.

Saturday, March 24, 2007

சற்றுமுன்: இரான் எண்ணைக் குழாய் - இந்தியா தொடரும்

இரானிலிருந்து பாக்கிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு எரி எண்ணை கொண்டு வரும் திட்டத்துக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இன்று, திட்டத்தை இந்தியா செயல்படுத்தும் என்றும் வேறெந்த நாடும் அதை கைவிடும்படி இந்தியாவை வற்புறுத்த இயலாது என்றும் பெட்ரோலியத் துறை அமைச்சர் தியோரா பதிலளித்துள்ளார்.

India can't be pressured on Iran pipeline project: Deora
Unfazed by concerns expressed by the US on the proposed USD 7.2 billion Iran-Pakistan-India (IPI) gas pipeline, India today said it will go ahead with the project and no country can pressure New Delhi to scrap it.

"I don't see any problem (on IPI pipeline). No country can debar India from this project. No country can pressure us. We are committed to this," Union Petroleum Minister Murli Deora told reporters here.

"I can't give any timeframe. The advisors have been appointed and they are preparing the feasibility report. It is too early to say at this stage," he said.

EDITORIAL: Handle pipeline politics cautiously Daily Times
India to go ahead with the Iran gas pipeline: Deora Daily News & Analysis

சற்றுமுன்:தெல்கிக்கு 10 ஆண்டுகள் சிறை

முத்திரைத் தாள் மோசடியில் பிடிபட்ட தெல்கிக்கும் மற்றும் 4 பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ. 50,000 அபராதமும் வழங்கப்பட்டுள்ளது.

Telgi sentenced to 10 years in prison
A court in Bangalore has sentenced Abdul Kareem Telgi and four others to 10 years in prison and imposed a fine of Rs 50,000 on each of them in a case of cheating. The court found them guilty of forgery and cheating the government and a private company of around Rs 42 lakh. They forged documents to register a private company's property worth nearly Rs 4 crore. The case is one of 28 being probed by the CBI in which Telgi is an accused.

Telgi, 4 aides sentenced to 10 years RI Daily News & Analysis
Bangalore: Scam king Telgi sentenced CNN-IBN

சற்றுமுன்:உல்மர் கொலை : 2 பாக் வீரர்கள் தங்கியிருக்க உத்தரவு

கொலைசெய்யப்பட்ட பாகிஸ்தான் பயிற்சியாளர் பாப் உல்மர் வழக்கு விசாரணையில் வெள்ளியன்று புதிய திருப்பம் ஏற்பட்டது. பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் ஜமைக்காவிலேயே தங்கியிருக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அணியின் மற்ற வீரர்கள் நாடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜமைக்கா தொலைக்காட்சியின் தகவலின்படி இரண்டு வீரர்கள் நீதிபதி முன்னிலையில் விசாரிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. ஆனால் அந்த வீரர்கள் பெயர் விவரம் வெளியிடப்படவில்லை.

பாப் உல்மர் கொலை விசாரணையை மேற்கொண்டு வரும் காவல்துறை அதிகாரி மார்க் ஷீல்ட்ஸ், முன்னதாக சந்தேகத்துக்குரிய நபர்கள் என்று யாரையும் அடையாளப்படுத்தவில்லை.

உல்மர் கொலை செய்யப்பட்ட விதம் பற்றி ஷீல்ட்ஸ் தெரிவிக்கையில், அறையில் எதுவும் உடையாத நிலையில் கொலையாளியை உல்மர் அறிந்திருக்க வேண்டும் என்றார்.

உல்மரின் தோற்றதை வைத்துப் பார்க்கும்போது ஒருவருக்கு மேற்பட்டோர் இந்த கொலையைச் செய்திருக்க வாய்ப்பிருப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

நன்றி: MSN TAMIL

சற்றுமுன்: இந்தியா தோல்வி - கருத்துக்கள்

உலகக் கோப்பையில் இந்திய அணி பரிதாபமாக தோற்றதை அடுத்து பலரும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

ரயில்வே மந்திரி லாலு 'மூத்த வீரர்கள்'தான் தோல்விக்கு காரணம் என்றிருக்கிறார்.
Lalu blames senior players for rout

BCCI பரிதாபகரமான(Pathetic) தோல்வி என வர்ணித்திருக்கிறது. 'முற்றிலும் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் தரும் விஷயம்' என்கிறார் துணை தலைவர் சுக்லா.
Defeat, a serious jolt: BCCI vice president

