பருமனானப் பணிப்பெண்களை இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வேலைக்கு வைத்துக்கொள்ளாதது சரியே என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாதுகாப்பான பயணத்தையும் போட்டியாளர்களின் உத்தியையும் காரணங்காட்டி உடல்வாகானவர்களை மட்டுமே பணிப்பெண்களாக அமர்த்துவது உகந்தது என்று இந்தியன் ஏர்லைன்ஸ் வாதிட்டது. தங்களை அவமானப்படுத்தும் விதமாக இந்த செய்கை உள்ளதாக விமான சிப்பந்திகள் வாதிட்டார்கள்.
'நத்தையால் கூட நோவாவின் பேழையை அடைய முடிகிறது! ஏன் இந்தப் பெண்களால் தங்கள் எடையைக் குறைக்க முடியாது?' என்று நீதிபதி ரேகா ஷர்மா தன் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
BBC NEWS | South Asia | Air hostesses told to shed weight
Friday, June 1, 2007
விமானப் பணிப்பெண்கள் எடையைக் குறைத்துக் கொள்ள வேண்டும் - தீர்ப்பு
Posted by
Boston Bala
at
11:37 PM
1 comments
அமிதாப் பச்சன் விவசாயி அல்ல - நீதிமன்றத் தீர்ப்பு
1963 விளைநில சட்டப்படி, குடியானவர்கள் மட்டுமே விளைநிலங்களை வாங்கிப் போடமுடியும். 90,000 சதுர அடி விவசாய நிலத்தைப் பதியும்போது, தன்னை நடிகன்/தயாரிப்பாளன்/ஏபிசிஎல் நிறுவனர் என்று குறிப்பிடாமல் டில்லியருகே உள்ள ஜான்பூரில் வசிக்கும் விவசாயி என்று அறிவித்து வாங்கியுள்ளார்.
அந்தப் பகுதியில் வசிக்காத ஒருவருக்கு இவ்வாறு நிலம் ஒதுக்கியது சட்டத்திற்குப் புறம்பானது என்று ஃபைசாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
BBC NEWS | South Asia | Bachchan is no farmer, says court
Posted by
Boston Bala
at
11:20 PM
2
comments
கனிமொழியின் சொத்து ரூ 8.45 கோடி.
மாநிலங்கள் அவைக்கான தேர்தலில் நிற்க மனு கொடுத்த கனிமொழி தனக்கு ரூ 8.45 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இன்னொரு திமுக வேட்பாளர் சிவா தனக்கு ரூ 70 லட்சம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
CPI வேட்பாளர் ராஜா ரூ 3 ஆயிரம் இருப்பதாகவும் வேறு சொத்து ஏதும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திக்கு "The Hindu"
Posted by
சிவபாலன்
at
10:03 PM
13
comments
ச: கொல்கொத்தாவில் தீவிபத்து:300 குடிசைகள் தீக்கிரை
கொல்கொத்தாவின் கிழக்குப் பகுதியில் அமைந்த டாப்சியா பகுதியில் சயின்ஸ் சிடிக்குப் பின்னால் 300க்கும் மேலான குடிசைகள் இன்று காலை ஏற்பட்ட தீவிபத்தில் தீக்கிரையாயின. ஒரு கி.மீ அளவு பரவிய தீயை 27 தீயணைப்பு வண்டிகள் தீயைக் கட்டுப்படுத்த முயன்றன. எந்த ஒரு உயிர்ச்சேதமும் அறிவிக்கப்படவில்லை எனினும் இதனால் உணர்ச்சிவசப்பட்ட சேரிவாசிகள் அருகேஇருந்த கொல்கொத்தா பைபாஸ் சாலையை மறித்ததால் விமானநிலையத்திற்கு செல்வோர் பாதிக்கப் பட்டனர். ஒரு தீயணைப்பு குழுவினரின் வண்டியும் தாமதமாக வந்ததால் கொளுத்தப்பட்டது.
Fire guts Kolkata slum, mob violence disrupts traffic
Posted by
மணியன்
at
9:20 PM
0
comments
ச; பிரன்ச் ஓபன்டென்னிஸ்:வீனஸ் வில்லியம்ஸ் தோல்வி
இன்று நடந்த மூன்றாம் சுற்று ஆட்டத்தில் வீன்ஸ் வில்லியம்ஸ் நான்காம் எண் யேலேனா யான்கோவிச்சிடம் 6-4,4-6,6-1 என்ற கணக்கில் தோற்று வெளியேறினார்.
