.

Tuesday, July 31, 2007

தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் என்பதால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிமீது அவதூறா? - உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்

சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதியரசர் அசோக்குமார் நியமனம் பற்றி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கலாகியுள்ளது. இந்தியத் தலைமை நீதிபதி, மூத்த நீதிபதிகள் கொண்ட கொலேஜியம் எனும் அமைப்பை கலந்தோ, கலக்காமலோ, நியமனம் செய்யப்பட்டதா எனும் கேள்வி இந்த வழக்கில் எழுப்பப்பட்டுள்ளது.

வழக்கினை சட்ட அமைச்சராக இருந்த மூத்த வழக்குரைஞர் சாந்திபூஷனும் காமினி ஜெய்ஸ்வாலும் தாக்கல் செய்துள்ளனர். இதன்மீது நோட்டீஸ் ஏதும் பிறப்பிக்காமலேயே, மய்ய அரசு பதில் உரை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் அரிஜித் பசாயத் மற்றும் டி.கே. ஜெயின் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது; 1999 முதல் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட் டவர்கள் பற்றிய விவரங்களை ஆறு வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

வழக்கு மனு தாக்கல் செய்தவர்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞர் அனில்தவான் வாதிடுகையில் 1998-இல் உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின் படி, தலைமை நீதிபதியும் மூத்த நீதிபதிகளும் கொண்ட கொலேஜியம், நீதிபதிகளை முதலில் நியமிக்கும் போது மட்டும் அல்லாமல் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கும் போதும் முடிவெடுக்க வேண்டும் என்று இருக்கிறது. ஆனால் அசோக்குமார் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்ட போது இது பின்பற்றப்பட வில்லை; இந்த விசயத்தில் நாங்கள் வாதிடுவதில் எங்களுக்கு ஒன்றும் மகிழ்ச்சி யில்லை, ஆனால் நடந்தவை எங்களைச் சங்கடப்படுத்துகின்றன என்று கூறியுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அசோக்குமார் 2003-இல் கூடுதல் நீதிபதியாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்டார். கூடுதல் நீதிபதியாகவே ஏறத்தாழ நான்கு ஆண்டுக்காலம் பதவி வகித்து வந்தவர் கடந்த பிப்ரவரி மாதத்தில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் வழக்கு தாக்கல் செய்தவர்கள் கூறும் வாதம் என்னவென்றால், இந்தியத் தலைமை நீதிபதி கொலாஜியத்தையோ, அல்லது பிற உச்சநீதிமன்ற நீதிபதிகளையோ கலந்து ஆலோசிக்காமல் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப் பரிந்துரை செய்திருக்கிறார் என்பதே!

கொலேஜியம் மூலம் நீதிபதிகள் நியமனம் செய்யப்படும் முறை 1998-இல் நடைமுறைக்கு வந்தது. இந்த நடைமுறை உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒன்றினால் வந்தது இந்திய அரசமைப்புச் சட்டத் தில் கூறப்பட்ட நடைமுறை வேறு. அதன்படி, மாநில, மத்திய அரசுகளின் பரிந் துரைப்படி இந்தியத் தலைமை நீதிபதியைக் கலந்து ஆலோசித்து நீதிபதிகள் நியமனம் செய்யப்படுவர் என்பதுதான் ஆதியில் இருந்த நடைமுறை, 1950 முதல் இருந்த நடைமுறை. பாதியில் வந்த நடைமுறையின்படிதான் கொலேஜியம் சர்வ அதிகாரம் கொண் டதாக ஆக்கப்பட்டு மைய, மாநில அரசுகள் வெறும் பொம்மைகளாக மாற்றப் பட்ட நிலை.
தற்பொழுது எழுந்துள்ள பிரச்சினையில் சம்பந்தப்பட்ட இந்தியத் தலைமை நீதிபதியும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள்.

முழுவதும் படிக்க: விடுதலை

The Hindu : National : Justice Ashok Kumar’s appointment challenged
IBNLive > Madras HC judge chosen despite SC objection, PIL filed

இதழியலாளர் பி சாய்நாத்திற்கு இராமன் மக்சேசே விருது

ஆசியாவின் நோபல் பரிசு என கருதப் படுகின்ற ரமன் மக்சேசே விருது இந்தியாவின் இதழியலாளர் பி.சாய்நாத்திற்கு அவரது சமூக விழிப்புள்ள கட்டுரைகளுக்காகவும் இந்திய கிராமங்களின் ஏழைகளைப் பற்றிய புரிந்துணர்வை எழுப்பியதற்காகவும் வழங்கப் பட்டுள்ளது. ஆந்திர,மகாராட்டிர விவசாயிகளின் பட்டினிச் சாவுகளையும் தற்கொலைகளையும் தேசிய ஊடகங்களுக்கு கொண்டு சென்ற சாய்நாத் முன்னாள் குடியரசுத் தலைவர் வி வி கிரி அவர்களின் பேரனாவார். சென்னையில் பிறந்து லயோலாவிலும் பின்னர் தில்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் பயின்றவர்.

மேலதிக தகவல்களுக்கு: Zee news:P Sainath wins Magsaysay award for journalism

கிரிக்கெட்: இந்தியா இரண்டாவது டெஸ்டில் வெற்றி: 73/3

நாட்டிங்காமில் நடந்த இரண்டாம் டெஸ்ட் பந்தயத்தில் இந்தியா தனது இரண்டாவது ஆட்டத்தில் 73 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்கள் என்ற கணக்கில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஆட்டத்தொடரில் 1-0 என்று முன்னணியில் உள்ளது. இன்று நடந்த ஆட்டத்தில் கார்த்திக் 22,ஜாபர் 22, சச்சின் 1 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் திராவிட் 11 மற்றும் கங்குலி 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்தியா: 481 & 73/3
இங்கிலாந்து: 198 & 355

டாடா தொழிற்சாலை: அறிக்கை போர் தொடர்கிறது

திருநெல்வேலி மாவட்டத்தில் டாடாவின் டைடானியம் டை ஆக்சைட் தொழிற்சாலையை மக்களின் கருத்தறிவதற்காக தள்ளிவைத்துள்ளதை நேற்று அறிவிக்கையில் முதல்வர் கருணாநிதி முந்தய ஆட்சியில் ஜெயலலிதா தனக்கு 'வேண்டிய ஒருவருக்கு' 1000 ஏக்கராவில் தாது பிரித்தெடுக்கும் உரிமையை வழங்கியதே டாடாவிற்கு அனுமதி வழங்காமல் இருந்ததிற்கு காரணம் என குற்றம் சாட்டியிருந்தார். இதனை ஜெயலலிதா 'கற்பனை' என்று கூறி மானநட்ட வழக்குப் போடப் போவதாகக் கூறியிருந்தார். இன்று மீண்டும் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் 'அந்தக் குறிப்பிட்ட நபர்' தொழில் அமைச்சர் நயனார் நாகேந்திரன் நவம்பர்22,2005 இல் கூட்டிய கூட்டத்திற்கும் வந்திருந்ததாகக் கூறியுள்ளார். டாடா ஸ்டீல் அதிகாரிகளும் அரசு அதிகாரிகளும் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் அவருக்கு என்ன வேலை எனவும் வினவியுள்ளார்.
முழு விவரங்களுக்கு...The Hindu News Update Service

தாலிபான் கொடூரம்: இரண்டாவது கொரிய பிணைக்கைதி கொலை

ஆஃப்கானிஸ்தானின் தாலிபான் தீவிரவாதிகள் ஜூலை 19 அன்று காபூலிலிருந்து காந்தஹார் சென்றுகொண்டிருந்த 23 கொரிய பயணிகளை வழிமறித்து பிணைக்கைதிகளாக வைத்திருக்கிறார்கள். இவர்களை விடுவிக்க இணையாக 23 தாலிபான் கைதிகளை விடுவிக்க கோரிக்கை எழுப்பியிருந்தனர். பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும் போதே பாதிரியார் பே ஹுயங் கு வினைக் கொன்று அவரது உடல் திங்களன்றுதான் கொரியா சென்றடைந்துள்ளது. இதனிடையே இன்று ஆஃப்கான் காவல்துறையினர் ஷ்ஹிம் சுங் மின் என்ற மென்பொருளாளரின் உடலை கண்டெடுத்துள்ளனர். அவரது வலது பொட்டில் துப்பாக்கி இரவை பாய்ந்த காயம் உள்ளது. நாளைக்கு மதியம் 12 மணிக்குள் தாங்கள் கோரிய கைதிகளை விடுவிக்காவிட்டால் 18 பெண்கள் அடங்கிய பிணைக்கைதிகளிலிருந்து ஒவ்வொருவராக கொலை செய்யப் படுவர் என அவர்களின் பிரதிநிதியாக செயல்படும் காரி யூசஃப் அஹமதி கூறியுள்ளார். ஆஃப்கன் அரசும் கொரிய அரசும் பொய் பேசுவதாலும் ஏமாற்றுவதாலுமே இந்தக் கொலைகள் நடந்தேறியதாகவும் அவர் கூறினார். இந்த செய்தி கொரியாவை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

Hostage Killing: Second South Korean Hostage Murdered - International - SPIEGEL ONLINE - News

ரிசர்வ் வங்கி பணவைப்புவிகிதத்தை 50 புள்ளிகள் உயர்த்தியது

இன்று வெளியிட்ட காலாண்டு நிதி கொள்கையின் ஆய்வின் முடிவாக வங்கிகள் மத்திய வங்கியில் வாடிக்கையாளர்களின் வைப்பு நிதியிலிருந்து கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய பணவைப்பு விகிதத்தை 0.5% அதிகரித்தும் வட்டி விகிதங்களில் மாறுதல் எதுவும் செய்யாமலும் தன் கொள்கையை வெளியிட்டது.
மேலும் விவரங்களுக்கு....The Hindu News

சற்றுமுன்: மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: சஞ்சய் தத்திற்கு ஆறு வருட சிறை தண்டனை

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் 1993இல் மும்பை குண்டுவெடிப்பு சம்பவங்களின் போது சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப் பட்டிருந்த வழக்கில் ஆறாண்டுகள் சிரைதண்டனை விதிக்கப் பட்டிருக்கிறது. மும்பையின் தடா நீதிமன்றத்தின் நீதிபதி கோடே இந்திய ஆயுதங்கள் சட்டப்படி அவர் AK-56 மற்றும் பிஸ்தால் வைத்திருந்தது குற்றமாகும் என தண்டனை வழங்கினார். தனது நன்னடத்தையைக் கணக்கில் கொண்டு தண்டனையை தள்ளிவைக்க அவர் கொடுத்த மனுவை நிராகரித்து அவர் அடுத்தடுத்து குற்றம் புரிந்திருக்கிறார், அவர்மீது நான் பரிதாபப் பட்டாலும் சட்ட மேன்மைக்கே என் முன்னுரிமை என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

DNA - Mumbai - Dutt sentenced to six years in jail - Daily News & Analysis

டெல் கணினிகள் சென்னையருகே தயாரிப்பு

உலகில் அதிகமான கணினிகளை தயாரித்துவரும் பன்னாட்டு நிறுவனமான டெல் திங்களன்று சென்னை அருகே ஸ்ரீபெரும்பதூரில் அமைந்துள்ள தனது தொழிற்சாலையை துவக்கியது. முதல் கணினியை தனது மிகப் பெரும் வாடிக்கையாளரான இன்ஃபோசிஸிற்கு இலவசமாக கொடுத்து தனது இந்திய அலுவலை துவக்கியது.

வரும் ஐந்தாண்டுகளில் முப்பது மிலியன் டாலர்வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. ஆண்டிற்கு 40,000 கணிகள்வரை தயாரிக்கக் கூடிய இத்தொழிற்சாலையின் உற்பத்தி இந்தியாவின் 75% தேவையை ஈடுசெய்ய முடியும்.


India eNews - Dell launches first Indian manufacturing base in south India

மத்திய அமைச்சரவையில் பகுஜன் சமாஜ்?

மத்திய அமைச்சரவையில் சேருவது குறித்து பகுஜன் சமாஜ் கட்சி தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது என்று அக்கட்சி உயர்நிலைத் தலைவர்கள் திங்கள்கிழமை தெரிவித்தனர். கட்சித் தலைமை இது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கும் என்றும் அவர்கள் கூறினர்.

பகுஜன் சமாஜ் பொதுச் செயலர் ராம் நரேஷ், தேசிய செயலர் ராம் ரக்ஷா பால் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு பகுஜன் சமாஜ் கட்சி வெளியிலிருந்து ஆதரவு அளித்து வருகிறது. அமைச்சரவையில் சேருமாறு ஆளும் கூட்டணி தரப்பில் பலமுறை வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த முடிவை கட்சித் தலைமை விரைவில் அறிவிக்கும்.

ஜாம்ஷெட்பூர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் ஆகஸ்ட் 29-ம் தேதி நடைபெறுகிறது. பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக பழங்குடி தலைவர் சல்கான் மர்மு இருப்பார் என்று அவர்கள் தெரிவித்தனர்.

உத்தரப் பிரதேச தேர்தலில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் நாலாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. குடியரசுத் தலைவர் தேர்தலில் தனது வெற்றியை உறுதி செய்து கொள்ள மாயாவதிக்கு வலை விரித்தது மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி. மாயாவதிக்கும் அதன் தயவு தேவை இருந்தது.

விளைவு உ.பி. மாநிலத் திட்டங்களுக்கு ரூ. 70,000 கோடி தருவதாக மத்திய அரசு அறிவித்தது; மாயாவதி மீதான ரூ. 175 கோடி தாஜ் வணிக வளாக ஊழல் வழக்கைச் சரியான ஆதாரம் இல்லாத காரணத்தால் வாபஸ் பெறுவதாக உ.பி. மாநில கவர்னர் டி .வி. ரஜேஸ்வர் அறிவித்தார். குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளரை ஆதரித்தார் மாயாவதி. இந்த நெருக்கம் தற்போது மேலும் அதிகரித்து வருகிறது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் பகுஜன் சமாஜை எப்படியாவது இடம் பெற செய்து விட்டால் கூட்டணி மேலும் வலுப்பெறும், ஆட்சியை ஐந்தாண்டு காலம் பிரச்னை இன்றி கடத்திவிடலாம் என்று காங்கிரஸ் கருதுகிறது. கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு தரும் இடதுசாரிக் கட்சிகள் மிரட்டல், கூட்டணி அரசில் இடம் பெற்று பல்வேறு நெருக்குதல் தரும் கட்சிகளை சமாளிக்க காங்கிரஸ் மேலிடம் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியே பகுஜன் சமாஜ் கட்சியை அரசில் சேர்க்கும் முயற்சி என்று தில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி

ஷில்பாவுக்கு ராஜீவ்காந்தி தர விருது

சிறந்த தரத்துக்கான ராஜீவ்காந்தி தேசிய விருது பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள நிகழ்கலை தேசிய மையத்தில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி அவருக்கு இந்த விருது வழங்கப்படும்.

இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலைக்கழகம் ஷில்பாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. இந்நிலையில், சிறந்த தரத்துக்கான ராஜீவ்காந்தி தேசிய விருது வழங்கப்படவுள்ளது என்று ஷில்பாவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

விருது வழங்கும் விழாவில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மகாராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் ஆகியோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய தர நிர்ணய ஆணையத்தால் 1991 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி தர விருது ஏற்படுத்தப்பட்டது. தரத்தில் சிறந்து விளங்கும் இந்திய உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்காகவும், அவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் விதத்திலும் இந்த விருது ஏற்படுத்தப்பட்டது.

முகேஷ் அம்பானி, குமாரமங்கலம் பிர்லா, அதி கோத்ரெஜ், ஆனந்த் மஹிந்திரா, சுனில் மித்தல், கிரண் மஜும்தார் ஷாவ், சாந்த் சிங் சத்வால், ஷாருக்கான், தருண் தேஜ்பல், சானியா மிர்ஸா, சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் ஏற்கெனவே இந்த விருதைப் பெற்றுள்ளனர்.