பாஜக சார்பில் வெளிவந்த அறிவிப்பில் 'இந்திய டீம் சீரியசாக ஆடவேண்டும், ரசிகர்கள் நிதானத்துடன் நடந்துகொள்ளவேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டது
Indian team must be more serious, fans less passionate: BJP

இளம் வீரர்களை ஊக்குவிக்க முடிவு செய்துள்ளதாக BCCI தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
இளம் வீரர்களை ஊக்குவிக்க முடிவு

தோல்விக்கு ஒட்டுமொத்த வீரர்களும் பொறுப்பு - சேப்பல்

தோல்வி ஏமாற்றம் அளிக்கிறது - டிராவிட்

இந்தியாவிற்கு சூப்பர் 8 வாய்ப்புள்ளது - ஜெயவர்த்தனே

சற்றுமுன்: கேரள பத்திரிகையாளர் மீது சிபிஐ விசாரணைக்கு சிபிஐ கோரிக்கை

கேரளா பத்திரிக்கையாளர்கள் சிஐஏ உளவாளிகள் என்ற கேரள முதல்வரின் கூற்றை அடுத்து கம்யூனிஸ்ட் கட்சி (ஐ)்(CPI) யின் மாநில செயலர் வெளியம் பார்கவன் மத்திய புலனாய்வு துறை ( CBI or RAW) மூலம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

CPI for probe into CIA funding of Kerala journalists

சற்றுமுன்: பீகாரில் நிலத்தகராறில் மூவர் எரித்துக் கொலை

பீகாரில் நிலத்தகராறு ஒன்றில் நேற்று ஒரு பெண்ணும் அவரது இரு குழந்தைகளும் எரிக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டனர்.

மேலும்..

சற்றுமுன்: சாகீர்கானுக்கு சொந்தமான ஓட்டல் மீது கல்லெறி

நேற்றைய உலகக்கோப்பை ஆட்டத்தில் இந்தியா ஸ்ரீலங்காவிடம் படுதோல்வி அடைந்ததை அடுத்து புனே கிரிக்கெட் இரசிகர்கள் வேகப் பந்து வீச்சாளரான சகீர் கானிற்குச் சொந்தமான ZK's என்ற உணவகம் மீது கல்லெறிந்து கண்ணாடி முகப்பினை உடைத்தனர் என புனே காவல்துறை கூறியது. ஆனால் அவரது உடன்பிறப்பான அனிஷ் கான் இதை மறுத்துள்ளார்.

இது பற்றி மேலும்..

தவிர மகேந்திரசிங் தோனி முக்கிய ஆட்டங்களில் பூஜ்யம் அடித்ததை ஒட்டி அவரது வீட்டிற்கும் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டிற்கும் பாதுகாப்பு கொடுக்கப் பட்டுள்ளது. இதேபோல ஜலந்தரில் சுழல்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் வீட்டிற்கும் மும்பை புறநகர் பாந்த்ராவில் கிரிக்கெட் சூப்பர்ஸ்டார் சச்சின் டெண்டுல்கர் வீட்டிற்கும் பாதுகாப்பு ஏற்படுத்தப் பட்டுள்ளது.

இதுபற்றி..

சற்றுமுன்: மீனவ பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற இந்திய கடற்படை வீரர்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மீனவப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் இந்திய கடற்படை வீரர். அவரை போலீசார் கைது செய்தனர்.

ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் முகுந்தராயர் சத்திரம் என்ற இடத்தில் கடற்கரையில் குடிசைகள் உள்ளன. மீனவர்கள் வசிக்கும் இந்த குடிசை வீடுகளில் ஒன்றில் சங்கர் என்பவரும் அவரது மனைவி தனலட்சுமியும் (27) வசித்து வருகின்றனர்.

இரவு வீட்டின் வெளியில் சங்கர் படுத்திருந்தார். வீட்டுக்குள் தனலட்சுமி உறங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது நள்ளிரவு 2 மணியளவில் கடற்கரை செக்போஸ்ட் பணியில் இருந்த இந்திய கடற்படை வீரரான அமித்குமார் (24) என்பவர் சங்கரின் வீட்டுக்குள் பின்பகுதி வழியாக நுழைந்தார். தனலட்சுமியை மானபங்கம் செய்ய முயன்றார்.

