறப்பு பூஜை செய்யபட்டது.

-தினமலர்

ரஷய சுரங்க விபத்தில் 61 பேர் பலி

ரஷ்யாவில் சுரங்கத்தில் வெடி விபத்து : 61 பேர் பலி

மாஸ்கோ : ரஷ்யாவின் தென் பகுதியான சைபீரியாவில் உள்ள கெமரோவோ பகுதியில் இருந்த நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு வெடித்ததால் 61 பேர் கொல்லப்பட்டனர். இதனை மாஸ்கோவில் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த சுரங்கத்தில் சிக்கி இருந்தவர்களில் இதுவரை 88 பேர் மீட்கப்பட்டருக்கிறார்கள். வெடி விபத்து நடந்த போது சுரங்கத்தில் 168 தொழிலாளர்கள் இருந்ததாகவும் இன்னும் பலர் மீட்கப்படாமல் இருக்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. மாஸ்கோ நேரப்படி திங்கள் காலை 10.30 க்கு இந்த வெடி விபத்து நடந்துள்ளது. இந்த விபத்து சம்பவத்தை கேள்விப்பட்ட ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் உடனடியாக அங்கு அமைச்சர் செர்ஜி சொய்குவை அனுப்பி வைத்தார். அங்கு இன்னும் சுரங்கத்தில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. அங்கு சிக்கி உள்ளவர்களின் முகங்கள் அடையாளம் தெரியாதபடி கருகி உள்ளதாக சொல்கிறார்கள்.

தினமலர்

நான்கு விக்கெட்டுகளை இழந்தது பெர்முடா

முதல் ஓவரை ஜாகிர்கான் வீச, துவக்க ஆட்டக்காரரான பிட்சர் எதிர்கொண்டார். ஓவரின் கடைசி பந்தில் போல்டு ஆக ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

இதையடுத்து அவுட்டர்பிரிட்ஜ்சுடன், பார்டன் ஜோடி சேர்ந்தார். ஏழாவது ஓவரை ஜாகிர்கான் வீச அவுட்டர்பிரிட்ஜ் எதிர் கொண்டு 6.2வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார்.ஆனால் 6.3 வது பந்தில் ஜாகிர் பந்து வீச்சில் கிளின் போல்டு ஆகி பரிதாபமாக வெளியேறினார்.


மூன்றாவது விக்கெட்டாக பார்டன் படலேனின் பந்துவீச்சில் LBW முறையில் 13 ஓட்டங்களுக்கு அவுட் ஆனார்.

நான்காவதாக கும்பளேவின் பந்துவீச்சில் ரோமைன் ரன் ஏதும் எடுக்காமல் LBW முறையில் அவுட் ஆனார்

முன்னதாக பேட் செய்த இந்தியா 413 ரன்களை எடுத்து வரலாறு படைததுள்ளது.

இதுவரை நடந்துள்ள உலக கோப்பை போட்டிகளில் இந்தியாதான் அதிகபட்ச ஸ்கோரை அடித்துள்ள பெருமையை தட்டிச் சென்றுள்ளது.


இன்றைய போட்டியில் 16 சிக்சர்களும், 31 பவுண்டரிகளும் அடித்து இந்தியர்கள் வெளுத்துள்ளனர். இந்தியா மீது எழுந்த பல்வேறு விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா அணி இன்று சிறப்பாக செயல்பட்டுள்ள்து.

மொத்தத்தில் இன்றைய போட்டி இந்திய ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது என்பதில் ஐயமில்லை.

- Yahoo Tamil

-o❢o-

b r e a k i n g   n e w s...