.

Saturday, July 14, 2007

நீரிழிவு நோயாளிக்கு புதிய வகை அரிசி கண்டுபிடிப்பு

நீரிழிவு என்கிற 'இனிப்பு நோய்' வந்தவர்களும் அரிசி உணவு தாராளமாக உண்ணலாம் என்கிற வகையில் புதிய வகை அரிசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது;

இதுபற்றி இச்செய்தியில்

'சுகர்'வந்துவிட்டாலே, கோதுமை ரொட்டி, கோதுமை தோசைதான் சாப்பாடு என்றாகி விடுகிறது.
தினசரி கோதுமை, கேழ்வரகு உணவு வகைகளையே சாப்பிடுவதால் சலித்துப் போகும் சர்க்கரை நோயாளிகள், ஒரு வேளையாவது அரிசி சாப்பாடு சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அவர்களுக்கு தற்போது ஒரு "இனிப்பான' செய்தி வந்துள்ளது.

சர்க்கரை அளவு குறைந்த "மூல்கி' அரிசி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. மதுரையில் விற்பனைக்கு வந்துள்ள இந்த வகை அரிசி, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மட்டுமே விளைவிக்கப்படுகிறது.

விதை நெல்லில் இருக்கும் குளுகோஸ், கார்போஹைட்ரேட்டை நீக்கி, பின்னர் விதைக்கின்றனர். இதனால், சர்க்கரை அளவு குறைந்த நெல் விளைகிறது. இந்த "மூல்கி' அரிசிக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி பல்கலைக்கழகம் அங்கீகாரம் அளித்துள்ளது.

இந்த அரிசியை கொண்டு பிரியாணி, பிரைடு ரைஸ், புலாவ், தக்காளி சாதம், புளியோதரை, தேங்காய் சாதம், எலுமிச்சம் சாதம் என விதவிதமாக சமைத்து சாப்பிட்டாலும் சர்க்கரை அளவு கூடாமல் சீராக இருக்கிறது.

மன்மோகனுக்கு மேலுமொரு டாக்டர் பட்டம்.

இந்தியப்பிரதமர் மன்மோஹன் சிங் மேலுமொரு கவுரவ முனைவர் பட்டம் பெறுகிறார்.
(D.Litt). இப்பட்டத்தை ஜம்மு பல்கலைக்கழகம் வழங்குகிறது. நாளை (15 ஜூலை 2007) ஜம்மு பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விழாவில் இப்பட்டம் அளிக்கப்படுகிறது.
பிரதமராகப் பொறுப்பேற்றபின் அவர் பெறும் முதல் பட்டமாகும் இது.
இதற்கு முன்பும், 15க்கும் மேற்பட்ட முனைவர் பட்டங்களை கைக்கொண்டுள்ளார்மன்மோஹன்சிங்.

Manmohan Singh is 'Doctor' Once again

சரத்குமார்: அடுத்தகட்டமாக புதுக்கட்சி

"மக்களுக்காக தொடர்ந்து உழைத்திட அடுத்த மாதம் புதுக்கட்சி தொடங்குவேன்,'' என்று நடிகர் சரத்குமார் சென்னையில் அறிவித்துள்ளார்.
"அக்டோபர் மாதம் தொடக்க விழா நடக்கும். புதுக்கட்சிக்கான கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன. கட்சி பெயரும் முடிவு செய்து விட்டோம். சமத்துவம், சமதர்மம் கட்சியின் முக்கிய நோக்கமாக இருக்கும்." என்று சரத்குமார் கூறியுள்ளார்.

தினமலரிலிருந்து..

மும்பை: பிரதீபா பாட்டீல் மீது அவசர வழக்கு.