இதையடுத்து அவர் குரல் எழுப்பியதைத் தொடர்ந்து சங்கரும் பிற மீனவர்களும் வந்து அமித்தை பிடித்து உதைத்து ராமேஸ்வரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

ஆனால், தகவல் அறிந்த கடற்படையினர் ராமேஸ்வரம் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து அமித்குமாரை விடுவிக்குமாறு வாக்குவாதம் செய்தனர்.

ஆனால், இதை போலீசார் ஏற்கவில்லை. ராமநாதபுரம் எஸ்.பி. திருஞானம் உத்தரவைத் தொடர்ந்து கடற்படை வீரர் அமித்குமாரை கைது செய்யப்பட்டார்.

News Sources That's Tamil

சற்றுமுன்:ஜம்முகாஷ்மீரில் மதக் கலவரங்களால் ஊரடங்கு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூன்ச் மாவட்ட மெந்தர் என்ற எல்லையோர நகரில் இட ஆக்கிரமிப்பு தொடர்பாக இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் ஏற்பட்ட கைகலப்பை அடுத்து மாவட்ட நிர்வாகம் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேல் விவரங்களுக்கு..

சற்றுமுன்:இரான் பிரிட்டிஷ் கடற்படைவீரர்களை பிடித்தது

பெர்சியன் கல்ஃபில் ரோந்து செய்துகொண்டிருந்த 15 பிரிட்டிஷ் கடற்படை வீரர்களை இரானிய காவலர்கள் துப்பாக்கிமுனையில் பிடித்துச் சென்றனர். இரானிற்கு எதிரான பொருளாதார தடை பற்றி ஐ.நா பாதுகாப்பு சபை விவாதிக்க இருக்கும் இந்த நேரத்தில் இது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும்....

கேரளா பள்ளி பாடத்தில் சினிமா.

கேரள மாநில பள்ளிபாடத்திட்டத்தில் சினிமாவும் இடம் பெறும் என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் எம்.கே. பேபி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

சற்று முன்: திருட்டுத்தனமாக லண்டன் பறந்த 2பேர் கைது!

சென்னை விமான நிலையதில் இருந்து ஃப்ரான்ஸ் நாட்டின் விமானம் (ஏஎப்201) 266 பயணிகளுடன் லண்டனுக்கு புறப்பட்டது அதில் குடியுறிமை சான்றிதழ் பெறாமலேயே இருவர் பயணம் செய்வதாக ஃப்ரான்ஸ் தலைமை கட்டுபாட்டு அதிகாரிக்கு தகவல் தரப்பட்டது.இதன் அடிப்படையில் ஃப்ரான்ஸ் விமான நிலைய பாதுக்கப்பு அதிகாரிகள் அவ்விமானத்தை முற்றுக்கையிட்டு இருவரையும் கைது செய்து சென்னைக்கு திருப்பி அனுப்பபட்டனர்.
அவர்களிடம் சென்னை விமான நிலைய பாதுக்காப்பு அதிகாரிகள் துருவிதுருவி விசாரரித்து வருகின்றனர்.

தமிழ் சுடர்

சற்றுமுன்: தெற்கு வசிரிஸ்தான் மோதல்களில் 160 பேர் பலி

பாகிஸ்தானின் வட மேற்கே, தெற்கு வசிரிஸ்தானில் உள்ளூர் பூர்வ குடியினருக்கும், வெளிநாட்டுத் தீவிரவாதிகளுக்கும் இடையில் இந்த வாரம் நடந்த மோதல்களில் 160 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறுகிறார்கள். இந்த மாநிலத்தின் ஆளுனர் இது குறித்துத் தகவல் தரும்போது, கொல்லப்பட்டவர்களில் 130 பேர் உஷ்பெக்கிஸ்தானியர்கள் அல்லது செச்சினியர்கள் என்றும் சுமார் 30 பேர் உள்ளூர் பூர்வ குடிகள் என்றும் கூறியுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை வெடித்த இந்தச் சண்டையில் தமது இராணுவத்தினர் சம்பந்தப்படவேயில்லை என்பதை பாகிஸ்தான் அரசு முன்னர் மறுத்திருந்தது.

The Hindu : International : Ceasefire in Waziristan

வாழ்வா? தாழ்வா போராட்டத்தில் இந்திய அணி படு தோல்வி

போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெறும் உலகக்கோப்பை 'பி' பிரிவுப் போட்டியில், 255 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 69 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

துவக்க வீரர்கள் கங்குலி 7 ரன்னுக்கும், உத்தப்பா 18 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். இருவரின் விக்கெட்டையும் சமிந்தா வாஸ் கைப்பற்றினார். 27 பந்துகளைச் சந்தித்து 18 ரன்கள் எடுத்திருந்த உத்தப்பா, வாஸ் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ரன் எண்ணிக்கை 25ஆக இருந்தது.