The Hindu News Update Service
Posted by
மணியன்
at
7:01 PM
0
comments
ச: போனஸ் உயரெல்லை உயர்த்தப்படும்: ஆஸ்கர்
நாட்டின் தொழிலாளர்களுக்கான போனஸ் தொகைக்கான உயரெல்லை தற்போது இருக்கும் ரூ.3500இலிருந்து ரூ.7000 ஆக இந்த வருடம் உயர்த்தப்படும் என்று மத்திய தொழிலாளர் அமைச்சர் ஆஸ்கர் ஃபெர்னாண்டஸ் கூறினார்.
The Hindu News Update Service
Posted by
மணியன்
at
6:57 PM
0
comments
ச: இடஒதுக்கீட்டிற்கான சட்டம் வலுவாக அமைய வேண்டும் : கலைஞர்
தற்போது நடந்தேறிவரும் இட ஒதுக்கீட்டிற்கான சட்டசிக்கல்களால் மகிழ்ச்சியற்றிருக்கும் கலைஞர் தனது "தி வீக்" பத்திரிகைக்கான பேட்டி ஒன்றில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டிற்கு வழிவகுக்கும் வகையில் வலுவான சட்டம் இயற்றப் பட வேண்டும் என்றும் அவர்களுக்கான நாடாளுமன்றக் குழு அமைக்கப் பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் கனிமொழி தில்லியில் திமுகவின் முகமாக செயல்படுவார் என்று தான் மட்டுமல்லாது தனது கட்சியின் அனைத்து செயற்குழு உறுப்பினர்களுமே எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
அவரது பேடி பற்றிய செய்திக் குறிப்பு: The Hindu News Update Service
Posted by
மணியன்
at
6:48 PM
0
comments
ச: இராஜஸ்தான் கலவரங்கள்: ் குஜ்ஜர்-மீனா கைகலப்பில் ஐவர் மரணம்,20 பேர் காயம்
இராஜஸ்தானில் குஜ்ஜர் இனமக்களின் ST ஒதுக்கீட்டுக்கான போராட்டமும் அதற்கு மீனா இன மக்களின் எதிர்ப்பையும் அடுத்து அங்கு வன்முறை மேலோங்கி வருகிறது. இன்று நடந்த இனச்சண்டையில் ஐந்து பேர் மரணமடைந்ததாகவும் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் உள்துறை செயலர் விஎஸ் சிங் கூறினார்.
மேலும்...DNA - India - Five killed, 20 hurt in Gujjar-Meena clash - Daily News & Analysis
Posted by
மணியன்
at
6:28 PM
1 comments
ச:பிபிசி நிருபர் கடத்தல்: ஒளிப்படம் வெளியீடு
கடத்தப்பட்ட பிபிசி நிருபர் ஆலன் ஜான்ஸ்டன் பேசிய ஒளிப்படம் அவரைப் பிடித்துவைத்திருப்பாதாகக் கூறும் இஸ்லாமிய குழு ஒன்றினால் வெளியிடப் பட்டுள்ளது. அந்த ஒளிப்படத்தில் தான் மார்ச் 12 தேதி பிடிக்கப்பட்டதிலிருந்து நன்றாகக் கவனித்துக் கொள்ளப்படுவதாகவும் பாலஸ்த்தீனர்களின் நிலத்தை ஆக்கிரமிக்க பிரித்தானிய அரசு ஆரம்பத்திலிருந்தே முயன்றுவருவதாகவும் கூறியுள்ளார். அவரது குடும்பத்தினருக்கு செய்தி கொடுக்கும் சமயம் பிபிசி இந்த செய்தியை அவரது குடும்பத்திற்கு கொண்டு செல்ல மறுக்கிறது என்ற குறிப்புடன் ஒளிப்படம் 'டக்'கென்று முடிகிறது.
மேல் விவரங்களுக்கு ..BBC's Alan Johnston paraded on the web | Breaking News | News | Telegraph
Posted by
மணியன்
at
3:14 PM
0
comments
ச: பிஎஸ் என் எல், ஏர்டெல் ரோமிங் கட்டணம் குறைப்பு
அரசுத்துறை பி எஸ் என் எல் நிறுவனம் சொந்த வட்டத்திலிருந்து வெளியே சென்றிருக்கையில் வருகின்ற பேச்சுக்களுக்கு நிமிடத்திற்கு தற்போதிருக்கும் ரூ1.50 இலிருந்து ரூ1 ஆகவும், தான் பேசுவதற்கு ரூ2.40க்கு பதிலாக ரூ1.50 ஆகவும் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. இது பற்றிய அறிவிப்பு நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்கெனவே இந்த கட்டணங்களுக்கு குறைத்துள்ளது. பாரதி ஏர்டெல்லும் எம் டி என் எல் உம் தங்கள் கட்டண விகிதங்களைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
மேலும்..The Telegraph - Calcutta : Business
Posted by
மணியன்
at
3:02 PM
1 comments
ஜனாதிபதி தேர்தல்.