குடியரசுத்தலைவர் தேர்தலுக்கு இன்னும் ஐந்து நாட்களே மீதமுள்ள நிலையில், காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளர் பிரதீபா பாட்டீலுக்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் ஒரு அவசரவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜல்கானில் வசிக்கும் ரஜினி பாட்டில் என்பவர் தொடர்ந்த இவ்வழக்கு, பிரதீபாவின் கணவர் விஷ்ராம் பாட்டீல் கொலையுண்ட விவகாரத்தை, குடியரசுத்தலைவர் தேர்தலுக்கு முன்பாக மத்திய புலனாய்வுத்துறையிடம் ஒப்படைத்து பிரதீபா விசாரிக்கப்படவேண்டும் என்று கோருகிறது. இவ்விவகாரத்தில் பிரதீபாவின் சகோதரர் டாக்டர் GN பாட்டில் சம்பந்தப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டுவது கவனிக்கத்தக்கது

இங்கு படியுங்கள்

ச: நாளை காமராசர் பிறந்த நாள்: ஞாயிறு பள்ளிகள் இயங்கும்


நாளை காமராசர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளும் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. காமராசர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக அனுசரிக்கப் படவேண்டும் என்று உத்தரவிடப் பட்டுள்ளது.

ஐ.நாவில் இந்தி ஆட்சிமொழி: இந்திய அரசின் முயற்சி

நியூயார்க் நகரில் எட்டாவது உலக இந்தி மாநாடு வெள்ளியன்று ஆரம்பித்துள்ளது. மூன்று கோடி ரூபாய்கள் மக்கள் வரிப்பணத்தை இந்த விழாவிற்காக அரசு செலவழித்துள்ளது. இந்தக் கொண்டாட்டங்கள் இந்தி ஐநாவின் ஆட்சிமொழியாக அலங்கரிக்க முயலும் முயற்சிகளுக்கு வலு சேர்க்கும் எனக் கருதுகிறது. இந்திய வெளியுறவு துணை அமைச்சர் ஆனந்த் சர்மா உலக அரங்கில் இந்தியா ஆற்றிவரும் பணிகள் பாராட்டப்பட்டுவருகின்றன எனக் கூறினார். உலகம் முழுவதுமிலிருந்து 650 பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ள இந்த மூன்றுநாள் மாநாடு ஞாயிறன்று முடிவடைகிறது.

IBNLive.com > India roots for Hindi as official language at UN : Hindi, United Nations, India, official language

துணை குடியரசுத் தலைவர் தேர்தல்: மூன்றாம் அணி போட்டியிடும்

ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி (UNPA) இன்று நடந்த கூட்டத்தில் குடியரசுத் தலைவர் தேர்தலில் இரு வேட்பாளர்களையும் சமநிலையில் பாவித்து வாக்களிப்பிலிருந்து விலகியிருக்கவும் துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் இடதுசாரி வேட்பாளரை ஆதரிக்காமல் தங்கள் வேட்பாளரை நிறுத்துவது எனவும் முடிவு செய்துள்ளது. தனது வேட்பாளருக்கு பிஜேபி அணியின் ஆதரவை வேண்டப்போவதில்லை எனவும் தாங்கள் தோற்பது உறுதியாக இருந்தாலும் தங்கள் அடையாளத்தை பதிவு செய்யும் முகமாக இந்த தேர்தலில் வேட்பாளரை நிறுத்தப் போவதாகவும் கூறினர். இடதுசாரிகள் நடுவண் அரசிற்கு கொடுத்துவரும் ஆதரவை விலக்கிக் கொண்டால் அவர்கள் வேட்பாளரை ஆதரிப்போம் என நிருபர்களிடையே அதிமுகவின் தலைவர் ஜெயலலிதா கூறினார்.


The Hindu News Update Service

குற்றச்சாட்டுக்கள் உறுதிசெய்யப்பட்டால் பதவி விலகத் தயார்: இராஜா

தகவல் தொழிற்நுட்ப அமைச்சர் திரு ஏ.இராஜா பிஎஸ் என் எல் தொழிற் சங்கங்கள் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுக்கள் உறுதியானால் தாம் பதவி விலகத் தயார் எனக் கூறியுள்ளார். தன்னுடைய உறுதிமொழியையும் மீறி தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதில் அதிருப்தி தெரிவித்த அமைச்சர் தான் பி எஸ் என் எல் ஒப்பந்தபுள்ளியில் சில ஐயங்களையே எழுப்பியதாகவும் ஆனால் இடதுசாரி கட்சிகளுக்கு விசுவாசமான தொழிற்சங்கங்கள் தன்னை புரிந்துகொள்ளாமல் இந்த பிரச்சினையை கிளப்பியுள்ளதாகவும் கூறினார்.