தினமணி

Dr Shilpa Shetty to receive Rajiv Gandhi Award - bollywood news: "To be a worldwide achiever at such a young age; bestowed with flattering accolades, is a matter of utmost prestige for Shilpa. She is extremely grateful to be chosen for this honour." The award has been designed in line with similar awards in other developed countries, like 'Malcolm Baldrige National Quality Award' in USA, 'Deming Prize' in Japan and the 'European Quality Award'.

அரவானிகளும் கல்லூரிகளில் படிக்கலாம்: உயர் கல்வித்துறை செயலாளர்

தமிழகத்தில் இனி அரவானிகளும் கல்லூரி படிப்பைத் தொடர முடியும். இதற்கான, அரசாணை ஆகஸ்ட்டில் வெளியிடப்படும் என்று உயர் கல்வித்துறை செயலாளர் கே. கணேசன் தெரிவித்தார்.

சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் அவர் கலந்து கொண்டார். அப்போது, அவர் பேசியது: அரவானிகளுக்கு கல்லூரிக் கல்வி மறுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு பல காலமாக உள்ளது. அவர்களும் உயர்கல்வி பெறுவதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கான அரசாணை தயாராக உள்ளது. இது அடுத்த மாதம் வெளியாகும். எனவே இந்த கல்வியாண்டிலேயே விருப்பமுள்ளவர்கள் கல்லூரியில் பயில முடியும்.

பெயர் பிரச்னை: அரவானிகளை ஆங்கிலத்தில் Transgenders என அழைக்கின்றனர். தமிழ் மொழியில் அவர்களை 'திருநங்கைகள்' என அழைக்கலாம் என தமிழக முதல்வர் கூறியுள்ளார். ஆனால், உயர் கல்வித் துறையில் அரவானிகளை, பால் மாறியவர்கள் எனக் குறிப்பிடுகிறார்கள். பால் மாறியவர்கள் என்றால், சென்னை வட்டார வழக்கில் வேறு பொருள் வரும்.

எனவே, ஆங்கிலத்தில் உள்ள Transgenders என்கிற வார்த்தையை அப்படியே மொழிபெயர்க்க முடிவு செய்துள்ளோம். இதற்கு, தமிழறிஞர்கள் உதவிட வேண்டும்.

பெண்கள் கல்லூரியில் படிக்க முடியாது: கல்லூரி சேர்க்கை விண்ணப்பங்களில் ஆண், பெண் என்ற இரு பாலினம் மட்டுமே உள்ளது. அரசு உத்தரவு மூலம், கல்லூரி சேர்க்கை விண்ணப்பங்களில் கூடுதலாக அரவானிகள் என்கிற பாலினமும் சேர்க்கப்படும்.

ஆண், பெண் இரு பாலரும் படிக்கும் கல்லூரிகளில் அரவானிகளுக்கு இடம் உண்டு. பெண்கள் கல்லூரிகளில் அவர்களுக்கு இடம் இல்லை. சேர்க்கையில் அவர்களுக்கு என்று தனியாக இடஒதுக்கீடு ஏதும் இருக்காது. தற்போது, இருக்கும் சேர்க்கை விதிமுறை அப்படியே இருக்கும். ஆண்கள், பெண்களைப் போல அரவானிகளும் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் என்றார் கணேசன்.

தினமணி

அமீரின் பருத்திவீரன் சிறந்த இந்திய திரைப்படமாக தேர்வு

புதுடில்லி : புதுடில்லியில் நடந்த 9வது ஒஸியன் சினிமா விழாவில் பருத்திவீரன் திரைப்படம் இந்தியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டது. டைரக்டர் அமீர் இயக்கத்தில் கார்த்திக், பிரியாமணி நடித்த பருத்திவீரன் திரைப்படம் சிறந்த இந்திய திரைப்படத்திற்கான விருதை தட்டியது. மேலும், இத்திரைப்படத்தில் நடித்த பிரியாமணி சிறந்த நடிகைக்கான விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நன்றி: தினமலர்

Monday, July 30, 2007

'புனர்நிர்மாணப் பணிகளில் இராக் அரசு தோல்வி'

பல பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஈராக் மீள்கட்டமைப்பு திட்டங்களை பொறுப்பேற்று நிறைவேற்றுவதில், ஈராக் அரசாங்கம் தோல்வியடைந்திருப்பதாக, இராக் புனர்நிர்மாணப் பணிகளை மேற்பார்வையிடும் அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈராக் மீள்கட்டமைப்புக்கான பல திட்டங்களை, ஈராக்கிய அரசின் ஒப்புதல் இல்லாமலே, அமெரிக்க அரசு மாற்றி அமைப்பதாகவும், இந்த நிறுவனத்தின் தணிக்கைக் குழுவின் அறிக்கை கண்டுபிடித்துள்ளது.

இந்தத் திட்டங்களின் தற்போதைய தவறான மேலாண்மையும், அதில் நடக்கும் ஊழலும் தொடர அனுமதிக்கக் கூடாது என்று, ஈராக்கிற்கான அமெரிக்கச் சிறப்பு தலைமை கண்காணிப்புத் தலைவர் ஸ்டூவர்ட் பொவ்ன், பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த நிலைமைகளை இரண்டாவது உள்நாட்டுக் கிளர்ச்சியாக அவர் வர்ணித்தார்.

பல லட்சக்கணக்கான டாலர்களைச் செலவழித்து உருவாக்கப்பட்ட மின்னுற்பத்தி நிலையம், இராக்கிய நிர்வாகத்திற்கு மாற்றப்பட்ட பிறகு செயற்படாமல் போனதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

BBC Tamil

Report Finds Dire Humanitarian Crisis in Iraq - New York Times
8 million Iraqis need urgent aid, report says | Iraq | Guardian Unlimited
OXFAM/NCCI REPORT IN FULL - Rising to the humanitarian challenge in Iraq (324KB)

மாணவர்களை கண்ணீர்விட வைப்பதா? - பாடகி பி.சுசீலா



திருச்சி, ஜூலை 30-

இசைப் போட்டி நடத்தி மாணவர்களின் மனதைக் காயப்படுத்துவதை டி.வி. சேனல்கள் கைவிட வேண்டும் என பின்னணி பாடகி பி. சுசீலா வேதனையுடன் கூறினார்.

திருச்சியில் சேவை அமைப்புகள் சார்பில் நேற்று நடந்த விருது வழங்கும் விழாவில் பின்னணி பாடகி சுசீலா பேசியது:

சமீபகாலமாக டி.வி.க்கள் சிலவற்றில் நடத்தப்படும் இசைபோட்டிகளுக்கு நடுவர்களாக என்போன்ற இசைத்துறையைச் சேர்ந்த பலரும் பங்கேற்கின்றனர்.
இதில் பங்கேற்பதற்காக மாணவர்கள் தேர்வுக்குப் படிப்பதை விட அதிக சிரத்தை எடுக்க வேண்டியுள்ளது. அவர்களின் பெற்றோர்களும் சேர்ந்து கடினமாக உழைக்கின்றனர்.
போட்டியின் முடிவில் மூவர் மட்டுமே தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் ஒருவர் மட்டுமே வெற்றி பெறுகிறார். பரிசு கிடைக்காத மாணவர் மற்றும் பெற்றோர்கள் கண்ணீரின் திரும்புவதை காண முடிகிறது. இது வேதனை தருவதாக உள்ளது.

இவ்வாறு நிகழ்ச்சிகள் நடத்தி தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு வாய்ப்புகள் பெற்றுத்தருமானால் இளைஞர்களுக்குப் பயனாக இருக்கும்.

இதுபோல டெல்லியில் சில டி.வி. சேனல்கள் இசைநிகழ்ச்சிகளை நடத்தி அதில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு இசையமைப்பாளர்களிடம் வாய்ப்பு பெற்றுத் தந்துள்ளனர். இதேபோன்று தமிழ் சேனல்களும் முயலவேண்டும்.

இளைஞர்களுக்கு பயன்படாத நிகழ்ச்சிகள் என்றால் அதற்கு தடை விதிக்கலாம். இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு என்னை நடுவராக பணியாற்ற பல நிறுவனங்கள் அழைத்தும் அதை மறுத்துவிட்டேன்.

இவ்வாறு சுசீலா கூறினார்.


படம், செய்தி:

நன்றி:
"தமிழ் முரசு"

ஹனீஃபிடம் மன்னிப்பு கோரமாட்டோம் - அவுஸ்த்ரேலியா

அவுஸ்த்ரேலிய பிரதமர் ஹோவர்ட் இன்று தவறாக தீவிர்ரவாதி என பிடித்து வைக்கப்பட்டு விடூவிக்கப்பட்ட இந்திய மருத்துவர் ஹனீஃபிடம் மன்னிப்புக் கோரமாட்டோம் என திட்டவட்டமாக அரிவித்துள்ளார். தவறுகள் அவ்வப்போது நிகழத்தான் செய்யும் என்றும் தீவிரவாதத்தை கையாளுகையில் 9அதீத கவனட்த்தால்) தவறிழைப்பது (தாக்குதலுக்குப் பின்) வருந்துவதை விட மேலானது என அவர் தெரிவித்துள்ளார்.

Australia not to apologise to Haneef: Howard - The Hindu

ஆகஸ்டு 5: சென்னையில் தமிழ் பதிவர் பட்டறை

ஆகஸ்ட் 5,வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ் வலைப்பதிவர்கள் பட்டறை சென்னை பல்கலைக் கழகத்தின் தமிழ் துறையின் அரங்கில் (மெரினா வளாகம்) நடைபெறவுள்ளது. காலை ஒன்பதரை துவங்கி மாலை ஐந்து மணி வரை பட்டறை நடைபெறும்.

கட்டணம் ஏதும் இல்லை. அழைப்பிதழ் தேவை இல்லை. இங்கு உங்கள் பெயரை முன் பதிவு செய்து கொண்டால் பட்டறையைத் திட்டமிட உதவும். குறிப்புகள் எடுக்க ஏடு, பேனா முதல் தேநீர், நன்பகல் உணவு வரை அனைத்தும் நிகழ்ச்சி அரங்கிலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

கீழ்கண்ட தலைப்புக்கள் விளக்கப்படவிருக்கின்றன.

  • வலைப்பதிவர்களுக்கு தொழில் நுட்ப விபரங்களில் பயிற்சி தருதல்.
  • பதிவர்கள், அல்லது வலைஞர்களுக்கிடையில் ஒரு பிணையத்தை (network) உருவாக்குவது.
  • புதியவர்களுக்கு வலைப்பதிவு, கணினியில் தமிழில் எழுதுதல் போன்றவற்றை அறிமுகப்படுத்துதல்
  • பதிவுகள் மூலம் தொழில், தனி வாழ்க்கை மேம்படலுக்கு வழிகளை விவாதித்தல்
  • பதிவர்கள் ஒன்றிணைந்து வணிக முயற்சிகள், வணிகம் சாராத சேவை முயற்சிகள், தொழில் நுட்ப பணிகளை ஆரம்பிக்க வித்திடுதல்.

சற்றுமுன்னில் சிறப்பு நேரடி செய்தி தொகுப்பைக் காணலாம்.

மேலும் விபரங்களுக்கு இங்கே சுட்டவும்

ஸ்டான்ஃபோர்டில் சானியா: ஒற்றையரில் தோல்வி, இரட்டையரில் வெற்றி

ஸ்டான்ஃபோர்டில் சானியா மிர்சாவின் வெற்றிபயணம் ஒற்றையர் ஆட்ட இறுதிப் போட்டியில் முதல் தரவரிசை ஆட்டக்காரர் அன்னா சாக்வெடஸிடம் தடைபட்டது. உருசிய வீராங்கனையிடம் 6-3,6-2 என்ற கணக்கில் $600,000 மதிப்புள்ள வெஸ்ட் பாங்க் கிளாசிக் போட்டியில் தோல்வியைத் தழுவினார்.

இருப்பினும் பெண்கள் இரட்டையர் பிரிவில் ஆறுதலாக இஸ்ரேலின் ஷகர் பீருடன் உருசிய பெலாரஸ் ஜோடியை 6-4,7-6(5) என்ற கணக்கில் வென்றார்.

The Hindu News Update Service

அரசு பின்வாங்கியது,அதிமுக வெற்றி: ஜெயலலிதா

டாடாவின் டைடானியம் டையாக்ஸைட் திட்டத்தை நிறுத்திவைப்பதாக தமிழக அரசின் அறிவிப்பு அதிமுகவிற்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றி என அக்கட்சியின் பொதுசெயலர் ஜெ ஜெயலலிதா கூறினார். தாங்கள் ஆட்சியில் இருந்தாலும் ,இல்லாவிட்டாலும் மக்களுக்கான நலனுக்காக பாடுபடும் கட்சி என்பது உறுதியாகியுள்ளது என அவர் மேலும் கூறினார்.

இதுபற்றிய The Hindu News Update Service

டைட்டானியம் தொழிற்சாலை திட்டம் நிறுத்திவைப்பு - கருணாநிதி

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் டாடா நிறுவனம் அமைக்கவிருந்த டைட்டானியம் தொழிற்சாலை திட்டத்திற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியிருப்பதால், அத்திட்டத்தை நிறுத்தி வைப்பதாக முதல் அமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இந்த இரு மாவட்டங்களையும் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்களிடம் இருந்து தொழிற்சாலை அமைக்கும் நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு எதிர்ப்பு ஏற்பட்டதால், விவசாயிகளின் நலன் கருதி இந்த தொழிற்சாலை திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னையில் வெளியான அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

அப்பகுதி மக்களின் கருத்தறிந்த பிறகே இந்த தொழிற்சாலை குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

MSN Tamil

Karunanidhi to take final call on Tata project
The Hindu News :: Govt. decision, a victory for AIADMK: Jayalalithaa

ஸ்வீடிஷ் இயக்குனர் இங்மார் பெர்க்மன் மறைவு

பிரபல ஸ்வீடிஷ் பட இயக்குனர் இங்க்மார் பெர்க்மன் தனது 89 வயதில் இன்று இயற்கை மரணமடைந்தார்.

Ingmar Bergman passes away

வரதட்சணையாக 'மெர்சிடீஸ்' கார்: அர்ஜுன்சிங் மீது வழக்கு

நடுவண் அரசின் மனிதவள அமைச்சர் அர்ஜுன் சிங் மீதும் அவரது மனைவி பீனா சிங், மகன் அபிமன்யூ சிங், பேரன் அபிஜீத்சிங் ஆகியோரின் மீதும் வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு ஒன்று மொரதாபாத் காவல்நிலையத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளது. இதுபற்றி கேட்டபோது அமைச்சர் தான் குடும்ப விதயங்களில் இருந்து விலகி இருப்பதாகவும் தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்றும் கூறினார்.
அர்ஜுன்சிங்கின் பேரனின் மனைவி பிரியங்காவிடம் அவரது கணவர் குடும்பத்தினர் மெர்சிடீஸ் காரும் அடுக்கக குடியிருப்பும் கேட்டு துன்புறுத்தியதாக பிரியங்காவின் தந்தை மத்வேந்தர் சிங் கொடுத்த புகாரின் பேரில் இவ்வழக்கு பதியப் பட்டுள்ளது.

IBNLive.com > Dowry case against Arjun Singh for 'demanding' Mercedes : Arjun Singh, Dowry, Madhvendra Singh

கருணாநிதி தலைமையில் கலெக்டர்கள் மாநாடு இன்று துவங்கியது.

முதல்வர் கருணாநிதி தலைமையில் தமிழக கலெக்டர்கள் மாநாடு இன்று காலை துவங்கியது. சென்னை தலைமைசெயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கருத்தரங்க மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு மாநாடு துவங்கியது. அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை உயர்அதிகாரிகள் கலந்துகொண்டனர். நாளையும் மாநாடு தொடர்ந்து நடைபெறும் என தலமைகழக செய்திக்குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.

