.

Tuesday, March 20, 2007

இந்திய அணி தோற்றால் ரூ.6ஆயிரம் கோடி நஷ்டம்

இந்திய அணி சூப்பர் 8க்கு கூட நுழையாமல் வெளியேறினால் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தக நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்று கணிக்கப் பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பை அரை இறுதிவரை அநாசயமாக சென்று பிறகு இறுதி போட்டியை எளிதில் எட்டிவிடும், இந்தியாவில் உலககோப்பை ஜுரம் ஏப்ரல் 28ல் இறுதி போட்டி நடக்கும் நாள் வரை நீடிக்கும் என்று வர்த்தக நிறுவனங்கள் கணக்குப்போட்டன. எனவே உலககோப்பை பரபரப்பை வைத்து சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் வரை பிஸ்னஸ் செய்து விட அவைகள் திட்டமிட்டிருந்தன. அதற்கு ஏற்ப ஒவ்வொரு நிறுவனமும் பெரிய தொகையை முதலீடு செய்திருந்தன.

உலககோப்பையை வைத்து தங்கள் வர்த்தகத்தை பல மடங்கு பெருக்கிக் கொள்ளலாம் என்று கணக்குப் போட்ட நிறுவனங் கள் இப்போது முதலுக்கே மோசம் வந்து விடுமோ என்று கலங்கி நிற்கின்றன.

- மாலை மலர்

14 comments:

சிவபாலன் said...

மணிகண்டன்

இந்த செய்தியை படித்தீர்களா?

சிறில் அலெக்ஸ் said...

அடடா..
நம்ம வீரர்களுக்கும் சில கோடிகள் நஷ்டமாகுமே அதுவும் இதுல சேர்ந்திருக்கா?
:)

மணிகண்டன் said...

இதுக்காகவாவது இந்தியா அரை-இறுதி வரைக்கும் போயிடும்னு நினைக்கிறேன் சி.பா :)

கிரிக்கெட்ல வீரர்கள் ஆடின காலம் போய் கோடிகள் விளையாட ஆரம்பிச்சிடுச்சு..

விஜயன் said...

கவலையே பட வேண்டாம். இந்தியா கண்டிப்பாக சூப்ப்ர் 8 க்கு 'எப்படியாவது' தகுதி பெறும்.

இப்பொழுதே 'அதைப்' பற்றிய வதந்திகள் உலா வருகின்றன.

'இதை' பெர்முடாவுடனான ஆட்டம் உறுதிப் படுத்துவது போல் சில சந்தேகங்கள் உள்ளன.

சிவபாலன் said...

விஜயன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

என்ன வதந்தி என சொல்லாமல் போயிட்டீங்க.. வந்து சொல்லிட்டு போங்க.. :)

சந்தோஷ் aka Santhosh said...

சி.பா,
தொகை கொஞ்சம் பெரியதாக இருப்பதால் இறுதிவரைக்கும் போகும் என்று நான் நினைக்கிறேன்.

மாஹிர் said...

சற்றுமுன்னர் தான் உங்கள் தளத்தை பார்த்தேன் என்று சொல்ல வரவில்லை....

மிக குறுகிய காலத்தில் மிக அருமையான செய்தித் தளத்தை கூட்டாக இணைந்து செய்து வருகிறீர்கள்...பாராட்டுக்கள்...

உங்கள் செய்திகளின் தரமும் மற்றவற்றினின்றும் வேறுபட்டு இருப்பதும் மெச்சத்தக்கது.

கூட்டு முயற்சியின் வெற்றிக்கு "சற்றுமுன்"னும் ஒரு உதாரணம்.

சிறில் அலெக்ஸ் said...

மாஹிர் வாழ்த்துக்கு குழுவின் சார்பில் நன்றி.

மணிகண்டன் said...

சி.பா,

இப்போ இந்தியா உண்மையாவே நல்லா ஆடி ஜெயிச்சா கூட நம்ம மக்கள் நம்ப மாட்டாங்க
போலிருக்கு :(.

சிவபாலன் said...

சந்தோஷ்,

நீங்க சொன்னது பலிக்கட்டும்.. இந்தியான்னா சும்மாவா? :)

சிவபாலன் said...

ஆமாங்க மணி.. இப்ப இந்த கவலை வேற.. முதலில் நம்ம ஆளுங்க சூப்பர் 8 க்கு போக்கட்டும்.. அப்பறம் பேசிக்கலாம்.

விடுங்க.. தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும்.. ஜெயிக்கப் போது மட்டும் நாம்.. :)

மணிகண்டன் said...

//ஆமாங்க மணி.. இப்ப இந்த கவலை வேற.. முதலில் நம்ம ஆளுங்க சூப்பர் 8 க்கு போக்கட்டும்.. அப்பறம் பேசிக்கலாம்.
//
ஆமாம் சி.பா..நானும் அதுக்கு தான் வெயிட்டிங். வெள்ளிகிழமை நம்ம பசங்க சூப்பர் 8க்கு போகட்டும்..அப்புறம் பேசிக்கலாம். (நம்ம பசங்களை நம்பி இப்பவே வாய்விட வேணாம்னுதான் :)))) )

ரவிசங்கர் said...

கிரிக்கெட் சார் செய்திகளுக்கு சற்றுமுன் மன்றம் (forum) போல் செயல்படலாம் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை. எதிர்பாராத நல்ல நிகழ்வு. கிரிக்கெட் செய்தி தருபவர்களுக்குப் பாராட்டுக்கள்

மாஹிர் சொல்வது போல் கூட்டு முயற்சிக்கு இது ஒரு வெற்றி.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு :)

Anonymous said...

இந்தியா தனது ராணுவ படையணியை தயாராக வைத்துள்ளது.

கிரிக்கட் ரசிகர்களிடமிருந்து இந்திய அணியை பாதுகாக்க இந்தியா தனது ராணுவத்தை தயாராக வைத்துள்ளது.

இந்திய வீரர்கள் மேற்கிந்திய தீவுகளில் குடியுரிமை பெறும் யோசனையில் உள்ளனர்.:)))))

தோத்திட்டு இந்தியாவுக்கு திரும்பி வர்றதையே இவனுங்க யாரும் நெனைக்கக்கூடாது.

-o❢o-

b r e a k i n g   n e w s...