மேலும் அவர் கூறியவைக்கு...The Hindu News Update Service

முரளிதரன் சாதனை: 700 விக்கெட்கள்

முத்தையா முரளிதரன் சனிக்கிழமையன்று தனது 700வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இவரது இந்த சாதனையால் ஸ்ரீலங்கா அணி பங்களாதேசத்தை மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 193 ஓட்டங்களில் வென்றது. இந்த டெஸ்ட்டில் முன்னதாக குமார சங்ககாரா 222 ஓட்டங்கள் எடுத்திருந்ததும் குறிப்பிடத் தகுந்தது.

ஸ்கோர்: ஸ்ரீ லங்கா 500-4 (ஆ.மு), பங்களா 131 &176 ( முரளி 6/28 & 6/54)
The Hindu News Update Service

ஹனீஃப் மீது தீவிரவாதத்திற்கு உதவியதாக குற்றப்பதிவு

அவரது காவலை நீட்டிக்காது விடுதலை செய்யப்படுவார் என்ர நம்பிக்கையை தகர்த்து இன்று ஆஸி. காவல்துறை 12 நாட்களாக குற்றம் சாட்டாது காவலில் வைத்திருந்த முகமது ஹனீஃப் மீது தீவிரவாதிகளுக்கு துணை போனதாக குற்றம் சாடப்பட்டார். அவரது ஜாமீனை AFP எதிர்க்கும் என கமிஷனர் மிக் கீட்டி கூறினார்.

இது பற்றி மேலுமறிய...The Hindu News Update Service

தமிழ்நாடு: பள்ளி சத்துணவு முட்டைகளில் புழுக்கள்.பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு முட்டைகளை சத்தமில்லாமல் சாப்பிடும் புழுக்கள்

தினமலர் செய்தி.

பள்ளி ஆசிரியை: நூதன தண்டனை வேதனை ஆனது.

மாணவிகள் மூவரின் சட்டையைக் கழற்ற சொன்ன ஆசிரியை ஒருவர், இந்த அநாகரிகச் செயலால் கழற்றி விடப்பட்டுள்ளார்.
இதுபற்றிய தினமலர் செய்தி பின்வருமாறு:

சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் ரெக்கார்டு நோட்டுக்கு அட்டை போடாத மாணவிகளை மேல்சட்டையை களையச் சொல்லி ஆசிரியை நூதன தண்டனை அளித்தார். விஷயம் தெரிந்து கொதிப்படைந்த பெற்றோர் ஆர்ப்பாட்டம் செய்தனர். சர்ச்சைக்குரிய ஆசிரியையை தனியார் பள்ளி நிர்வாகம் "டிஸ்மிஸ்' செய்தது.

சென்னை தண்டையார்பேட்டையில் தனியார் பள்ளி உள்ளது. இங்கு ஏழாம் வகுப்பில் மாணவிகள் மோனிஷா, முக்தா, புவனேஸ்வரி படிக்கின்றனர். மூவரும் ரெக்கார்டு நோட்டுக்கு மேல் அட்டை போடாமல் பள்ளிக்கு எடுத்துச் சென்றனர். கோபமடைந்த பள்ளி ஆசிரியை ஜெயந்தி "ரெக்கார்டு நோட்டுக்கு அட்டை போடாத உங்களையும், மேல் சட்டை போடாமல் நிற்க வைத்தால் தான் புத்தி வரும்,' என்று கூறி மூன்று பேரையும் மேல் சட்டையை களையச் சொன்னார்.

அது இருபாலர் படிக்கும் பள்ளி. எனவே, தண்டனையை அவமானமாக கருதிய மாணவிகள் அழுதபடி மறுத்தனர். ஆசிரியை தொடர்ந்து வற்புறுத்தினார். இதனால், மாணவிகள் அழுதபடியே வீட்டிற்கு சென்றனர். பெற்றோரிடம் நடந்த விவரத்தை தெரிவித்தனர். இதனால், அதிர்ச்சியடைந்த மாணவிகளின் பெற்றோர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் தனியார் பள்ளிக்குச் சென்று நியாயம் கேட்டனர். மாணவிகளை அநாகரிகமாக தண்டிக்க முயன்ற ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக் கோரினர். பள்ளி நிர்வாகத்தினர் ஆசிரியையைக் கண்டிப்பதாக கூறியும் பெற்றோர் சமாதானம் அடையவில்லை. "இந்த ஆசிரியை இருக்கும் வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம். அவரை "டிஸ்மிஸ்' செய்ய வேண்டும்,' என்று வலியுறுத்தினர்.