கோவா: காங். அரசு தப்பியது

திகம்பர் காமத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கோவா சட்டமன்றத்தில் நம்பிக்கை தீர்மானத்தை வென்று தனது ஆட்சிக்கு வந்த ஆபத்திலிருந்து தப்பியது. கட்சி மாறிய தனது மூன்று எம் எல் ஏக்களை பதவிநீக்கம் செய்யுமாறு முன்னதாக காங். மனு கொடுத்திருந்தது. அவைத்தலைவர் பிரதாப்சிங் ரானே அம்மூவரையும் வாக்களிக்க விலக்கிவைத்தார். இதனால் அவையின் வாக்கிடுவோர்் எண்ணிக்கை 40இலிருந்து 37ஆக குறைந்தது. அவைத்தலைவரின் வாக்கையும் கணக்கில் கொண்டு மயிரிழையில் அரசு பிழைத்தது.

NDTV.com: Goa: Kamat govt survives floor test

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நியமனம்: SCயில் பொதுநல வழக்கு

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நீதியரசர் அசோக் குமார் நியமிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் சட்ட அமைச்சர் சாந்தி பூஷன் பொதுநலவழக்கொன்றை பதிந்திருக்கிறார். உச்சநீதிமன்றத்தின் உயர்மட்டக் குழுவின் பரிந்துரையின் படியே தலமைநீதிபதி எந்தவொரு உயர்நீதிமன்றத்திற்கும் நீதிபதியை நியமிக்க முடியும். ஆனால் அசோக் குமாரின் நியமனத்தை இந்த உயர்மட்டக்குழு பரிந்துரைக்காத போதும் தலைமை நீதிபதி நீதியரசர் கே ஜி பாலகிருஷ்ணன் ஆணையிட்டுள்ளார். நீதியரசர்கள் அர்ஜித் பசயத் மற்றும் டிகே ஜைன் அடங்கிய பெஞ்ச் அரசை 1999 இலிருந்து இதுவரை வெவ்வேறு உயர்நீதிமன்றங்களுக்கு ஆணையிட்ட நியமனங்களின் விவரங்களை குறித்த அறிக்கை சமர்பிக்குமாறு உத்தரவிட்டனர்.

IBNLive.com > Madras HC judge chosen despite SC objection, PIL filed : Supreme Court, judge, appointement, CJI Balakrishnan, Madras High Court, Collegium, PIL

Sunday, July 29, 2007

கோவா: ஆட்சியமைக்க பா.ஜ.க தீவிரம்.

கோவா மாநிலத்தின் 40 உறுப்பினர்சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 16 இடங்களும், பாஜகவுக்கு 14 இடங்களும் உள்ளன.

காங்கிரஸின் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் 3 இடங்கள். மகாராஷ்டிரா கோமந்தக் கட்சி 2 இடத்திலும், கோவா பாதுகாப்பு முன்னணி 2 இடத்திலும், கோவா ஜனநாயக கட்சி ஒரு இடத்திலும் வென்றன. இதைத் தவிர சுயேட்சைகள் 2 இடங்களில் வென்றனர்.

சுயேட்சைகள் மற்றும் மகாராஷ்டிரா கோமந்தகக் கட்சியின் (எம்.ஜி.பி)எம்எல்ஏக்கள் ஆதரவுடன் திகாம்பர் காமத் தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்திருந்தது.

காங்கிரஸ் அரசுக்கு கோவா ஜனநாயக கட்சி வெளியிலிருந்து ஆதரவு தெரிவித்தது. 23 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.

இந் நிலையில் சுயேட்சை எம்எல்ஏக்களும், மகாராஷ்டிரா கோமந்தகக் கட்சி எம்எல்ஏக்களும் திடீரென காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.

மேலும் காங்கிரசைச் சேர்ந்த பெண் எம்எல்ஏ விக்டோரியா ஃபெர்னாண்டஸூம் எம் எல் ஏ பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

எம்எல்ஏக்கள் பலம் 19 ஆக குறைந்ததால் கோவாவில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்த கட்சியும் சுயேட்சை எம்எல்ஏ அனில் சால்கோவோங்கர், மகாராஷ்டிரா கோமந்தக் கட்சி ஆகியவை பாஜகவை ஆதரிக்கப் போவதாக அறிவித்தன.

இதையடுத்து மனோகர் பாரிக்கர் தலைமையில் ஆட்சியைப் பிடிக்க பாஜக தீவிரமானது.

காங்கிரஸ் இதைத் தடுக்க பல வழிகளிலும் முயன்று வருகிறது. காங்கிரஸைச் சேர்ந்த சபாநாயகர் பிரதாப் சிங் ரானே சட்டசபையை கூட்டாமல் இழுத்தடித்து வருகிறார்.

இதையடுத்து 21 எம்எல்ஏக்களுடன் டெல்லி சென்றுள்ளார் பாரிக்கர். மூத்த பாஜக தலைவர்களுடன் சென்று குடியரசுத்தலைவர் பிரதீபாவை சந்திக்கவும், எம் எல் ஏக்களை அணி வகுத்துக் காட்டவும் பாரிக்கர் முடிவு செய்துள்ளார் .

ஸ்டான்ஃபோர்ட் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் சானியா



ஸ்டான்ஃபோர்டில் பெண்கள் ஒற்றையர் அரை இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்தது. இந்த போட்டியில் முன்னணி வீராங்கனைகளை தோற் கடித்து சிறப்பாக விளையாடி வரும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான சானியா மிர்சா அரை இறுதியில் 8-ம் நிலை வீராங்கனையான சைபிலி பாமரை (ஆஸ்திரியா) எதிர் கொண்டார்.

இதன் முதல் செட்டை சானியா 6-2 என்ற கணக்கில் எளிதில் கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டில் பாமர் சுதாரித்து ஆடினார். இதனால் விறுவிறுப்பாக இருந்தது. அந்த செட்டை அவர் 7-5 என்ற கணக்கில் வென்றார்.

இருவரும் தலா ஒரு செட் கைப்பற்றியதால் வெற்றியை நிர்ணயிக்கும் இறுதி செட் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த செட்டை சானியா 6-3 என்ற கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். ஸ்கோர் 6-2, 5-7, 6-3.

சானியா குளோவின், ஹிண் டர் தற்போது பாமர் போன்ற முன்னணி வீராங் கனைகளை தோற்கடித்து இறுதிப்போட்டியில் நுழைந் துள்ளார். இதன் மூலம் அவர் தரவரிசையில் முன்னேற்றம் காணுவார்.

சானியாவின் அபாரமான ஆட்டம் இந்திய டென்னிஸ் வரலாற்றில் புதிய மைல்கல்லை ஏற்படுத்தி உள்ளது

மாலைமலர்

Mirza, Chakvetadze win three-setters in Stanford semis

ஜெயமாலாவுக்கு டாக்டர் பட்டம்

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் கன்னட நடிகை ஜெயமாலா. இவர் ஒரு படத்தில் நடிப்பதற்காக சபரிமலை சென்றபோது, ஐயப்பனின் விக்ரகத்தை தொட்டு தரிசனம் செய்ததாக பத்திரிகைகளில் வந்த செய்தியை அடுத்து பெரும் சர்ச்சையில் சிக்கினார். இதனால் மக்களிடையே மிகவும் பிரபலமானவராக விளங்கினார்.

டாக்டர் எம்.ஜி.கிருஷ்ணன் என்பவரின் தலைமையில், பெண்களுக்கு உரிய உரிமைகள் குறித்து, ஜெயமாலா ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினார். 'சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள்' என்ற தலைப்பில் இவர் நடத்திய ஆய்விற்காக பெங்களூர் பல்கலைக் கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

தினமலர்

Deccan Herald - PhD for Jayamala: National award-winning actor Jayamala has been awarded a doctorate by the Bangalore University for her thesis titled ‘A study of the Administrative Set-up of the Rehabilitation of Destitute women in Karnataka State’.

ஜப்பான்: அஞ்சல் பெட்டிகளில் ஆயிரக்கணக்கான பணம்.

ஜப்பானில் டோக்கியோ உட்பட பல நகர்களில் வீடுகளில் வைக்கப்பட்டுள்ள தபால் பெட்டிகளில் கட்டுக்கட்டாக பணம் கிடைத்துள்ளது. இந்த பணத்தை யார் வைத்தார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது. இதைத்தான் அதிர்ஷ்ட மழை என்பதா? டோக்கியோவில் மட்டும் 18 தபால் பெட்டிகளில் இத்தகைய அனோமதேய பணக்கட்டுகள் கிடைத்துள்ளன. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர்

மொரிசியசுக்கு கங்கை ஜலம் பரிசாக தருகிறார் நிதிஷ்

மொரிசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். அவரை சந்திக்க உள்ளார், பீகார் முதல்வர் நிதிஷ் குமார்; அவருக்கு பரிசாக, கங்கை ஜலம், அனுமான் பாசுரம் அடங்கிய புத்தகத்தை அளிக்கிறார்.

ஐந்து நாள் பயணமாக மொரிசியஸ் போகிறார் நிதிஷ். அவருடன், சில அமைச்சர்களும் போகின்றனர். மொரிசியசில் நடக்கும் சர்வதேச போஜ்புரி மொழி பேசும் பீகாரிகள் மாநாடு நடக்கிறது. அதில், நிதிஷ் பங்கேற்கிறார்.

மொரிசியஸ் நாட்டு பிரதமர் ராம்கூலமுக்கு, தன் பரிசாக, கங்கை ஜலத்தை, குடத்தில் எடுத்துச் செல்கிறார். ராம்கூலமுக்கு பிடித்தமான அனுமான் பாசுரங்கள் அடங்கிய புத்தகத்தையும் அளிக்கிறார். இதன் ஆயிரம் பிரதிகளை அவரிடம் தந்து, பலருக்கு பரிசாக அளிக்க திட்டமிட்டுள்ளார். மொரிசியஸ் பயணம் குறித்து, பீகார் கலாசாரத்துறை அமைச்சர் ஜனார்த்தன் சிங்வி கூறியதாவது: நாங்கள் கங்கை ஜலத்தை குடத்தில் கொண்டு செல்கிறோம். மொரிசியசிலும், கங்கா தலாப் என்ற நதி உள்ளது. அங்கு, கங்கை ஜலத்தை கொட்டுவது புனிதம் என்று கருதப்படுகிறது. அதனால், இதை கொண்டு சென்று, பிரதமரிடம் அளிப்போம். பீகார் உட்பட சில வட மாநிலங்களில், போஜ்பூரி மொழி பேசும் மக்கள் வசிக்கின்றனர். இந்த மொழி பேசுவோர், பல நாடுகளுக்கு ஒரு காலத்தில் அதிக அளவில் சென்று தங்கி விட்டனர். அவர்கள் சார்பில் தான் மொரிசியசில் மாநாடு நடத்தப்படுகிறது.

மொரிசியசில், இப்போது, போஜ்பூரி மக்களின் வீட்டு வாசலில், அனுமான் கொடி பறக்கும். மொரிசியஸ், மேற்கிந்தீஸ் உட்பட 12 நாடுகளில் போஜ்பூரி மொழி பேசும் பீகாரிகள் இருக்கின்றனர். முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், 30 பேர் கொண்ட குழுவினர், மொரிசியஸ், 'பீகார் மகோத்சவ்' மாநாட்டில் பங்கேற்கிறோம்.

இவ்வாறு ஜனார்த்தன் சிங்வி கூறினார்.

தினமலர்

Bihar to market brand Bhojpuri to woo diaspora in Mauritius :: News Channel

வடமாநிலங்களில் மழை: வெள்ளத்தில் சிக்கி 55 பேர் சாவு

பாட்னா, ஜுலை.29- பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையின் காரணமாக 11 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதில் 25 பேர் பலியானார்கள்.

மொரிஷஸில் பயணத்தைத் தொடரும் முதலைமைச்சர் நிதீஷ் குமார், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத்திட்டங்களை கவனிக்காமல் அனாதரவாக விட்டுவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் ரப்ரி தேவி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

கிழக்கு உத்தரபிரதேசமும் பலத்த மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் தத்தளிக்கிறது. இங்கு காக்ரா, குணோ, காதிநாயன் ஆகிய நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்து விட்டது. இந்த பலத்த மழை, வெள்ளம் காரணமாக கிழக்கு உத்தரபிரதேசத்தில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 26 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

அசாம் மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழையால் பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கி உள்ளன. மழை வெள்ளத்துக்கு இதுவரை 4 பேர் பலியாகி உள்ளனர்.

தினத்தந்தி

Nearly three million hit by floods in India
The Hindu : National : Rain cripples North Bihar
Death, darkness, dripping roofs in S.Asia floods
Nitish carries Hanuman Chalisa and Gangajal to Mauritius- Hindustan Times

மு.க. முத்து கவலைக்கிடம்

முதல்வர் கருணாநிதியின் மகனும், நடிகருமான மு.க. முத்து உடல்நலக்குறைவுக் காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கருணாநிதிக்கும், முதல் மனைவி பத்மாவதிக்கும் பிறந்த ஒரே மகன் மு.க. முத்து. இளம் வயதில் திரைப்படத்தில் நடிக்க விரும்பிய மு.க. முத்து, முரசொலி மாறனின் பூம்புகார் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட "பிள்ளையோ பிள்ளை' படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

அப்போது, எம்.ஜி.ஆருக்கு இணையாக மு.க. முத்துவை களம் இறக்க கருணாநிதி முயற்சிப்பதாக கூறப்பட்டது. அதன் பின்பு, "பூக்காரி', "சமையல்காரன்', "அணையாவிளக்கு' உள்ளிட்ட சில படங்களில் அவர் நடித்தார். அதன்பின்பு, திரைத் துறையில் இருந்து விலகினார். அரசியல் வானில் தனது தந்தை மின்னினாலும், அதன் கவர்ச்சியில் ஈர்க்கப்படாமல் ஒதுங்கியே இருந்தார். 1991-96 ஆண்டுகளில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அதிமுகவில் சேர்ந்தார் மு.க.முத்து.

அப்போது, அவருக்கு ஜெயலலிதா ரூ. 5 லட்சம் நிதி வழங்கினார். அதிமுகவில் இணைந்தாலும், கட்சிப் பணியில் தீவிரமாக ஈடுபடாமல் இருந்தார். மு.க. முத்துவின் மகன் அறிவுநிதி. டாக்டராக உள்ளார்.

உடல்நலக் குறைவு: கடுமையான காய்ச்சல் காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சனிக்கிழமை அதிகாலை மு.க. முத்து சேர்க்கப்பட்டார். தகவல் அறிந்தவுடன் காலை 10.30 மணிக்கு முதல்வர் கருணாநிதி மருத்துவமனைக்கு நேரில் சென்று மு.க. முத்துவை சந்தித்து உடல்நலம் விசாரித்தார். அப்போது, அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி, டாக்டர் அறிவுநிதி, அவரது மனைவி பூங்கொடி, தங்கை தேன்மொழி ஆகியோர் உடன் இருந்தனர்.

நிகழ்ச்சிகள் ரத்து: மு.க. முத்துவின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதால் முதல்வர் கருணாநிதி சனிக்கிழமை மாலையில் இருந்து தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்தார். மு.க. முத்துவின் அருகிலேயே இருக்க வேண்டியுள்ளதால் நிகழ்ச்சிகளில் முதல்வர் கருணாநிதி பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என எழும்பூர் நீதிமன்ற விழாவில் பேசிய அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

தினமணி

Saturday, July 28, 2007

பாலாற்றில் அணை கட்ட ஆந்திர அரசு தீவிரம்.