ஜனாதிபதி தேர்தல் குறித்து முதல்வர் கருணாநிதியை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அமைப்பாளரும், முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சருமான ஜார்ஜ் பெர்ணான்டஸ் நேரில் சந்தித்துப் பேசினார்.

Posted by
Adirai Media
at
2:11 PM
0
comments
ச: கோவை இரயில்பயணிகளுக்கு ஜூன் 3 பரிசு
இன்று வெளியான இரயில்வே பத்திரிகைக் குறிப்பின்படி ஜூன் மூன்றாம் தேதியிலிருந்து சென்னை சென்ட்ரலிலிருந்து கோவைக்குச் செல்லும் கோவை எக்ஸ்பிரஸின் பயணநேரங்கள் குறைக்கப் பட்டுள்ளன. சென்னையிலிருந்து 0615க்குப் புறப்படும் வண்டி கோவையை 1340க்கு அடையும் என்றும் அங்கிருந்து 1405க்குப் புறப்படும் வண்டி இரவு 9.20க்கு வந்துசேரும் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. இது 15 நிமிடம் குறைவானதாகும்.
தொடர்புள்ள சுட்டி:கோவை எக்ஸ்பிரஸ்The Hindu News Update Service
அதே நாள் எர்ணாகுளத்திலிருந்து கோவைக்கு கோடை சிறப்பு வண்டியொன்று விடப்படுகிறது. காலை 9.15க்கு எர்ணாகுள்த்திலிருந்து புறப்படும் இந்த வண்டி கோவையை மதியம் 1.45க்கும் திரும்பும் திசையில் மதியம் 1.15க்குப் புறப்பட்டு எர்ணாகுளத்தை மாலை 5.45க்கு அடையும் என்றும் இக்குறிப்பு கூறுகிறது.
கோவை எர்ணாகுளம் சிறப்பு வண்டிThe Hindu News Update Service
Posted by
மணியன்
at
12:10 PM
0
comments
ச: இந்திய பொருளாதாரம் சீனாவின் வளர்ச்சிவிகிதத்தை எட்டும்நிலையில் !
இந்தியப் பொருளாதாரம் ஜனவரி-மார்ச் காலாண்டில் 9.1% வளர்ச்சி கண்டுள்ளது. இது முழு ஆண்டிற்கான விகிதத்தை 9.4%க்கு, கடந்த 18 ஆண்டுகளில் கண்டறியாத வகையில், கொண்டு வந்துள்ளது. இதன்மூலம் இந்தியப் பொருளாதாரம், சீனாவின் சூறாவளித்தனமான வளர்ச்சியை (2006இல் 10.7%) நெருங்கியுள்ளது.
வட்டிவிகித உயர்வு, ரூபாயின் விலையேற்றம் மற்றும் மெதுவாகும் பொருளாதார சீர்திருத்தங்கள் இவை இந்த ஆண்டு வளர்ச்சியை பாதிக்குமா என்று பார்க்கவேண்டும்.
India economy closes gap on China - CNN.com
Posted by
மணியன்
at
11:23 AM
0
comments
ச: ஆசியாவில் பரவும் புற்றுநோய்
ஆசியாவில் புற்றுநோய் இப்போதிருப்பதைவிட அதிகமான பேரை தாக்குவதற்கான வாய்ப்புக்கள் உருவாகிவருவதாக மருத்துவ வல்லுனர்கள் கருதுகின்றனர்.CNN.com இன் இந்தச் செய்தியின்படி -புகைபிடித்தல், மது அருந்துதல் மற்றும் ஆரோக்கியமற்ற உணவு ஆகியவை பெரும் மக்கள்தொகை, நோய்கிருமிகளால் இறப்பு குறைவு முதலிய காரணிகளுடன் இணைந்து வரும் ஆண்டுகளில் புற்று நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையைக் கூட்டும் என சொல்கிறார்கள். ஆனால் வளர்ந்த நாடுகளைப் போன்றில்லாமல் வளரும் நாடுகளில் மருத்துவ வசதிகள் ஈடுகொடுக்க முடியாது. அங்கு '60,'70களில் இருந்த சூழல் அடுத்த பத்து வருடங்களில் இங்கு நிகழும் எனவும் கருதுகின்றனர். உலகின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவரில் 40% பேர் உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு மற்றும் புகை தவிர்த்தல் மூலமே தடுத்திருக்கக்கூடியதாக உலக சுகாதார மையம் தெரிவிக்கிறது.
மேல் விவரங்களுக்கு: Asia braces for cancer surge - CNN.com
Posted by
மணியன்
at
11:10 AM
0
comments
b r e a k i n g n e w s...