தகவலறிந்து தண்டையார்பேட்டை போலீசாரும் பள்ளிக்கு வந்தனர். ஆசிரியை ஜெயந்தி "டிஸ்மிஸ்' செய்யப்பட்டதாக பள்ளி நிர்வாகம் அறிவித்ததை அடுத்தே பெற்றோர் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.

இதே போல் சென்னை முத்தியால்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர் கண்டித்ததால் மாணவிகள் எலிமருந்து சாப்பிட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மச்சம் முதுமையைத் தடுக்கும்?

"உனக்கு மச்சம்" என்ற சொற்றொடர் அதிர்ஷ்டம் என்ற பொருளில் பயன்பட்டு வந்தது, இப்போது நீடித்த இளமை என்ற பொருளும் அதற்குண்டு என்று இந்தச்செய்தி தெரிவிக்கிறது

உடலில் அதிக இடங்களில் மச்சம் இருந்தால் அதற்காக கவலைப்பட தேவையில்லை. அழகு கெட்டு விடுமோ என்றும் கவலைப்படவேண்டாம். அதிக மச்சம் இருப்பது விரைவில் முதுமை அடைவதை தடுக்கிறதாம்.

இங்கிலாந்தை சேர்ந்த கிங்கல்லூரி டாக்டர்கள் மச்சம் தொடர்பாக ஒரு ஆய்வுமேற்கொண்டனர். 10 ஆண்டுகளாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குழந்தைகள், இளம்வயதினர், முதியோர், இரட்டை பிறவிகள் என 1800பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இதில் அதிக மச்சம் உள்ளவர்களிடம் டெலோமியர் என்ற பொருள் அதிகம் இருப்பது தெரிய வந்தது. இதன்காரணமாக அவர்கள் முதுமை அடைவது தாமதப்படுகிறது. அவர்கள் அதிக நாட்கள் இளமையுடன் இருக்கும் வாய்ப்பும் அதிகரித்தது.

ஹஜ் பயணிகள் தேர்வுக்கு இன்று குலுக்கல் நடக்கிறது.

தமிழ்நாடு ஹஜ் குழு தலைவர் ஜே.எம்.ஆரூண் எம்.பி., சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இருந்து ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள இந்த ஆண்டு 6 ஆயிரத்து 816 பேர் விண்ணப்பித்துள்ளனர். 2 ஆயிரத்து 700 பேருக்கு மட்டுமே ஹஜ் செல்ல அனுமதி கிடைத்துள்ளது. எங்களது கோரிக்கையை ஏற்று கூடுதலாக ஆயிரத்து 684 பேருக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் 100 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். அவர்களுக்கும் அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.விண்ணப்பித்துள்ள எல்லாரையும் அனுமதிக்க வேண்டும் என்று, தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளோம். இதற்கிடையில், ஹஜ் செல்வோரை தேர்வு செய்வதற்கான குலுக்கல், சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரியில் 14ம் தேதி (இன்று) காலை 10 மணிக்கு நடக்கிறது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலர் என்.வாசுதேவன், ஹஜ் குழு உறுப்பினர்-செயலர் கா.அலாவுதீன் மற்றும் ஹஜ் குழு உறுப்பினர்கள் குலுக்கலை நடத்துவார்கள்.இவ்வாறு ஜே.எம்.ஆரூண் எம்.பி. கூறினார்.

சென்னையில் சாஃப்ட்வேர் நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பாடி பார்க் சாலையில் தனியாருக்கு சொந்தமான 10 மாடி கட்டடம் உள்ளது. இந்தக் கட்டிடத்தில் அமெரிக்கார்ப் பிசினெஸ் சர்வீசஸ், ரிலையனஸ் நிறுவனம், சதர்ன்லேன்டு குளோபல் சர்வீசஸ் உட்பட பல்வேறு சாஃப்ட்வேர் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களில் 10 ஆயிரம் தொழிலாளர்கள் இரவு, பகலாக பணியாற்றி வருகின்றனர்.

