.

Saturday, March 24, 2007

வாழ்வா? தாழ்வா போராட்டத்தில் இந்திய அணி படு தோல்வி

போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெறும் உலகக்கோப்பை 'பி' பிரிவுப் போட்டியில், 255 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 69 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

துவக்க வீரர்கள் கங்குலி 7 ரன்னுக்கும், உத்தப்பா 18 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். இருவரின் விக்கெட்டையும் சமிந்தா வாஸ் கைப்பற்றினார். 27 பந்துகளைச் சந்தித்து 18 ரன்கள் எடுத்திருந்த உத்தப்பா, வாஸ் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ரன் எண்ணிக்கை 25ஆக இருந்தது.

ஓரளவு தாக்குப் பிடித்த வீரேந்திர ஷேவாக், 46 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து முரளீதரன் பந்துக்கு இரையானார். பொறுப்பின்றி விளையாடிய டெண்டுல்கரும், தோனியும் ரன் எதுவும் எடுக்காமல் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். 6 ரன்கள் எடுத்த நிலையில் யுவராஜ் சிங் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

முன்னதாக டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய துவக்க வீரர் உபுல் தரங்கா 64 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தில்ஷான்- சில்வா ஜோடி இந்திய பந்து வீச்சை திறமையாக சமாளித்து ரன் குவித்தது. எனினும், 38 ரன்கள் எடுத்த நிலையில் படேல் பந்தில் தில்ஷான் ஆட்டமிழந்தார். 59 ரன்கள் குவித்த சில்வாவின் விக்கெட்டை டெண்டுல்கர் கைப்பற்றினார். வாஸ் மற்றும் அர்னால்டு ஆகியோர் தலா 19 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இந்தியத் தரப்பில் ஜாஹிர்கான் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். அகர்கர், முன்னாப் படேல், டெண்டுல்கர், கங்குலி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இலங்கை
* 50 runs in 11 overs
* 100 runs in 25.1 overs
* 150 runs in 35.1 overs
* 200 runs in 43.5 overs
* 250 runs in 49.4 overs

இந்தியா
* 50 runs in 12.4 overs
* 100 runs in 23.1 overs
* 150 runs in 36.4 overs

14 comments:

Anonymous said...

well done Sri Lanka, too bad for the INDIAN CHICKENS.... hahahaha

இராம் said...

:)))))

Anonymous said...

There are no shortcuts to success :)
summava sonnangam : etu surakai kariku udavadhu

Anonymous said...

Congratulations to Srilankans.

1987 - அரை இறுதியில் தோல்வி
1992 - கேவலமான தோல்விகள்
1996 - அரை இறுதியில் தோல்வி
1999 - கேவலமான தோல்விகள்
2003 - இறுதி போட்டியில் தோல்வி
2007 - முதல் சுற்றில் தோல்வி
2011 - இறுதி போட்டியில் தோல்வியா?

அவ்வள்வு நம்பிக்கை நமது அணியின் மீது!

Sack every body and build the team right from scratch for the future.

ஆதிபகவன் said...

இலங்கை நன்றாக விளையாடியதால் இந்தியா தோற்கவில்லை.

இந்தியா மோசமாக விளையாடி தோற்றது.

மணியன் said...

இதே நாளில், மார்ச் 23, சென்ற உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று வெளியேறினோம். இன்று அடுத்த கட்டத்திற்கு செல்லாமலே வெளியேறிவிட்டோம். இனி ஐசிசி தகுதி தேர்வு வட்டத்தில் வென்றுதான் வரவேண்டி வருமோ ?:((

நம் துணைக் கண்டத்திலிருந்து ஸ்ரீலங்காவும் பங்களாதேஷும் பங்கேற்கின்றன என ஆறுதல் அடையவேண்டியதுதான்.

ஆதிசேஷன் said...

இப்படி ஆகும் என்று எதிர்பார்த்ததுதான்!

இவர்கள் ஆட்டத்தை பார்ப்பதற்கு எங்கள் தெருமுனையில் சிறுவர்கள் ஆடுவதைப் பார்த்து ரசிக்கலாம்.

Anonymous said...

இந்திய புக்கிகள் யாரக் கொல்லுவாங்க ?

Anonymous said...

நாளைக்கு பங்ளாதேஷ பெர்மூடா தோக்கடிக்கப் போகுது. நாம உள்ள போறோம், கப்ப ஜெயிக்கிறோம்.

அதிரை புதியவன் said...

இனி இந்தியஅணியின் எதிர்காலம்?

அதிரை புதியவன் said...
This comment has been removed by the author.
நாமக்கல் சிபி said...

//2011 - இறுதி போட்டியில் தோல்வியா?
//

இறுதிப் போட்டி வரை செல்வோம் என்று நம்பிக்கை காட்டும் அண்ணாச்சி! எங்கே! உங்க காலைக் காட்டுங்க!

நாமக்கல் சிபி said...

//இனி ஐசிசி தகுதி தேர்வு வட்டத்தில் வென்றுதான் வரவேண்டி வருமோ ?:((
//

ஐ.சி.சி யால் அங்கீகரிக்கப் பட்ட அணியாக இந்தியா தொடருமா?

:))

Anonymous said...

இந்த முரையும் அவர்கள் தான்

யார்.........?

-o❢o-

b r e a k i n g   n e w s...