ஓரளவு தாக்குப் பிடித்த வீரேந்திர ஷேவாக், 46 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து முரளீதரன் பந்துக்கு இரையானார். பொறுப்பின்றி விளையாடிய டெண்டுல்கரும், தோனியும் ரன் எதுவும் எடுக்காமல் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். 6 ரன்கள் எடுத்த நிலையில் யுவராஜ் சிங் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

முன்னதாக டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய துவக்க வீரர் உபுல் தரங்கா 64 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தில்ஷான்- சில்வா ஜோடி இந்திய பந்து வீச்சை திறமையாக சமாளித்து ரன் குவித்தது. எனினும், 38 ரன்கள் எடுத்த நிலையில் படேல் பந்தில் தில்ஷான் ஆட்டமிழந்தார். 59 ரன்கள் குவித்த சில்வாவின் விக்கெட்டை டெண்டுல்கர் கைப்பற்றினார். வாஸ் மற்றும் அர்னால்டு ஆகியோர் தலா 19 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இந்தியத் தரப்பில் ஜாஹிர்கான் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். அகர்கர், முன்னாப் படேல், டெண்டுல்கர், கங்குலி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இலங்கை
* 50 runs in 11 overs
* 100 runs in 25.1 overs
* 150 runs in 35.1 overs
* 200 runs in 43.5 overs
* 250 runs in 49.4 overs

இந்தியா
* 50 runs in 12.4 overs
* 100 runs in 23.1 overs
* 150 runs in 36.4 overs

இந்தியா உலகக் கோப்பையில் இருந்து வெளியேற்றம்?!

இந்தியா தொடர்ந்து மோசமாக விளையாடிவருகிறது. இதுவரை 6 விக்கெட்டுகளை இழந்து 126 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

தோல்வியின் விளிம்பில் இருக்கும் இந்தியா உலகக் கோப்பையில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்திய அணிக்கு முழுபாதுகாப்பு-ஐசிசி உறுதி

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கச் சென்றிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீசில் தங்கியிருக்கும் எஞ்சிய நாட்களில் போதிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று ஐசிசி உறுதி கூறியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பாப் உல்மர் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய அணி நிர்வாகத்திற்கு ஐசிசி அனுப்பியிருக்கும் கடிதத்தில் இந்த உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

உல்மர் கொலையைத் தொடர்ந்து உருவாகியுள்ள பீதியால் இந்திய அணி அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று கூறி ஐசிசி நேற்று கடிதத்தை அளித்திருப்பதாக போர்ட் ஆப் ஸ்பெயினில் இந்திய கிரிக்கெட் அணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்திய அணிக்கான பாதுகாப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாகவும், இந்திய அணியின் பாதுகாப்புக்கு மத்திய அரசு 2 கோடி ரூபாய் வரை செலவிட இருப்பதாக அறிவித்திருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் கூறின.

இந்திய அணியின் பாதுகாப்புக்கான உதவி ஆணையர் மதூப் குமார் திவாரி இந்திய அணியினருடன் பயணம் செய்து வருவதாகவும், இந்திய அணியினரை ஏற்கனவே சந்தித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் கூறின.

Thanks: MSN Tamil

இந்தியா திணறல்

இந்தியா 85 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழ்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறது. பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட டென்டுல்கர் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

தொடர்புள்ள செய்தி: இந்திய அணி தோற்றால் ரூ.6ஆயிரம் கோடி நஷ்டம்

ஜேம்ஸ் பிளேக் தோல்வி

சோனி எரிக்சன் ஓப்பன் 3.45 மில்லியன் டாலர் மொத்தப் பரிசுத்தொகைக்கான டென்னிஸ் போட்டிகள் அமெரிக்காவின் மயாமி நகரில் நடந்து வருகிறது.

இதில் இரண்டாம் சுற்றில், எட்டாம் நிலை ஆட்டக்காரரான அமெரிக்காவின் ஜேம்ஸ் பிளேக் , பிரான்சு நாட்டின் ப்ளோரெட் செர்ராவிடம் 6-7,6-2,3-6 என்ற செட் கணக்கில் தோற்றுப்போனார்.

-o❢o-

b r e a k i n g   n e w s...