ஆந்திர மாநிலம் குப்பம் அடுத்த கணேசபுரம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்ட முடிவு செய்துள்ளது. இந்த அணை கட்டினால் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம் உள்பட 5 மாவட்டங்கள் வறண்டு விடும் அபாயம் உள்ளது. கடுமையான குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும். இந்த அணை கட்டுவதற்கு அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. போன்ற கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பா.ம.க. சார்பில் அணை கட்டும் பகுதிக்கு சென்று போராட்டமும் நடத்தப்பட்டது.

இந்த அணை கட்டுவதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஆனாலும் பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதில் ஆந்திர அரசு தீவிரமாக உள்ளது. அணை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை விரைவில் நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.

அடிக்கல் நாட்டு விழாவில் முதல்-மந்திரி ராஜசேகர ரெட்டி, பொதுப்பணித்துறை மந்திரி, நீர்ப்பாசனத்துறை மந்திரி மற்றும் எம்.எல்.ஏ.க்கள், குப்பம் பகுதியில் உள்ள விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் இடத்திற்கு செல்ல தனிபாதை ஒன்றும் வேகமாக அமைக்கப்பட்டது. அப்பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். இது தவிர ஆந்திர- தமிழக எல்லைப்பகுதியில் போலீஸ் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஆந்திர அரசின் அனுமதி இல்லாமல் அணை கட்டும் பகுதிக்குள் அத்துமீறி நுழை பவர்களை கைது செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மாலைமலர்

ஆகஸ்ட் 3 முதல் சென்னைக்கு கிருஷ்ணா நீர்

கருணாநிதி கோரிக்கை ஏற்பு

தமிழக முதலமைச்சர் கருணாநிதி சென்னை மாநகரின் குடிநீர்த் தேவைக்காக, கண்டலேறு நீர்த்தேக்கத்திலிருந்து ஆகஸ்டு முதல் வாரத்தில் தண்ணீரைத் திறந்து விட அறிவுரைகள் வழங்குமாறு ஆந்திர முதல்-மந்திரி ராஜசேகர ரெட்டிக்கு 20.7.2007 அன்று கடிதம் எழுதி இருந்தார்.

முதல்-அமைச்சர் கருணா நிதியின் கோரிக்கையை உடனடியாக ஏற்று ஆந்திர மாநில முதல்-மந்திரி ராஜசேகர ரெட்டி தமிழக அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் சென்னை மாநகரின் குடிநீர்த்தேவையை நிறைவு செய்வதற்காகக் கண்டலேறு நீர்த்தேக்கத்திலிருந்து 3.8.2007 முதல் தண்ணீர் திறந்து விடுவதற்குத் தெலுங்கு கங்கைத் திட்டத்தின் தலைமைப் பொறியாளருக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மாலைமலர்

ஆந்திர மாநிலத்தில் 9 பேர் போலிசாரால் சுட்டுக் கொலை !

ஜூலை 28, 2007 ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற 'பந்த்' தின் போது ஏற்பட்ட வன்முறையறையை கட்டுப்படுத்த எடுத்த போலிசார் நடவடிக்கையில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிகிறது.

இதனை அடுத்து எதிர்கட்சிகள் முதல்வரை பதவி விலக் கோரி அறிக்கை விடுத்துள்ளனர்.

********

தட்ஸ் தமிழில் இதுபற்றிய வந்த செய்தி குறிப்பு

ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற பந்த்தில் பெரும் வன்முறை மூண்டது. போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலியாகினர்.

ஆந்திர மாநிலத்தில் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் நிலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் பயனடைந்த பெரும்பாலானவர்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் என தெலுங்குதேசம் மற்றும் பாஜக கடும் கண்டனம் தெரிவித்தன.

அரசின் விரோத போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஏழை விவசாயிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டனர். இந்த கொடூர தாக்குதலையும், ஆளும் காங்கிரசின் அராஜக செயலையும் கண்டித்து இன்று பிரதான எதிர்க்கட்சிகள் பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளன.

ஆனால் எதிர்க்கட்சிகள் விடுத்த பந்த்தை மீறி ஆந்திரா அரசு இன்று நகரில் பஸ் மற்றும் ரயில்களை இயக்கியது. இதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவின் பல இடங்களில் இயக்கப்பட்ட பேருந்துகளின் மீது தெலுங்குதேசம், பாஜகவினர் அடித்து நொறுக்கினர். ரயில் மறியலும் நடந்தது.

இந்த பந்தையொட்டி அனைத்து கல்வி நிறுவனங்கள், தியேட்டர்கள், கடைகள், தனியார் பேருந்துகள் எதுவும் இயங்கவில்லை.

பல்வேறு இடங்களில் நடந்த வன்முறையைக் கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலியாயினர்.

அப்துல்கலாம் வாசித்த கவிதை.

காந்திகிராம பல்கலைக்கழக மாணவர்களிடையே நேற்று உரை நிகழ்த்திய அப்துல்கலாம், கவிதை ஒன்றும் வாசித்தார். ஒவ்வொரு மாணவரையும் தொடர்ந்து வாசிக்கவும் கேட்டுக்கொண்டார்:

இறைவா! நீ மனித குலத்தை
சிந்திக்கும் திறனுடன் படைத்துள்ளாய்
ஆராயும் திறனை தந்துள்ளாய்
மனிதன் தைரியத்தன்மை
அடைய உண்மையாய் அருள வேண்டும்!
எந்நாட்டு மக்கள் மனதில் அன்பான
எண்ணங்கள், செயல்கள் ஊற்றெடுக்க வேண்டும்
இந்நாட்டில் பிளவு சக்திகள் முறியடிக்க வேண்டும்
என் தேசத்தில் அனைத்து மத
தலைவர்களுக்கும் நல் அருள் புரிய வேண்டும்!
கொள்கைகளில் வேறுபாடு களைய வேண்டும்
எல்லா அமைப்புகளுக்குள்ளும்
நாட்டு மக்களுக்குள்ளும்
விரோத தன்மையில்லாமல் மக்களை
நல்வழி காட்டுவாயாக!
தனி மனிதனை விட தேசம் முக்கியம்
என்ற எண்ணம் மக்கள், தலைவர்கள்
மனதில் மலர செய்வாயாக!
அமைதி கொழிக்கும் தேசமாக வளர
பாடுபட்டு உழைக்க நல் அருள் புரிவாயாக!

காவல்துறையினர் செய்யும் பொதுமக்கள்அலைகழிப்பு களையப்படும். - ஐ.ஜி

விழுப்புரம் சரக காவல்துறை சார்பில் விழுப்புரம், கடலூர் மாவட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு பொதுமக்களிடம் நன்மதிப்பை பெறுவது குறித்த 1 வார கால பயிற்சி தொடக்க விழா சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக லிப்ரா அரங்கில் நடந்தது.

பயிற்சிக்கு அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் ரத்தின சபாபதி தலைமை தாங்கினார். விழுப்புரம் சரக உதவி பொது ஆய்வாளர் (டி.ஐ.ஜி) வன்னிய பெருமாள் வரவேற்றார். விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெரியய்யா, கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் பிரதீப் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பயிற்சியை சென்னை வடக்கு மண்டல பொது ஆய்வாளர் ((ஐ.ஜி)) ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர்,

தமிழக காவல் துறையில் அறிவாற்றல், திறமை, மனப்பாங்கு ஆகிய 3 அம்சங்கள் உள்ளது. அதில் அறிவாற்றல், திறமை போலீசாரிடம் உள்ளது. மனப்பாங்கு மட்டும் தேவைப்படுகிறது.

பொதுமக்களிடம் போலீசார் 2 விதத்தில் மட்டும் நன்மதிப்பை பெற்றுள்ளனர். குற்றங்களை கண்டு பிடித்தல், கட்டுப்படுத்துதல் ஆகியவற்றில் திறமையாக செயல்படுகிறார்கள்.

போலீசார் நடந்து கொள்ளும் முறையைதான் குறைத்து மதிப்பிடுகிறார்கள். நாம் பொதுமக்களிடம் நன்மதிப்பை பெறும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.

நம்முடைய பணி நல்ல பணி. தமிழ்நாட்டு காவல் துறை மிக உயர்ந்த பணியை செய்துவருகிறது. இதனை யாராலும் மறுக்க முடியாது.

மதவாத, சாதிய, மொழிய, வட்டார சண்டை சச்சரவுகள் அதிகமாக உள்ளது. காவல்துறை மட்டுமே இதனை கட்டுப்படுத்த முடியும். மற்ற வேறு எந்த துறையாலும் கட்டுப்படுத்த முடியாது.

14 மாதம் ஐ.ஜி.யாக வேலைபார்த்து வருகிறேன். தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தமிழக காவல்துறையை பாராட்டியுள்ளார்.

போலீஸ் நிலையத்துக்கு வரும் பொதுமக்களுக்கு மன கஷ்டம் இல்லாமல் நம்முடைய வேலையை செய்து கொடுக்க வேண்டும். குறிப்பாக முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) போடுவதில் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். இது போன்ற மாற்றங்களை ஏற்படுத்தத்தான் இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது.


இவ்வாறு ராதா கிருஷ்ணன் கூறினார்.

ஜல்லிக்கட்டுக்கு தடை! - உச்சநீதிமன்றம்.

சர்ச்சைகளுக்கிடையே ஒவ்வொரு பொங்கல் விழாக்கொண்டாட்டங்களின் போதும் வீரவிளையாட்டான 'ஜல்லிக்கட்டு'க்கு இடப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் விலக்கி வைக்க... மேல்முறையீட்டைக் கேட்ட உச்சநீதிமன்றமோ இறுதி உத்தரவு வரும்வரை தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மிருகவதை தடுப்புச்சட்டம் 1960ஐ முன்வைத்து விலங்கின நல வாரியத்தின் சார்பாக மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் வாதாடினார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், தருண் சாட்டர்ஜி, ஆர்.வி ரவீந்திரன் அடங்கிய நீதிமன்ற குழு (பெஞ்ச்) இத்தீர்ப்பை அளித்தனர்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அதிரடி தடை * சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு - தினமலர்

சென்னை மாநகரத்தில் 25 வளர்ச்சிப் பணிகள்.

அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார்.

சென்னை மாநகரத்தில் 25 வளர்ச்சிப் பணிகளை 4புள்ளி 45 கோடி ரூபாய் செலவில் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார்.

ஓட்டேரி வாழைமா நகர் 38- வது வார்டில் 4 புள்ளி 99 லட்ச ரூபாய் செலவில் உடற்பயிற்சிக் கூடம், பச்சக்கல் வீராசாமி தெரு, 56-வது வார்டில் 5 புள்ளி 44 லட்ச ரூபாய் செலவில் தமிழ்நாடு குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் சத்துணவுக் கூடம், சிட்கோநகர், 63-வது வார்டு 51-வதுதெரு, 10-வது தெரு, 42- வதுதெரு, மற்றும் பிரதானசாலையில் 44 புள்ளி 16 லட்ச ரூபாய் செலவில் அங்கன் வாடி மையங்கள் உட்பட பல்வேறு வளர்ச்சிப்பணிகளை மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஸ்டாலின் வடசென்னை மேலும் மேம்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

வைகுண்ட ராஜனும், போஸ்டரும்!

தலைமறைவாக இருக்கும் வைகுண்டராஜன் மீது, புதிய புதிய வழக்குகளைப் போட்டு வருகிறார்கள். அவரை எப்படியாவது கைது செய்து விட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறது காவல்துறை. ஆனால் முதல்வரோ, "அ.தி.மு.க.வுக்கு பண்ணையார் வெங்கடேஷ் என்கௌன்ட்டர் போல் தி.மு.க.வுக்கு வைகுண்டராஜன் விவகாரம் ஆகிவிடக்கூடாது'' என்று கவனமாக காய் நகர்த்தி வருகிறாராம்.

இதற்கிடையில் தென் மாவட்டங்களில் ஆங்காங்கே போஸ்டர்கள் அடித்து ஒட்டி வருகிறது நாடார் தரப்பு. அதில் உள்ள வாசகங்கள், நாடார் சமுதாயத்தினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆரம்பத்தில் வைகுண்டராஜனின் விவகாரத்தை தனிப்பட்ட மோதலாக அந்தச் சமுதாய மக்கள் நினைத்தார்கள்.

ஆனால் டாட்டாவிற்கு தொழிற்சாலை அமைக்க நடைபெறும் நில எடுப்பிற்குப் பிறகு தங்கள் சமுதாயத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலாக நினைக்கிறார்கள். இதில் சமுதாய உணர்வு அடங்கிக் கிடக்கிறது என்பதைப் புரிந்து கொண்ட முதல்வர் தற்போது, "டாட்டா தொழிற்சாலையில் சமுதாய மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்'' என்று அறிக்கை விட்டுள்ளார்.

தமிழன் எக்ஸ்பிரஸ்

Vaikundarajan case takes a new turn :: Chennai Online News Service - View News
The Hindu News Service :: Company MD files anticipatory bail application
Jaya TV partner files petition for bail: ஜெயா டிவி பங்குதாரர் 'தலைமறைவு' - வைகுண்டராஜன் முன் ஜாமீன் கோரி மனு
Zee News - Stiff opposition to Tata`s titanium-di-oxide project in TN: "40,000 families would be displaced as the Tata company is planning to set up the plant on 12,000 acres of land. "

ஷோபா, சினிமோலுக்கு வெள்ளி

அம்மான் (ஜோர்டான்), ஜூலை 28: அம்மானில் நடந்துவரும் ஆசிய தடகள சாம்பியன் போட்டியில் ஹெப்டலத்லான் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.

வியாழக்கிழமை நடந்த மகளிருக்கான ஹெப்டத்லான் போட்டியில் ஜே.ஜே. ஷோபா 5356 புள்ளிகளைச் சேர்த்து இரண்டாம் இடத்தைப் பிடித்தார். மற்றொரு இந்திய வீராங்கனை சுஸ்மிதா சிங் ராய் 5154 புள்ளிகளைச் சேர்த்து 3-ம் இடத்தைப் பிடித்தார்.

இப் பிரிவில் கஜகஸ்தான் வீராங்கனை இரினா நாமென்கோ 5671 புள்ளிகளுடன் தங்கத்தை தட்டிச் சென்றார்.

முன்னதாக நடந்த 800 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் சினிமோல் பவுலோஸ் 2 நிமிஷம் 6.15 வினாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார்.

வியத்நாம் வீராங்கனை தான் ஹேங் தங்கம் வென்றார். நேரம்: 2 நிமிஷம் 4.77 வினாடி.

தினமணி

The Hindu : Sport / Athletics : China wins gold in women’s walk
India eNews - Asian athletics: Chitra wins gold, Anju silver

'பா.ம.க. ஒரு புலி' - முதலமைச்சர் கருணாநிதி பேட்டி

புதுடில்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் அளித்த பதில்கள்:

செய்தியாளர்: மக்கள் பிரச் சினைகளை நாங்கள் எடுத்துச் சொல்வோம். யாரும் வாய்ப் பூட்டு போட முடியாது என்று பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறி இருப்பதைப் பற்றி?

கலைஞர்: மக்கள் பிரச்சி னைகளை எடுத்து வைக்க வேண்டாமென்று நாங்கள் சொல்லவில்லை. அண்ணா ஒரு முறை சட்டப் பேரவையிலே சொன்னார். 1967 ஆம் ஆண்டு அண்ணா அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார் பிலே தேர்தலிலே நின்றார் என்றாலும் கூட, சுதந்திரக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழரசுக் கழகம், சோஷலிஸ்ட் கட்சி போன்ற கட்சிகளை எல்லாம் கூட்ட ணியாகச் சேர்த்துக் கொண்டு, அந்தத் தேர்தலில் அண்ணா ஈடு பட்டார்.

அதிலே நாங்கள் மகத்தான் வெற்றியும் பெற் றோம். கூட்டணியில் உள்ள சிலர் ஓராண்டிற்குப் பிறகு அல்லது சில மாதங்களுக்குப் பிறகு அண்ணா தலைமையில் உள்ள கழக அரசை விமர்சிக் கும்போது சற்றுக் கடுமையாக விமர்சித்தார்கள். அண்ணா விமர்சனங்களுக்கு விரோதி அல்ல. அவரும் தலை சிறந்த ஜனநாயகவாதிதான். அவரிடம் பயின்றவன்தான் நானும்.

