.

Saturday, July 14, 2007

ஹஜ் பயணிகள் தேர்வுக்கு இன்று குலுக்கல் நடக்கிறது.

தமிழ்நாடு ஹஜ் குழு தலைவர் ஜே.எம்.ஆரூண் எம்.பி., சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இருந்து ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள இந்த ஆண்டு 6 ஆயிரத்து 816 பேர் விண்ணப்பித்துள்ளனர். 2 ஆயிரத்து 700 பேருக்கு மட்டுமே ஹஜ் செல்ல அனுமதி கிடைத்துள்ளது. எங்களது கோரிக்கையை ஏற்று கூடுதலாக ஆயிரத்து 684 பேருக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் 100 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். அவர்களுக்கும் அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.விண்ணப்பித்துள்ள எல்லாரையும் அனுமதிக்க வேண்டும் என்று, தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளோம். இதற்கிடையில், ஹஜ் செல்வோரை தேர்வு செய்வதற்கான குலுக்கல், சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரியில் 14ம் தேதி (இன்று) காலை 10 மணிக்கு நடக்கிறது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலர் என்.வாசுதேவன், ஹஜ் குழு உறுப்பினர்-செயலர் கா.அலாவுதீன் மற்றும் ஹஜ் குழு உறுப்பினர்கள் குலுக்கலை நடத்துவார்கள்.இவ்வாறு ஜே.எம்.ஆரூண் எம்.பி. கூறினார்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...