ஆகஸ்ட் 5,வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ் வலைப்பதிவர்கள் பட்டறை சென்னை பல்கலைக் கழகத்தின் தமிழ் துறையின் அரங்கில் (மெரினா வளாகம்) நடைபெறவுள்ளது. காலை ஒன்பதரை துவங்கி மாலை ஐந்து மணி வரை பட்டறை நடைபெறும்.
கட்டணம் ஏதும் இல்லை. அழைப்பிதழ் தேவை இல்லை. இங்கு உங்கள் பெயரை முன் பதிவு செய்து கொண்டால் பட்டறையைத் திட்டமிட உதவும். குறிப்புகள் எடுக்க ஏடு, பேனா முதல் தேநீர், நன்பகல் உணவு வரை அனைத்தும் நிகழ்ச்சி அரங்கிலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
கீழ்கண்ட தலைப்புக்கள் விளக்கப்படவிருக்கின்றன.
- வலைப்பதிவர்களுக்கு தொழில் நுட்ப விபரங்களில் பயிற்சி தருதல்.
- பதிவர்கள், அல்லது வலைஞர்களுக்கிடையில் ஒரு பிணையத்தை (network) உருவாக்குவது.
- புதியவர்களுக்கு வலைப்பதிவு, கணினியில் தமிழில் எழுதுதல் போன்றவற்றை அறிமுகப்படுத்துதல்
- பதிவுகள் மூலம் தொழில், தனி வாழ்க்கை மேம்படலுக்கு வழிகளை விவாதித்தல்
- பதிவர்கள் ஒன்றிணைந்து வணிக முயற்சிகள், வணிகம் சாராத சேவை முயற்சிகள், தொழில் நுட்ப பணிகளை ஆரம்பிக்க வித்திடுதல்.
சற்றுமுன்னில் சிறப்பு நேரடி செய்தி தொகுப்பைக் காணலாம்.
மேலும் விபரங்களுக்கு இங்கே சுட்டவும்
1 comment:
//சற்றுமுன்னில் சிறப்பு நேரடி செய்தி தொகுப்பைக் காணலாம்.//
coool :) சற்றுமுன் இது போன்ற பட்டறைகளுக்கு நிதி ஆதரவு வழங்குவது நல்ல முன்மாதிரி
Post a Comment