அந்த நேரத்திலே அண்ணா - என்னுடைய அரசின் குற்றம் குறைகளை எடுத்துச் சொல்லும்போது சில கட்சிகள் பூனை தன் குட்டியை வாயிலே கவ்வி எடுத்துச் செல்வதைப் போல மென்மையாக எடுத்துச் சொல்கின்றன. சில கட்சிகள் பூனை எலியைப் பிடித்து வாயிலே கவ்விக்கொண்டு செல் வதைப் போல் குற்றம் குறை களைக் கண்டிக்கின்றன என்று அண்ணா சொன்னார். அதற் காக பூனை, குட்டியைக் கவ்வித் தூக்கிக் கொண்டு சொல்லக் கூடாது என்று கூறவில்லை.

செய்தியாளர்: நீங்கள் கூறிய தில் பா.ம.க. பூனையா? எலியா?

கலைஞர்: என் கருத்துப்படி பா.ம.க. ஒரு புலி. நீங்கள் தூண்டிவிடலாம் என்று நினைத் தால், புலி என்ன செய்யும் என்று உங்களுக்கே தெரியும்.

செய்தியாளர்: குடியரசுத் தலைவர் பதவிப் பிரமாணத் தின் போது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் துணை வியாருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டபோது கனிமொழிதான் உடனடியாக ஓடிவந்து அவரை அழைத்துச் சென்று பணிவிடை செய்தார். அதை எல்லோரும் பாராட்டி னார்கள். உங்கள் கவனத்திற் கும் கொண்டு வரலாம் என நினைத்தோம்.

கலைஞர்: நானும் கேள்விப் பட்டேன்.

முழுவதும் படிக்க...

அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேரோட்டம்

விழுப்புரம் மாவட்டம் ரிஷி வந்தியத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேரோட்டத்தின்போது பள்ளத்தில் சக்கரம் இறங்கி தேர் கவிழ்ந்தது. இச்சம்பவத்தில், அர்ச்சகர் சோமு, கோயில் பணியாளர் ஜெயராமன் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

விடுதலை நாளிதழ்

Friday, July 27, 2007

மொபைல் போன் மூலம் புத்தகம் எழுதினார்

இத்தாலியைச் சேர்ந்த ராபர்ட் பெர்னாக்கோ என்பவர் தனது அலுவலகப் பணிக்குப் போய் வரும் போது மொபைல் போனை பயனப்டுத்தி ஒரு புத்தகத்தையே எழுதியுள்ளார். மொத்தம் 384 பக்க அறிவியல் நாவலை அவர், தனது நோக்கியா போனை பயன்படுத்தி இந்த நாவலை எழுதியுள்ளார்.

கேம்பனி டி வியாகோ என்ற பெயரிலான அந்த நாவல் மொபைல் போனில் எழுதப்பட்டிருப்பது உலகிலேயே முதல் முறை என்று தெரிய வந்துள்ளது. இந்தப் புத்தகம் தற்போது பதிப்பிக்கப்பட்டுள்ளது. லுலு டாட் காம்-இல் அந்தப் புத்தகம் பதிப்பிக்கப்பட்டிருப்பதாக பதிப்பக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Commuter writes book using mobile phone | Reuters.ca
First book ever written using mobile phone is published

திருநங்கைகள் - விழிப்புணர்வு இயக்கம்


ஆந்திராவின் வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அரவாணிகள், விழிப்புணர்வு இயக்கம் தொடங்கியிருக்கின்றனர். மனித உரிமைகள், எய்ட்ஸ் ஒழிப்பு குறித்து மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகின்றனர். ஹோமோசெக்ஸ் பழக்கம் கொண்ட இளைஞர்களிடம் காண்டம் பயன்படுத்துவது குறித்து விளக்குகிறார் ஒரு அரவாணி.


செய்தி, படம்:

நன்றி: தமிழ் முரசு

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: பிரீஜாவுக்கு வெள்ளிப் பதக்கம்

ஆசிய தடகள சாம்பியன் போட்டியில் பிரீஜா ஸ்ரீதரன் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்றுத் தந்தார். ஜோர்டான் தலைநகர் அம்மானில் புதன்கிழமை இப் போட்டி தொடங்கியது.

மகளிருக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியில், தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட பிரீஜா ஸ்ரீதரன், 36 நிமிஷம் 4.54 வினாடிகளில் இலக்கை எட்டி 2-ம் இடத்தையே பிடிக்க முடிந்தது.

இது, கடந்த மே மாதம் கோல்கத்தாவில் நடந்த ஃபெடரேஷன் கோப்பை போட்டியில் அவர் வெளிப்படுத்திய திறமையைக் காட்டிலும் மோசம் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது 33 நிமிஷம் 19.71 வினாடிகளில் 10 ஆயிரம் மீட்டர் தூரத்தைக் கடந்திருந்தார்.

பஹ்ரைன் வீராங்கனை கரீமா சலே ஜாஸ்மின் (34 நிமிஷம் 26.39 வினாடி) தங்கப் பதக்கத்தைப் பெற்றார். வட கொரியாவைச் சேர்ந்த கியோங் கிம் 38 நிமிஷம் 29.90 வினாடிகளில் இலக்கை எட்டி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

இந்தியாவிலிருந்து நீளம் தாண்டுதல் வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் உள்ளிட்ட 14 மகளிர் உள்பட 41 பேர் கொண்ட குழு ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றுள்ளது. உலகப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை எட்டுவதற்கு அஞ்சு பாபி ஜார்ஜுக்கு இதுவே கடைசிப் போட்டியாக அமைந்துள்ளது. வெள்ளிக்கிழமை மகளிருக்கான நீளம் தாண்டுதல் போட்டி நடைபெறுகிறது.

தினமணி

The Hindu : Sport / Athletics : Francis shatters Asian 100m record

டென்னிஸ்:சானியா தொடர் வெற்றி !

அமெரிக்காவின் ஸ்டான் போர்டில் நடந்து வரும் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா தொடர்ந்து முன்னேறி வருகிறார்.

அமெரிக்காவின் ஸ்டான்போர்டு நகரில் நடைபெற்று வரும் வெஸ்ட் கிளாசிக் பேங்க் சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் பிரான்ஸ் வீராங்கனை தாதியானாவை 6-4, 6-1 என்ற செட் கணக்கில் சானியா வென்றார். இதன் மூலம் அவர் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அதே போல இரட்டையர் பிரிவின் காலிறுதிப் போட்டியில் சானியா மிர்சா-ஷகார்பீர் ஜோடி அகுல்-ஏஞ்சலினா ஜோடியை வென்றது. இதன் மூலம் சானியா ஜோடி அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இன்று நடக்கும் ஒற்றையர் பிரிவின் காலிறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் பட்டி சிசென்டருடன் மோதுகிறார் சானியா. இந்தப் போட்டியில் சானியா சாம்பியன் பட்டம் பெற்றால் உலக டென்னிஸ் தர வரிசையில் முன்னேற வாய்ப்பு ஏற்படும்.

கலாமின் எழுத்துக்கள் காணாமல் போயின

www.presidentofindia.nic.in தளத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பேச்சுக்களும் குறிப்புக்களும் அவர் பதவி இறங்கிய சிலமணித்துளிகளிலேயே காணாமல் போய்விட்டது. "கட்டுமானத்தில் உள்ளது" என்ற அறிவிப்பே வரவேற்கிறது. அவரைப் பற்றிய குறிப்புகளையெல்லாம் 'முன்னாள்' என்ற அடைமொழி சேர்க்க வலைத்தளம் மூடப்பட்டுள்ளதாக குடியரசுதலைவர் மாளிகை அதிகாரி ஒருவர் கூறினார். இந்த தளத்தில் அவரது பேச்சுக்கள், புத்தகங்கள், கவிதைகள் மற்றும் மின்னஞ்சல் உரையாடல்கள் போன்றவை இருந்தன. சிறுவர்களுக்கான பகுதியும் பார்வை குறையுற்றவர்களுக்கு ஒலி ஊடக தளமும் இருந்தது. நாளும் 250,000 பேர் வருகைதந்த இந்த தளம் மிகவும் படிக்கப் பட்டு வந்தது.

இனி அவருக்கான தனி தளமாக abdulkalam.com இருக்கும். இது அவர் கு்.தலைவராக பதவியேற்கும் முன் அவரது 69வது பிறந்தநாளன்று இன்ஃபோசிஸ் நிறுவனரால் துவக்கி வைக்கப் பட்டது. இதனை Aeronautical Development Agency யின் துணை திட்ட இயக்குனராக பணிபுரியும் பொன்ராஜ் நிர்வகித்து வருகிறார்.

India eNews - Kalam's writings disappear from presidential website

ஹனீஃப் மீது குற்றம் எதுவுமில்லை: ஆசி. காவல்

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் கடந்த மூன்று வாரங்களாக காவல்துறையினரால் 'விசாரிக்கப்'பட்டு வந்த இந்திய மருத்துவர்ஹனீஃப் மீது சாட்டப்பட்டிருந்த தீவிரவாதிகளுக்கு உதவியவர் என்ற குற்றசாட்டை விலக்கிக் கொள்வதாக அரசுவக்கீல் நீதிமன்றத்தில் விண்ணப்பித்தனர். இவ்வழக்கை காமன்வெல்த் அரசு குற்றத்துறை இயக்குனர் (Commonwealth Director of Public Prosecution) மீள் ஆய்வு செய்து 'தவறு' நடந்திருப்பதாகக் கூறி வழக்கை விலக்கிக் கொண்டதாகக் கூறினார்.

இனி அவரது பணிவிசா இரத்து செய்யப்பட்டதும் விலக்கிக் கொள்லப்படுமா என தெரியவில்லை. அவரது குடும்பத்தினர் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள களங்கத்தை முற்றிலும் சரிசெய்துகொண்டே திரும்ப உறுதியாக உள்ளனர்.

Terrorism charges against Haneef dropped

சென்னையை தனியாக சுற்றி வந்த அப்துல்கலாம் : தனக்கு பிடித்தமான ஓட்டலில் சாப்பிட்டார்.

ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற அப்துல்கலாம், ஓய்வு பெற்ற நேரத்தில் இருந்தே தன்னை பிஸியாக்கிக் கொண்டார்.

நேற்று மட்டும் 3 நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் இரவு 10 மணிக்கு தனியாக சென்னையை வலம் வந்துள்ளார். தான் விஞ்ஞானியாக இருக்கும்போது அடிக்கடி சாப்பிடும் ஓட்டலான அண்ணாசாலை அன்னலட்சுமி ஓட்டலுக்கு சென்ற கலாம், அங்கு சாம்பார், ரசம், போண்டா உள்ளிட்டவைகளை ருசித்தார். அப்போது ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுமிகள் கலாமிடம் வந்து பேசி ஆட்டோகிராப் பெற்றுச் சென்றனர். இரவு 11.45 மணி வரை அவர் அங்கு இருந்ததாக ஓட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

டாடா நிறுவனம் ஆரம்பிக்கும் தொழிற்சாலையை அரசே நடத்தாமல் தனியாருக்கு தரவேண்டிய அவசியம் என்ன?

நடிகர் சரத்குமார் கேள்வி!

டாடா நிறுவனம் ஆரம்பிக்கும் தொழிற்சாலையை அரசே நடத்தாமல் தனியாருக்கு தரவேண்டிய அவசியம் என்ன? என்று நடிகர் சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். டாடா நிறுவனம் தொழிற்சாலையின் முதல்கட்டத்தை துவங்க 30 மாதங்கள் ஆகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காலத்தில் கணிமவளத்தினை தோண்டி எடுத்து வெளியில் விற்பார்களா? அல்லது 30 மாதங்கள் கழித்து தொழிற்சாலை ஆரம்பித்து டைடானியம் டை ஆக்சைடு தயாரிக்கும் வரை கணிம வியாபாரம் செய்யாமல் இருப்பார்களா? அணுசக்தி உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் கணிமங்களை சட்டவிரோதமாக சிலர் வெட்டி எடுப்பதாகவும், அதனால் இந்த பகுதி மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்று அரசு கூறியுள்ளது. அப்படி என்றால் இதுபோன்ற தொழிற்சாலையை அரசே தொடங்கி நடத்தலாமே என்று அந்த அறிக்கையில் நடிகர் சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

கதகளி கலைஞர் குமாரன் நாயர் காலமானார்

பிரபல கதகளி கலைஞர் குமாரன் நாயர் (93) வியாழக்கிழமை காலமானார். நிமோனியாவால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாள்களாக கேரளத்தில் உள்ள பாலக்காடு மருத்துவமனையில் அவர் சிகிச்சைப் பெற்று வந்தார்.

கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக இத்துறையில் உள்ள அவர், கேரளத்தின் முன்னணி நடனப் பள்ளியான கலமண்டலத்தில் ஆசிரியராகப் பணியாற்றியவர். 1950-களில் வெளிவந்த தமிழ் உள்பட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடன இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

கதகளி கலைஞர்களின் வாழ்க்கையை சித்தரித்து எடுக்கப்பட்ட மோகன் லால் நடித்த 'வனப்பிரஸ்தம்' என்ற மலையாளத் திரைப்படத்திலும் குமாரன் நாயர் நடித்துள்ளார்.

தினமணி

The Hindu News :: Kathakali maestro Kumaran Nair dead

'டி.வி. சேனல் மன்னிப்பு கேட்க வேண்டும்': ரகசிய கேமரா வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு

லஞ்சம் பெற்றுக்கொண்டு அப்துல் கலாம் உள்ளிட்டோருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்ததை ஜீ (Zee) டிவி சேனல் ரகசிய கேமராவில் படம்பிடித்தது தொடர்பான வழக்கில் முக்கியத் திருப்பமாக, அந்த டி.வி. சேனல் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்கவேண்டும் என உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

இந்த வழக்கில் டி.வி. சேனல் அளித்த விளக்கங்கள் திருப்தியளிக்காததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தைச் சேர்ந்த 3 வழக்கறிஞர்கள் ரூ.40 ஆயிரம் கொடுத்து அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வி.என்.கரே, நீதிபதி பி.பிசிங் மற்றும் மூத்த வழக்கறிஞர் ஆர்.கே.ஜெயின் ஆகியோருக்கு எதிராக கீழ்நீலை நீதிமன்றத்தில் பிடிவாரன்ட் பெற்றதை ரகசிய கேமராவில் படம்பிடித்து 'ஜீ' டி.வி. 2004-ம் ஆண்டு ஒளிபரப்பியது.

இந்தியா முழுவதும் இச் சம்பவம் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. நீதித்துறையின் கீழ்மட்டத்தில் நடக்கும் முறைகேடுகளைகளைச் வெளிக் கொணரவே இந்த ரகசிய கேமரா நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஜீ டிவி தரப்பில் கூறப்பட்டது.

'இந்த ரகசிய கேமரா நடவடிக்கையால், நீதித்துறையின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை முற்றிலுமாகக் கேள்விக்குள்ளானது. இது போன்ற செயல்கள் நடந்திருக்குமோ என நாட்டில் உள்ள அனைவரும் நம்பினார்கள். நீதிபதிகளும் இதற்கு விதிவிலக்கல்ல' என தலைமை நீதிபதி கூறினார்.