வெள்ளிக்கிழமை மாலை கட்டடத்தின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும் தொலைபேசி அழைப்பு வந்தது. அதில், பேசிய நபர் கட்டடத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும், இன்னும் சில நிமிடங்களில் அது வெடிக்கும் என்றும் கூறினார்.

60-க்கும் மேற்பட்டவர்கள் இந்தச் சோதனையில் ஈடுபட்டனர். இறுதியில், வெடிகுண்டு ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. தகவல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.

தினமணி

தலித் விவசாயத் தொழிலாளர் மீது துப்பாக்கிச் சூடு: நீதி விசாரணைக்கு மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

நாகை மாவட்டத்தில் உள்ள அப்புராசபுரம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த தலித் விவசாயத் தொழிலாளர்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தலித் மக்கள் குடிசை போட்டிருந்த கோவில் நிலத்தை அனுபவித்து வந்த மிராசுதாரர் ராஜாங்கம், 53 தலித் குடும்பங்களுக்கு வீடு கட்ட தகுதியுள்ள மாற்று நிலத்தை மே 21-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் ஒப்பந்தப்படி மிராசுதாரர் மாற்று இடம் அளிக்கவில்லை. அதிகாரிகளும் இடம் அளிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தலித் மக்களின் குடிசைகளை அகற்ற வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

ஆனால் கடந்த ஜூன் 28-ம் தேதியன்று, காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் அப்புராசபுரம்புத்தூருக்கு வந்த காவல்துறையினர், குடிசைகளைப் பிரிக்க வலியுறுத்தியுள்ளனர். மறுத்த தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கண்ணீர் புகை குண்டுகளை வெடித்ததோடு, ரப்பர் குண்டுகள் மூலம் துப்பாக்கிச் சூடும் நடத்தியுள்ளனர். இதில் பலர் காயமடைந்துள்ளனர். இதில் குழந்தை, மாணவர்கள், பெண்கள் உள்பட 14 பேர் மீதும் ஒட்டுமொத்தமாக 42 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு அரசு உத்தவிட வேண்டும். சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.

தினமணி

டி.எம். சௌந்தரராஜனுக்கு எம்.எஸ். விஸ்வநாதன் விருது

புகழ்பெற்ற பின்னணி பாடகர் டி.எம். சௌந்தரராஜனுக்கு கேரளத்தில் நடைபெறும் கலை மற்றும் கலாசார விழாவில் எம்.எஸ். விஸ்வநாதன் விருது வழங்கப்பட உள்ளது. தமிழ் இசை உலகில் பின்னணி பாடகராக பல ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்திய டி.எம். சௌந்தரராஜனை விருதுக்கு தேர்வு செய்துள்ளதாக கலை மற்றும் கலாசார சங்கம் அறிவித்தது.

கலை மற்றும் கலாச்சார சங்கம் எம்.எஸ். விஸ்வநாதன் விருதை நிறுவியுள்ளது. இந்த விருது ரூ. 25 ஆயிரம் ரொக்கமும் பாராட்டுப் பத்திரமும் கொண்டது. ஜூலை 15-ம் தேதி திருவனந்தபுரத்தில் இந்த விருது வழங்கப்படுகிறது.

தினமணி

காங்கிரஸ் எம்.எல்.ஏ.விடம் ஆதரவு கேட்டார் ஷெகாவத்: தேர்தல் கமிஷனிடம் புகார்

குடியரசுத் தலைவர் தேர்தலில் தனக்கு வாக்களிக்குமாறு பைரோன் சிங் ஷெகாவத் தொலைபேசியில் குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பல்தேவ்ஜியிடம் கோரியதாக மாநில காங்கிரஸ் வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.

குடியரசுத் துணைத் தலைவராக இருந்து கொண்டு தனது பதவியை துஷ்பிரயோகம் செய்யும் ஷெகாவத் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் தரப்பில் பேக்ஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசியல் நாடகம்: ஷெகாவத் தனது சொத்து விவரம் (MSN INDIA - சொத்து விவரங்களை வெளியிட்டார் ஷெகாவத்) வெளியிட்டதை 'அரசியல் நாடகம்' என காங்கிரஸ் வர்ணித்துள்ளது.

கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி: சட்டப்படி சொத்து விவரம் குறித்து அறிவிப்பை வெளியிட யாரும் கோரவில்லை. காங்கிரஸ் ஆதரவு வேட்பாளர் பிரதிபாவை குறிவைத்தே இதுபோன்ற நடவடிக்கைகளில் பாஜக ஈடுபட்டுள்ளது என்றார்.

தினமணி

The Hindu : National : Shekhawat charged with seeking Congress MLAs’ votes
Zee News - UPA seeks to dent Shekawat`s high moral ground

மும்பை-நியூயார்க்: 15 மணி நேரத்தில் பயணம்

வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் மும்பைக்கும், நியூயார்க்கிற்கும் இடையே வேறுஎங்கும் நிற்காமல் செல்லும் விமானங்களை இயக்க ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளது.

தவிர அடுத்த ஆண்டு பிப்ரவரியில் புதுடெல்லி - நியூயார்க் மார்க்கத்திலும், அடுத்த ஆண்டு மத்தியில் பெங்களூர் - சான் பிரான்சிஸ்கோ மார்க்கத்திலும் வேறு எங்கும் நிற்காத வகையிலான விமானங்களை இயக்கவும் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

மும்பை - நியூயார்க் விமானம் பிற்பகல் 2 மணிக்குப் புறப்படும் என்றும், சுமார் 15 மணி நேரத்தில் நியூயார்க்கை சென்றடையும் என்றும் அவர் கூறினார்.

முந்தைய சற்றுமுன்...: இனி ஜெட் ஏர்வேஸ் யு.எஸ் செல்ல தடையில்லை

- MSN INDIA

Air India gears up for non-stop flight to New York- Hindustan Times

ஆதாயம் தரும் பதவி:பாஜ எம்பி பதவி பறிப்பு

ஆதாயம் தரும் இரட்டை பதவியை வகித்ததாக அளிக்கப்பட்ட புகாரில் பாஜக-வின் கிருஷ்ண முராரி மொகேவின் எம்பி பதவியை பறித்து குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நடவடிக்கை எடுத்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் கார்கோனே தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான இவர், அமைச்சர் அந்தஸ்துக்கு இணையான மாநில நாடாளுமன்ற குழுவின் தலைவராகவும் பதவி வகித்து வந்தார்.

அரசியல் சட்ட விதிகளின் கீழ் ஆதாயம் தரும் இரண்டு பதவிகளை ஒரேநேரத்தில் கிருஷ்ண முராரி வகித்து வந்ததாக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜமுனா தேவி, குடியரசுத் தலைவருக்கு புகார் அனுப்பியிருந்தார்.

- MSN INDIA

BJP loses strength ahead of presidential poll- Hindustan Times
Kalam’s nod to Moghe disqualification

60 ஆயிரம் கோடி முதலீடு: ரிலையன்ஸ் எனர்ஜி திட்டம்

அடுத்த ஐந்தாண்டுகளில் 60 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய ரிலையன்ஸ் எனர்ஜி திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி தெரிவித்துள்ளார்.

நிலக்கரி, எரிவாயு, நீர் மற்றும் இதர எரிபொருளை பயன்படுத்தி மிகப்பெரிய அளவில் மின்சாரம் தயாரிக்க ரிலையன்ஸ் எனர்ஜி திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் தனது மின்சார உற்பத்தித் திறனை கூடுதலாக 15,000 மெகாவாட் அளவுக்கு அது உயர்த்த உள்ளது.

இதற்காக அடுத்த ஐந்தாண்டுகளில் 60 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய அது திட்டமிட்டுள்ளது. விரைவில் வளர்ச்சியை எட்டும் வகையில் தற்போது முதலீடுகளை அதிகரிக்க அது உத்தேசித்துள்ளது.

தமிழ் MSN INDIA

Reliance Energy Plans $15B Power Surge - Forbes.com
The Hindu : Business : REL plans Rs. 60,000 cr. investment

-o❢o-

b r e a k i n g   n e w s...