நீதித்துறையின் நற்பெயருக்குக் களங்கம் கற்பிக்கவே இந்த ரகசிய கேமரா நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற நீதிபதிகளின் கருத்துக்கு டி.வி. தரப்பில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தால் மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி விடவேண்டும் என்ற எண்ணம் டி.வி.க்கு இல்லை; மக்களின் நலன் கருதியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என டி.வி. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

'இந்த நடவடிக்கையால் மக்களுக்கு என்ன நன்மை செய்தீர்கள்' என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

'இந்த நடவடிக்கை மூலம், அதைச் செய்த செய்தியாளர் மிகப் பெரிய குற்றத்தைச் செய்துள்ளார். அவரது செயலால் வாரன்ட் வழங்கிய நீதிபதி இரண்டு ஆண்டுகள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார். விசாரணையில் நீதிபதி எந்தத் தவறும் செய்யவில்லை என்று தெரியவந்துள்ளது. எந்த ஆவணமும் இல்லாமல் நீதிமன்றத்தில் பிடிவாரன்ட் பெறலாம் என்ற எண்ணம் எழுந்துள்ளது' என நீதிபதிகள் தெரிவித்தனர்.

வாரன்ட் பெற்ற வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பார் கவுன்சிலுக்கு முழு அதிகாரம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமணி

NDTV.com: SC orders journalist to apologise
The Hindu News :: Cash-for-warrant: SC for unconditional apology from channel

அட்டகாசம் செய்த யானைகள் கொல்லப்பட்டன

இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அசாம் மற்றும் மிசோராம் மநிலங்களின் எல்லைப் பகுதியில், ஆக்ரோசம் கொண்டு, 8 கிராமவாசிகளைக் கொன்ற பழக்கப்படுத்தப்பட்ட இரண்டு யானைகளைப் பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ளார்கள்.

மரங்களை இழுத்துச் செல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட இந்த யானைகள், மதங்கொண்டு, மூங்கிலாலும், வைக்கோலாலும் அமைக்கப்பட்ட பல குடிசைகளைத் துவம்சம் செய்தன. யானைகள் இயற்கையாக வாழும் இடங்களை மனிதர் ஆக்கிரமிப்புச் செய்வதால், கடந்த காலங்களில் காட்டு யானைகளுக்கும், மனிதர்களுக்கும் இடையிலான மோதல்கள் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் இப்படியாகப் பழக்கப்படுத்தப்பட்ட யானைகள் அட்டகாசம் செய்வது மிகவும் அரிதாகும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

BBC Tamil

Rogue elephants shot after killing eight in Assam | Reuters.com

1 பைசாவுக்கு 29 ஆண்டு போராடிய வியாபாரி

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் மிதாபூர் கிராமத்தைச்சேர்ந்தவர் தேவ்ராஜ் 1976ம் ஆண்டு அகமதாபாத்தை சேர்ந்த தன்ராஜ் மதன்லால் என்பவருக்கு 52,934 ரூபாய் ஒரு பைசா கடன் கொடுத்திருந்தார். தன்ராஜ் அந்த கடனை 1978-ம் வருடம் ஆகஸ்டு 14 திருப்பிச் செலுத்தினார். அப்போது ஒரு பைசாவை மட்டும் திருப் பிக்கொடுக்கவில்லை.

தனக்கு தன்ராஜ் ஒரு பைசா கடன் மற்றும் செலுத்த வேண்டிய வட்டி ரூ.14,934ஐ கேட்டு ஜோத்பூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதற் காக நோட்டீசு அனுப்ப ரூ.11 செலவு செய்தார்.

விசாரணைக்குப் பின் 1988ம் ஆண்டு கோர்ட்டு தீர்ப்பு கூறியது. அதில் தேவ ராஜிடம் ஒரு பைசாவை மட்டும் தன்ராஜ் திருப்பி செலுத்த வேண்டும் என்று கூறி இருந்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து 1989ல் தேவராஜின் மகன் பிரசன்ராஜ் ராஜஸ்தான் ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். 18 ஆண்டு விசாரணைக் குப் பின் ஐகோர்ட்டு நீதிபதி கோபால் கிரிசன் வியாஸ் அளித்த தீர்ப்பில் தேவராஜுக்கு தன்ராஜ் ஒரு பைசா மற்றும் வழக்கு நோட்டீசு செலவு ரூ.11ஐ மட்டும் திருப்பி செலுத்தினால் போதும் இரு வரும் கடனுக்கான வட்டி தொடர்பாக எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை. இதனால் மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்றார்.

மாலைமலர்

Trader fights 29 years to recover one paisa - India

ஜனாதிபதி பதவியேற்பு விழா துளிகள்...

* நாடு சுதந்திரம் அடைந்த 57 ஆண்டுக்குப் பின் முதல்பெண் ஜனாதிபதியாக பதவியேற்ற பிரதீபா பட்டீலுக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இவர் ஜனாதிபதிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்த முதல் தலித் நீதிபதி.

* பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கிய ஜனாதிபதி பதவியேற்பு விழாவுக்கு, பகல் 1.30 மணியில் இருந்தே முக்கிய பிரமுகர்கள் வரத்தொடங்கிவிட்டனர். 1.50 மணிக்கு சோனியா வந்தார். எம்.பி.க்கள் புடை சூழ வந்த உ.பி. முதல் - மந்திரி மாயாவதி, நீண்டகால தோழியை போல் சோனியாவின் தோளில் கைபோட்டு வணக்கம் தெரிவித்தார்.

* கருணாநிதியுடன் வந்த துணைவியார் ராஜாத்தி அம்மாள், மகள் கனிமொழி கருணாநிதி எம்.பி. இருவரும் தலைமை நீதிபதியின் மனைவி மற்றும் பிரதீபா பட்டீலின் நெருங்கிய உறவினர்கள் அருகே அமர்ந்தனர்.

* ஜனாதிபதி தேர்தலில் முக்கிய பங்கு வகித்ததை உணர்த்தும் விதத்தில், முதல் மந்திரிகள் கருணாநிதி, மாயாவதி இருவரும் சோனியாகாந்தியின் அருகில் அமர்ந்து இருந்தனர்.

* முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டார்.

* அத்வானி 4-வது வரிசையில் அமர்ந்து இருந்தார். பா.ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங் முதல் வரிசையில் பிரதீபா பட்டீலின் கணவருக்கு அருகில் உட்கார்ந்து இருந்தார்.

* ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்த பைரோன்சிங் செகாவத் விழாவில் பங்கேற்றார். முதலில் பிரதமர் மன்மோகன்சிங் அருகில் அமர்ந்த அவர், மத்திய மந்திரி அர்ஜுன்சிங் வந்ததும் அவருக்கு அந்த இடத்தை கொடுத்துவிட்டு அடுத்த இடத்தில் அமர்ந்து கொண்டார்.

* 2.10 மணிக்கு பிரதீபா பட்டீலின் கணவர் தேவிசிங் செகாவத்தை கவர்னர் மாளிகையின் மெய் காப்பாளர்கள் மரியாதையுடன் அழைத்து வந்து பார்வையாளர் முதல் வரிசையில் கடைசி இருக்கையில் அமர வைத்தனர்.

* விழா தொடங்குவதற்கு முன்பு அவரை யாருக்கும் தெரியவில்லை. விழா நிகழ்ச்சிகள் முடிவடைந்து சம்பிரதாய முறைப்படி பிரதீபா பட்டீல் மண்டபத்தின் பிரதான நுழைவாயிலை நோக்கி கைகளை கட்டியபடி மெதுவாக நடந்துசென்றபோது அப்துல் கலாம் உள்ளிட்ட அனைவரும் நேராக நின்றபடி மரியாதை செலுத்தினார்கள்.

மண்டபம் முழுவதும் அமைதி நிலவிய அந்த நேரத்தில் முன் வரிசையில் வெள்ளை நிற உடையில் இருந்த உயரமான தேவிசிங் மட்டும் பின்புறம் திரும்பி பிரதீபா பட்டீல் செல்வதை பார்த்தார். பிரதீபா பட்டீல் வெளியேறிய போது, தேவிசிங்கும் தனக்கு அருகில் இருந்த நுழைவாயிலை நோக்கி மெதுவாக நகர்ந்து சென்றதை பார்க்க முடிந்தது.

* விழா முடிந்ததும் பிரதீபா பட்டீலுக்கு முதலில் வாழ்த்து சொன்னவர் பா.ஜனதாவை சேர்ந்த ராஜஸ்தான் மாநில முதல் - மந்திரி வசுந்தரா ராஜே ஆவார்.

* ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் முதன் முறையாக மாநில முதல்-மந்திரிகள், கவர்னர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது.

* அப்துல் கலாம் ஜனாதிபதியாக பதவி வகித்தபோது ஆற்றும் உரைகளில் திருவள்ளுவரின் திருக்குறளில் இருந்து கவிதை வரிகளை எடுத்துச்சொல்வது வழக்கம். நேற்று உரையாற்றிய புதிய ஜனாதிபதி பிரதீபா பட்டீல் மராத்தி கவிஞர் துக்காராமின் கவிதை வரிகளை மேற்கோள் காட்டினார்.

* அ.தி.மு.க. மற்றும் ம.தி.மு.க. தலைவர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை.

தினத்தந்தி

அனைத்து ஊர்களுக்கும் ஆப்டிக் பைபர் வயர் மூலம் கேபிள் டி.வி. இணைப்பு: தமிழக அரசு முடிவு

தமிழக அரசின் எல்காட் நிறுவனம் மூலம் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு தமிழக அரசிடம் வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாடு முழுவதும் கேபிள் இணைப்பு வழங்குவது எப்படி? டி.வி. ஒளிபரப்பு தெளிவாக இருக்கும் வகையில் எவ்வாறு இணைப்பு கொடுப்பது என்பது குறித்து ஆய்வு செய்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

தொலைபேசி, இணைய தள வசதிக்காக ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும், ஆப்டிக் பைபர் வயர்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழக அரசு கேபிள் டி.வி. இணைப்புகளை வழங்கினால் 17 ஆயிரம் வருவாய் கிராமங்களுக்கு இது பயன்படும்.

டி.வி. தவிர டெலிபோன், இன்டர்நெட் இணைப்புகளையும் இதன் மூலம் வழங்க முடியும். இதனால் தமிழ் நாட்டின் அனைத்து வருவாய் கிராமங்களுக்கும், விரைவில் கேபிள் டி.வி. இணைப்பு, டெலிபோன், இன்டர்நெட் வசதிகளை வழங்க முடியும். தற்போது ஒன்றியங்கள் அளவில் பதிக்கப்பட்டுள்ள கேபிள் இணைப்பு சிறிய கிராமங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டால், 2 வருடங்களில் தமிழ்நாட்டின் அனைத்து ஊர்களுக்கும் தமிழக அரசு கேபிள் டி.வி. இணைப்பு வழங்க முடியும்.

இந்த தகவலை எல்காட் நிறுவன நிர்வாக இயக்கு னர் சி.உமாசங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்த அரசுக்கு ரூ.500 கோடி வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கேபிள் இணைப்புகளை பராமரித்தல், கட்டணம் வசூல் செய்தல் ஆகிய பணிகளை உள்ளாட்சி துறை மற்றும் சுய உதவிகுழுக்கள் மூலம் நடத்தலாம் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

நகர் புறங்களில் 6 மாதங்களுக்குள்ளும், கிராமங்களில் ஒரு வருடங்களுக்குள்ளும் இந்த திட்டத்தை நிறைவேற்றலாம். இதற்காக சென்னையிலும், மதுரையிலும் தனி அலுவலகங்ககள் அமைக்கலாம்.

'டிஜிட்டல்' முறையில் இந்த இணைப்பு வழங்கப்பட்டால் தெளிவான ஒளிபரப்பு கிடைக்கும். பணம் செலுத்தாதவர்களுக்கு இணைப்பை துண்டிக்க முடியும். கட்டண வசூலையும் 'ஆன்லைன்' செய்ய முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மாலைமலர்

ELCOT to bring all households under cable TV network in Tamil Nadu @ NewKerala.Com News Channel

Thursday, July 26, 2007

நடுவானில் விமானத்தில் இறந்த குழந்தை.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு மொரீசியசில் இருந்து விமானம் ஒன்று புறப்பட்டு வந்தது. இதில் கிரண் முகமது (35), அவரது மனைவி செய்யது பீவி (30) ஆகியோர் பயணம் செய்தனர்.

தங்களது 5 மாத குழந்தை ஹைதர்அலிக்கு இருதய கோளாறு தொடர்பான சிகிச்சை பெறுவதற்காக அவர்கள் சென்னை வந்தனர். விமான நிலையத்தை நெருங்கும் வேளையில் குழந்தை ஹைதர் அலியின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்தது.

இது பற்றி பெற்றோர் விமானியிடம் கூறினார்கள். அவர் விமானநிலைய அதிகாரி களுக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து மருத்துவ குழுவினர் அங்கு வர வழைக்கப்பட்டனர்.

விமானம் சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கியதும் குழந்தை ஹைதர்அலியை டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது குழந்தை நடுவானில் வைத்தே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதைக்கேட்டதும் குழந்தையின் பெற்றோர் கதறி அழுதனர். பின்னர் அங்கேயே குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அடுத்த விமானத்திலேயே மொரீசியசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மாலைமலர்

கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்: மேலும் 2 கல்லூரிகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக பணம் வசூலிக்கிறார்களா என்பது தொடர்பாக நேற்று முன்தினம் சென்னையில் ஒரு தனியார் சுயநிதி என்ஜினீயரிங் (St Joseph's Engineering College) கல்லூரியிலும் நாமக்கல் அருகே ஒரு என்ஜினீயரிங் கல்லூரியிலும் ( King's College of Technology) அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அந்த கல்லூரிகளில் இருந்து ஏராளமான ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நேற்று காஞ்சீபுரம் அருகே உள்ள ஒரு செட்டிநாடு மருத்துவ கல்லூரியிலும் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரியிலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தொழில்நுட்ப கல்வி இயக்கக தொடர்பு அதிகாரி மோகனசுந்தரம் தலைமையில் ஒரு குழு அந்த என்ஜினீயரிங் கல்லூரிக்கு சென்றது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அந்த கல்லூரி நிர்வாக அலுவலகத்திலும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இதேபோல், சென்னை மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் கலாநிதி, மருத்துவத்துறை இணை இயக்குர் டாக்டர் சுகுமாறன், பிசியாலஜி துறைத் தலைவர் ஜெலீசியா ஆகியோர் தலைமையிலான குழு காஞ்சீபுரம் அருகேயுள்ள மருத்துவ கல்லூரிக்கு சென்று திடீர் ஆய்வு செய்தது.

தினத்தந்தி

The Hindu News :: TN Govt initiates crackdown on colleges
Chennai Online News Service - 'TN law favours self-financing colleges'

'சென்னை-28' பட விழாவையொட்டி 32 அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி

கிரிக்கெட் போட்டியை மையமாக கொண்ட படம், 'சென்னை-28.' இந்த படம் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றதை தொடர்ந்து, விழா கொண்டாடப்படுகிறது. வருகிற ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் விழா நடைபெற இருக்கிறது.

இதையொட்டி, 32 அணிகள் கலந்துகொள்ளும் கிரிக்கெட் போட்டியும் நடைபெறுகிறது. ஆகஸ்டு மாதம் 2, 3, 4 ஆகிய தேதிகளில், சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், இரவு-பகல் ஆட்டமாக இந்த போட்டிகள் நடைபெறும். இதில், 384 வீரர்கள் கலந்துகொள்கிறார்கள்.

போட்டிகள், ஆகஸ்டு 4-ந் தேதி மாலை முடிவடையும். வெற்றி பெறும் அணியுடன் 'சென்னை-28' படத்தில் நடித்த கிரிக்கெட் அணி மோதும். இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரமும், இரண்டாவது பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்.

விழாவில், தமிழக விளையாட்டு துறை அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பரிசுகளை வழங்குகிறார். இதற்கான ஏற்பாடுகளை ரிலையன்ஸ் நிறுவனம், ஹலோ எப்.எம். நிறுவனம் ஆகியவை செய்து வருகின்றன.

இந்த தகவல்களை 'சென்னை-28' படத்தின் தயாரிப்பாளர் எஸ்.பி.பி.சரண், டைரக்டர் வெங்கட் பிரபு ஆகிய இருவரும் தெரிவித்தார்கள்.

தினத்தந்தி

IndiaGlitz - Cricket carnival for Chennai 600028 - Tamil Movie News

1,600 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் ராஜகோபுரத்தில் இடி தாக்கியது

வேலூர் மாவட்டம் பனப்பாக்கம் அருகே உள்ளது திருமால்பூர் கிராமம். இங்கு வரலாற்று சிறப்பு மிக்க மணிகண்டீஸ்வரர் சிவன்கோவில் உள்ளது. இந்த கோவில் 1,600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும்.

இந்த கோவில் பராந்தக சோழனால் கட்டப்பட்டது. திருமால் சிவபெருமானிடம் வேண்டி சுதர்சன சக்கரம் பெற்றதனால் இந்த ஊர் திருமால்பேறு என அழைக்கப்பட்டு காலப்போக்கில் மருவி தற்போது திருமால்பூர் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் 70 அடி உயர ராஜகோபுரம் உள்ளது

நேற்று மாலை 5 மணியளவில் திருமால்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. அப்போது மணிகண்டீஸ்வரர் கோவிலின் 70 அடி உயர ராஜகோபுரம் மீது பலத்த இடி தாக்கியது.

இதில் ராஜகோபுரத்தின் மேல்பகுதி உடைந்து அதில் இருந்த செங்கற்கள் சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு விழுந்தன. ராஜகோபுரத்தின் மேல் உள்ள 5 கலசங்களும் சேதம் அடைந்தன. ராஜகோபுரத்தை சுற்றி பக்கவாட்டில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இடிதாக்கியதால் ராஜகோபுரத்தின் மேல்பகுதி கருகிய நிலையில் உள்ளது.

தினத்தந்தி

'இறந்தவர்' உயிருடன் திரும்பினார்

வாராணசி அருகே ஒரு கிராமம்.

அது ஒரு சவ ஊர்வலம்.
இறந்தவர் 90 வயதுக்கு மேற்பட்ட முதியவர். கல்லு (லல்லு அல்ல)யாதவ் என்பது அவர் பெயர்.

கடந்த செவ்வாய் இரவு அவருடைய நாடித்துடிப்பும், இதயத்துடிப்பும் அடங்கிப்போயிருந்தது.

சில மணி நேரங்களுக்குப்பின்னர், உறவினர்களும், கிராமத்தினரும் துக்கத்துடன் அவரை எரியூட்ட சவகட்டிலில் சுமந்துச்செல்கின்றனர்.

மெதுவாக உணர்வு திரும்பிய அவர் கேட்கிறார்: "என்னை எங்கே எடுத்துச்செல்கிறீர்கள்?"
ஏதோ துக்க நினைப்பில் இருந்த உறவினர்கள் "இறந்துவிட்டீர்கள், எரியூட்ட எடுத்துச்செல்கின்றோம்" என்றுச்சொல்ல "என்ன, என்னை உயிருடன் எரியூட்டப்போகிறீர்களா?" என்று கத்துகிறார்.

துக்க உணர்விலிருந்து நிதானத்து வந்த உறவினர்களுக்கு இன்ப அதிர்ச்சி.

காட்டுத்தீயாகப் பரவிய இச்செய்தி 'சற்றுமுன்'னையும் வந்தடைந்தது.

பி/டி/ஐ

நீதிபதிகளை கழுதை என்று திட்டியவர்.

டெல்லி உயர்நீதிமன்றத்தில், தனது பதவிநீக்க வழக்கை விசாரித்து வரும் இரண்டு நீதிபதிகளை 'மூளை இல்லாதவர்கள்' என்றும் 'கழுதை' என்றும் திட்டிய ஒரு முன்னாள் இராணுவ வீரருக்கு நீதிமன்ற அவமதிப்பு குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க.... பி/டி/ஐ

பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு: ஆகஸ்ட் 7ல் விசாரணை.

மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப் பட்டது. இந்த இட ஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

அதே நேரத்தில் இந்த வழக்கை 5 பேர் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்தது.

இந்த விசாரணையை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 7-ந்தேதி தொடங்குவது என்று சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்தது.

இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடையை நீக்கும்படி மத்திய அரசு மனு செய்துள்ளது. அந்த மனு மீதான விசாரணை வருகிற 31-ந்தேதி நடக்கிறது.

மாலைமலர்

"பெண்கள் இடஒதுக்கீட்டுக்கு போராடுவேன்" - கனிமொழி

எம்.பி.யாக பதவி ஏற்ற பின் கனிமொழி நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

நான் எம்.பி.யாக பொறுப்பு ஏற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போது எனக்கு நிறைய பொறுப்புகள் உள்ளது. அவற்றை நிறைவேற்ற வேண்டுமே என்ற பயமும் உள்ளது.

அடித்தட்டு மற்றும் விளிம்பு நிலையில் உள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்து வதே எனது லட்சியம்.

தி.மு.க.வில் மூத்த தலைவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுடன் இணைந்து பணியாற்றுவேன்.

பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்துக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். பெண் உரிமைக்காகவும், பெண்கள் முன்னேற்றத்துக்காகவும் பாடு படுவேன்.

இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார்.

நன்றி: மாலைமலர்

தேவகோட்டை அருகே வன்முறை; பதட்டம்

தேவகோட்டை கருதாவூரை சேர்ந்த வேன் டிரைவர் வீரப்பன் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் இன்று இரண்டு கோஷ்டியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வன்முறையாக வெடித்தது. சில வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதையடுத்து அங்கு கடைகள் அடைக்கப்பட்டன. தொடர்ந்து பதட்டம் நீடித்து வருவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர்

திருமணமாகாதவருக்கு சாராயம் கொடுத்து "கு.க" ஆபரேஷன்

தேன்கனிக்கோட்டை, ஜூலை 26-

திருமணம் ஆகாத எனக்கு பாக்கெட் சாராயம் வாங்கிக் கொடுத்து ஏமாற்றி குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்துவிட்டார் என சுகாதார ஆய்வாளர் மீது நெசவுத் தொழிலாளி ஒருவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (39). நெசவுத் தொழிலாளி. இவர், கெலமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:

நெசவுத் தொழில் செய்து குடும்பம் நடத்தி வருகிறேன். எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் எனக்கு உடல் உபாதை ஏற்பட்டு பெங்களூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற சென்றேன். அங்கு என்னை பரிசோதித்த டாக்டர்கள், எனக்கு ஏற்கனவே குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கெலமங்கலம் சுகாதார ஆய்வாளராக இருந்தவர், எனக்கு பாக்கெட் சாராயம் வாங்கிக் கொடுத்தார். போதையில் இருந்த எனக்கு அப்போது அவர் சிகிச்சை அளித்தார். அவர்தான் ஏமாற்றி எனக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து வைத்துள்ளார். எனவே, சம்பந்தப்பட்ட சுகாதார ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனே அவரை கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு புகாரில் வெங்கடேஷ் கூறியுள்ளார்.

இதுகுறித்து கெலமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வெங்கடேசுக்கு ஆதரவாக கிருஷ்ணகிரி மாவட்ட ஜனநாயக இளைஞர் அணியினரும் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். வாலிபரை ஏமாற்றி குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்த சுகாதார ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என துண்டு நோட்டீஸ்கள் அச்சடித்து பொதுமக்களிடம் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கெலமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்தி:

நன்றி: தமிழ் முரசு

துபாய்: குர்ஆன் விருது விழா

துபாயில் நடைபெற உள்ள துபாய் சர்வதேச புனித குரான் விருது விழாவில் 40 நாடுகளும் அமைப்புகளும் பங்கேற்க முன் வந்துள்ளன. இந்த விருதுக்கான ஏற்பாட்டுக்குழு கூட்டம் அதன் தலைவர் இப்ராகிம் பு மெல்ஹா தலைமையில் அல் தல்வார் மையத்தில் நடைபெற்ற போது இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.

தினமலர்

பிளசண்ட் ஸ்டே: நான்கு தளங்களை இடிக்க நீதிமன்றம் ஆணை.

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கடந்த 1995ம் ஆண்டு கொடைக்கானலில் ராகேஷ் மிட்டல் என்பவர் பிளசன்ட்ஸ் ஸ்டே என்ற பெயரில் ஓட்டல் கட்டினார். ரூ.1.45 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த ஓட்டல் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்தன. இதைத்தொடர்ந்து பழனிமலை பாதுகாப்பு சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் முகாபாத்யாயா, சுகுணா ஆகியோர் விசாரித்து வந்தனர். 12 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் விசாரணை முடிந்ததைத் தொடர்ந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் 6 மாடிகள் கொண்ட பிளசன்ட்ஸ் ஸ்டே ஓட்டல் விதிமுறை மீறி சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ளது. தரைத்தளம் மற்றும் முதல் மாடிக்கு மட்டுமே முறைப்படி அனுமதி பெறப்பட்டுள்ளது. எனவே விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள 4 மாடிகளை 6 மாத காலத்துக்குள் இடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும் இந்த விதிமீறலுக்கு துணைபோகும் விதமாக திருத்தப்பட்ட நகராட்சி சட்டம் 3வது பிரிவையும் ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பிளசன்ட்ஸ் ஸ்டே உழல் வழக்கில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் ஏற்கனவே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர்

விருந்தினர் மாளிகையில் திடீர் பவர்கட்: கலாம் தவிப்பு

சென்னை, ஜூலை 26-

கார் மூலம் சென்னை விமான நிலையத்தில் இருந்து அண்ணா பல்கலைக்கழ்கத்திற்கு கலாம் சென்றார். பாதுகாப்பு அதிகாரிகளும் அவருடன் இருந்தனர். விருந்தினர் மாளிகையில் அவருக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு இரவு 11 மணிக்குச் சென்றார். பின்னர் அறையில் இருந்த நைட் லேம்ப்பை ஆன் செய்தார். அப்போது, திடீரென்று கரன்ட் கட்டானது. இதனால் பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட தமிழக அரசு அதிகாரிகள் அனைவரும் அதிர்ச்சிடையந்தனர்.


பதறிப்போன பாதுகாப்பு அதிகாரிகள் உடனே கலாமை சூழ்ந்து கொண்டு அவரை பத்திரமாக வெளியே அழைத்து வந்தனர். தொடர்ந்து அங்கு தங்க வேண்டாம் என்று கூறி ராஜ்பவனில் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, உடனே அவர் அங்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
முன்னாள் குடியரசு தலைவரும், அணுசக்தி விஞ்ஞானி என்பதாலும் அவருக்கு இசட்பிளஸ் என்ற உயர் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த திடீர் மின்தடை, அதிகாரிகளுக்கு இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கியது. உடனே நடத்தப்பட்ட விசாரணையில், கலாமுக்கு ஒதுக்கப்பட்ட அறை கொண்ட கட்டிடம் பழமையானது. அவரது வருகைக்காக கட்டிடம் புதுப்பிக்கப்பட்டது. அவருக்கு தேவையான மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தியவர்கள், மின்சார கேபிள் வயர்கள் பழுதடைந்ததை கவனிக்கவில்லை.


மேலும் நேற்று கலாம் வருகிறார் என்பதால் பல்கலை. வளாகம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஓவர்லோடு காரணமாக வயர்கள் எரிந்து கரன்ட் கட்டாகியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. பவர்கட் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திக்கு தமிழ் முரசு

இந்திய இராணுவ தலைமை தளபதியாக தீபக் கபூர் நியமனம்

லெஃப்டினன் ட் ஜெனரல் தீபக் கபூர் நமது இராணுவத்தின் தலைமை பொறுப்பேற்க உள்ளார். செப்டம்பர் 30இல் பணிஓய்வு பெறும் ஜேஜே சிங்கிடமிருந்து பதவி ஏற்பார். இந்தப் பதவியை ஏற்பதற்கு ஏதுவாக பிப்.2005இலிருந்தே வடக்கு மண்டல தளபதியாகவும் இவ்வருட ஆரம்பத்திலிருந்து துணை தலைமை தளபதியாகவும் பதவி வகித்து வருகிறார்.

அமைச்சரவையின் நியமனகுழு வதந்திகள் ஏதும் வருமுன்னரே இந்தப்பதவிக்கு தன் பரிந்துரையை கொடுத்துவிட்டது.

Lt Gen Deepak Kapoor to be next army chief

கிரண்பேடி விவகாரம்: அடிமட்ட காவலர்கள் ஏமாற்றம்

கிரண்பேடிக்கு பதவி கொடுக்காமல் யுத்பீர் சிங் தட்வாலுக்கு தில்லி காவல் தலைவராக பதவி கொடுத்ததை ் பணிஓய்வு பெற்ற மற்றும் பணிபுரியும் உயர்அதிகாரிகள் வரவேற்கையில் காவலர்கள், தலைமை காவலர்கள், துணைஆய்வாளர்கள்,ஆய்வாளர்கள் இடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சட்டவிதிகளை மதித்து நேர்மையான ஒரு காவல் அதிகாரிக்கு அவர் உண்மையைப் பேசுவதால் பதவி மறுக்கப் பட்டுள்ளது என பெயர்சொல்ல மறுத்த காவலர்கள் கூறியுள்ளனர்.

மேலும் அறிய.....Kiran Bedi episode sparks a class divide in Delhi Police - Daily News & Analysis

பாக்.பாபர் ஏவுகணை சோதனை: இந்தியாவின் பிரமோஸிற்கு போட்டி

வழக்கமான மற்றும் மாறுபட்ட அணு ஆயுதங்களை ஏற்றி 700 கி.மீ வரை சென்று தாக்கக் கூடிய பாபர் ஏவுகணையை பாகிஸ்தான் நேற்று பரிசோதனை ஓட்டம் விட்டது. இது பாகிஸ்தானின் முன்னேற்பாட்டை ஒருங்குபடுத்தி நாட்டின் பாதுகாப்பை வலுவாக்கும் என பாதுகாப்புதுறை அறிக்கை ஒன்று கூறுகிறது. இதன் காரணமாக அமைந்த விஞ்ஞானிகளை அதிபர் முஷரஃப்பும் பிரதமர் சௌகத் அசீஸும் பாராட்டினர். இந்த சோதனை பற்றி இந்தியாவிற்கு முன்னதாக தெரிவிக்கவில்லை. இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே உள்ள உடன்பாடு தானே விழும் (ballistic missile) ஏவுகணைகளுக்கே பொருந்தும். பாபர் தரையிலுள்ள ரடார் மூலம் முழுவதும் கட்டுப்பாட்டிலுள்ள (Cruise missile) ஏவுகணையாகும்.

IBNLive.com > Pak test-fires Babur missile, the rival to Brahmos :

கனிமொழி,இராஜா எம்பியாக உறுதிமொழி எடுத்தனர்

தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் மகள் கனிமொழி இன்று மாநிலங்களவையின் உறுப்பினராக உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.பிரதமர், முதல்வரோடு அனைத்து தி முக மத்திய அமைச்சர்களும் விழாவில் பங்கேற்று அவரை வாழ்த்தினார்கள்.
அவருடன் திருச்சி சிவாவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி இராஜாவும் மாநிலங்களவை துணைத்தலைவர் இரகுமான்கான் அறையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிதியமைச்சர் ப.சிதம்பரம், ஜி கே வாசன், நாடாளுமன்ற செயல்துறை அமைச்சர் தாஸ்முன்ஷி, அஹ்மத் படேல் ஆகியோரும் உடனிருந்தனர்.


NDTV.com: Kanimozhi, D Raja take oath

கோவா: கவிழ்கிறது காங்கிரஸ் அரசு?

கோவாவில் 2 மாதத்துக்கு முன்பு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் 16 இடங்களை பிடித்து இருந்தது. அதன் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் 3 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது.

2 இடங்களில் வென்ற மராத்திய கோமந்த் கட்சி, 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு அளித்தனர். இதன் மூலம் 23 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது.

இந்த நிலையில் காங்கிரஸ் அமைச்சர் சுலேமா, காங்கிரஸ் எம்.எல்.ஏ. விக்டோரியா பெர்னாண்டஸ் ஆகியோர் விலகி விட்டனர். மராத்திய கோமந்த் கட்சியும் ஆதரவை வாபஸ் பெற்றுள்ளது. ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ.வும் விலகி உள்ளார். மொத்தத்தில் காங்கிரசுக்கு ஆதரவு அளித்து வந்த 5 எம்.எல்.ஏ.க்கள் விலகி உள்ளனர்.

இதனால் காங்கிரசின் பலம் 17 ஆக குறைந்து மைனாரிட்டி ஆகி உள்ளது. எனவே காங் கிரஸ் அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே 14 எம்.எல்.ஏ.க்களுடன் உள்ள பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க முயற்சித்து வருகிறது. காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகி உள்ள 5 பேரும் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறு கட்சிகளை சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்களும் ஆதரவு அளிக்க முன் வந்துள்ளனர். தற்போது சபாநாயகராக இருக்கும் சுயேச்சை எம்.எல்.ஏ.வும் விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே பாரதீய ஜனதா பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால் முதல்- மந்திரி திகாம்பர் காமத் தனது அரசு இப்போதும் முழு மெஜாரிட்டி பலத்துடன் இருப்பதாக கூறி உள்ளார்.

கோவாவில் கடந்த 17 ஆண்டுகளில் 14 தடவை அரசு மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மாலைமலர்

கனிமொழிக்கு மந்திரி பதவி; ராகுலுக்கும் முக்கியத்துவம்.

விரைவில் மத்திய மந்திரி சபையில் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது டெல்லி மேல்சபை தலைவராக இருக்கும் ரகுமான்கான் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு மத்திய மந்திரியாக நியமிக்கப்படுகிறார்.

துணை ஜனாதிபதி பதவிக்கு காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஹமீத் அன்சாரி போட்டியிடுகிறார். அவர் துணை ஜனாதிபதியானால் டெல்லி மேல்சபை தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய இரு பதவிகளிலும் முஸ்லிம் இருப்பதை தவிர்க்கும் வகையில் ரகுமான்கானை மத்திய மந்திரியாக நியமிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ரகுமான்கானுக்கு பதில் மேல் சபை துணை தலைவர் பதவிக்கு பலரது பெயர்கள் சிபாரிசு செய்யப்பட்டு உள்ளன. இதில் சுரேஷ் பச்சவுரிக்கு துணை தலைவர் ஆகும் வாய்ப்பு உள்ளது.

மத்தியமந்திரி மணிசங்கர் அய்யரின் இலாகா மாற்றம் செய்யப்பட உள்ளது. அவர் பஞ்சாயத்து ராஜ் மற்றும் விளையாட்டு இளைஞர் விவகாரத்துறையை கவனித்து வருகிறார். ஆசிய விளை யாட்டு போட்டி தொடர்பாக மணிசங்கர் அய்யர் தெரிவித்த கருத்துகள் காரணமாக அவரிடம் இருந்து விளையாட்டு இளைஞர் விவகாரத்துறையை எடுத்து விட்டு பஞ்சாயத்து ராஜ் மந்திரியாக மட்டும் இருப்பார் என்று தெரிகிறது.

மத்திய மந்திரிசபை மாற்றத்தின்போது கனிமொழி எம்.பி.யும் மத்திய மந்திரியாக நியமிக்கப்படுகிறார். அவருக்கு தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்ப இலாகா வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

முன்பு தயாநிதி மாறன் வசம் இருந்த இந்த இலாகாவை அவர் நீக்கத்திக்கு பிறகு மத்திய மந்திர ராசா கவனித்து வருகிறார்.

கர்நாடகத்தைச் சேர்ந்த தேஜாஸ்வானி ரமேசும், மத்திய மந்திரி ஆகிறார். இவர் ஹாசன் எம்.பி. தொகுதியில் முன்னாள் பிரதமர் தேவே கவுடாவை தோற்கடித்தவர்.

ராஜஸ்தான் கவர்னராக இருந்த பிரதீபாபட்டீல் ஜனாதிபதி ஆகிவிட்டதால் அவருக்கு பதில் காங்கிரஸ் கட்சியைக் சார்ந்த மூத்த தலைவர்களில் ஒருவர் கவர்னராக நியமிக்கப் படுகிறார்.

இது குறித்து சோனியாகாந்தி தீவிரமாக பரிசிலித்து வருகிறார். இது தவிர கட்சியில் முக்கிய பொறுப்புகளில் மாற்றம் செய்யும், புதிதாக சிலரை நியமிக்கவும் முடிவு செய்துள்ளார்.

கட்சியில் இளைஞர்களை ஊக்கு விக்கும் வகையில் ராகுல்காந்திக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படுகிறது. தற்போது எம்.பி.யாக மட்டுமே இருக்கும் ராகுல் காந்தி கட்சியில் தீவிரமாக பணியாற்றும் வகையில் அவருக்கு பொது செயலாளர் போன்ற முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

ராகுலுக்கு கட்சியில் முக்கியதுவம் அளிக்க வேண்டும் என்று சோனியா விடம் தலைவர்கள் பலர் வற்புறுத்தி வருகிறார்கள். இதற்கு சோனியாவும் சம்மதித்து விட்டதாக கூறப்படுகிறது.

இது போல் உத்தரபிரதேச மாநில காங்கிரசிலும் அதிரடி மாற்றங்கள் செய்ய சோனியா முடிவு செய்துள்ளார். மாநில காங்கிரஸ் தலைவராக இருக்கும் சல்மான் குர்ஷித் மாற்றப்பட்டு அவருக்கு பதில் புதிய தலைவர் நியமிக் கப்படுகிறார். சல்மான் குர்ஷித்துக்கு தேசிய அளவில் கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன

மாலைமலர்

கருணாநிதிக்கு கொலை மிரட்டல்.

திருப்பூர் தாசில்தாருக்கு நேற்று காலை ஒரு தபால் கார்டு வந்தது. அந்த கடிதத்தைப் படித்துப் பார்த்த தாசில்தார் அதிர்ச்சி அடைந்தார். காரணம் அந்த கடிதம் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் எழுதப்பட்டிருந்தது.

கடிதத்தில் எழுப்பட்டிருந்த வாசகங்கள் வருமாறு:-

தமிழ்நாடு போலீஸ் பணி யில் சேர வயது வரம்பு 24-ல் இருந்து 29-ஆக உயர்த்த மறுத்துள்ளதால், ஆகஸ்டு 15-ல் கோட்டையில் கொடியேற்றும் முதல்வர் கருணாநிதியை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அடுத்த ஒரு வாரத்திற்குள் தி.மு.க. கொடி அரைக் கம்பத்தில் பறப்பது உறுதி.

29-ந் தேதி நடக்கும் போலீஸ் தேர்வில் குண்டு வெடிக்கும். இது அல்லாவின் ஆணை-அல் உம்மா இயக்கம்.

அல் உம்மா இயக்கம் சார்பில் எழுதப்பட்ட இந்த கடிதத்தை எழுதியது யார் என்று தெரியவில்லை. கோவை தலைமை தபால் நிலையத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ள அந்த கடிதத்தின் முத்திரையில் நேற்று முன்தினம் தேதி உள்ளது. நேற்று காலை திருப்பூர் தபால் நிலையத்தில் பெறப்பட்டு தாசில்தார் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் தாசில்தார் அந்த கடிதத்தை கலெக்டர் மற்றும் ஆர்.டி.ஓ. கவனத்துக்கு கொண்டு சென் றார்.

பின்னர் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

மாலைமலர்

இந்தியா: மீண்டும் உயருமா பெட்ரோல் டீசல் விலைகள்?

இந்தியாவின் நடுவண் அரசு கடந்த ஆறு மாதங்களுக்கு முன் பெட்ரோலுக்கு 2 ரூபாயும், டீசலுக்கு ஒரு ரூபாயும் விலை குறைப்பு செய்தது. அதன் பின் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை பாரல் ஒன்றுக்கு 14 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

ஆனால் கடந்த 6 மாதங்களாக இவற்றின் விலை உயர்த்தப்படாமல் உள்ளது.

இதன் காரணமாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுக்கு நாள் ஒன்றுக்கு 193 கோடி ரூபாயும், ஆண்டுக்கு 53 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகமாகவும் நஷ்டம் ஏற்படுகிறது. இப்படி நீண்ட நாட்களுக்கு இழப்பு ஏற்பட்டால் அதை ஈடுகட்டுவது சிரமமாக இருக்கும் என்று மத்திய அரசு கருதுகிறது.

இதனால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்எண்ணை ஆகியவற்றின் விலையை உயர்த்தியே ஆகவேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு இருக்கிறது. எனவே விரைவில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது.



இது குறித்து மத்திய பெட்ரோலியத் துறை மந்திரி முரளி தியோரா நேற்று டெல்லியில் கூறும்போது, "நீண்ட காலமாக பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்படாமல் இருக்கிறது. குறைந்த விலையில் இவற்றை விற்பதன் காரணமாக ஒரு நாளைக்கு 193 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இந்தச் சுமையை நாம் எவ்வளவு நாள்தான் சுமந்து கொண்டிருப்பது?.. எனவே பெட்ரோல் டீசல் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாததாகி விட்டது.

எண்ணை நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பு தொடர்பாக மத்திய நிதி மந்திரியுடன் பேச்சு வார்த்தையும் நடத்தினேன்'' என்று சொன்னார்.

வேறு ஏதேனும் இது தொடர்பாக யோசனைகள் தெரிவிக்கப்பட்டதா? என்று முரளி தியோராவிடம் கேட்டபோது, "இறக்குமதி வரியை குறைப்பது மற்றும் நிலையான விலையை நிர்ணயித்தல் போன்றவை பற்றி பேசப்பட்டது. எனினும் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆலோசனை தொடர்ந்து நடத்தப்படும். இது பற்றி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தகவல் கூறப்பட்டுள்ளது. மேலும் இடது சாரி தலைவர்களிடமும் தொடர்பு கொள்ளப் பட்டிருக்கிறது'' என்று கூறினார்.

நன்றி: தினத்தந்தி

திமுகவை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள்!

அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!!
திமுகவை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டம் ஈரோடு சி.எஸ்.ஐ.பள்ளி மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது.

கூட்டத்திற்கு அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா தலைமை தாங்கினார். உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, உலகத்தில் வாழும் தமிழர்களுக்கு பாதுகாப்பான ஒரே தலைவர் கருணாநிதிதான். சட்டசபையில் பொன்விழா கொண்டாடும் திமுக தலைவர், சட்டசபை தேர்தலில் ஒரு முறைகூட தோற்றதில்லை. பெண்கள் முன்னேற்றத்துக்கு சிறப்பான திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றி வருகிறது. திமுக குடும்ப அரசியல் நடத்துகிறது என்று ஜெயலலிதா கூறுகிறார். அண்ணாவால் உருவாக்கப்பட்ட பாச உணர்வு உள்ள குடும்பம்தான் திமுக. இந்த கழகத்தை பூண்டோடு அழித்துவிடலாம் என்று ஜெயலலிதா நினைக்கிறார். திமுகவை அழிக்க முடியாது. எப்போதும் இந்த கழகம் அழியாது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

திருநங்கைகள் போராட்டம்



பெண்ணாக மாற அறுவை சிகிச்சையை உடனே செய்ய வேண்டும் என வலியுறுத்தி திருநங்கைகள் நேற்று வேலூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நன்றி:

"தினகரன்"

ஏறிவிட்டீர் எம் இதயங்களில்! கலாமுக்கு புகழாரம் - கலைஞர் கவிதை

சென்னை, ஜூலை 26: முதல்வர் கருணாநிதி நேற்று எழுதியுள்ள கவிதை வருமாறு:


அண்ணலே அய்ந்தாண்டுக்கு முன்னர், நீவீர்
அன்னைத் திருநாட்டின் குடியரசுத் தலைவராகப்
பொறுப்பேற்கப் போகும் செய்தி கேட்டு: பூரிப்பு தாங்காமல்
“பொன் மனம் கொண்ட மண்ணின் புதல்வருக்கு
பொருத்தமான மகுடம்தான் இதுÕÕ என்று
புகழ் மலர்கள் தொடுத்துக் கவிதை மாலையன்று
கட்டி யுமது தோளுக்கு அணிவித்தபோது-இராமேசுவரம்
கடல் அலைகள் களிப்பு மிகுதியால் கையலித்து
ககனத்து முகடு வரை துள்ளிக் குதிக்கின்றன என நான் எழுதினேன்!
கன்யாகுமரி முதல் இமயம் வரை என்றல்ல:
காசினியில் அனைத்து நாடும் புகழ்ந்தேத்த-இந்த
அன்னை நாடும் பிரியா விடை தந்து பிரியமுடன் வாழ்த்த
நினைவுகள் ஆயிரத்தை எம் நெஞ்சில் நட்டு-
இன்று இறங்கிவிட்டீர் பதவியை விட்டு!
இல்லை: ஏறிவிட்டீர், எம் இதயங்களில்!
இனிது வாழ்க: என்றும் வாழ்க! வாழ்க!!

நன்றி:

"தினகரன்"

நீதிபதியை "சார்" என அழைத்தால் போதும்

சேலம், ஜூலை 26: நீதிபதிகளை "அய்யா" அல்லது "சார்" என அழைத்தால் போதும். "மை லார்டு, யுவர் ஆனர்" என அழைக்க வேண்டாம் என வக்கீல்களை இந்திய பார் கவுன்சில் மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தியாவில் நீதி நிர்வாகம் ஆங்கிலேயேர் காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது. இதில் பணியாற்றும் நீதிபதிகளை "மை லார்டு, யுவர் ஆனர், ஹானரபள் கோர்ட்" என வக்கீல்கள் அழைத்து வருகின்றனர். நீண்ட காலமாக வழக்கத்தில் உள்ள வார்த்தைகளை மாற்ற இந்திய பார் கவுன்சில் முன் வந்தது. கடந்த ஆண்டு இது தொடர்பாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. இதன்படி உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயம் ஆகியவற்றில் பணியாற்றும் நீதிபதிகளை ஆங்கிலத்தில் "சார்" என்றோ அல்லது இது போன்ற அர்த்தம் வரும்படி அந்தந்த மாநில மொழிகளுக்கு ஏற்ப அழைக்கலாம். இதன்படி தமிழில் நீதிபதிகளை "அய்யா" என்று கூறலாம் என வக்கீல்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
ஆனாலும் இன்னும் பழைய முறையிலேயே நீதிபதிகளை அழைத்து வருகின்றனர். பார் கவுன்சில் நிறைவேற்றிய தீர்மானத்தை கடைபிடிக்கும்படி வக்கீல்களை பார் கவுன்சில் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இதனை பின்பற்றுவதில் வக்கீல்கள் இடையே வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன. மூத்த வக்கீல்கள் பழைய முறைப்படியே நீதிபதிகளை அழைக்கின்றனர். புதிதாக வருகிறவர்கள் வேண்டுமானால் "சார்" என அழைக்கட்டும் என கூறுகின்றனர்.
இதுகுறித்து சேலம் குற்றவியல் வக்கீல்கள் சங்க தலைவர் வி.ஆர்.சந்திரசேகர் கூறுகையில், ‘‘பார் கவுன்சில் கூறியபடி "மிஸ்டர் ஜட்ஜ்" என்றோ மரியாதைக்குரிய நீதிபதி என்றோ அழைப்பதில் தவறு இல்லை. காலம் காலமாய் வழக்கத்தில் இருந்த ஒன்றை உடனடியாக மாற்றுவதில் சிரமம் இருக்கலாம். அதே நேரத்தில் காலத்திற்கு ஏற்ப மாறுவதிலும் தவறு கிடையாது’’ என்றார்.

நன்றி:

"தினகரன்"

-o❢o-

b r e a k i n g   n e w s...